...

"வாழ்க வளமுடன்"

20 செப்டம்பர், 2010

சமைக்கப்படும் உணவால் ஏற்படும் பாதிப்புகள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

சமைத்த உணவுகளை உண்ணும் ஒரு ஆரோக்கியமான மனிதனின் முக்கிய உறுப்புகளான சிறுநீரகம், நுரையீரல் முதலியவற்றை ஸ்கேனிங் செய்து பார்த்தால் அவை முழுவதும் சளி, கபம் போன்ற நோய் உண்டாக்கும்.கசடுகள் நிறைந்து காணப்படுகின்றன.

உதாரணமாக

ஒரு ஸ்பாஞ்சை எடுத்து பசையில் முக்கினால் அது எப்படி இருக்குமோ, அது போல் மனிதனுடைய இலாஸ்டிக் தன்மைக் கூட குறைந்து விடுகின்றது.

அதனால் சிறுநீரகம் சா¢வர வேலை செய்ய முடிவதில்லை. நுரையீரல் சா¢யாக சுவாசிக்க உதவுவது இல்லை.

*

அந்த மனிதன் ஒரு வாரம் முழுவதும் உயிருள்ள உணவுகளான இலை, காய்கனி முதலியவற்றின் சாறுகளை மட்டும் சாப்பிட்டு உண்ணா நோன்பு இருந்தால்,

பசையில் முக்கிய ஸ்பாஞ்சைக் கழுவிச் சுத்தம் செய்த மாதி¡¢ அவனது முக்கிய உடலுறுப்புகள் எல்லாம் சுத்தமடைகின்றன.

இந்த உண்ணா நோன்பில் அவனுடைய உடலில் உள்ள ஜீவ சக்தி (Vital force) முழுவதும் உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றுவதில் தீவிரமாக இருக்கின்றது.

உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றப்படும் பொழுது மனிதனுக்குச் சிறிது அசெளகா¢யம் இருக்கும். ஆகையினால் தான் ஒரு நேரம் பட்டினி இருந்தால் கூட எனக்குத் தலைவலி வந்து விடும் என்று சிலர் கூறுகின்றனர்.


அவன் பட்டினியிலிருந்து உடலை சுத்தப்படுத்த அவனுடைய ஜீவ சக்தியை உபயோகிக்காமல் மீண்டும் மீண்டும் ஓய்வு இல்லாமல் சாப்பிடுவதால், அவனுடைய ஜீவ சக்தி முழுவதும் வயிற்றில் உள்ள உணவை சீரணிக்க மட்டும் தான் பயன்படுத்தப்படுகின்றது.

ஆகையினால் அவனுடைய உடம்பிலுள்ள நோய்ப் பொருள்களான கசடுகள் வளர்ந்துகொண்டே போய் கொடிய நோயாளியாகின்றான்.

நோயாளியான இந்த மனிதன் நோய்ப் பொருள்களான கசடுகளை வெளியேற்றாமல் மருந்துகளைச் சாப்பிடுகிறான்.

தேவைக்கு அதிகமான மருந்துகள் உடம்பில் உள்ள இரத்தத்தையும் உறுப்புகளையும் விஷமாக்குகின்றன. சிறுநீரகம் பழுதடைகின்றது.

*

இதனால் எந்த மருத்துகளினாலும் குணமடைய முடியாத நோயாளியாக, மனிதன் மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

சில சைவ குடும்பங்களில் மது, புகை, மாமிசம் போன்ற எந்த கெட்ட பழக்கங்கள் இல்லாவிட்டாலும், ரொமாடிஸம் என்ற கீழ்வாத நோய்களால் அவதிப்படுகின்றனர்.

அதற்குக் காரணம் அவர்கள் அளவுக்கு அதிகமாகச் சாப்பிடும் நெய், தயிர், எண்ணெயில் பொ¡¢த்து எடுத்த பலகாரங்கள் முதலியன ஆகும்.

*

இன்று உலகிலுள்ள மக்கள் கடந்த ஆயிரக்கணக்கான வருடங்களாகச் சமைத்த உணவைச் சாப்பிட்டு வாழ முடியுமா என்று சோதனை செய்து பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள்.

இந்தச் சோதனையின் விளைவு தான் இன்று மனிதன் ஆயிரக்கணக்கான நோய்களுக்கு நடுவில் தத்தளித்துக்கொண்டிருக்கின்றான்.

உலகில் உள்ள எந்த உயி¡¢னங்களுக்கும் அவற்றின் ஆரோக்கியமான வாழ்விற்கு ஆபத்தில்லை. மனிதன் மட்டும் தான் சமைத்த உணவிற்கு அடிமையாகி, பழக்கமாகி நாவை அடக்காமல் சாவை வரவழைத்துக்கொள்கின்றான்.

இன்றைய உலகில் மனிதர்கள் சமைத்த உணவுகளைச் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கின்றார்களே தவிர, இயற்கையான மரணத்தை யாரும் பெறுவதில்லை.


உடல் உறுப்புகளின் தாங்கும் திறன்

1. மனிதனுடைய உடல் உறுப்புகள் வாழ்நாள் முழுவதும் சமைத்த உணவின் கொடுமைகளைத் தாங்கிக் கொண்டே வருகின்றன. கழிவுகளை வெளியேற்றிக் கொண்டே இருக்கின்றன.
*
2. பல வருடங்கள் கழித்து அக்கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியாத பொழுது தான் அவைகள் வேலை நிறுத்தத்தில் (Strike) ஈடுபடுகின்றன.
*
3. அதன் பிறகே புற்றுநோய், இரத்த அழுத்தம், நீ¡¢ழிவு, ஆஸ்துமா, சிறுநீரகம் வேலை செய்யாமை போன்ற நோய்கள் வருகின்றன.
*
4. இரத்தம் உடலிலிருந்து வெளியே வந்த சில நிமிடத்தில் அதில் உள்ள செல்கள் எல்லாம் இறந்துவிடுகின்றன.
*
5. அதே போல் மாமிசங்களும் கெட்டுப்போக ஆரம்பித்து நேரம் ஆக ஆக முழு விஷப் பொருட்களாக மாறிவிடுகின்றன. அதைச் சமைக்கும் பொழுது அதில் விஷப் பொருள் மேலும் அதிகா¢க்கின்றது.
*
6. மிருகங்களிலிருந்து கிடைக்கும் புரதச் சத்துக்களே மிகவும் உயர்ந்த புரதம் என்று கூறுவது தவறாகும். அப்படியென்றால் அந்த உயர்ந்த புரதம் எப்படி உருவாக்கப்பட்டது.
*
7. இலை, தழை போன்ற இயற்கை உணவுகளினால் தானே. சளி, இருமல், ஆஸ்துமா, இரத்த அழுத்தம், நீ¡¢ழிவு போன்ற நோய்களை உண்டாக்குவதற்கும் அவற்றை வளர்ப்பதற்கும் மிகவும் உதவி செய்கின்றவை.
*
8. சமைத்த உணவுகளான பால், வெண்ணெய், ஜாம், இனிப்புகள் அ¡¢சி, மீன், முட்டை, மாமிசம் முதலியவைகளே ஆகும்.

***

இயற்கை உணவு சிறிதும் தராமல், ஒரு சமயம் இங்கிலாந்தில் தண்டனை பெற்ற சிறைச்சாலைக் கைதிகளுக்கு முட்டை, மீன், மாமிசம் முதலியவைகளை மட்டும் எண்ணெயில் பொ¡¢த்துக் கொடுத்ததில் அவர்கள் 28 நாட்களுக்குள் இறந்து விட்டார்கள்.


ஆனால் பட்டினி இருக்கும் மனிதன் 70 நாட்கள் வரை உயிர் வாழ முடியும். மாமிச உணவுகளிலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய விஷக்கழிவுப் பொருள்களே அந்தக் கைதிகளை விரைவில் கொன்றுவிட்டன.

பாம்பின் வாயில் விஷம் உண்டாவது போல் எல்லா மிருகங்களும் விஷத்தை உற்பத்தி செய்கின்றன. மாமிசத்திலிருந்து விஷத்தை தனியாகப் பி¡¢க்க முடியாமல் மாமிசம் சாப்பிடும் மனிதன் விஷத்தையும் சேர்த்துச் சாப்பிடுகின்றான்.

சைவ உணவுகளை விட மாமிச உணவுகளைச் சாப்பிடும் பொழுது பத்து மடங்கு அதிகமாக யூ¡¢க் அமிலம் உற்பத்தியாகின்றது.

இதை வெளியேற்ற கல்லீரல், சிறுநீரகம், இருதயம் நான்கு மடங்கு அதகமாக வேலை செய்ய வேண்டியிருக்கின்றது.

சைவ உணவு உட்கொள்வோர் வெளியேற்றும் சிறுநீரில் யூ¡¢க் அமிலம் 0.2 லிருந்து 0.7 கிராம்தான் ஒரு மணிநேரத்திற்கு.

ஆனால் மாமிச உணவு ¦¡கள்வோர் ஒரு மணி நேரத்திற்கு 2 கிராம் யூரிக் அமிலம் வெளியேற்றுகின்றனர்.

*

உருளைக் கிழங்கு, ரொட்டி, தானியங்கள், பருப்புகள் நிறைந்த சமைத்த உணவுகளும், அமிலங்களையும் விஷத்தன்மைகளையும் உற்பத்தி செய்து நோய்களை உண்டாக்குகின்றன.

தானியங்களிலும் பருப்புகளிலும் கிடைக்கும் எல்லாச் சத்துக்களையும் மிக எளிதாக, பழங்களிலிருந்தும் கொட்டைகளிலிருந்தும் (Fruits and nuts) பெற்று விடலாம்.

கொட்டைகள் என்பது இங்கே தேங்காய், முந்தி¡¢ப் பருப்பு, பாதாம் பருப்பு, அக்ரூட் பருப்பு போன்றவற்றைக் குறிக்கும். சமையல் என்பது ஒரு உபயோகமற்ற, தேவையில்லாத, நேரத்தை வீணாக்கும் செய்கையே.

அது இல்லத் தலைவிகளை இருளில் மூழ்கடித்து சமையலறைக்கு அடிமைகளாக்கி விடுகின்றது.

***

நன்றி மார்டன் தமிழ் வெல்டு.

***


" வளமுடன்"

4 comments:

என்னது நானு யாரா? சொன்னது…

அருமையான நமக்கு பிடிச்ச மேட்டரை எடுத்துச் சொல்லி இருக்கீங்க!

படிக்க படிக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு!

வாழ்க உங்க சேவை! நிறைய பதிவுகள் இடுறீங்க! உங்க உழைப்பு பிரமிக்க வைக்குது! நன்றி!

என்னது நானு யாரா? சொன்னது…

நண்பா! எந்த ஓட்டுப் பட்டையும் இல்லையே! ஓட்டுப்பட்டைகள் இருந்தால் உங்களின் பதிவுகள் பிரபலமாகும் இல்லையா?

அதற்கு வேண்டியதை செய்யுங்கள்!

prabhadamu சொன்னது…

///என்னது நானு யாரா? கூறியது...
அருமையான நமக்கு பிடிச்ச மேட்டரை எடுத்துச் சொல்லி இருக்கீங்க!

படிக்க படிக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு!

வாழ்க உங்க சேவை! நிறைய பதிவுகள் இடுறீங்க! உங்க உழைப்பு பிரமிக்க வைக்குது! நன்றி!
///நன்றி நண்பா. உங்கள் வருக்கைக்கும், ஊக்கத்துக்கும், உங்கள் பொன்னான நேரத்தை ஆழ்கடலுக்கு அளித்த உங்க நல்ல உள்ளத்துக்கும் மிக்க நன்றி நண்பா.


என்னால் முடிந்தது. இருந்தாலும் உங்கள் பாராட்டையும், ஊக்கத்தையும் பார்க்கும் போது மனம் மகிழ்ச்சி அடைகிறது.

தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்ப்பார்க்கிறேன் நண்பா.

prabhadamu சொன்னது…

///என்னது நானு யாரா? கூறியது...
நண்பா! எந்த ஓட்டுப் பட்டையும் இல்லையே! ஓட்டுப்பட்டைகள் இருந்தால் உங்களின் பதிவுகள் பிரபலமாகும் இல்லையா?

அதற்கு வேண்டியதை செய்யுங்கள்!
///


நண்பா எனக்கு அதை வைக்க தெரியலை. முன்பு இருந்த டெர்மிலேட்டில் இருந்தது. ஆனால் இதில் வைக்க தெரியலை. அதனால் விட்டுட்டேன். முடிந்தால் உதவுங்களேன்.

இந்த தளத்திற்க்கு மறக்காமல் வந்து உங்கள் கருத்த்தை தெரிவித்து என்னை எப்போதும் ஊக்குவிக்கும் உங்க நல்லுள்ளத்துக்கும் மிக்க நன்றி நண்பா.


என் தளத்தையும் நீங்கள் நான் பிந்தொடரும் வளைத்ததில் வைத்ததுக்கும் மிக்க நன்றி நண்பா.

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "