...

"வாழ்க வளமுடன்"

20 அக்டோபர், 2010

அணுகுண்டுக்கு சவால்விடும் கரப்பான் பூச்சி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
மாமியாருக்கு பயப்படாத பெண்கள்கூட கரப்பான் பூச்சிக்கு பயப்படுவார்கள் என்று சொல்வதில் உண்மை இருக்கோ இல்லையோ அணுகுண்டு ஒன்று வெடித்து பெரும் உயிர் அழிவு ஏற்பட்ட பின் சுடுகாடாக மாறியிருக்கும் பிராந்தியத்தை பார்க்க கூடிய ஒரு உயிரினம் ஒன்று உள்ளது என்றால் அது வீட்டில் வாழும் கரப்பான் பூச்சிதான்.ஆம், கரப்பான் பூச்சி மனிதனை விட பல ஆயிரம் மடங்கு கதிர் வீச்சை தாங்கிக் கொள்ளும் ஆற்றல் படைத்தது.

*

மனிதனின் அழிவின் பின்னும் வாழப்போகும் இவை தோன்றியது மனித இனம் தோன்றுவதற்கு முன். அதாவது 350 மில்லியன் வருடங்களுக்கு முன் தோன்றியவை.

*

அன்று முதல் இன்று வரை அதன் தோற்றத்தில் எந்த பரிணாம வளர்ச்சியும் அடையவில்லை(சுறா மீனும் இதே காலப்பகுதியில் தோன்றியவை, அவையும் நீண்ட காலம் தோற்ற மாற்றமின்றி வாழ்கின்றன).

*

உலகின் துருவப் பகுதிகள் தவிர்ந்த ஏனைய எல்லாப் பகுதிகளிலும் வாழும் கரப்பான் பூச்சியின் தாயகம் ஜேர்மனி நாடாக இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கணிப்பாகும்.

*

தற்போது உலகில் சுமார் 3490 கரப்பான் இனங்கள் வாழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

*

இவை ஆறு குடும்பங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. கரப்பான் பூச்சி தலை, நெஞ்சு, வயிறு எனும் மூன்று பிரதான பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

*

இவற்றிற்கு மூன்று ஜோடி கால்களும்,ஒரு ஜோடி உணர்கொம்பும் உண்டு.கரப்பான் பூச்சிக்கு முதுகெலும்பு கிடையாது.

*

இரண்டு சோடி அல்லது ஒரு சோடி சிறகுகள் கணப்பட்டாலும் சில கரப்பான் பூச்சிக்கு சிறகுகள் கிடையாது.

*

கரப்பான் பூச்சியின் இரத்தம் வெள்ளை நிறமுடையது! இவற்றால் தலை துண்டிக்கப் பட்டாலும் சுவாசிக்க முடியும்!!

*

(சில கரப்பான் பூச்சிகளால் காற்றுஇல்லாமல் 45 நிமிடங்கள் வழமுடியும்.)

*

உலகின் மிகப்பெரிய கரப்பான் பூச்சி இனம் Giant burrowing cockroach ஆகும். இது ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றது.

*

இது 9 சென்ரிமீட்டர் வரை வளரக்கூடியது. இதன் நிறை 30 கிராமை விட அதிகமாக இருக்கும்.

*

இந்த கரப்பான் நிலத்தை 3 அடி(1 மீட்டர்) அழத்திற்கு தோண்டி வசிக்கின்றது.

*

இதன் காரணமாகவே இதற்கு Giant burrowing cockroach என பெயர் வந்தது. (burrow-பூமியில் வளை தோண்டு). இதற்கு சிறகுகள் கிடையாது.இதனை சிலர் செல்லப்பிராணியாகவும் வளர்க்கின்றனர்.

*

கரப்பான் பூச்சியின் உணர்கொம்புகள் சூழலை அறிய உதவுகின்றது. இரவில்(இருட்டில்) உணவு வேட்டையை செய்யும்.

*

இவை எந்த பாகுபாடுமில்லாமல் எல்லாவிதமான உணவையும் வெட்டியும், அரைத்தும் உண்கின்றன.

*

அப்படி உணவுப் பஞ்சம் ஏற்பட்டால் காகிதம்,சவர்க்காரம் போன்றவை கூட உணவாகும். இதற்கு இதன் வலிமை வாய்ந்த தாடைகள் உதவி செய்கின்றன.

*

சில சமயம் உணவே கிடைக்காமல் கரப்பான் பூச்சியினால் மூன்று மாதங்கள் வரை உயிர் வாழ முடியும்!

***
நன்றி ஈகரை.

***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "