...

"வாழ்க வளமுடன்"

24 பிப்ரவரி, 2010

வெறும் காலுடன் ஓடுவதே நல்ல பலன்தரும்!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

ஓட்டப் பயிற்சி செய்பவர்களுக்கு "ஷூ"(காலணி) முக்கியமான விஷயமாகத் தெரியும். பலர் "ஷூ"இல்லாமல் ஓடுவது தவறு என்று நினைத்து வருகிறார்கள். ஆனால் "வெறும் காலுடன் ஓடுவதே நல்லது.
***
"ஷூ"அணிந்து ஓட்டப் பயிற்சி செய்வது உடலைப் பாதிக்கும்'' என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஹார்வர்டு பல்கலைக்கழகம், தடகள வீரர்கள் ஓட்டப் பயிற்சியால் பெறும் சாதக, பாதகங்கள் பற்றி ஆராய்ந்தது. இதில் மேற்கண்ட முடிவு கிடைத்துள்ளது.
***
மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தடகள வீரர்கள் ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். உயர்ந்த குதிகால் (ஹீல்ஸ்) உடைய `ஷு', மற்றும் `ஹீல்ஸ்' இல்லாத "ஷூ"அணிந்து இரு பிரிவினரும். "ஷூ"இல்லாமல் வெற்றுக் காலுடன் ஒரு பிரிவினரும் கலந்து கொண்டனர்.
***
அவர்கள் சராசரியாக ஒரு மைல் தூரம் ஓட விடப்பட்டனர். இதில் அனைவரது கால்களும் சுமார் ஆயிரம் முறைக்கு மேல் மேலும் கீழுமாகப் போய் வந்தன. இதனால் ஹீல்ஸ் கொண்ட ஷுக்களை அணிந்தவர்களுக்கு தரையுடன் ஏற்பட்ட உராய்வால் அதிர்வலைகள் முட்டு மற்றும் உடல்பகுதிக்கு அதிகமாக கடத்தப்பட்டது. இதனால் உடல் வலி ஏற்படும் சாத்தியக்கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டது. ஹீல்ஸ் இல்லாத "ஷூ"அணிந்தவர்களுக்கும் அடிப்பாதத்தின் நடுப்பகுதி வழியாக குறைவான அதிர்வுகள் கடத்தப்பட்டன. "ஷூ"இல்லாமல் கலந்து கொண்டவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.
***
"நமது கால், லட்சக்கணக்கான ஆண்டுகளாக சூழலுக்கு ஏற்ப பரிணாம வளர்ச்சி பெற்று இன்றைய நிலையை அடைந்துள்ளது. எனவே அதுவே இயற்கையான `ஷு'. உண்மையில் வெறும் காலுடன் பயிற்சியில் ஈடுபடுவதே சிறந்தது. மலைப்பாதை போன்ற கரடு முரடான பகுதிகளைத் தவிர எல்லா இடங்களிலும் வெற்றுக் காலில் பயிற்சி செய்யலாம்'' என்று விஞ்ஞானிகள் உறுதியாகக் கூறுகிறார்கள்.
***
நன்றி மாலைமலர்.

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "