...

"வாழ்க வளமுடன்"

19 நவம்பர், 2010

பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் - தடுக்க வழி!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
வேகமாக பரவி வரும் பன்றிக் காய்ச்சலால் பீதி ஏற்பட்டுள்ள நிலையில் பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் அவசர கால நடவடிக்கையாக பின்வரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.1. காய்ச்சல், இருமல், தொண்டை வலி, ஜலதோஷம், மூக்கொழுகல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் குடும்ப மருத்துவரை அணுக வேண்டும். அவர் பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் என்று தெரிவித்தால் இதற்கென அருகாமையில் உள்ள அரசு சோதனை மையம் அல்லது மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

*

2. பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் முகமூடி அணிந்துதான் வெளியே செல்ல வேண்டும்.


*

3. பன்றிக்காய்ச்சலுக்கான சோதனைக்கு மாதிரிகள் சேகரிக்கப்படும். அப்பொழுது 7 நாட்களுக்கு வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும்.


*

4. மாதிரிகள் ஆய்வுக்கு ஒரு நாளில் இருந்து இரு நாட்கள் வரை ஆகும். அதில் பாசிட்டிவ் என தெரியவந்தால் அதன் பிறகு பன்றிக்காய்ச்சல் வைரசுக்கான (ஏ1 ச1) சோதனை நடத்தப்படும். அதே சமயத்தில் உடனடியாக மருத்துவமும் தொடங்கப்படும்.


*

5. நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெறலாம் அல்லது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறலாம்.


*

6. 7 நாட்களுக்குப் பிறகு அறிகுறிகள் மேலும் எதுவும் தென்படாத பட்சத்தில் வீடு அல்லது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள்.


***

பன்றிக்காய்ச்சலை தடுக்க இந்திய உணவை வெங்காயம், பூண்டு சாப்பிடலாம் - ரஷ்ய டாக்டர்கள்

மாஸ்கோ:


இந்தியாவின் மசாலாப் பொருட்களான பூண்டு, மஞ்சள், இஞ்சி, சீரகம், வெங்காயம் போன்றவை பன்றிக் காய்ச்சல், ஜலதோஷம் வராமல் தடுக்கக் கூடிய மருத்துவக் குணம் கொண்டவை என்று ரஷ்ய டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

*

மஞ்சள், இஞ்சி, சீரகம் உள்ளிட்டவற்றை உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மூலம் உடலில் நோய் தடுப்பு சக்தியை நன்கு பலப்படுத்தலாம் என்று மாஸ்கோ சுகாதாரத் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் அறிவுரை வழங்குகின்றனர். இது மட்டுமல்லாது, வெங்காயம் மற்றும் பூண்டையும் வேகவைக்காமல் அப்படியே சாப்பிடுமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

*

ரஷ்யாவின் கிழக்கு பகுதிகளில் தற்போது பன்றிக் காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களை ரஷ்யர்களுக்கு டாக்டர்கள் பரிந்துரைத்துள்ளனர்.***
thanks நக்கீரன்
thanks thatstamil
***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "