...

"வாழ்க வளமுடன்"

20 பிப்ரவரி, 2010

அஜினோமோட்டா‏

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தகவல் அறியும் உரிமைச் சட்டம்.


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் சமூகப்பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்களின் விழிப்புணர்வுகளுக்காக ஊடகங்கள் மற்றும் இணையங்களில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்தக்கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது.-எம்.ஹெச்.ஜி.

உயிரினங்கள் எல்லாம் உயிர் வாழ்வதற்காக மட்டுமே உணவு உண்கின்றன. ஆனால், மனிதர்கள் இதிலிருந்து மாறுபட்டு ருசிக்காகவும், நறுமணத்துக்காகவும், பலவித செயற்கை நிறமிகளையும் சுவையூட்டிகளையும் உணவில் சேர்த்து உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்கிறார்கள். சமீப காலத்தில் அஜினோமோட்டோ என்னும் நச்சுப் பொருளை ஒரு செயற்கைச் சுவையூட்டியாகப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதன் வேதிப் பெயர் 'மோனோ சோடியம் குளூட்டமேட் Mono Sodium Glutamate என்பதாகும்.*
''அஜினமோட்டோ கலந்த உணவை உண்டால், குழந்தைகளுக்கு ஆபத்து. தினமும் மூன்று கிராமுக்கு மேல் அஜினமோட்டோ கலந்த உணவை உண்டால் பெரியவர்களுக்குக் கூட கழுத்துப் பிடிப்பு, தலைவலி, நெஞ்சுவலி, தலைசுற்றல், மூச்சுத் திணறல் வர வாய்ப்பு உள்ளது'' என்று சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை, அண்மையில் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டு, எக்கச்சக்க பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.*
சீன, ஜப்பானிய, ஸ்பானிய, பிரெஞ்ச் மற்றும் மேற்கத்திய உணவு வகைகளிலும் அஜினமோட்டோ பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு சில நிறுவனம் தாய்லாந்தில் இருந்து இதை இறக்குமதி செய்து சென்னையில் பேக் செய்து இந்தியா முழுவதும் விற்கிற‌து.


எல்லா அஜினமோட்டோ பாக்கெட்களிலும், பன்னிரண்டு மாதங்களுக்குக் குறைவான குழந்தைகளுக்கு இதைப் பயன்படுத்த வேண்டாம்.சோடியம் குளுட்மேட் என்பது ஒரு அமினோ அமிலம். இது நம் உடலிலுள்ள புரதத்தில் இயற்கையாகவே உள்ளது.
கடைகளில், கலப்படமாக சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் சோடியம் குளுட்மேட், உண்மையிலேயே ஆபத்தானது.*இந்த அஜினோ மோட்டோவின் விஷத்தன்மை பற்றி இருவேறு கருத்துக்கள் இருந்த போதிலும், பல மருத்துவ ஆராய்ச்சிகள் மனிதர்களுக்கு அதிலும் குறிப்பாகக் குழந்தைகளுக்கு இது பலவித ஆபத்துகளை உருவாக்கும் என்று நிரூபித்துள்ளன. கருவுற்ற எலிகளுக்கு அஜினோமோட்டோ கலந்த உணவைத் தொடர்ந்து கொடுத்து வந்ததால் அவற்றின் குட்டிகளுக்கு மூளைப் பகுதியில் உள்ள செல்கள், அளவில் சுருங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அஜினோமோட்டோ கலந்த உணவுப் பொருட்களை அடிக்கடி சாப்பிடும் குழந்தைகளுக்கு, உடல் வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன் சுரப்பது வெகுவாகக் குறையும். இதனால், உடல் வளர்ச்சி தடைப்பட்டு உயரம் குறைகிறது. மேலும் இந்த வேதிப் பொருள் மூளையில் 'ஆர்குவேட் நுக்ளியஸ்' என்னும் பகுதியைப் பாதிப்பதால் உடல் எடை தாறுமாறாக அதிகரிக்கும்.
*
மூளை மட்டுமின்றி இரைப்பை, சிறுகுடல், கல்லீரல் போன்ற உறுப்புகளிலும், அழற்சியையும், சிறு இரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது. இதனால் குழந்தைகளுக்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாத வயிற்று வலி அடிக்கடி ஏற்படும். ஒவ்வாமை உள்ள ஒரு சிலருக்கு இந்த வேதிப்பொருள் கலந்த உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே மார்பில் எரிச்சலும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டு, உடல் வியர்க்க ஆரம் பித்துவிடும். இந்த நோய்க் குறிகளுக்கு 'சைனா உணவக நோய்' ( CHINA RESTAURANT SYNDROM) என்று தனிப் பெயரே சூட்டப்பட்டுள்ளது.
*'சோடியம் குளுட்மேட் (அஜினமோட்டோ) பற்றி எழுதுவதற்காக நாம் ஆய்வில் இருந்தபோது 'ஜீரோ ஏடேட் ஹைட்ரோ ஜெனடேட்' பற்றிய தகவலும் நம்மை அதிர்ச்யில் ஆழ்த்தியது,

*''இது பசு, எருது, பன்றி போன்ற பல விலங்குகளின் கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய். இதில் உடலுக்குத் தேவையற்ற ஒருவித கொழுப்பு இருக்கிறது. பாக்கெட்டுகளில் கிடைக்கும் உருளைக்கிழங்கு சிப்ஸ், பீட்ஸா, சாக்லெட், துரித உணவுகள் இந்த எண்ணெயில்தான் தயாரிக்கப்படுகின்றன. இந்த எண்ணெயைப் பலமுறை திரும்பத் திரும்பப் பயன்படுத்தினாலும் உணவின் மணம் மாறாது. பதினெட்டு மாதம் வரை உணவுப் பொருள் கெட்டுப் போகாது. மெக்டொனால்ட், பீட்ஸா கார்னர்களில் கிடைக்கும் ஸ்நாக்ஸ் பொருட்கள் நம் வீட்டுத் தயாரிப்பை விட சுவையுடன் இருப்பது போல தோன்றுவதற்கு இந்த எண்ணெய்தான் காரணம். ஆனால், இந்த எண்ணெயைப் பயன்படுத்தினால் உடலில் வேண்டாத கொழுப்பு சேர்ந்து இருதய நோய், புற்றுநோய், உடல் பருமன் எல்லாம் வந்துவிடும்!'' என்ற அதிர்ச்சிதான் அது.
*
பெரிய உணவகங்களில் வழங்கப்படும் 'சூப்'களிலும் பிரியாணி வகைகளிலும், துரித உணவகங்களில் வறுத்து வழங்கப்படும் எல்லா உணவுப் பண்டங்களிலும் இந்த அஜினோ மோட்டோ சேர்க்கப்படுகிறது. விருந்துணவு தயாரிக்கும் பல சமையல் நிபுணர்கள் 'டேஸ்ட் பவுடர்' என்று பெயரிட்டு சமையல் பொருட்களின் பட்டியலில் இதையும் சேர்த்து வாங்குகின்றனர்.


*இதனால்தான் திருமணம் போன்ற விருந்து நிகழ்ச்சிகளில் உணவு உண்போர் உடனடியாக வயிற்று உபாதையால் அவதிப்படுகிறார்கள்.மேலை நாடுகளில் உணவுப் பொட்டலங்களின் அட்டைப் பெட்டியில் அஜினோமோட்டோ கலந்திருப்பதை வெளிப்படையாக எழுத வேண்டும் என்று விதி இருக்கிறது. ஆனால், நமது நாட்டில் குழந்தைகளைக் கவரும் வகையில் பல வண்ணப் பாக்கெட்டுகளில் நொறுக்குத் தீனிகளை விற்பவர்கள் அவற்றில் அஜினோ மோட்டோ கலந்திருப்பதை மறைத்து 'added flavours' என்று மக்களுக்குப் புரியாத சங்கேத மொழியில் எழுதி ஏமாற்றுகிறார்கள்.


*பல்வேறு விளம்பரங்களில் அஜினோ மோட்டோ ஒரு தாவர உணவு என்றும் அதனால் ஆபத்து எதுவுமில்லை என்றும் தவறான தகவலைப் பரப்புகிறார்கள். தாவரங்களிலும் உயிரைப் பறிக்கும் நச்சுத் தன்மை உண்டு என்பதே உண்மை.


*குழந்தைகளை மையமாக வைத்துத் தயாரிக்கப்படும் ரெடிமேட் நொறுக்குத் தீனிகளான மேகி, லேய்ஸ், குர்குர்ரே என்பதிலிருந்து இன்று பலவகை துரித உணவுகள், வீட்டுச் சமையல் அறைகள் வரை புகுந்துவிட்ட இந்த அஜினோ மோட்டோ, தன் கரங்களை இன்னும் அதிகமாக நீட்டிக் கொண்டிருப்பது அதன் ஆக்கிரமிப்புத் தன்மையையே காட்டுகிறது.*சாப்பாட்டில் அதிகம் பிரியமில்லாத நோஞ்சான் குழந்தைகளுக்குப் பல பெற்றோர்கள், இந்த அஜினோமோட்டோ கலந்த நொறுக்குத் தீனி பொட்டலங்களை வாங்கிக் கொடுப்பர். இந்தக் குழந்தைகளும் வீட்டு உணவைவிட இந்தப் பொட்டலத் தீனிகளை அளவுக்கு மீறி தின்பர்.

*பசியை கண்ட்ரோல் செய்யும் உடலின் இயற்கையான நொதிப் பொருட்கள் அஜினோமோட்டாவால் செயல்படாத தன்மை ஏற்படும்போது, அஜினோமோட்டோவை தொடர்ந்து உண்ணும் சிறுவர்கள் சில காலம் கழித்துக் கண்டதை உண்ண ஆரம்பிப்பார்கள். பசிக்கும் நேரத்தில் அளவுக்கு அதிகமாக இப்படி உண்டதால்தான் இவர்கள் காலப்போக்கில் குண்டர்களாக மாறி விடுகிறார்கள்.

*பிறப்புக் கோளாறு, உறுப்புகளில் வளர்ச்சியற்ற தன்மை, தலைவலி, வாந்தி, செரிமானச் சிக்கல், கெட்ட கனவு, தூங்குவதில் சிக்கல், சோம்பல், மிதமாகும் இதயத்துடிப்பு, முடிகொட்டுதல், ஆஸ்துமா மற்றும் சர்க்கரை வியாதி போன்றவை அஜினோமோட்டோவை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு ஏற்படுவதாக மருத்துவர்கள் அண்மையில் கண்டுபிடித்திருக்கின்றனர்.

*
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புகூட, அஜினோமோட்டோ நொறுக்குத் தீனி பாக்கெட்டுகளில் 'MSG' அதாவது மோனோ சோடியம் கலந்துள்ளது என்று அச்சிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த எச்சரிக்கை வாசகங்கள் கூட இன்று பொட்டலங்களில் இல்லாமலிருப்பது அந்த வியாபார நிறுவனங்களின் வெற்றியையும் அரசாங்கத்தின் அலட்சியத் தன்மையையுமே காட்டுகிறது.


*

ஜப்பானிய டாக்டர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டதே அஜினோமோட்டோ. இயற்கையாகவே சுவையில்லாத அஜினோ மோட்டோ பொரித்த, வறுத்த உணவுகளுடன் கலக்கும் போது புளிப்புச் சுவை ஏற்படுகிறது. ஆகவே, அஜினோ மோட்டோவை உணவுப் பொருட்களில் கலப்பதை உடனடியாகத் தடை செய்ய வேண்டும்.


*


பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இந்த நச்சுப் பொருள் கலந்த உணவு வகைகளை வாங்கிக் கொடுக்காமல் இருப்பது நல்லது.
*இதில் இவ்வளவு விசயம் இருக்கா அம்மா!!!! ஏன் அம்மா அப்ப எங்கலுக்கு சிப்ஸ், நூடுல்ஸ், மற்றதையும் வாங்கி குடுக்குரிங்க?


*


நன்றி திரு. எம். முஹம்மது ஹுசைன் கனி.
http://www.chittarkottai.com/kaayaa_pazhamaa/aji_no_moto.html

7 comments:

மாதேவி சொன்னது…

மிகவும் பயனுள்ள நல்ல இடுகை.

நீங்கள் எடுத்துக்காட்டியது போல
செயற்கை நிறமி சுவையூட்டிகள் பயன்படுத்திய உணவுகளை விரும்பி உண்போர் அனைவரும் இதன் பாரதூர விளைவுகளை நிச்சயம் அறிந்திருக்க வேண்டும்.

prabhadamu சொன்னது…

வாருங்கள் மாதேவி நீங்கள் படித்து உங்கள் கருத்துக்கலையும் சொன்னதுக்கு என் நன்றிகள்.

DREAMER சொன்னது…

பயனுள்ள தகவல்கள்... பகிர்வுக்கு நன்றி.

அன்புடன்
ஹரீஷ் நாராயண்

Asiya Omar சொன்னது…

இதில் இவ்வளவு விசயம் இருக்கா அம்மா!!!! ஏன் அம்மா அப்ப எங்கலுக்கு சிப்ஸ், நூடுல்ஸ், மற்றதையும் வாங்கி குடுக்குரிங்க?

-நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரிகள்.பாராட்டுக்கள்.ப்ரபா.

prabhadamu சொன்னது…

நன்றி ஹரீஷ் நாராயண். உங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி. உங்கள் கருத்துக்கும் என் நன்றிகள்.


நன்றி ஆசியா அக்கா. அதை நான் தான் யோசிச்சு எழுதினேன். நன்றி அக்கா.

அண்ணாமலையான் சொன்னது…

நல்ல பகிர்வு...

prabhadamu சொன்னது…

நன்றி அண்ணா.

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "