...

"வாழ்க வளமுடன்"

30 அக்டோபர், 2010

நீங்கள் 35 வயதை தாண்டிய பெண்ணா?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அப்படியானால் மார்பகங்களை அவ்வப்போது சுய பாரிசோதனை செய்து கொள்ளுங்கள். வழக்கத்துக்கு மாறhன கட்டிகள், அல்லது வேறு மாற்றங்கள் தென்பட்டால் உடனடியாக மருத்துவாரிடம் செல்லுங்கள். ஏனெனில் அது உயிருக்கு உலை வைக்கும் மார்பக புற்றுநோயாக கூட இருக்கலாம்.
ரொம்ப பயப்படாதீங்க... மார்பக புற்றுநோயைப் பற்றி விலாவாரியாக தொரிஞ்சுகோங்க..

***


மார்பக புற்றுநோய் என்றால் என்ன?

மார்பக திசுக்களில் ஆபத்தான செல்கள் உண்டாவதைத் தான் மார்பக புற்றுநோய் என்று சொல்கிறேhம். மனித உடம்பு பலதரப்பட்ட செல்களால் ஆனது. உடம்பின் தேவைக்கு தகுந்தபடி இந்த செல்கள் அவ்வப்போது பிhரிந்து, கூடுதலான செல்களை உருவாக்கும்.

*

இது இயல்பான விஷயம். சில நேரம் குறிப்பிட்ட பகுதியில் செல்கள் வழக்கத்துக்கு விரோதமாக பல்கி பெருகி ஒன்றhக திரளும். இது கட்டி என்று குறிப்பிடப்படுகிறது. புற்றுநோயின் ஆரம்பமும் இதுதான்.

*

மார்பக புற்றுநோய் கட்டிகள், மார்பக திசுக்களில் தொடங்கி பரவும். மற்ற புற்றுநோய்களை மாதிhரி இதுவும் உடம்பின் பிற உறுப்புக்களிலும் பரவி ஆபத்தான கட்டிகளை உண்டாக்கும். பெண்ணாக பிறந்த ஒவ்வொருவருக்கும் மார்பக புற்றுநோய் ஆபத்து இருக்கிறது. வயது மற்றும் வாய்ப்புக்களை பொறுத்து ஆபத்து அதிகாரிக்கும்.

***

பொதுவானது எப்படி?

உலகில் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கண்டுபிடிக்கப்படுகிறது. மேற்கத்திய நாடுகில் இது சகஜமான நோயாகி விட்டது.

*

இருப்பினும் மேற்கத்திய உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை மோகம் அதிகாரித்து வருவதால் நம்ம இந்தியா உள்பட.. உலகின் பல நாடுகளிலும் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை படு ஸ்பீடாக அதிகாரித்து வருகிறது.

*

இங்கு ஆண்டுதோறும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு மார்;பக புற்றுநோய் கண்டுபிடிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இதில் மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்கள் நிலை மோசம். இதுபோல அருகில் உள்ள கேரளாவிலும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

*

ஒட்டுமொத்தமாக பார்த்தால் நகர்ப்புறங்களில் மார்பக புற்றுநோய் பரவலான ஒன்றhகி வருகிறது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 20 சதவீதம் பேர் புற்றுநோய் தொடர்பான விஷயங்களால் பாதி;க்கப்படுகின்றனர். இதில் மார்பக புற்றுநோய் தான் ஜாஸ்தி.

***


ஆபத்தான காரணிகள்

வயது - நீங்கள் வயதான பெண்மணியாக இருந்தால் மார்பக புற்றுநோய் ஆபத்து அதிகம். பெதுவாக 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களிடம்தான் இந்நோய் சகஜமாக உள்ளது. இதில் சராசாரி வயது 63 ஆகும்.

*

பூப்பெய்துதல் - பருவம் அடையும் வயதுக்கும், மார்பக புற்றுநோய்க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அதாவது சற்று தாமதமாக பூப்பெய்தும் பெண்ணைக் காட்டிலும் 12 வயதிலேயே பருவத்துக்கு வரும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஆபத்து மிக அதிகம்.

*

இதற்கு ஈஸ்ட்ரோஜன் ஹhர்மோன்கள் தான் காரணம். சின்ன வயதிலேயே வயதுக்கு வரும் பெண்களுக்கு, மாத விலக்கு எண்ணிக்கை அதிகம். இத்தகைய சூழலில் ஈஸ்ட்ரோஜன் நீண்ட காலத்துக்கு வெளிப்படுவதால் புற்றுநோய் ஆபத்தும் அதிகாரிக்கிறது.


*


குழந்தை பெறுதல் - பெண்கள் 25 முதல் 30 வயதுக்குள் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். 30 வயதை தாண்டி முதல் குழந்தையை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஆபத்து 2 முதல் 3 மடங்கு அதிகம். அதே சமயம் குழந்தையே பெற்றுக் கொள்ளாமல் காலம் தள்ளுவதும், ஆபத்தை இன்னும் அதிகாரிக்கும்.

*


குடும்ப பாரம்பாரியம் - தனிப்பட்ட முறையில் மார்பகங்கள் சம்பந்தமான நோய்களால் (புற்று அல்லாத) அவதிப்படும் பெண்களுக்கு, அந்த குறிப்பிட்ட மார்பகத்திலோ அல்லது வேறு மார்பகத்திலோ புற்றுநோய் வரக் கூடும்.

*

ஹhர்மோன் சிகிச்சை - மெனோபாஸ் தாக்கத்தை குறைப்பதற்காக இன்று ஹhர்மோன் சிகிச்சை எடுத்துக் கொள்வது சகஜமாகி வருகிறது. இந்த சிகிச்சையில் ஈஸ்;ட்ரோஜன் மற்றும் புரோஸ்ஜெஸ்டீரான் கலந்து சிகிச்சை அளிக்கிறhர்கள். இது மார்பக புற்றுநோய் ஆபத்தை 26 சதவீதம் அதிகாரிக்கும்.

*

மரபியல் காரணிகள் - BசுஊA 1 மற்றும் BசுஊA 2 என்ற இரண்டு குறிப்பிட்ட மரபணுக்கள் மார்பக புற்றுநோயின் ஆபத்தான காரணிகள் ஆகும். இது தவிர சில குடும்பத்தில் பெண்களுக்கு, சின்ன வயதிலேயே மார்பக புற்றுநோய் அல்லது கருப்பை புற்றுநோய் காணப்படும்.

*

இதற்கு மேற்படி மரபணுக்கள் தான் காரணம். மரபியல் ரீதியான வேறு சில காரணங்களாலும் மார்பக புற்றுநோய் வரலாம்.
*
மதுபானம் - மது பழக்கமே இல்லாத பெண்களுடன் ஒப்பிடும் போது, தண்ணி அடிக்கும் பெண்களுக்கு புற்றுநோய் ஆபத்து சற்று அதிகம்.
*
உணவு மற்றும் உடற்பயிற்சி - கொழுப்புச் சத்துக் குறைந்த உணவுகள் மற்றும் ரெகுலரான உடற்பயிற்சி ஆகியவற்றை பின்பற்றும் பெண்கள் புற்றுநோய் ஆபத்தில் இருந்து தப்பிக்க முடியும்.

***


கண்டுபிடிப்பது எப்படி?

மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது மிகவும் முக்கியமானது. இதற்கு சுய பாரிசோதனை செய்து கொள்ளலாம் அல்லது உhரிய மருத்துவாரிடம் சென்று மேமோகிராம் பாரிசோதனை செய்து கொள்ளலாம்.

*

சுய பாரிசோதனை செய்யும் முன் மார்பகத்தில் வழக்கமாக நடக்கும் மாற்றங்கள் பற்றி நன்றhக தொரிந்திருக்க வேண்டும். இதன்மூலம் சாதாரண மாற்றங்களை கூட புற்றுநோய் என எடுத்துக் கொள்வது தவிர்க்கப்படும்.

*

மார்பக சுய பாரிசோதனையை பொறுத்தமட்டில் மாதந்தோறும் ஒரே தேதியில் செய்ய வேண்டும். மாத விலக்கான 3 முதல் 5 நாட்கள் கழித்து பாரிசோதனை செய்யலாம். ஒருவேளை மாத விலக்கு நின்றிருக்குமானால் கட்டாயம் மாதந்தோறும் அதே நாளில் செய்ய வேண்டும்.

*

சுய பாரிசோதனை மூலம் மார்பகத்தில் வழக்கத்துக்கு மாறhன மாற்றம் - அறிகுறி தென்பட்டால் அதை உடனே கண்டுபிடிக்க முடியும்.

***


அறிகுறிகள்

பெரும்பாலும் வலியில்லாமல் காணப்படும் கட்டிகள் தான் இதன் அறிகுறியாக உள்ளது. மற்ற அறிகுறிகள் வருமாறு

1. மார்பகங்கள் அல்லது அக்குளில் புதிய அல்லது வழக்கத்துக்கு மாறhன கட்டி, அல்லது தடித்து இருத்தல்

2. மார்பகத்தின் அளவு மற்றும் வடிவத்தில் மாற்றம்

3. மார்பக தோலில் சிவப்பு தடுப்புகள் போல தொரிவது

4. மார்பு காம்புகளில் இருந்து தானாகவே ரத்தம் வடிதல்

5. மார்பு காம்புகள் உள்ளிழுத்துக் கொள்வது

6. மார்பகங்களில் வலி

***


பாரிசோதனைகள்

மேற்குறிப்பிட்டதைப் போல ஏதாவது மாற்றங்கள் தொரியுமானால் உடனடியாக மருத்துவாரிடம் செல்லுங்கள். அவர் மேமோகிராம் அல்லது அல்ட்ராசவுண்ட் பாரிசோதனைகளை செய்வார்.

*

ஒருவேளை புற்றுநோய் இருப்பதாக சந்தேகம் வந்தால், குறிப்பிட்ட இடத்தில் ஊசியை செலுத்தி, சிறிதளவு திசுக்களை சேகாரித்து பயாப்ஸி டெஸ்டுக்கு அனுப்புவார். சில சமயம் சந்தேகத்திற்குhரிய பகுதியை முழுவதும் அகற்ற வேண்டியிருக்கும்.

*

பயாப்ஸி சோதனையில், குறிப்பிட்ட திசுக்களை மைக்ரோஸ்கோப்புக்கு அடியில் வைத்து சோதனை செய்வர். அப்போது புற்றுநோய் செல்கள் இருக்கிறதா? என்பது கண்டறியப்படும்.

*

மார்பக புற்றுநோயை பொறுத்தமட்டில் சிகிச்சை முறைகள் வேறுபடும். அதுபோல புற்றுநோய் என்ன கட்டத்தில் இருக்கிறது என்பதை பொறுத்துதான் நோயாளி குணமடைவார். ஏனெனில் மார்பகங்களை தாக்கிய புற்றுநோய் வேறு உறுப்புகளுக்கும் பரவி இருக்க வாய்ப்பு உள்ளது.

*

இதுதவிர என்ன மாதிhரியான புற்றுநோய் தாக்கியுள்ளது? புற்றுநோய்கள் செல்கள் என் ரகம்? இன்னொரு மார்பகத்திலும் பரவி இருக்கிறதா? என்பது போன்ற கேள்விகளுக்கு எல்லாம் விடை காண வேண்டும். இதுபோக சம்பந்தப்பட்ட பெண்ணின் வயது, அவருக்கு மாத விலக்கு நின்றிருக்கிறதா? அல்லது இன்னமும் மாத விலக்காகிறவரா?

*

எந்த மாதிhரியான சிகிச்சையை அவரது உடம்பு ஏற்றுக் கொள்ளும் உள்ளிட்ட பல விஷயங்களையும் கவனத்தில் கொள்ளப்படும். இதையெல்லாம் சாரி பார்த்த பிறகே, சிகிச்சை பற்றி மருத்துவர்கள் முடிவு செய்வார்கள்.

***


நீங்கள் என்ன செய்யலாம்?

நோய்கள் ஏற்படுவதற்கு பல காரண- காரியங்கள் உள்ளன. இவையெல்லாம் நமது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டவை. இருப்பினும் மார்பக புற்றுநோய் ஆபத்தை குறைத்துக் கொள்வதற்கு பெண்களுக்கு பல வழிகள் உள்ளன. இதில் ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறிப்பிடத்தக்கது ஆகும்.


1. ரெகுலரான உடற்பயிற்சி, சத்தான உணவு, மதுவை தவிர்ப்பது குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்.


2. மேமோகிராம் சோதனை மூலம் மார்பக புற்றுநோயயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க முடியும். பொதுவாக 40 வயதை தாண்டிய பெண்கள் வருடந்தோறும் மேமோகிராம் டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று அமொரிக்க கேன்சர் சொசைட்டி கூறுகிறது. 50 வயதுக்கு மேல் இந்த டெஸ்ட்டை செய்து கொண்டால் கூட, உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு 30 சதவீதம் உள்ளது. டாமோக்ஸிபென் (கூயஅடிஒகைநn) என்று ஒரு மருந்து தற்போது கிடைக்கிறது. இந்த மருந்து மார்பு புற்றுநோய் தீவிரத்தை 50 சதவீதம் குறைக்கும்.


3. அடுத்து மார்பக புற்றுநோய்க்கான காரணிகள் பற்றி ஒவ்வொரு பெண்ணும் தொரிந்து வைத்திருக்க வேண்டும். இதன்மூலம் ஒருவேளை புற்றுநோய் வந்தால் அதை முன்கூட்டியே கண்டுபிடிக்க முடியும்.


4. நம் ஊரில் மார்பக புற்றுநோயை கண்டுபிடிக்க பரவலாக எந்தவொரு திட்டமும் இல்லை. இருந்தாலும் மேமோகிராம் பாரிசோதனையை முறை பாரிசீலிக்கலாம். நம் நாட்டைப் பொறுத்தவரை மார்பக புற்றுநோய் சிகிச்சைக்காக வருபவர்களில், 50 சதவீதம் பேர் நோய் கடுமையாக முற்றிய நிலையில் தான் வருகிறhர்கள். இதனால் மருத்துவர்களால் ஒன்றும் செய்ய முடியாமல் போகிறது.


5. மார்பு புற்றுநோய் எவ்வளவு சீக்கிரத்தில் கண்டுபிடிக்கிறேhமோ, அந்தளவுக்கு சம்பந்தப்பட்ட பெண்ணை காப்பாற்ற முடியும். ஏனெனில் ஆரம்ப கட்ட புற்றுநோய்க்கு மட்டுந்தான் சிகிச்சைகள் உள்ளன. மாதந்தோறும் சுய மார்பக பாரிசோதனை செய்து கொள்வது சிறந்த முறை ஆகும்.

***


சுருக்கமான பயோடேட்டா

1. மார்பக புற்றுநோய் பெண்கள் மத்தியில் பரவலாக காணப்படும் நோய். பெண்களின் உயிரைப் பறிக்கும் நோய்களில் இது 2-வது இடம் வகிக்கிறது.


2. மகப்பேறு சம்பந்தமான நோய்களைக் காட்டிலும் மார்பக புற்றுநோய் 3 மடங்கு அதிகமாக காணப்படுகிறது.


3. மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை சீராக அதிகாரித்து வருகிறது. 1960ம் ஆண்டில் 20-ல் ஒரு பெண்ணுக்கு தான் இப்புற்றுநோய் வந்தது. ஆனால் தற்போது 7-ல் ஒருவருக்கு இந்நோய் வருவதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன.


4. 65 வயதை தாண்டிய பெண்களில் 50 சதவீதம் பேருக்கு இந்நோய் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.


5. செல்களின் எண்ணிக்கை, கட்டிகள் ஆகியவற்றைப் பொறுத்து பெண்ணுக்குப் பெண் வேறுபடும்.


6. மார்பு புற்றுநோய் பெண்களுக்கு மட்டுமே வரும் என்று யாரும் நினைக்க வேண்டாம். ஏனெனில் ஆண்களுக்கும் வரலாம். ஆனால் அது மிகவும் குறைவு. (100„1 என்ற விகிதத்தில் இருப்பதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.)


7. ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விட்டால், உங்களின் வாழ்நாளை அதிகாரிக்க முடியும்.


8. மாதந்தோறும் அவசியம் சுய பாரிசோதனை செய்ய வேண்டும்.


9. நீங்கள் 40 வயதை தாண்டி இருக்கலாம். அல்லது புற்றுநோய் ஆபத்து அதிகமாக இருக்கலாம்.


10. இத்தகைய நிலையில் வருடந்தோறும் மேமோகிராம் சோதனையை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும்.***
நன்றி dinakaran
***"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "