...

"வாழ்க வளமுடன்"

16 நவம்பர், 2010

கிவி (பசலிப்பழம் ) பழம் மருத்துவ குணங்கள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தோல் பச்சையாகவும், உள்ளே சிறிய கருப்பு விதைகளுடன் பச்சை, மஞ்சள் கலந்த சதையுடனும் இருக்கும் பழம் கிவி. தமிழில் அதன் பெயர் பசலிப்பழம்.

சுவையும் பயனும்:

இதை நாம், கேக், பாஸ்ட்ரி ஆகியவற்றின் மீது அழகுக்காக வைத்திருப்பதைப் பார்த்திருக்கலாம். பழத்தின் சுவை புளிப்பு அல்லது துவர்ப்பாக இருக்கலாம். பசலிப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஒட்டுமொத்த உடல்நலனுக்கு நல்லது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

*


உயிர் சத்துக்கள்:

அதில் உடல் நலனுக்குத் தேவையான சத்துக்கள் கொட்டிக் கிடப்பதாக லேட்டஸ்ட் ஆய்வு தெரிவிக்கிறது.

*

ட்ரிவோலி கிராண்ட் ஓட்டல் நிபுணர் பாட் கூறியதாவது:

கிவி ப்ரூட்டில் ஏராளமான மினரல்கள், விட்டமின்கள் உள்ளன. சிட்ரஸ் ரக பழமான அதில் விட்டமின் ஏ, சி, இ அதிகம். தோல், இதய நோய்கள், புற்றுநோய், உடல் பருமன் உட்பட பலவற்றில் இருந்து விட்டமின் சி நம்மைக் காக்கிறது.

*


விட்டமின் சியின் பணிகளை விட்டமின் இ அதிகரிக்கும். இந்த இரண்டும் கிவி ப்ரூட்டில் அதிகம். இவை நமது உடலை எல்லா நோய்களில் இருந்தும் காக்கும் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன.

***

மருத்துவ குணங்கள்:


கிவி ப்ரூட்டில் உள்ள நார்ச் சத்துக்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதால் டயபடீஸ் குணமாகும்.

*

ரத்த அழுத்தத்துக்கு காரணமான கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.

*

குழந்தைகளுக்கு ஆஸ்துமா, மூச்சிழுப்பு, சளி ஆகியவை இருந்தால் கிவி ப்ரூட் குணப்படுத்தும் என்றார்.

*

முக்கிய பழச் சந்தைகள், மார்க்கெட்களில் கிடைக்கும் கிவி ப்ரூட்டை வாங்கி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முழு ஆரோக்கியம் பெறலாம்.

***


கிவி பழ சீன உணவு வகை:சீன உணவு வகைகளில் பழங்கள் இடம்பெறுவது அதிகமில்லை. ஆனால், சில வேளையில், அதிகம் இனிப்பில்லாத பழங்களைப் பயன்படுத்துவதை காண முடியும்.

*

கிவி பழம், அதிக வைட்டமின் எனும் உயிர்சத்து சி கொண்ட பழ வகையாகும். அதிகமாகச் சாப்பிட்டால், உடல் நலத்துக்கு நன்மை பயக்கும்.

*

தேவையான பொருட்கள்:


கிவி பழம் 2
கோழி இறைச்சி 300 கிராம்
சிவப்பு நிறமான மிளகாய் 1
சமையல் மது ஒரு தேக்கரண்டி
கறுப்பு மிளகுத் தூள் அரை தேக்கரண்டி
உலர்ந்த தக்காளி மாவு ஒரு தேக்கரண்டி
உப்பு போதிய அளவு
சமையல் எண்ணெய் ஒரு தேக்கரண்டி


*


நாம் முதலில், கிவி பழங்கள், சிவப்பு நிறமான மிளகாய், கோழி இறைச்சி ஆகியவற்றை நன்றாக கழிவி சுத்தம் செய்ய வேண்டும்.


கிவி பழங்களின் தோலைக் கவனமாக நீக்கிக் கொள்ளுங்கள். 3 சென்டி மீட்டர் அளவுடைய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

சிவப்பு மிளகாயையும் கோழி இறைச்சியையும் துண்டு துண்டாக வெட்டிக்கொள்ளுங்கள்.

பிறகு, கோழி இறைச்சி துண்டுகள், சமையல் மது, தக்காளி மாவு, கறுப்பு மிளகுத் தூள், சிறிதளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

5 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும்.


அடுப்பின் மீது வாணலியை வையுங்கள். சமையல் எண்ணெயை ஊற்றுங்கள்.

10 வினாடிகளுக்குப் பின், கோழி இறைச்சி துண்டுகளை வாணலியில் போட்டு, வதக்கலாம்.

பிறகு, முறையே, சிவப்பு மிளகாய் மற்றும் கிவி பழத் துண்டுகளை இதில் சேர்க்கலாம். இறுதியில், கொஞ்சம் உப்பு சேர்க்கவும்.கிவி பழம், சிவப்பு மிளகாய், இறைச்சி கோழி ஆகியவை இடம்பெறும் இன்றைய வறுவல் தயார்.


மிளகாய் சிவப்பானது. கிவி பழம் பச்சை நிறமாகும். கோழி இறைச்சித் துண்டுகள் வெள்ளை நிறமாகும். இன்று நாம் தயாரித்த இந்த உணவு வகையின் நிறம் அழகானது.by- க்ளீட்டஸ், வாணி
***

பப்பாளி & கிவி ஜூஸ்

தேவையான பொருட்கள் :

பப்பாளிபழம் - ஒரு கப்
கிவி பழம் - ஒரு கப்
வென்னிலா ஐஸ் கிரீம் - ஒரு ஸ்கூப்
சர்க்கரை - நான்கு தேக்கரண்டி
பப்பாளி & கிவி - அரை கப் (பொடியாக அரிந்தது)
ஐஸ் கட்டிகள் - பத்து துண்டு

செய்முறை:

பப்பாளி, கிவி, ஐஸ் கிரீம், ஐஸ் கட்டிகள், சர்க்கரை, ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து மிக்சியில் நல்ல அடித்து ஜூஸ் டம்ளரில் ஊற்றி பொடியாக அரிந்து துண்டுகளை போட்டு குடிக்கவும்.


***

நன்றி: தினகரன்.
நன்றி: சீன வானெலி

***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "