...

"வாழ்க வளமுடன்"

09 அக்டோபர், 2010

பல் அழகே முகத்தில் பாதி அழகு :)

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
பல் பராமரிப்பு குறித்து இதுவரை மருத்துவ உலகம் அவ்வப்போது புதிய கருத்துகளை வாரி வழங்கி கொண்டேயிருக்கின்றது.
நன்றாக பல் தேய்க்க வேண்டும் என்ற கருத்துக்கு மாற்றாக, அதிகமாக தேய்த்தால் பல் எனாமல் போய்விடும் என்ற கருத்து உருவானது.

*

இது தவிர விளம்பரங்களில் வர்ணிக்கப்படும் பற்பசை, பிரஷ் போன்றவற்றின் சிறப்பு பெருமைகளை பல் மருத்துவ நிபுணர்கள் உண்மைக்கு புறம்பானவை என்கின்றனர்.

*

அனைத்து தரப்பிலும் விரிவாக ஆராய்ந்து பல் மருத்துவ நிபுணர்கள் பல் பராமரிப்புக்கு தந்துள்ள பட்டியல்.

***

பல் பராமரிப்புக்கு:

1. 6 முதல் 12 மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரை சந்திக்க வேண்டும். பல் மருத்துவமனையில் பற்களை சுத்தம் செய்ய வேண்டும்.

*

2. மென்மையான பிரஷ்ஷை கொண்டு பற்களை மெதுவாக சுத்தம் செய்ய வேண்டும்.

*

3. புளோரைடு கலந்த பற்பசையை உபயோகித்து பற்குழி ஏற்படும் அபாயத்தை தவிர்க்க வேண்டும்.

*

4. நமக்கும், பல்லுக்கும் தேவைப்படும் ப்ளோரைடின் அளவை நிர்ணயிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட பல் மருத்துவ நிபுணரை நாட வேண்டும்.

*

5. ஏனெனில் ப்ளோரைடு என்பது அதிகமானாலும் குறைந்தாலும் நோய் ஏற்படுத்தும் ஒரு வேதிப்பொருளாகும்.

*

6. பிரஷை 45 டிகிரி சாய்வாக பயன்படுத்த வேண்டும். எந்தவொரு உணவை சாப்பிட்டாலும் பானங்களை குடித்தாலும் வாயை நன்றாக கொப்பளிப்பதை வழக்கமாக கொள்ள வேண்டும்.

*

7. சாதாரண டூத் பிரஷினால் வாயின் உட்பகுதிகளை சுத்தம் செய்ய இயலாத நிலை இருக்குமாயின், பல் மருத்துவ நிபுணர்களை கலந்து ஆலோசித்து அதற்கென மருந்து கடைகளில் உள்ள எளிய, சிறப்பு கருவிகளை வாங்கி உபயோகிக்க வேண்டும்.

*

8. நார்ச்சத்து மிகுந்துள்ள உணவு பொருட்களை சாப்பிடுவது பல்லிற்கு நலம் அளிக்கும்.

*

9. பல், ஈறு சம்பந்தமான எந்தவொரு இடையூறுக்கும் நேரடியாக மருந்து கடைகளுக்கு சென்று மருந்து வாங்கி சாப்பிடுவதை தவிர்த்து, பல் மருத்துவ நிபுணரிடம் சென்று மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.


*

10. பற்களை சரியாக துலக்குவது எப்படி என்பதை பல் மருத்துவரிடம் தயக்கமின்றி கேட்டுத் தெரிந்து கொண்டு பின்பற்றுங்கள்.

*

11. பற்களை துலக்கி முடித்த பிறகு, ஈறுகளை சுட்டு விரலால் மெதுவாக மூன்று நிமிஷம் "மசாஜ்' செய்யுங்கள். இது சீரான ரத்த ஓட்டத்துக்கு வழி வகுக்கும்.

*

12. மற்றவர்களை எளிதில் கவருவதற்கு நம் சிரிப்பு முக்கியப் பங்காற்றுகிறது. இதற்கு பற்கள் வரிசையாகவும் அழகாகவும் இருப்பது அவசியம். எனவே தினமும் காலை, இரவு என இரண்டு வேளை பல் துலக்கத் தவறாதீர்கள்.

*

13. ஒவ்வொரு முறை சாப்பிட்டு முடித்தவுடன் வாயை நன்றாகக் கொப்பளிப்பது நல்லது. இதனால் பற்களில் உணவுப் பொருள்கள் தேங்காமல் இருக்கும்.


*


14. குளிர் பானங்கள், இனிப்புகளை அதிகம் சாப்பிடாதீர்கள். பல் சொத்தைக்கு வழி வகுக்கும்.

*

15. ஆறு மாதத்துக்கு ஒரு முறை பல் மருத்துவரிடம் சென்று பல் நலனைக் காத்துக் கொள்ளுங்கள்.***
நன்றி டாக்டர். ராஜசேகர்

***

"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "