...

"வாழ்க வளமுடன்"

12 நவம்பர், 2010

கர்ப்பிணிகளே... கருக் குழந்தை காக்க

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ஓரு கரு கருப்பையிலிருக்கும் காலத்தில் அதற்கு மிகவும் ஏற்றதொரு சூழ்நிலையை நாம் உருவாக்க வேண்டும்.ஏனெனில் அந்தச் சூழ்நிலைதான் குழந்தையின் ஆரோக்கியத்தை, வாழ்வை நிர்ணயிக்கிறது. அண்மைக் காலத்தில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த நோய், இதயக் கோளாறுகள் மக்களிடையே அதிகரித்து வருகின்றன.

*

ஆரோக்கியமான பெற்றோர் ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியும். அதில் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட கணவன்-மனைவி ஆரோக்கியமான குழந்தைகளைப் பெறலாம்.

*

கல்லூரியில் சேரும்போது, வேலையில் சேரும்போதுகூட அவசியமாக நாம் மருத்துவ சோதனை செய்து கொள்கிறோம். ஆனால் குழந்தை பெறுவதற்கு முன் பெரும்பாலானோர் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வதில்லை.


*
திருமணத்திற்கு முன், கருவுறுவதற்கு முன், உடல் ஆரோக்கியம் மற்றும் இனப் பெருக்கத் தகுதி ஆகியவற்றை ஆய்வு செய்துகொள்வது நல்லது.

*

கருவுறும் தாய்மார்களுக்கு ஃபோலிக் அமிலம் வழங்குவது சில குறைபாடுகளைத் தவிர்க்கும் என்றாலும் தட்டம்மைக்கு, சின்னம்மைக்கு தடுப்பூசி போடுவது சில பிறவிக் குறைபாடுகளைத் தடுக்கும். அதிக உடல் பருமன் மேலும் ஓரு பிரச்னை.

*


தாய்மார்களின் சரியான உடல் எடை ஆரோக்கியமான குழந்தைகள் பிறப்பதற்கு உதவும். சில மாத்திரைகள் தாயின் கருவிலிருக்கும் குழந்தையை மோசமாக பாதித்துவிடும். எனவே டாக்டரின் ஆலோசனையின்றி மருந்துகளை கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாது.

*

புகை பிடித்தல், புகை பிடிப்பவர்களின் அருகில் இருப்பது, மாசுபட்ட சுற்றுச்சூழல், மது போன்றவையும் கருக் குழந்தையைப் பாதிக்கும். திருமணம் புரியவிருக்கும் ஆணும், பெண்ணும் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் அனைத்துப் பெற்றோரும் முறையான பரிசோதனை மற்றும் ஆலோசனை பெறுவது அவசியம்.


***
thanks தினமணி
***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "