...

"வாழ்க வளமுடன்"

24 செப்டம்பர், 2010

இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ஒரு மனிதனின் அழகு, ஆரோக்கியம்தான். அதைக் காப்பதற்கு உதவும் சில குறிப்புகள் இங்கே...
1. உங்கள் இடுப்பை விட வயிற்றில் அதிகமான கொழுப்பு இருந்தால், உங்களின் செல்கள் அனேகமாக இன்சுலினை எதிர்க்கலாம். அதனால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாயங்கள் ஏற்படலாம்.

*

2. ஆண்களுக்கும், பெண்களுக்கும் சர்க்கரை நோயை வரவழைப்பதில் முக்கியப் பங்கு வகிப்பவை போதுமான உடற்பயிற்சியின்மையும், உடல் பருமனும். சர்க்கரை நோய்க்கு முக்கியமான அளவீடு `தொந்தி'தான்.


*

3. வயிற்றில் அதிகமான கொழுப்புச் சேருவது, ஈரலிலும் அதிகமான கொழுப்பைச் சேர வைக்கிறது. அது, ரத்த ஓட்டத்திலிருந்து இன்சுலினை நீக்கும் அதன் பணியைப் பாதிக்கிறது.


*

4. நீங்கள் உணவுண்டபின் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால், அதை அதிகமாகாமல் தடுப்பதற்காக கணையம் `இன்சுலினை' சுரக்க வேண்டும்.

இன்சுலினுக்கு செல்கள் போதுமான அளவு எதிர்வினையாற்ற முடியவில்லை என்றால் அது இன்சுலின் எதிர்ப்பு நிலை எனப்படுகிறது. அப்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் அதிகரிக்கிறது. உடனே கணையமானது பெருமளவிலான இன்சுலினைச் சுரக்கிறது.


*

5. ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் அதிகரித்தால், அது செல்களுடன் ஒட்டிக்கொள்கிறது. அப்படி ஒருமுறை ஒட்டிக்கொண்டால் மீண்டும் அது நீங்குவதில்லை. கடைசியில் அது `சார்பிட்டால்' என்ற நஞ்சாகிவிடுகிறது. அது செல்களைச் சிதைத்து, உங்கள் உடம்பின் நரம்புகள், ரத்த நாளங்கள், திசுக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது.


*

6. அதிகமான இன்சுலின் சுரப்பு, உங்களை அதிகமாகச் சாப்பிட வைத்து மாரடைப்பை ஏற்படுத்துகிறது.

*

7. அதிகமான எடை அல்லது தொந்தியும் தொப்பையுமாக இருப்பவர்களுக்கு, சராசரியான எடை கொண்டவர்களை விட `விசரால்' கொழுப்பு அபாயமë அதிகம்.


*

8. அடிவயிற்றுப் பகுதியில் ஆழமாக உறுப்புகளைச் சுற்றி அமைந்திருப்பதுதான் `விசரால்' கொழுப்பு. தோலின் மேலடுக்கை ஒட்டியுள்ள `சப்குட்டேனியஸ்' கொழுப்பை விட இது அதிக நோய் அபாயத்தை ஏற்படுத்தும்.


*

9. `விசரால்' கொழுப்பு, சர்க்கரை வியாதி போன்றவற்றுடன் தொடர்புடையது. பெண்களுக்கு இடுப்பளவு 35 இஞ்சுகளுக்கு மேலும், ஆண்களுக்கு இடுப்பளவு 40 இஞ்சுகளுக்கு மேலும் இருந்தால் அபாயத்தின் அறிகுறி.


*

10. தொந்தியைக் கரைக்க கொழுப்பை எரிக்கும் உணவுகளைச் சாப்பிடலாம். அவற்றில் புரதங்கள், நார்ச்சத்துச் செறிந்த மாவுச்சத்து உணவுகள் மற்றும் முழுத் தானியங்கள் அடங்கும். பூரிதக் கொழுப்பு அளவைக் குறையுங்கள்.


*

11. `விசரால்' கொழுப்பிலிருந்து நீங்க, நீங்கள் அத்தியாவசியமான `பேட்டி ஆசிட்களை' எடுத்துக்கொள்ளலாம்.


*

12. தினமும் 35 சதவீதம் புரதம் (பீன்ஸ், கொட்டை வகைகள், பச்சைக் காய்கறிகள், மீன், கோழி இறைச்சியில் உள்ளது), 35 சதவீதம் அதிக நார்ச்சத்து கொண்ட மாவுச்சத்துப் பொருட்கள், 30 சதவீதம் ஆரோக்கியமான கொழுப்பு (ஆலிவ் எண்ணை போன்றவை) என்று எடுத்துக்கொள்ளலாம்.


*

13. இதயப் பகுதிக்கு வலுவளிக்கும் பயிற்சிகள் உள்ளிட்ட உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள். அவற்றைத் தவற விடாதீர்கள்.


*

14. நீங்கள் இதயத் துடிப்பு அதிகரிப்பதை உணரும் வகையில், வியர்க்கும் வகையில் தீவிரமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆனால் இடையிடையே உங்களால் பேச முடிகிற அளவுக்கு இருக்க வேண்டும்.


*

15. தொந்தியைக் கரைப்பதற்கு சற்று அதிக காலம் ஆகும். ஆனால் அது முடியாத காரியமல்ல. சரியான அணுகுமுறையின் மூலம் நீங்கள் அதிலிருந்து விடுதலை பெறலாம்.


***

நன்றி மாலைமலர்.

***

"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "