...

"வாழ்க வளமுடன்"

15 அக்டோபர், 2010

உடல் நலக் குறிப்புகள் ( TIPES )

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

சிறுநீரகத்தைப் பாதுகாப்பதற்கு வழிகள்?

கொழுப்பு கொலஸ்டிரால், வித விதமான எண்ணெய்ப் பொறியல் முதலியவற்றை அதிகம் சேர்த்தால் சிறுநீரகத்தில் கற்கள் எளிதில் சேரும். மேலும் தினமும் பத்து டம்ளர் தவறாமல் தண்ணீர் அருந்த வேண்டும். அமெரிக்க மருத்துவரான சூசன் லார்க் அல்லோபதி மருத்துவம் பார்ப்பவர்.

*
இவரோ இந்திய மூலிகை மருந்துகளையே சிறுநீரகக் கற்களுக்குச் சக்தி வாய்ந்த மருந்துகள் எனக் கண்டுபிடித்துள்ளார். இவற்றுள் மஞ்சள், டான்டெலின் (மலர்ச்செடி), ஆர்ட்டி சோக் (முள்ளினச்செடி) என இவை மூன்றும் முக்கியம் என்கிறார். இவை கூட்டு மாத்திரைகளாக விற்கப்படுகின்றன. இவற்றுடன் வைட்டமின் ‘சி’ வைட்டமின் ‘ஈ’ அகிய மாத்திரைகளை அதிக டோஸ் கொடுத்துக் குணப்படுத்துகிறார்.

*
உங்கள் உணவில் 50% ஆவது பழங்களும் காய்கறிகளும் இடம் பெற்றால் சிறுநீரகக் கற்கள் உருவாகாது என்கிறார் இவர்.

***

கண்ணாடி அணிவதைத் தடுக்க முடியும்!

முந்நூறு கிராம் நாட்டு நெல்லிக்காய்ப்பொடி, நூறு கிராம் சுக்குப் பொடி (இஞ்சி), இரண்டையும் நன்றாகக் கலந்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். இரண்டு பொடிகளையும் மூலிகை மருந்துக் கடைகளில் பெறலாம்.

*
தினமும் காலையும் மாலையும் ஒரு தேக்கரண்டி இந்தப் பொடியை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு தண்ணீர் அருந்தி வரவும். இல்லையெனில் இரண்டு தேக்கரண்டி அளவு பொடி எடுத்து நான்கு டம்ளர் தண்ணிரில் கொதிக்க வைத்து, வடிகட்டித் தேன் சேர்த்தோ சேர்க்காமலோ அருந்தலாம்.

*

இது ஓர் உடல்நலம் காக்கும் அரிய பானம். குறிப்பாக, கண்ணாடி அணிந்திருப்பவர்கள் இந்த ஆரோக்கியப் பானத்தை அருந்தி வருவது நல்லது. இத்துடன் தினமும் கேரட்டுகள் இரண்டு முறை, பாசிப்பருப்புப் பாயசம் ஒரு முறையும் அருந்தி வரவேண்டும்.

*

பச்சைப்பட்டாணியோ அல்லது கொண்டைக் கடலையோ தினமும் உணவில் சேரவேண்டும். ஆரோக்கிய பானம், கேரட் சாறு, பருப்பு கொண்டைக்கடலை மூலம் செரிமான சக்தி உடலில் மிகச் சரியாக நடைபெறுகின்றது.

*

அப்போது இந்த உணவுகளின் மூலம் அதிகம் சேரும் வைட்டமின் ‘சி’யும், வைட்டமின் ‘ஏ’யும் உடலில் நன்கு கிரகிக்கப்படுவதால் மைனஸ் 3 முதல் 4 வரை லென்ஸ் அணிந்துள்ள கண்ணாடிக் காரர்கள் சில மாதங்களிலேயே கண்ணாடி இன்றி எளிதில் படிக்கலாம்.

*

கண்களில் அக்கு பிரஷர் சிகிச்சை செய்யும் முறையைக் கற்றுக்கொண்டால் எளிதில் படிக்கலாம். பார்வைத்திறன் மேலும் நன்கு அதிகரிக்கும்.

***

தங்கப்பானம் அருந்துங்கள்!

தங்கத்தாது உடலுக்கு நல்லது. 15 முதல் 30 கிராம் எடையுள்ள வளையல்கள், சங்கிலிகள் அழுக்கு, எண்ணெய்ப்பசை இல்லாமல் நன்கு கழுவிக் கொள்ளுங்கள்.
*
தங்கத்தின் எடை குறைந்தது 15 கிராம் இருக்க வேண்டும். இந்தத் தங்கத்தை நான்கு டம்ளர் தண்ணிரில் கொதிக்க வையுங்கள். மூன்று டம்ளராக குறைந்ததும் எடுத்து தர்மாஸ் ஃப்ளாஸ்க்கில் உற்றி வைத்துக்கொள்ளுங்கள்.
*
காலையில் இந்தத் தங்கப்பானத்தை ஒரு டம்ளர் அருந்துங்கள். மூச்சுக்குழல், நுரையீரல்கள், இதயம், மூளை முதலியவற்றிற்குச் சிறந்த டானிக் இது. இரத்தக் கொதிப்பு மூட்டுவலி, புற்றுநோய், இதய அடைப்பு முதலியவற்றை விரைந்து குணமாக்கும்.
*
தங்கத்தாது சேர்ந்த இந்தத் தண்ணீர் ஆறினாலும் 1/2 டம்ளர் வீதம் ஆறுநாட்கள் வரையில் இந்தத் தண்ணீரை அருந்தலாம். பிறகு மறுபடியும் தயாரித்துக் கொள்ளலாம்.
*
மன அழுத்தம், தோல்நோய், போலியோ, மூட்டுவலி, முதலியவற்றிற்கு 60 கிராம் செம்புத்தகடை நன்கு சுத்தம் செய்து இதே போல் 4 டம்ளர் தண்ணிரில் கொதிக்க வைத்து மூன்று டம்ளராக வற்றியவுடன் எடுத்து வைத்து அருந்தி வரவேண்டும். நரம்பு மண்டலத்திற்கான சத்துநீர் இது.
*
இந்த முறைகளைக் கண்டுபிடித்த மும்பை டாக்டர் தேவேந்திர டோரா ஜீரண உறுப்புகளையும் சிறுநீரகத்தையும் பலப்படுத்த முப்பது கிராம் வெள்ளித்தகடு ஆபரணத்தை இதே முறையில் வெந்நீரில் கொதிக்க வைத்து அருந்தச் சொல்கிறார்.
*
இந்த மூன்று தாது உப்புக்கள் சேர்ந்த இந்தத் தண்ணீர் குறிப்பிட்ட உறுப்புகளுடன் தொடர்பு கொண்டு பலப்படுத்திவிடும். இதனால் நோய் குணமாகி உறுப்புகளும் பலமாகி விடும்.
*
ஒருவருக்கு ஒரு பானமே போதும். ஆரோக்கியமாக உள்ளவர்களும், பெரிய பொறுப்புகளில் உள்ளவர்களும், எழுத்தாளர்களுக்கும் தங்கத்தாதுவில் பலப்படுத்தப்பட்ட தங்க நீர் மிகவும் நல்லது.

***

சிகரெட்டை விட எளிய வழி!

டெக்ஸர்ஸ் புற்று நோய் மருத்துவ மையம் சிகரெட் பழக்கத்தைவிட ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்து வெற்றி பெற்றுள்ளது. அது என்ன?
*
நீங்கள் உண்மையிலேயே சிகரெட் பிடிப்பதை நிறுத்த விரும்பினால் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை மட்டுமே சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை முதலில் மேற்கொள்ளவும். இடையில் அந்த நினைவு வந்தால் உடனே 12 மணிக்கு குடிக்கலாம் என்று சற்று உரத்துச் சொல்லுங்கள்.
*
இந்த இடைவெளிப்படி புகைத்தால் நான்கு வாரங்களில் சிகரெட் எண்ணிக்கை குறையும். தினமும் 3, 4 சிகரெட் மட்டுமே பிடிப்பவர்கள் காலையில் அல்லது மாலையில் என்று ஒரே ஒரு சிகரெட் மட்டும் புகைத்து வந்தால் போதும்.
*
இவர்களும் விரைவில் புகைப்பழக்கத்திலிருந்து விடுபடுவார்கள். நிரூபிக்கப்பட்ட வழிமுறை என்பதால் இந்த வழியில் புகைக்கு விடை கொடுக்கலாம்.

***

சாப்பாட்டைக் குறைக்க எளிய வழி!

ரெஃப்ரிஜிரேட்டரின் வெளியேயும், உள்ளேயும் நீலநிறம் இருக்க வேண்டும். நீலநிற விளக்கு ரெஃப்ரிஜிரேட்டரின் உள்ளே எரிந்தால் இயற்கையான உணவுப் பொருட்கள் நீல ஒளியில் பார்க்கும் போது பசி எடுப்பதைக் கட்டுப்படுத்தும்.
*
சாப்பிடும் தட்டு சிறியதாகவும் இருக்க வேண்டும். வீட்டில் இருக்கும்போது சிவப்புநிற உடையை சீருடையாக அணிந்துவந்தால் சாப்பிடும் எண்ணம் குறைந்து, உடல் பருமனும் குறைய ஆரம்பிக்கும்.
*
சாப்பாட்டுக்கு முன்பு எலுமிச்சை அல்லது தக்காளி சாறு சாப்பிடுவது பசியை மட்டுப்படுத்தும், வண்ணங்கள், எண்ணங்கள் ஏற்படுத்தும் மாற்றங்களால் உணவு சாப்பிடுவது எந்த விதமான விருப்பு வெறுப்பின்றியும் குறையும்.

***

திறமை பெருக ஓர் எளிய வழி!

பள்ளி, கல்லூரி மாணவர்களில் மிகவும் திறமைசாலியாக உருவாக சூயிங் கம் சாப்பிட்டபடியே ஆசிரியர் நடத்தும் பாடத்தைக் கேட்டால் போதுமாம்.
*
ஜெர்மனியில் எர்லான் ஜென் பல்கலைக்கழகத்தின் அறிவுத்திறம் பற்றிய ஆய்வாளர் சைக்ஃப்ரைட் லெஹரல் என்பவர், சூயிங்கம் சாப்பிட்டபடியே விரிவுரை கேட்ட மாணவர்கள் மற்ற மாணவர்களைவிட 40% கூடுதலாக தகவல்களைப் பெற்றிருந்தனர் என்கிறார்.
*
காரணம், சூயிங் கம் சாப்பிடும்போது மூளை தொடர்ச்சியாக ஆக்ஸிஜனைப் பெற்றுக்கொண்டே இருப்பதுதான் என்கிறார். இப்பழக்கத்தினால் முன்பைவிடத் திறமைசாலியாக ஒருவர் உருவாகிவிடுவாராம்.
*
வேலைபார்ப்பவர்களும், தொழில் செய்பவர்களும், கலைஞர்களும் இந்த சூயிங் கம் முறையை வேலை செய்யும்போது பின் பற்றலாம் என்கிறார் இந்த ஜெர்மனியர்.

***

குளிர்காலத்தில் சரியான உணவைப் பெற ஓர் எளிய வழி!

மிகவும் குளிர்ச்சியான உணவுப் பொருட்களை தினமும் சாப்பிட்டு வந்தால் மண்ணீரலும் வயிறும் சரியாகக் செயல்பட்டாலும் ஏதேனும் பிரச்னையைக் கொண்டு வந்துவிடும்
*
இந்த நிலையில் குளிர்காலத்தில் சோளம், தினைமாவு, எள், இஞ்சி, பனைவெல்லம் முதலியவற்றை நன்கு சேர்த்து வந்தால் மண்ணீரலும் வயிற்று உறுப்புகளும் நன்கு பலப்பட்டுச் செயல்படும்.
*
குளிர்காலத்தில் அளவோடு சாப்பிடப்படும் ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் முதலியவற்றால் இந்த உறுப்புகள் பழுதுபடாமல் இருக்கும். இது ஆயுர்வேதம் தரும் குறிப்பு.

***

ஜாக்கிங் மூலம் நல்ல உடல் நலன் பெற ஓர் எளிய வழி!

முதலில் 55 கஜதூரத்தை மட்டும் 4 தடவை மெல்லோட்டம் மூலம் நடங்கள். பிறகு இதே தூரத்தை 4 முறை சாதாரண நடை நடக்கவிடுங்கள். இந்த முறையில் மாற்றம் செய்யாமல் ஆறுவாரம் நடக்கவும்.
*
பிறகு 110 கஜ தூரத்தை 45 விநாடிகளில் மெல்லோட்டம் செய்து கடக்கவும். இதை ஒருவாரப் பயிற்சிக்குப் பிறகு 110 கஜ தூரத்தை 30 விநாடிகளில் கடக்கவும். கூடுதலாகவோ குறைவாகவோ செய்ய வேண்டாம்.
*
நம் கால்பாதங்களில் முக்கியமான 52 வகையான நரம்புகள் வந்து முடிகின்றன. இவை மெல்லோட்டம் செய்ய நன்கு தயார் ஆகும். இதற்குப் பிறகு ஒரு ஆறுமாதத்திற்கு ஒரு மைல் தூரத்தை ஒன்பது நிமிடங்களில் கடக்கும்படி மெல்லோட்டம் செய்யுங்கள்.
*
பிறகு வாழ்நாள் முழுவதும் ஒன்பது நிமிடங்கள் மட்டும் மெல்லோட்டம் செய்து வந்தால் போதும். அக்குபிரஷர் சிகிச்சைபோல 52 வகையான நரம்புகளும் உடலை முழுப் பாதுகாப்பில் வைத்திருக்கும். டெக்கான் ஹெரால்டு தரும் தகவல் இது.

***

நன்கு தூங்க இரவில் குறைவான உணவு நல்லதா?

தினசரி இரவில் 8 மணி நேரத்திற்கும் மேல் தூங்குபவர்களுக்கு இருதய பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாம். 7,000 பேர்களை 10 ஆண்டுகளுக்கு மேல் ஆராய்ந்ததில் இந்த உண்மை தெரிய வந்தது.
*
பகல் நேரத்தில் சோம்பலால் வரும் தூக்கம் இந்த எட்டுமணி நேரக்கணக்கில் சேராது. 4 வயதுக்கு மேற்பட்டவர்களின் இரவு நேரத் தூக்கம் 8 மணி நேரத்திற்குள் இருக்கட்டும்.

***

கொழுப்பைத் தவிர்க்கலாமா?

நாம் பிறக்கும் போது நமது மூளை 60% கொழுப்பாக இருக்கும். அதுவும் ஒமேகா - 3 என்ற கொழுப்பு அமிலத்தால் ஆனதாக இருக்கும். இது இருந்தால்தான் நமது மூளை ஞாபக சக்தியுடன் திகழும். மன அழுத்தம் ஏற்படாது.
*
குறிப்பாக, எல்லா நிகழ்ச்சிகளும் மறந்து போகும் வியாதியான அல்ஜிமெர்ஸ் என்பது வராது. உடல் பருமனை உருவாக்கும் கொழுப்பு இது. ஆனால், மீன், முட்டை முதலியவற்றிலிருந்து கிடைக்கும் நல்ல கொழுப்பு மூளைக்கும், இதயத்திற்கும் நன்மையையே செய்கின்றன.
*
சைவ உணவுக்காரர்கள் முருங்கைக் கீரை, பச்சைப்பட்டாணி, வல்லாரைக்கீரை, வள்ளிக்கிழங்கு முதலியவற்றின் மூலம் இதே அளவு ஞாபக சக்தியையும் மூளைத் திறனையும் பெறலாம். மன அழுத்தத்தை காரட் ஒன்றே குணப்படுத்திவிடும். தேவையான மன உறுதியையும், சிந்திக்கும் திறனையும் பாதாம் பருப்பு தந்துவிடும்.

***

சர்க்கரையைக் குறைக்கும் சாறு!

காரட் சாறுடன் பசலைக்கீரைச் சாறும் சேர்ந்து அருந்தி வந்தால் நீரிழிவு நோயாளிகள் சிரமமின்றி வாழலாம். காரட்டில் தோல் மற்றும் கண்களுக்கும் நலம் செய்யும் வைட்டமின் ‘ஏ’ இருக்கிறது.
*
மேலும் காரட்டில் உள்ள கால்சியம் இரத்தத்தைச் சுத்தப்படுத்திவிட வல்லது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ‘பி’ குரூப் வைட்டமின்களும் காரட்டில் அதிகமாக இருக்கிறது.
*
இது நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். பசலைக்கீரையில் அதிக அளவில் உள்ள மக்னீசியமும் வைட்டமின் ‘சி’யும் இரத்தக் குழாய்களைக் நன்கு பராமரிப்பதால் இவற்றைச் சாப்பிடுபவர்களுக்கு இதயத் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு இல்லை.
*
இந்த இரண்டு சாறு வகைகளையும் மிக்ஸியில் தயாரித்த உடனேயே அருந்த வேண்டும். ஆரோக்கியத்திற்கு இந்தச் சாறு ஓர் அற்புதமான மருந்தாகும்.

***

அதிக நேரம் டி.வி. பார்க்கலாம்!

30, 40 வயதுக்காரர்கள் ஒரு நாளில் பாதி நேரத்தை டி.வி. முன் உட்கார்ந்து கழிப்பதாக வருந்த வேண்டாம். லண்டனில் உள்ள ராயல் இலவச மருத்துவமனைப் பள்ளி ஒன்று மத்திய வயதுக்காரர்களை ஆராய்ந்தது. ஆராயப்பட்ட 5,000 பேர்களும் மிகவும் எளிமையான உடற்பயிற்சியை குறைந்த நேரமே செய்ததால் இதயம் சம்பந்தமான அபாயங்கள் நீங்கி தங்கள் வாழ்நாளை இப்போதும் நீடித்துக் கொண்டுள்ளார்கள்.
*
உங்கள் வீட்டில் உள்ள சுவர்க்கெடிகாரத்தைப் பார்த்தபடியே மூன்று நிமிடங்கள் மெல்லோட்டம் (Jogging) செய்யுங்கள். பிறகு 20 நிமிடங்கள் நடைப்பயிற்சியோ உடற்பயிற்சியோ செய்யுங்கள்.
*
டி.வி.யின் முன்பாக உட்காரும் முன்பு உங்களின் எல்லா வேலைகளையும் பாக்கி வைக்காமல் படுசுறுசுறுப்பாகப் பார்த்து முடித்து விடுங்கள்.

***

ஒற்றைத் தலைவலியை தடுக்க முடியும்!

வாயுத் தொந்தரவு, செரிமானமின்மை முதலியவை இருந்தால் சாப்பாட்டிற்குப் பிறகு பால் சேர்க்காத சுக்குக் காப்பியை அருந்தவும்.
*
உங்கள் சமையலில் இஞ்சியைத் தினமும் சேர்த்து வந்தால் வீட்டில் எவருக்கும் ஒற்றைத் தலைவலியே வராது. இஞ்சி சேர்ந்த ரசம், குழம்பு இரத்த ஓட்டத்தை தடை செய்யாமல் பார்த்துக் கொள்வதால், மூளைக்கு நன்கு ஆக்ஸிஜன் கிடைத்துவிடுகிறது.
*
ஒற்றைத் தலைவலி இருந்தாலும் உடனே போய்விடும். புது மணமக்கள் முதல் குழந்தை பிறக்கும் வரை தினமும் ஒரு வேளையாவது சுக்கு காபி குடித்து வந்தால் தலைத் தீபாவளியைக் குழந்தையுடன் கொண்டாடலாம்.

***

சோயா சாப்பிடுங்கள்!

சோயா மொச்சையில் இருந்து கிடைக்கும் புரதம், இதய நோய்களை அணுகுண்டுபோல் தகர்த்துக் குணமாக்குகிறது. கெடுதல் தராத கொலாஸ்டிரலையும் இது அதிகப்படுத்தி தருவதால் வாழ்நாளும் நீடிக்கிறது.
*
எல்சித்தன், கால்சியம், இரும்பு போன்ற முக்கியமான சத்துப் பொருட்களும் சோயாவில் உள்ளன. சிலருக்கு சோயா பிடிக்காது.
*
எனவே, சப்பாத்தி செய்யும்போது கோதுமை மாவுடன் சோயா மாவையும் 25% அளவு என்ற கணக்குப்படி சேர்த்துப் பிசைந்து சப்பாத்தி சுடவும். இது திட்டமிட்ட பரிபூரணமான உணவாக உண்மையில் திகழ்கிறது.


***
நன்றி தமிழ்வாணன் தளம்.
***


"வாழ்க வளமுடன்"


இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "