...

"வாழ்க வளமுடன்"

27 ஆகஸ்ட், 2010

உணவு தானிய வகைகளின் குணங்கள்:

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

நமது தேசிய உணவே தானியங்கள் தான். அதன் பயன் பற்றியும் அதன் தன்மைப் பற்றியும் அறிவோமா!1. கார் அரிசி: இது நாம் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் நல்ல உறுதி நிலையடையும். தசைகள் நல்ல முறையில் வளச்சியடையும். உடல் தோற்றத்தில் கவர்ச்சி ஏற்ப்படும். சருமம் மென்மையடையும்.2. குண்டு சம்பா அரிசி: நா வறட்சியை தீர்க்கும். ஆனால் பசியை குறைக்கும்.3. குன்று மணி சம்பா அரிசி- வாதக் குறைபாடுகள் நீக்கும் சத்து உண்டு. விந்தை பெருக்கும். உடல் வன்மையைப் பெருக்கும்.4. சீரகச் சம்பா- சிறுவாத நோய்களைக் குணமாக்கும். பசியை அதிகரிக்கும்.5. கோடைச் சம்பா அரிசி- வாதப் பித்த சிலேட்டும் நோய்களைக் குணப்படுத்தும். உடலுக்கு நல்ல குளிச்சி இயல்பைத் தரும்.6. ஈர்க்கு சம்பா- சுவையானது. கண்களின் நலனுக்கு இது மிகவும் சிறந்தது. பித்த எரிச்சலை விலக்கும்.7. புழுங்கலரிசி- அரிசியின் முழுச்சத்தும் வீணாகாமல் தரும். எல்லா வயதினருக்கும் எல்லா தரத்தினருக்கும் உகந்தது. நோய்வாய்ப்பட்டவர்கள் சாப்பிட உகந்தது.8. கோதுமை- உடலுக்கு வளமையும் அளிக்கும். விந்தினை அதிகப்படுத்தும்.9. சோளம்- பசியை மந்தப்படுத்தும். உடல் வன்மையைப் பெருக்கும்.10. கம்பு- வீரிய விருத்தி அளிக்கும். உடல் வெப்பத்தைத் தணிக்கும். ஆனால் உடலில் நமைச்சல் ஏற்ப்படுத்தும்.11. கேழ்வரகு- உடல் உழைப்பாளிக்கு ஏற்ற தானியம். உடலுக்கு வேண்டிய புரதச்சத்துகளை பெருமளவில் தருகிறது.12. சவ்வரிசி- சத்து நிறைந்த இவ்வணவு நோய்வாய்ப்படிருப்பவர்களின் உடல் பலவீனத்தை அகற்றும்.13. சாமை அரிசி- காய்ச்சல் காரணமாக ஏற்படும் நா வற்ச்சியைப் போக்கும். உடலை வலிமை உடையதாக ஆக்கும் ஆற்றல் உள்ளது.14. தைனை அரிசி- சளித்தொல்லையை அகற்றும். காய்ச்சல் வேகத்தைத் தணிக்கும். இரத்த சோகையை அகற்றும்.15. திப்பிலி அரிசி- விந்தினை வளக்கும். மேக நோயைக் குணமாக்கும். வாத கோளாறுகளை அகற்றும்.***
சோற்றை தயார் செய்வதில் குறைப்படு ஏற்ப்பால் உடலுக்கு தீங்கு:1. மிகவும் குழைவான உணவு- உடலில் வெப்ப நிலையில் உள்ள சமத்தன்மை கெடக்கூடும்.2. உலர்ந்த நிலையில் உள்ள சோறு- அஜீரணக் குறைப்பாடுகளை உண்டாக்கும்.3. ஊசிப்போன நிலையில் - சீத- பித்தக் கோளாறுகளை ஏற்ப்படுத்தும்.4. காந்தல் ஆகிவிட்ட சோறு-ஜீரண உறுப்புகளை பலவீனப்படுத்துதல்.5. நறுக்கரிசி- சரியாக வேகாத உணவு மந்தத்தை உண்டாக்கும்.
***
இது உங்கள் உணவு உலகம் என்ற புத்தகத்தில் இருந்து எடுத்த தகவல்.

இதன் ஆசிரியர் இராம. மெய்யப்பன்.***

அலுவலக முகவரி:

உணவு உலகம் பப்ளிகேஷன்ஸ்,
24/37 கிருஷ்ணாபுரம் தெரு,
லால்சந்த் பள்ளி எதிரில்,
சூளைமேடு,
சென்னை - 600 094.


*

போன் - 24816074.
செல்- 9940481276***

"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "