...

"வாழ்க வளமுடன்"

22 அக்டோபர், 2010

நமது உணவும் காய்கறிகளின் தன்மையும்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
நாம் உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரோட்டீன், தாதுப்பொருட்கள், வைட்டமின்கள் ஆகியவைகள் உள்ளன. கார்போஹைட்ரேட் இயங்கும் சக்தியை தருகிறது, புரோட்டீன் உடலை வளர்க்கிறது,


கொழுப்பு உடல் மாற்றத்தை தருகிறது. ஒரு மனிதன் தன் எடையை தக்க வைத்துக்கொள்ள குறைந்தது 30-35% கலோரி உணவை எடுத்துக் கொள்ள வெண்டும். எடை கூட இன்னும் நிரைய உணவு உட்கொள்ள வெண்டும்.

*

ஒரு மனிதன் தினமும் அவனுடைய உடல் எடையில் கிலோவிற்கு 30 மிலி தண்ணீர் பருக வேண்டும். அதே அளவு சிறுநீர் வெளியேர வேண்டும். இனிப்பு, உப்பு, துவர்ப்பு உள்ள பொருட்கள் மனிதனின் எடையை கூட்டும். கசப்பு, காரம், புளிப்பு ஆகிய பொருட்கள் மனிதனின் எடையை குறைக்கும்.


*


வாதம் உள்ளவர்கள் இனிப்பு, உப்பு, புளிப்பு ஆகிய பொருட் களை உண்ணலாம். பித்தம் உள்ளவர்கள் இனிப்பு, கசப்பு, துவர்ப்பு ஆகிய உணவுகளை உண்ணலாம். கபம் உள்ளவர்கள் கசப்பு, துவர்ப்பு, காரம் ஆகிய உணவுகளை உண்ணலாம்.

*

கசப்பு, புளிப்பு, காரம் உடைய பொருள்கள் வாயுவை உண்டாக்கும். பயிறு வகைகளை 2ஆக உடைத்தாலோ அல்லது பிரித்தாலோ இரைப்பையில் வாயு உண்டாகும். ஆகவே பயிறு வகைகளை தண்ணீரில் சில மணி நேரம் ஊர வைத்து சமத்தால் வாயு உண்டாகாது.


*

காரமுடைய பொருட்கள் உடலில் அமிலத்தன்மையை ஏற்படுத்தும்.

*

ஒரு மாதத்திற்கு 500 மிலிக்கு மிகாமல் எண்ணையை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

*

ஒரு வாரத்திற்கு 2 முட்டைகளுக்கு மேல் உண்ணக்கூடாது. முட்டையில் உள்ள மஞ்சள் கருவில் அதிக கொழுப்புச் சத்து உள்ளது. இந்த கொழுப்பு 8 தேக்கரண்டி வெண்ணைக்குச் சமமானது.

***

உப்பு

ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 2.5 கிராம் அளவு உப்பு சேர்த்துக் கொள்வது நல்லது. இதற்கு மேல் சேர்த்துக் கொண்டால் அதிக இரத்த அழுத்தத்தை உண்டாக்கும். ஊறுகாய், அப்பளம், சட்னி ஆகியவைகளில் உப்பு அதிகமாக உள்ளது. இதனால் இரத்த அழுத்தம் அதிகமகும்.

***

ஜீரணம்

மாவுப் பொருட்களின் ஜீரணம் வாயிலிருந்து ஆரம்பிக்கிறது. மாவுச்சத்து ஜீரணமடைய சுண்ணாம்புச் சத்து ஊடகமாக உள்ளது. மாவுப்பொருட்களை நன்கு மென்று சாப்பிட வேண்டும். இல்லையென்றால் சரியாக ஜீரணம் ஆகாது.

*

புரதம் இரைப்பையில் ஜீரணம் அடைய ஆரம்பிக்கிறது. புரதச் சத்து ஜீரணமடைய அமிலம் ஊடகமாக உள்ளது.

***

பூண்டு

[1] பூண்டில் ஆஸ்பிரின் குணம் உள்ளது. இதனால் இதயக்கோளாறு ஏற்படுவதை தவிர்க்கலாம்.

[2] பூண்டை உண்டால் உடம்பில் கொழுப்பு கரையும்.

[3] பூண்டு இரத்த அழுதத்தை கட்டுபடுத்தும்.

[4] இதய தசை மற்றும் இரத்தகுழாய் தசைகளையும் வலுப்படுத்தும்.

[5] பூண்டு நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு என்பதால் மலச்சிக்கலை அகற்றும்

[6] குழந்தை பெற்ற பெண்கள் தினமும் இரவில் பாலில் சேர்த்து காய்ச்சிக் கொடுத்தால் தாய்ப்பால் பெருகும், வயிற்று உப்புசமும் வராது.

[7] தசை வலியிருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்து கட்டினால் வலி குறையும்.

[8] பூண்டின் தோலை சேகரித்து சாம்பிராணிக்கு பதிலாக பயன்படுத்தலாம். அதன் புகைக்கு கொசு,ஈ மற்றும் கரப்பான் அண்டாமல் இருக்கும்.

***

இஞ்சி[1] இஞ்சியில் கால்ஷியம், வைட்டமின் ஏ, பாஸ்பரஸ், கார்போ ஹைட்ரேட், நிகோடினிக் ஆசிட் ஆகிய சத்துக்கள் உள்ளன. இஞ்சி ஜீரணத்திற்கு மிகவும் நல்லது. வயிற்றுப்புண் உள்ளவர்கள்

இஞ்சியைத் தவிர்க்க வேண்டும். பித்தத்தை குணமாக்கும்.

***

புதினா

புதினா கீரை இரத்த சுத்திகரிப்புக்குச் சிறந்த மருந்தாகும். தினமும் உணவில் தொடர்ந்து சேர்த்து வந்தால் முகத்தில் பொலிவு உண்டாகி, கரும்புள்ளி மறைகிறது, பருக்கள் வருவது குறைகிறது. முகத்திலுள்ள எண்ணை பசை மறைகிறது. வயிற்று உப்புசம், வயிற்றுப் பிரச்சனைகள் குறையும்.***

வெங்காயம்வெங்காயம் ஜீரணத்திற்கு நல்லது. வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டால் நரம்புத்தளர்ச்சி நீங்கும். (Allyle Propyle Disulphide) என்ற எண்ணை இருப்பதால் வெங்காயம் காரத்தன்மையோடு உள்ளது. இதயத்திற்கு சக்தியை தருகிறது. நரை முடியைத் தடுக்கும், தலையில் வழுக்கை விழாமல் காக்கும், எலும்புக்கு வலிமை அளிக்கும், பித்த நோய், கண் நோய், வாத நோய்கள் குணமாகும்.


*

கத்தரிக்காய், பீட் ரூட், ஊதா முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொண்டால் லங் கேன்சர் வராது. பீன்ஸ், பாகற்காய், கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொண்டால் எல்லா வகையான கேன்ஸர் நோய்களும் அண்டாது.

*

ஆரஞ்சு நிற காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்து வந்தால் கேன்சர் வராமல் தடுக்கலாம்.

*

நார் சத்து நிறைந்த தானியங்கள், பருப்பு வகைகள் போன்றவைகளை உண்டு வந்தால், நம் உடலிலுள்ள கழிவுப் பொருட்கள் முறையாக வெளியேரும்.

*

தக்காளி, கெட்ச்சப், சிவப்பு நிறமுள்ள ஸ்ட்ராபெர்ரி போன்றவைகளை உண்டால் கண் பார்வை நன்கு தெரியும்.


***

கத்தரிக்காய்


கத்தரிக்காயில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது. நரம்புகளுக்கு நல்லது, சளி இருமலுக்கு நல்லது. ஆஸ்த்துமா நோயாளிகளுக்கு நல்லது. தோல் வியாதி உள்ளவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை செய்தவர்கள் கத்தரிக்காயை தவிர்ப்பது நல்லது.


***

முருங்கக்காய்முருங்கக்காயில் இரும்புச்சத்து, கொழுப்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி உள்ளது. நரம்புகளுக்கு நல்லது. முர்ங்கக்காயை குழந்தைகள் உண்டால் வயிற்றில் கிருமிகள் அண்டாது. பெரியவர்களுக்கு வாயுக்கோளாரை ஏற்படுத்தும்.

***

வெண்டைக்காய்

Acetylated, Galeturomic என்ற அமிலங்கள் வெண்டைக்காய்க்கு வழுவழுப்பை ஏற்படுத்துகிறது. பாதி கரையும் நார்ச்த்து, பாதி கரையாத நார்ச்சத்து வெண்டைக்காயில் உள்ளது. கரையும் நார்ச்சத்து கொலெஸ்டெராலை குறைக்கும். கரையாத நார்ச்சத்து குடலை பாதுகாத்து, குடல் புற்று நோய் வராமல் காக்கும்.

***

மாங்காய்


மாங்காயில் வைட்டமின் ஏ நார்ச்சத்துக்கள் நிறைய உள்ளன. தோல் நோய் உள்ளவர்கள் மாங்காயை தவிர்ப்பது நல்லது. மாங்காயை நிறைய உண்டால் உடலில் சூட்டை உண்டாக்கும். மாங்காய்க்கு பசியைத்தூண்டும் தன்மை உள்ளது.

***

அவரக்காய்


அவரக்காயில் நிறைய புரதம் உள்ளது. இரும்புச் சத்தும், சுண்ணாம்புச் சத்தும் உள்ளது. நார்ச்சத்து அதிகம் உள்ளது. மலச்சிக்கலை நீக்கும்.

***

அத்திக்காய்


அத்திக்காயில் இரும்புச்சத்து, வைட்டமின் சி, சுண்ணாம்புச் சத்து ஆகியவைகள் உள்ளன. அத்திக்கயை உணவில் சேர்த்து வந்தால் மூல நோய் குணமாகும்.

***

பீர்க்கங்காய்


பீர்க்கங்காயில் நீர்ச்சத்து நிறைய உள்ளது. தாது உப்புக்களும் உள்ளன. உடல் உஷ்ணத்தை தணிக்கும். இரவு உணவில் பீர்க்கங்காயை தவிர்ப்பது நல்லது.

***

கோவக்காய்


கோவக்காயில் வைட்டமின் ஏ சத்து உள்ளது. வாய் மற்றும் நாக்கிலுள்ள புண்களை குணப்படுத்தும்.

***

புடலங்காய்


புடலங்காயில் வைட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, கந்தகச் சத்து ம்ற்றும் நிறைய புரதம் உள்ளது. தலை வலி, சளி மற்றும் ஆஸ்த்துமா நோய் உள்ளவர்கல் புடலங்காயை தவிர்ப்பது நல்லது.***

பாகற்காய்


பாகற்காயில் பாலிபெப்டைட் என்ற இன்சுலின் உள்ளதால் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. பாகற்காயை நிறைய உண்டால் ஆண்மைக்குறைவு ஏற்படும். பாகற்காய் வயிற்றிலுள்ள கிருமிகளை அழிக்கும். மஞ்சள் காமாலை நோய்க்கு பாகற்காய் ஜூஸ் சாப்பிடலாம்.

***

சுரைக்காய்


சுரைக்காயில் நீர் சத்து, சுண்ணாம்புச் சத்து, புரதம் ஆகியவைகள் உள்ளன. உடல் உஷ்ணத்தை தணிக்கும். ஆண்மை சக்தி கூடும். இதயத்திற்கு நல்லது.

***

பூசனிக்காய்


பூசனிக்காயில் கொழுப்பு மற்றும் புரதச் சத்து உள்ளது. நரம்பு மற்றும் வயிற்றுப்புண்களுக்கு நல்லது.

***

கொத்தவரைக்காய்


கொத்தவரைக்காயில் நார்ச்சத்து உள்ளது. வாயுத்தொல்லையை உண்டாக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.

***

வாழக்காய்வாழைக்காயில் வைட்டமின் இ மற்றும் கொழுப்புச் சத்து உள்ளது. மலச்சிக்கல் மற்றும் வாயுத்தொல்லையை உண்டாக்கும்.

***

வெள்ளரிக்காய்வெள்ளரிக்காயில் பொட்டாஷியம் மற்றும் வைட்டமின் ஏ உள்ளது. நன்கு சிறுநீர் கழியும். உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.

***

சுண்டக்காய்சுண்டைக்காயில் வைட்டமின் சி உள்ளது. உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றில் கிருமிகள் வராது.

***

பலாக்காய்


பலாக்காயில் சுண்ணாம்புச் சத்து உள்ளது. அஜீரண கோளாறு உள்ளவர்கள் பலாக்காயை தவிர்க்கலாம். செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும்.

***

களாக்காய்


களாக்காயில் வைட்டமின் ஏ வைட்டமின் சி உள்ளது. நல்ல பசி உண்டாகும். கண் பார்வை கூடும்.

***

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் கால்சியம், செல்லுலோஸ், வைட்டமின் சி, கார்போஹைட்ரேட், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், நிகோடினிக் ஆசிட் ஆகிய சத்துக்கள் உள்ளன. சர்க்கரை நோயாளிகள் மற்றும் பிளட் பிரஷர் உள்ளவர்கள் நெல்லிக்காயை உண்ணலாம். நெல்லிக்காயை உண்டால் இளமை கூடும். தலை முடி நன்கு வளரும்.

***

காரட்


காரட்டில் வைட்டமில் ஏ, தாது உப்புக்கள், கார்போஹைட்ரேட், மற்றும் மெலோனிசைட்ஸ் அன்ற நிறமி அணுக்கள் உள்ளன. காரட் கண் பார்வைக்கு நல்லது.

***

பீன்ஸ்

பீன்ஸில் வைட்டமின் ஏ, கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் தாது உப்புக்கள் உள்ளன. கண் பார்வை தெளிவு பெறும், வாயு, பித்தம் நீங்கும். சருமம் பழபழப்பாகும்.

***

பீட் ரூட்


பீட்ரூட்டில் குளூகோஸ் உள்ளது. பீட்ரூட் உண்டால் இரத்த சோகை நீங்கும்.

***

வெள்ளை முள்ளங்கி


வெள்ளை முள்ளங்கியில் நார்ச்சத்து, பொட்டாஷியம், கால்ஷியம், இரும்புச்சத்து மற்றும் சத்து உள்ளது. சிறுநீரக கல் அடைப்பு குணமாகும். உடலுக்கு குளுர்ச்சியைத் தரும்.

***

சிவப்பு முள்ளங்கி


சிவப்பு முள்ளங்கியில் வைட்டமின் சி, கால்ஷியம், கந்தக சத்துக்கள் உள்ளன. சிறுநீரை வெளியேற்றும். அசிடிட்டி உள்ளவர்கள் சிவப்பு முள்ளங்கியை உண்டால் குணமாகும்.***

காலிஃபிளவர்

காலிஃபிளவரில் இரும்புச்சத்து, சோடியம், பாஸ்பரஸ், பொட்டாஷியம், வைட்டமின் ஏ, வைட்டமின் இ, மெக்னீஷியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. மலச்சிக்கல் வராமல் இருக்கும், உடல் மெலியும்.

***


முட்டைக்கோஸ்

முட்டைக்கோசில் வைட்டமின் ஏ, வைட்டமின் இ, சோடியம், இரும்பு, கால்ஷியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் உள்ளன. தாது பலம் கூடும், சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.

***

நார்த்தங்காய்

நார்த்தங்காயில் சிட்ரஸ் ஆசிட் உள்ளது. வயிற்றுப்புண், அல்சர் உல்ளவர்கள் நார்த்தங்காயை தவிர்க்க வேண்டும். வாயுத்தொல்லையை நீக்கும்.***
thanks vahee
***"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "