...

"வாழ்க வளமுடன்"

19 அக்டோபர், 2010

கிரியோ பிரசர்வேஷன் (கரு முட்டையை உறைய வைக்கும்.....)

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
கிரையோ பிரசர்வேஷன் என்பது:

தற்போது மருத்துவத் துறையில் அதிகம் பயன்படும் வார்த்தை கிரையோ பிரசர்வேஷன் என்பதாகும்.சோதனைக் குழாய் மூலம் கருவாக்கம் நடத்தப்பட்டு, கரு உருவான பிறகு அதனை தாயின் கருப்பையில் செலுத்தி பதியம் செய்ய வேண்டும்.

*

ஆனால் கருப்பையில் பதியம் செய்வதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு தாய்க்கு உடல்நிலை பாதிக்கப்பட்டால் அப்போது கருவை காப்பாற்ற வேண்டிய பொறுப்பை மருத்துவத்துறைதான் மேற்கொள்ள வேண்டும்.

*

அதாவது, கருவாக்கம் செய்யப்பட்ட கருமுட்டையை அதனுள் இருக்கும் கரு உயிரோடு சேர்த்து திரவ நைட்ரஜனில் மைனஸ் 196 டிகிரியில் உறய வைத்துவிட்டால், அதை எப்போது வேண்டுமானாலும் மீண்டும் பயன்படுத்தலாம்.

*

கரு உயிரை உறைய வைக்கும் இந்த முறைக்கு கிரையோ பிரசர்வேஷன் என்று பெயர்.

***


கிரியோ பிரசர்வேஷன் எப்படி செயல்படுகிறது:


கரு முட்டையை உறைய வைக்கும் கிரியோ பிரசர்வேஷன் எப்படி செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்ள எல்லோருக்குமே ஆர்வம் இருக்கும்.


*

அதாவது, உறை நிலையில் திரவ நைட்ரஜன் உறைந்து பனிக்கட்டியாக மாறிவிடும். கருமுட்டை அதில் ஒட்டிக் கொள்ளும்.

*

அதை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வரும்போது முட்டை தனித்தனியாக பிய்த்துக் கொள்ளும் நிலை ஏற்படும்.

*

அதனால் குரோமோசோம் குறைபாடுகள் ஏற்படக்கூடும்.

*

அதைத் தவிர்ப்பதற்காக பல்வேறு ரசாயனங்களை திரவ நைட்ரஜனில் கலந்து அதில் சினை முட்டையை பாதுகாப்பாக வைப்பார்கள்.

*

எவ்வளவு உறை நிலை ஏற்பட்டாலும் முட்டையைச் சுற்றி லேசான இடைவெளி இருப்பதால் அதற்கு பாதிப்பு ஏற்படாது.


***

கருவை உறைய வைக்கும் காலம்:

கருவை உருவாக்கி அதனை கிரியோ பிசர்வேஷன் முறையில் உறைய வைத்துவிட்டால் அது எத்தனை ஆ‌ண்டு காலத்திற்கும் உயிரோடு இருக்கும்.

*


இப்படிப்பட்ட கரு உயிரை 50 ஆண்டுகளுக்குப் பின்பு கூட ஒரு தாயின் கருப்பையில் செலுத்தி குழந்தையை உருவாக்கலாம்.

*

ஒன்றுக்கும் மேற்பட்ட கருமுட்டைகளை உருவாக்கி இதில் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதால் பதியம் செய்யப்பட்ட ஒரு கரு‌வி‌ன் உ‌யி‌ர் அழிந்து போனாலும், பாதுகாக்கப்படும் இன்னொரு கரு முட்டையை பயன்படுத்தி மீண்டும் கருத்தரிப்பு முயற்சியில் ஈடுபடலாம்.

*

த‌ற்போது நலமுட‌ன் இரு‌க்கு‌ம் தம்பதிகள் கூட தங்களது கருமுட்டைகளை இந்த முறையில் பாதுகாத்து வை‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.

*

தேவைப்படும்போது இ‌ந்த கருவை‌ப் பய‌ன்படு‌த்‌தி கருத்தரித்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.

*

ஏதேனு‌ம் நோ‌ய் தா‌‌க்‌கி அத‌ற்காக மரு‌ந்து உ‌ட்கொ‌ள்ள வே‌ண்டிய ‌நிலை‌யி‌ல் இரு‌ப்பவர்க‌ள், த‌ற்போது ப‌ணி ‌நி‌மி‌த்தமாக குழ‌ந்தை பெ‌ற்று‌க் கொ‌ள்ள இயலாதவ‌ர்க‌ள் போ‌ன்றவ‌ர்க‌ள் இ‌ந்த முறையை‌ப் ‌பி‌‌ன்ப‌ற்றலா‌ம்.

***
thank webdunia

***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "