...

"வாழ்க வளமுடன்"

16 மார்ச், 2010

செயற்கை இனிப்பூட்டிகள் அளவுக்கு மீறினால், ஆபத்து!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்சர்க்கரை நோயாளிகள் உட்பட சிலர் செயற்கை சுவீட்னர் சாப்பிடுகின்றனர். இந்த ‘செயற்கை சர்க்கரை நல்லதா? ஆபத்து உள்ளதா? என்ற சர்ச்சை கிளம்பிவிட்டது. அளவுக்கு மீறினால், ஆபத்து உள்ளது என்று ஐரோப்பிய ஆய்வு எச்சரிக்கிறது.

நம் விவசாய உற்பத்தியில் தயாராகும் சர்க்கரை எந்த பாதிப்பையும் தராது. அது இயற்கையாக தயாரிக்கப்படுகிறது. ஆனால் ரசாயன கலவை கொடுத்து தயாரிக்கப்படும் செயற்கை சுவீட்னர் பொருட்கள் உள்ளன. மாத்திரை வடிவில் வருகின்றன. சிறிய சாஷே வடிவிலும் வருகிறது.

*

இப்போது இந்த செயற்கை சுவீட்னர் தான் சந்தையில் கொடி கட்டிப் பறக்கிறது. சர்க்கரை நோய் உட்பட சிலர் டாக்டர் ஆலோசனைப்படியும் இல்லாமலும் வாங்கி பயன் படுத்துகின்றனர். காபி, டீ போன்ற பானங்களில் கலந்து சர்க்கரைக்கு ஈடாக உபயோகிக்கின்றனர். இந்த செயற்கை சர்க்கரை மாத்திரை பல மடங்கு தித்திப்பு கொண்டது. அதனால் சிறிதளவு சேர்த்தாலே போதும். நல்ல இனிப்பு கிடைக்கும். சர்க்கரை நோயாளிக்கு இந்த செயற்கை சர்க்கரை, வரப்பிரசாதம் தான் என்பதில் சந்தேகம் இல்லை.

*

ஆனால், இந்த செயற்கை சுவீட்னர் பற்றி சர்ச்சைகள் இல்லாமல் இல்லை. செயற்கையாக தயாரிக்கப்படும். இந்த சுவீட்னரில் கண்டிப்பாக ரசாயன கலவை இருக்கத்தானே செய்யும். அந்த வகையில் இதில் கலக்கப்படும் அஸ்பார்ட்டேம் என்ற கலவை, உடலுக்கு கெடுதல் தான் என்று மருத்துவ உலகில் கூறப்படுகிறது. ஏற்கனவே லுக்கீமியா, லிம்போமா போன்ற பாதிப்பு களுக்கு இந்த அஸ்பார்டேம் தான் காரணம் என்று கூறப்பட்டது. ஆனாலும் உலக அளவில் இதை சில நாட்டு மருத்துவ நிபுணர்கள் மறுத்தனர். இப்போது இது புற்று நோய்க்கு காரணமாக உள்ளது என்று இத்தாலியைச் சேர்ந்த ஐரோப்பிய மருத்துவ ஆய்வு கூறுகிறது.


*

இத்தாலியைச் சேர்ந்த ஐரோப்பிய மலாஸ்ஸினி பவுண்டேஷன் என்ற மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு சிறுநீரகத்தில் புற்று நோய் ஏற்படுவதற்கு இந்த அஸ்பார்ட்டேம் காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறது. இது எந்த அளவு உண்மை என்பது உறுதி செய்யப்படாவிட்டாலும், செயற்கை சுவீட்னர் அளவுக்கு மிஞ்சினால் ஆபத்துதான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

*

அமெரிக்க உணவு நிர்வாக அமைப்பும், ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையமும் இது தொடர்பாக சில கருத்துக்களை சொல்லியுள்ளன. செயற்கை சுவீட்னர் எடுத்துக்கொள்வதில் எந்த தவறும் இல்லை. அதனால், பெரிய அளவில் பாதிப்பு வராது, ஆனால் அதிக அளவில் எடுத்துக்கொள்ளும் போது தான் ஆபத்து வருகிறது என்று கூறியுள்ளனர்.

***


இவ்வளவு ஆபத்து இருக்கும் செயற்க்கை இனிப்பூட்டிகள் எப்படி நாம் நம் உடலுக்கு எடுத்துக் கொள்வது என்று அவர்கள் கூறி இருக்கும் கருத்தையும் இனி பார்ப்போம்!

***

இந்த ஆபத்தை தவிர்க்க:

*


1. செயற்கை சுவீட்னரை பொறுத்த வரை, சாதாரண சர்க்கரையில் உள்ள இனிப்பைவிட 200 மடங்கு இனிப்பு அதிகம். அதற்கு இந்த அஸ்பார்டேம் என்ற ரசாயன கலவை தான் காரணம்.

*

2. சாதாரண சர்க்கரையில் ஒரு கிராமில் நான்கு கலோரி உள்ளது. ஆனால், செயற்கை சுவீட்னரில் அந்த அளவுக்கு கலோரியே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

*

3. செயற்கை சுவீட்னர் அளவுக்கு மிஞ்சினால் ஆபத்து தான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் எத்தனை எடை உள்ளாரோ, அவர் எடையில் கிலோவுக்கு 50 மில்லி என்ற அளவில் ஒரு நாளைக்கு செயற்கை சுவீட்னர் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அதுவும் சரியான அளவா என்பதை எந்த மருத்துவ அமைப்பும் உறுதி செய்யவில்லை.

*

4. பொதுவாக 60 கிலோ எடை உள்ள ஒருவர் அதிகபட்சம் ஒரு நாளைக்கு ஆறுமுதல் எட்டு செயற்கை சுவீட்னர் பயன்படுத்தலாம் என்றும் யோசனை கூறியுள்ளன.

*

5. “குறைந்த அளவில் செயற்கை சுவீட்னரை எடுத்துக்கொள்வோருக்கு பல பலன்கள் உண்டு. சர்க்கரை நோயாளிகளுக்கு இது பெரிதும் உதவுகிறது. அதற்காக அதிகம் சாப்பிடும்போது பிரச்னையே” என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். இந்தியாவை பொறுத்தவரை ஒரு கோடிப்பேர், செயற்கை இனிப்பூட்டிகள் பயன்படுத்துகின்றனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

***

நன்றி.
dinaithal.com


***

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "