...

"வாழ்க வளமுடன்"

18 அக்டோபர், 2010

உடம்பு வலிக்கு குட மிளகாய் சாப்பிட்டால் சரியாகும்?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
"குட மிளகாய் சாதாரண உடம்பு வலி. மூட்டுவலி. தசைப்பிடிப்பு மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கும் திறன் கொண்டது' என ஆய்வு முடிவுகள் தெரிவித்தன.
லக்னோவில் உள்ள மத்திய மருந்து பொருட்கள் மற்றும் நறுமண பொருட்கள் ஆய்வு மையம் இதுகுறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டது.

*

குடமிளகாயில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஒருவகை பொருள் உடம்பு வலி. மூட்டுவலி. தசைப்பிடிப்பு மற்றும் நரம்பு தொடர்பான நோய்களை குணப்படுத்தும் திறன் கொண்டது என கண்டறிந்துள்ளது.

*


இதுகுறித்து அந்த ஆய்வு மையத்தின் இயக்குனர் எஸ்.பி.எஸ். கனுஜா கூறியதாவது:

1. குட மிளகாயில் இன்னும் என்ன வகையான மருத்துவ குணங்கள் உள்ளன என ஆய்வு நடந்து வருகிறது.

*

2. புதிய வகையான மிளகாய் விதை உருவாக்கப்பட்டு அவை மருந்து உற்பத்திக்கு ஏற்றதாக இருக்கும் வகையில் பயன்படுத்தப்படும்.

*

3. இந்தியாவில் உணவு தயாரிப்பில் ஏற்கனவே குடமிளகாய்க்கு சந்தையில் நல்ல மதிப்பு இருக்கிறது.

*

4. இதுவரை காய்கறி வகையாக மட்டுமே அறியப்பட்ட குட மிளகாய் இனி மருந்து செடியாக மாற்றம் பெறும்.

*

5. மிளகாய் செடி நம்நாட்டின் எல்லா பகுதிகளிலும் பயிரிடப்படுகிறது. எனவே. மருத்துவ பயன்பாட்டிற்காக அதிக அளவில் பயிரிடுவதில் சிரமம் இருக்காது.

*

6. மருத்துவ குணம் நிறைந்த புதிய வகை குட மிளகாய் செடியை பயிரிடுவது பற்றி லக்னோ. ஐதராபாத். பெங்களூர். பாகேஸ்வர். பந்த்நகர் ஆகிய இடங்களில் ஆய்வுகள் தொடர்கின்றன.

*

7. குட மிளகாயை மட்டும் தனியே மருந்தாக பயன்படுத்துவது ஆபத்தாக அமையும். எந்த மருந்துடன் எப்படி மிளகாயை கலந்து பயன்படுத்துவது என்பது குறித்து மத்திய அறிவியல் மற்றும் தொழிற்சாலை ஆய்வு கவுன்சில் விஞ்ஞானிகளுடன் விவாதிக்கப்பட்டு வருகிறது.

*

8. விரைவில் மருந்துக்காக குட மிளகாய் பயிரிடும் நல்ல நிலை உருவாகும். என கூறப்படுகின்றது


***

நன்றி நிலா முற்றம்

***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "