...

"வாழ்க வளமுடன்"

29 மார்ச், 2010

ஃபாஸ்ட் ஃபுட் & ஜங்க் ஃபுட்‏

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இந்த ஃபாஸ்டான உலகத்துல மக்கள் நாடுவது எல்லாம் குயிக் அண்டு ரெடிமேட் அயிட்டங்கள் தான்.


அது வீடோ,உடையோ இல்லை உணவோ எல்லாம் கை சொடுக்கும் நேரத்துல கிடைக்கனும்.அதுல முதல் இரண்டும் பரவாயில்லை.ஆனால் உணவு விஷயத்தில் அப்படி இருப்பது உடல் நலத்திற்கு கேடு என்பதைக் கூட உணர மறந்து ஓடி ஓடி உழைக்கின்றனர்.*


ஃபாஸ்ட் ஃபுட் என்பது துரிதமாக செய்யப்படும் உணவு வகைகள்.இட்லி, தோசை, பிரட் சாண்ட்விச் , பீஸா இதில் அடக்கம்.*ஜங்க் ஃபுட் என்பவை உடம்புக்குத் தேவையில்லாத,எந்தப் பயனும் தராத வயிற்றை மட்டுமே நிரப்பும் உணவுகள்.


*


ஸ்நேக்ஸ்,ஜெல்லி,கேண்டி,சாக்லெட்ஸ்,டெசெர்ட்ஸ்,கார்பனேட்டட் குளிர் பானங்கள்,டிண்டு ஃபுட்,பேக்டு ஃபுட் முதலியவை இதில் அடங்கும்.*


பல அவசர நேரங்களில் கொஞ்சம் ஸ்நேக்ஸும் ஐஸ்கீரிமோ அல்லது ஸ்நேக்ஸ் வித் காபி அல்லது கோக் என்று துரிதமாக பிரேக்ஃபாஸ்டை/லன்ச்சை முடித்துக் கொண்டு வேலை வேலையென்று ஓடுவோர் பெருகி விட்டனர்.*


இப்பெல்லாம் புளியோதரை,தயிர்சாதம்,புலாவ் ,குருமா அயிட்டங்கள் எல்லாம் ரெடிமேட் ஆக 'டெட்ரா பேக்கில்' வைத்து கிடைக்கிறது.அப்படியே சூடு பண்ணி சாப்பிட வேண்டியதுதான்.*


ஜங்க் என்றாலே தேவையற்ற குப்பை மாதிரிதானே.


*வெறும் கலோரிகளும்,உப்பும் சுகரும்,கொழுப்பும் நிறைந்த இந்த உணவில் எந்த வித நியூட்ரிஷனல் [சத்தான] பொருளும் இல்லை.


*


மாறாக அதிகக் கொழுப்பும்,உப்பும்,சர்க்கரையும் நோய்களுக்கு கட்டியம் கூறி வரவேற்கும்.இதில் சேர்க்கப்படும் இரசாயன பிரெசெர்வேடிவ்கள் ஃபுட் கிரேடு என்றாலும் தொடர்ந்து சேர்ப்பது உடலுக்கு நல்லதல்ல.


*


மிக முக்கியமாக 'கலரிங் ஏஜண்ட்ஸ்' கேன்ஸர் போன்றவற்றை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.இப்பெல்லாம் நூடுல்ஸ் சாப்பிடுவது ரொம்ப காமன்.


*


ஆனால் சாப்பிடத் பிறகு கொஞ்ச நேரம் எனர்ஜெட்டிக்காக தோன்றினாலும் உடலுக்குத் தேவைப்படும் எந்த சத்தும் இல்லை.அதிக கொழுப்பு 'ஒபிஸ்ட்டி' [குண்டுத்தன்மை] ஏற்படுத்தும்.


*சாப்பிடவே கூடாது என்பதல்ல.எப்போதாவது சாப்பிடலாம்.ஆனால் அதுவே சாப்பாடாக இருக்கக் கூடாது.


*சாப்பாட்டுக்கு முக்கியத்துவமா என்பதை விட என்ன சாப்பிடுகிறோம் என்பது மிக முக்கியம்.*


சில வருடங்களுக்கு முன்பு டாக்டர்.திருமதி.கமலி ஸ்ரீபால் அவர்களின் டி.வி.பேட்டி ஒன்றில் கேட்டது.
***
நம் அன்றாட சாப்பாட்டில் மூன்று நிறங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க‌ வேண்டும்:

*

பச்சை: பச்சைக் காய்கறிகள்,கீரை வகைகள்.

*

மஞ்சள்: எலுமிச்சை,ஆரஞ்சு.சாத்துக்குடி , வாழை,பப்பாயா போன்ற பழங்கள்.

*

சிகப்பு:கேரட்,பீரூட்,தக்காளி ஆப்பிள் போன்றவை.


*

தினசரி உணவில் இந்த மூன்று நிறங்களும் இருக்குமாறு பார்த்துக் கொண்டாலே ஆரோக்யமான உடல்நலம் இருக்குமாம்.

*

நல்ல ஆரோக்யமான உணவு ஆரோக்யமான உடல் நலத்திற்கும் அதன் மூலம் ஆரோக்யமான மனநலத்திற்கும் தேவை என்பதை உணர்ந்து கடை பிடித்தே ஆக வேண்டும்.

*


அந்தக் காலம் போல கைக்குத்தல் அரிசியும்,பக்குவமான சரிவிகித சாப்பாடும் இனி எங்கே கிடைக்கப் போகிறது.

*


எல்லாவற்றிற்கும் மெஷினை நம்பி நம் வாழ்க்கை மெஷின் மாதிரி ஆகிவிட்டாலும் அதையும் கண்டிஷனாக வைத்திருக்கனும் தானே.

*


கண்டதையும் தின்று வயிறு நிறைவதை விட கொஞ்சமானாலும் சத்துள்ளதாக இருக்குமாறு பார்த்துக் கொள்வோம்.
***

http://kouthami.blogspot.com/2007/07/blog-post.html
நன்றி கண்மணி பக்கம்.

****

ஃபாஸ்ட் ஃபுட் அண்டு ஜங்க் ஃபுட் இவைகளை எப்போதாவது எடுத்துக் கொண்டு உடல் நலமுடன் இருங்கள். நன்றி.***


படித்தது பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை போடவும். மிக்க நன்றி.

*

7 comments:

பெயரில்லா சொன்னது…

கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய ஒரு பதிவு .

பெயரில்லா சொன்னது…

It's time to wake up. Good one :))

prabhadamu சொன்னது…

நன்றி அம்மு. உங்கள் பாராட்டுக்கும், வருகைக்கும், பதிலுக்கும், என்னை எப்போதும் ஊக்குவிப்பதுக்கும் மிக்க மிக்க நன்றி. உங்கள் வருகை என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. மிக்க நன்றி அம்மு.

prabhadamu சொன்னது…

நன்றி அனாமிக்கா. உங்கள் பாராட்டுக்கும், வருகைக்கும், பதிலுக்கும், என்னை எப்போதும் ஊக்குவிப்பதுக்கும் மிக்க மிக்க நன்றி. உங்கள் குழந்தைகள் நலமா?

பெயரில்லா சொன்னது…

என் குழந்தைகளா? யாருங்க கிளப்பிவிட்டது அப்படி??

prabhadamu சொன்னது…

அனாமிக்க நீங்க தான நான் எழுதுரத்தை 3 பார்த்து சிரிக்கிறாங்க என்று சொன்னிங்க. அதான் அப்ப இல்லையா? சாரிப்பா.

பெயரில்லா சொன்னது…

ஹா ஹா. நான் மூணு என்று சொன்னது எங்க வீட்ல இருக்கும் மூணு பசங்கள. அபி, ஆஷ், துவாரகன் (என் அப்பா பெரும் துவாரகன் தான். I have written about them in "Bacholer Samayalil Naanga Thaan Experts". :)) I was talking about those 3 only.

Its ok :))

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "