...

"வாழ்க வளமுடன்"

01 செப்டம்பர், 2010

அடிக்கடி தடவ வேண்டும்..!ஏன் ?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்ஜலதோஷம்

* வெதுவெதுப்பான 'பீட்ரூட்' சாற்றை மூக்கினுள் தடவினால் ஜலதோஷம் சரியாகிவிடும்.

* தேன் ஜலதோஷத்தை குணப்படுத்தும்.


சளி

* கரைக்கவே முடியாத நெஞ்சில் கட்டிக் கொண்டிருக்கும் சளியைக் கரைக்க,கொள்ளு(காணப்பயறு)சூப் அருமையான மருந்து.


கொள்ளு சூப்

தயாரிக்கும் முறை

கொள்ளு - 2 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம்- 1/2 தேக்கரண்டி
பூண்டு - 2 பல்
தக்காளி - 1
கொத்தமல்லித்தழை- சிறிது
கறிவேப்பிலை - சிறிது

இவை யாவற்றையும் ஒன்றாக வைத்து அம்மியில் அல்லது மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.4கப் தண்ணீரில் கரைத்து,1 தேக்கரண்டி நல்லெண்ணெய், 1/4 தேக்கரண்டி மஞ்சள் பொடி போட்டு அடுப்பில் வைத்து கொதித்ததும் இறக்கி, தேவையான அளவு உப்பு போட்டு குடிக்கவும். சிறிய குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அருந்தலாம். குளிர் காலங்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காது.

* கற்பூரவல்லி இலைச் சாறு குடித்தால் சளி குணமாகும்.

* தூதுவளைக் கீரையை சுத்தம் செய்து, துவையல் செய்து சாப்பிட்டால் சளி குணமாகும்.

* மழைக் காலத்திலும், பனிக்காலத்திலும் பகல் வேளையில் தூதுவளை ரசம் வைத்துச் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்காது.

* வெங்காயம் சளியை முறிக்கும்.பொரியல் சாப்பிடும் பொழுது சின்ன வெங்காயத்தை சிறியதாக நறுக்கிக் கலந்து சாப்பிட்டால் சளி கரையும்..

* சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும். அப்படிப்பட்டவர்கள் நாள்தோறும் தேன் உண்ணுவது மிகுந்த பயனுள்ளது. அதில் வைட்டமின் 'c' இருக்கிறது.வைட்டமின் 'c' ஜலதோஷம் பிடிக்காமல் தடுக்க உதவியாய் இருக்கிறது.

* துளசி இலையை சாப்பிட்டால் சளி குணமாகும்.

இருமல்,தும்மல்,காய்ச்சல்

* இருமல் ,தும்மல்,காய்ச்சல் ஆரம்பமானவுடன் 1தேக்கரண்டி நல்லெண்ணெய் குடித்தால் சளி கரையும்.தும்மல் நின்று ,மூக்கில் தண்ணீர் வடிவது நிற்கும். இருமலைக் கட்டுப்படுத்தும்.

* கடுமையான இருமலாக இருந்தாலும் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் குடித்தால் வேறு அலோபதி மருந்துகள் இல்லாமல் இருமல் நிற்கும்.
(அனுபவம்...)

* சிறு குழந்தைகளுக்கு மூக்கில் சளி வந்து கொண்டிருந்தால் ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.ஒரு விரலில் தொட்டு மூக்கில்(துவாரத்தில்) அடிக்கடி தடவ வேண்டும்.மூக்கை துடைத்து துடைத்து புண்ணாகாது. சளியும் எளிதாக மூக்கிலிருந்து வேளியேறும்.

* சிறு குழந்தைகளுக்கு தலைக்குக் குளித்தபின் ,வெற்றிலை ஒன்றில் சிறிது ஓமம் வைத்து நசுக்கி, வேஷ்டித் துணியில் வைத்து வெந்நீரில் முக்கி ,1/2 சங்கு அளவு சாறு எடுக்கவும்.இதை குழந்தைகளுக்கு ஊற்றினால் சளி பிடிக்காது.வயிற்றுக்கும் நல்லது.

* ஆடாதொடை பட்டையை சுத்தம் செய்து ,தூளாக்கி கஷாயம் செய்து குடித்து வந்தால் இருமல் நீங்கும். காய்ச்சல் தணியும். அடிக்கடி காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் இந்த

கஷாயத்தை தினமும் குடித்து வரவேண்டும்.

ஆடாதொடை வேர் - 100 கிராம்
கண்டகத்தரி வேர் - 100 கிராம்
திப்பிலி - 25 கிராம்

இவைகளை சுத்தம் செய்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இந்தப் பொடியில் 2 தேக்கரண்டி எடுத்து 1 டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க விடவும் 1/2 டம்ளர் அளவாக வற்றிய பின் இறக்கவும். இருமல் ,சளி இருந்தால் இதைக் குடித்து, குணமடையலாம்.

* மிளகையும் வெல்லத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இருமல் ,சளி குணமாகும்.அடக்க முடியாமல் தும்மல் வந்து கொண்டே இருந்தால் விபூதியை டண்ணீரில் குழைத்து மூக்கின் மேல் பூசினால் தும்மல் வருவதும் நிற்கும்.

* அடிக்கடி தும்மல் காரணமாக ஏற்படும் சளியும், நமைச்சலும் நீங்குவதற்கு, குளிர்ச்சி தரும் பொருட்களை விலக்கி விடவும்.முசுமுசுக்கை இலையை எடுத்து சுத்தம் செய்து அரைத்து அல்லது இலேசாக தட்டி தோசை மாவில் கலந்து தோசை செய்து காலை நேரம் சாப்பிட வேண்டும்.

* இரவு நேரத்தில் பாலில் 5 தூதுவளை இலைகளைப் போட்டு காய்ச்சி குடித்து வர வேண்டும்.இவ்விதமாக 40 நாட்கள் குடித்து வந்தால் மேற்கூறிய நோய்கள் குணமகும்.

வறட்டு இருமல்

* வறட்டு இருமல் தொண்டை, நெஞ்சு, வயிறு அனைத்தையும் ரணமாக்கி விடும்.2 டம்ளர் வெது வெதுப்பான தண்ணீரில் ,1எலுமிச்சைச் சாறு பிழிந்து, 1 மேஜைக்கரண்டி தேன் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.

இரத்த இருமல்

* தூதுவளை இலை , ஆடாதொடை இலை இந்த இரண்டையும் எடுத்து பிட்டவியல்(பிட்டு மாவு அவிப்பது போல் செய்து, பிழிந்து 400 மில்லி சாறு (2 டம்ளர்) எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகுகேரிஷ்டம் 2 கிராம்,திப்பிலி 2 கிராம், சாம்பிராணி 2 கிராம் அனைத்தையும் காய வைத்து தூள் செய்து அச்சாற்றில் கலந்து கொடுத்து வந்தால் இரத்த இருமல் நீங்கும்.

கக்குவான் இருமல்

* வெற்றிலைச் சாறுடன் ,தேன் கலந்து கொடுத்தால் குழந்தைக்களுக்கு வரும் கக்குவான் இருமல் குணமாகும்.

சளியினால் ஏற்படும் துர்நாற்றம்

* தேவையான தூதுவளை இலைகளை சுத்தம் செய்து 300 மில்லி(ஒன்றரை டம்ளர்) பாலில் போட்டுக் காய்ச்சி குடிக்க வேண்டும். இவ்விதமாக 1 வாரம் குடித்து வந்தால் சளி, துர்நாற்றம் ஆகியவை நாளடைவில் மாறிவிடும்.


***


நன்றி அந்திமழை.

***


"வாழ்க வளமுடன்"


இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "