...

"வாழ்க வளமுடன்"

26 அக்டோபர், 2010

குழந்தைகள் அதிக நேரம் டி.வி. பார்ப்பதால்..... ( மருத்துவ ஆலோசனை )

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
குழந்தைகளை அதிக நேரம் டி.வி. பார்க்க அனுமதிப்பது நல்லது இல்லை என்று அமெரிக்காவின் சீட்டர் நகரில் நடத்தப்பட்ட ஆய்வு மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
1 முதல் 3 வயது வரையிலான குழந்தைகள் டி.வி. பார்ப்பதால் கவனக் குறைவு பிரச்சினை கடுமையாக தலை தூக்கும். அதை அவர்களின் 7-வது வயதில் காணலாம்.

*

இந்தக் குழந்தைகள் டி.வி. பார்க்கும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் பிரச்சினையின் கடுமை அதிகரிக்கும். இதில் பாதுகாப்பான அளவு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பெடரிக் சீமெர்மேன் என்ற ஆராய்ச்சியாளர் கூறுகிறார்.

*

1 முதல் 3 வயது வரையிலான கால கட்டத்தில் மூளை வளர்ச்சி தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும். ஆகையால் இதில் பாதுகாப்பான நேரம் என்று எதையும் குறிப்பிட முடியாது. ஒவ்வொரு மணி நேரமும் சிக்கலானதுதான் என்று அவர் தீர்க்கமாக தெரிவித்தார்.

*

இவரது தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் 1 முதல் 3 வயது வரையிலான 2,500 குழந்தைகளை வெகு நாட்கள் கண் காணித்தனர். அப்போது 1 வயது உடைய குழந்தைகள் ஒரு நாளைக்கு சராசரியாக 2.2 மணி நேரம் டி.வி. பார்ப்பதாகவும்.

*

3 வயதுடைய குழந்தைகள் ஒரு நாளைக்கு சராசரியாக 3.6 மணி நேரம் டி.வி. பார்ப்பதாகவும் தெரிய வந்தது. ஆனால் 12 மணி நேரத்துக்கும் மேலாக டி.வி. பார்க்கும் குழந்தைகளும் இருக்கிறார்கள்.

*

அமெரிக்காவில் தேசிய அளவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 30 சதவீத குழந்தைகள் தங்களுடைய படுக்கையறையிலேயே டி.வி. பார்க்கிறார்களாம். சிறிய வயதிலேயே டி.வி. பார்ப்பதால் அங்கு 3 முதல் 5 சதவீத குழந்தைகளுக்கு கவனக் குறைவு பிரச்சினை இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

*

சின்னக் குழந்தைகளை டி.வி. பார்க்காமல் தடுப்பது பெரிய விஷயம். ஆனால் பெற்றோர்கள் கூடுமானவரை குழந்தைகளை டி.வி. பார்க்க விடாமல் தடுத்து அவர்களின் கவனத்தை விளையாட்டு உள்ளிட்ட வேறு விஷயங்களில் திருப்ப வேண்டும்.

*

கவனக் குறைவு சிக்கலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் படிப்பில் சாதிக்க முடியாமல் போய்விடும் என்பதை பெற்றோர்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

*

இது தவிர டி.வி. பார்ப்பதால் குழந்தைகள் உடல் குண்டாகி விடும். மேலும் டி.வி.யில் தோன்றும் வன்முறைக் காட்சிகள் பிஞ்சு மனதில் நஞ்சு கலந்து விடுவதால் அவர்கள் வளரும் பருவத்தில் வன் முறையாளர்களாகவே உருவாகிறார்கள்.***
thanks thinakaran

***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "