...

"வாழ்க வளமுடன்"

15 செப்டம்பர், 2010

தெரிந்து கொள்ளுங்கள் ( மருத்துவ துளிகள் )

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

வெயிட் போடலியா?

வெயிட் போடலேன்னு, கேக், ஐஸ் கிரீம், பிட்சா போன்ற சமாச்சாரங்களை இளம் வயதினர் சாப்பிடுவதுண்டு. இது பின்னாளில் கெடுதலாக அமையும். வயதுக்கு ஏற்ற எடை இல்லாவிட்டால், தானாக காட்டிக்கொடுத்துவிடும்.

அப்போது பசியெடுக்காது; சோர்வு வரும். அப்போது டாக்டரிடம் போய் “செக் அப்’ செய்வது தான் நல்லது. மற்றபடி, பாலாடைக்கட்டி, இனிப்பு தயிர், பருப்பு வகைகள், கடலைகள், பேரீச்சை வாழை, ஆப்பிள் போன்றவை சாப்பிட்டு வரலாம்.


*

பசியெடுக்கலியே…

சிலர் நன்றாக “உள்ளே’ தள்ளுவர்; ஆனால், பசியே எடுக்கலே என்று புலம்புவர். இதனால், உடல் எடை கூடுவதுடன், சர்க்கரை , பிபி.,கோளாறும் வந்துவிடும். சத்தான உணவுகளை சாப்பிடுவது தான் நல்லது. அதை விட்டு, கண்ட நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவது, குறிப்பிட்ட பாக்கெட் உணவுகளை சாப்பிடுவது கெடுதல் தான்.

பசியெடுக்க ஒரே வழி உடற்பயிற்சி தான். வாரத்துக்கு நான்கு முறையாவது, தலா 40 நிமிடம் நடக்க வேண்டும். வண்டியை எடுக்காமல் நடந்து செல்லுங்கள்; பசியெடுப்பது மட்டுமல்ல, நல்லா தூக்கமும் வரும்.

*

மூணு வேளை

இளம் வயதில் நன்றாக சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால், உடனே கவனிக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஐந்து முறை சாப்பிடலாம். மூன்று முறை, பிரதான சாப்பாட் டையும், இரண்டு முறை நொறுக்குத்தீனியையும் சாப்பிடலாம்.


அப்போது பிரதான சாப்பாட்டு அளவை குறைத்துக் கொள்ளலாம். காய்கறிகள், பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். அப்படி செய்தால், கண்டிப்பாக உடல் எடை அதிகரிக்கும்.

*

மீனில் மட்டுமல்ல

ஒமேகா 3 கொழுப்பு ஆசிட் என்பது, உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தருவது முதல், பல நன்மைகளை செய்கிறது. மீன் உணவில் தான் இந்த சத்து அதிகமாக உள்ளது. சைவ உணவு பிரியர்களுக்கு இந்த சத்து இல்லாத உணவு இல்லாமல் இல்லை.


ஆளி விதையை பவுடராக்கி, எண்ணெய் எடுத்து அதன் மூலம் தயாரிக்கப்பட்ட மருந்துகள், மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த விதையை பவுடராக்கி தண்ணீரில் கலக்கி சாப்பிட்டு வரலாம்.

பாலில் கலந்து சாப்பிடலாம். சாலட்டிலும் பயன் படுத்தலாம். கீரை, முட்டைகோசு போன்வற்றிலும் இந்த சத்துக்கள் உள்ளன.


*

பி.ஐ.எஸ்.,தான் ஆரம்பம்

சத்தான உணவு சாப்பிடாமல், எப்போதும் சாட், பிட்சா, ஐஸ்கிரீம், கூல் டிரிங்ஸ் ஆகிய வற்றை சாப்பிட்டு வந்தால், முதலில் வரும் கோளாறு, இர்ரிடபிள் பவல் சிண்ட்ரோம்’ (பி.ஐ.எஸ்.,)தான்.


குடலில் ஏற்படும் ஒரு வித எரிச்சல், அழற்சி தான் இது. இது பெரிய கோளாறில் கொண்டு விடும். அதனால், முதலிலேயே கண்டுபிடித்து சத்தான உணவு, காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவது நல்லது. நார்ச்சத்துள்ள கீரை, காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்;

ஜூஸ் சாப்பிடுவதை விட, பழங்களை சாப்பிட வேண்டும். பிளாக் டீ, லெமன் ஜூஸ் குடிக்கலாம்; ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும்.


*

பூண்டு எதுவரை…

பூண்டு பற்றி சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் இன்னமும் புரியாத புதிராகத்தான் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அதை உணவில் சேர்த்துக்கொண்டால், பல நன்மைகள் இருக்கின்றன. ஆனால், கோளாறு வந்த பின் அதை அதிகமாக பயன்படுத்துவது பயனளிக்காது என்கின்றனர்.


ரத்த அழுத்தம் வராமல் தடுக்கும் சக்தி பூண்டுக்கு உண்டு. ஆனால், வந்த பின் மருந்து தான் நல்லது; ஓரளவு பூண்டு பயன்படுத்தலாம் என்பது தான் நிபுணர்களின் லேட்டஸ்ட் ஆய்வு முடிவு.


*

கோதுமை – மைதா

கோதுமை – மைதா எது நல்லது என்று தெரியுமா?

கோதுமையில் மேல் இழை தான் நார்ச்சத்து நிறைந்தது; உள் இழையில் ஸ்டார்ச் சத்து உள்ளது. கோதுமையில் இரண்டு இழைகளும் இருப்பதால், அதன் மூலம் வைட்டமின் “பி’ காம்ப்ளக்ஸ், கனிம சத்துக்கள் கிடைக்கின்றன.


மைதாவில், இவை நீக்கப்படுவதால், 80 சதவீத நார்ச்சத்து, 20 சதவீத ப்ரோட்டீன் நீக்கப்படுகிறது.


*

மலட்டுத்தன்மைக்கும்

இளம் வயது பெண்களின் மோகம், இப்போது வாசனை திரவியங்களில் தான் உள்ளது. உடலை கமகமக்க செய்ய என்னவெல்லாம் சந்தையில் புதிதாக வந்திருக்கிறதோ, அவற்றை வாங்கி உடலில் எந்த முக்கிய பாகத்திலும் “ஸ்ப்ரே’ செய்வது வாடிக்கையாகி விட்டது.

முக்கிய உறுப்புகள் அதனால் பாதிக்கப் படுகிறது என்பதை உணருவதில்லை. இதன் உச்சகட்டம் எது தெரியுமா? திருமணம் ஆனதும் மலட்டுத்தன்மை தெரியவரும் போது தான்.


*

பிளாக் டீ…

அதென்ன பிளாக் டீ… ?கடைகளில் விற்பனைக்கு கிடைக்கிறது. வாங்கி குடித்துத்தான் பாருங்கள். அதனால் பல நன்மைகள் உள்ளன. குறிப்பாக, சர்க்கரை நோய் அண்டவே அண்டாது. சர்க்கரை நோய் வராமல் தடுக்க உடலில் உள்ள கணையத்தில் இன்சுலின் சீராக சுரக்க வேண்டும்.

அது தான் சர்க்கரை அளவை சீராக்கும். ரத்தத்தில் சேர விடாது. இந்த வேலையை பிளாக் டீயில் உள்ள, திப்ளாவின்ஸ், தியாருபிகின்ஸ் ஆகிய ரசாயன கலவைகளும் செய்கின்றன.


***


இந்த புகையை சுவாசித்தால்…


அன்றாடம் பயன்படுத்தும் காஸ் ஸ்டவ்வில் உள்ள “காஸ் பர்னர்’ ஹீட்டர், பல்பு, ட்யூப் லைட், அயர்ன் பாக்ஸ், ஹேர் ட்ரையர் ஆகியவற்றை பயன்படுத்தும் போது வெளிப்படும் ஒரு வித நெடியை நீங்கள் அனுபவப்பட்டிருப்பீர்கள்!
ஆனால், இந்த நெடி, ஒரு வித ரசாயன நெடி என்று மட்டும் சிலருக்கு தெரிந்திருக்கும். அந்த நெடி பெயர், பி.டி.எப்.இ., அதாவது, “பாலி டெட்ரா ப்ளோரோ எதிலின்’ என்பதன் சுருக்கம் தான் இது.

இந்த புகையை தொடர்ந்து சுவாசித்தால், கூண்டில் அடைக்கப்பட்ட பறவை இறந்து விடும். அப்படியானால், இந்த நெடி எவ்வளவு விஷத்தன்மை கொண்டது என்று எண்ணிப்பாருங்கள்.


இந்த நெடி பரவும் பட்டியலில் சமீப காலமாக சேர்ந்து கொண்டிருப்பது, “நான் ஸ்டிக் குக்வேர்!’ உணவு அவசரமாக தயார் செய்ய வேண்டும், தோசை, அடை சூப்பராக வர வேண்டும் என்று அதிக சூட்டில் காயவைத்தால், இதில் இருந்து அதிக நெடி வெளிப்படும்.

இப்படி பல வகையிலும் நெடி கிளம்பும் வசதிகள் தான் இப்போது சமையல் அறையில் நிரம்பியுள்ளன. அதனால் தான், “எக்சாஸ்ட்’ மின்விசிறியை போட்டு சமைக்க வேண்டும் என்று சொல்கின்றனர் டாக்டர்கள்.சரி, நீங்கள் எப்படி …? இப்படி இல்லாவிட்டால், இனியாவது நிதானமாக பிளான் பண்ணி சமையுங்கள். விஷ நெடி பாதிக்காமல் இருக்கும். ஒரு சுற்று போய்விட்டு, இப்போது பலரும் பானையை வைத்து தான் சமைக்கின்றனர்.

“மைக்ரோ அவன்’ கூட பயன்படுத்துகின்றனர். ஆனால், முடிந்தவரை ஸ்டெய்ன்லஸ் ஸ்டீல், காஸ்ட் அயர்ன், செராமிக், டைட்டானியம் போன்றவற்றாலான பாத்திரங்களை பயன்படுத்தலாம்.மொத்தத்தில், எப்படிப்பட்ட நெடியும் உடலுக்கு கெடுதல் தான். அதனால், சமையல் அறையில் வெளிச்சம் இருக்கட்டும்; புகை போகட்டும்; “எக்சாஸ்டர்’ மின்விசிறியை பயன்படுத்துங்கள்.


***
உலர்ந்த பிரஷ் பயன்படுத்தினால்…


காலை, இரவு இரண்டு வேளையிலும் பல் துலக்கியதுண்டா?அப்படி செய்தால் நல்லது தான். ஆனால், ப்ளோரைடு பற்பசை கொண்டு தான் துலக்க வேண்டும் என்று நினைப்பதும் சரி தான். அளவுக்கு மிஞ்சினால் எதுவும் விஷம் தானே. அதிக ப்ளோரைடால், பற்களுக்கு எவ்வளவு பாதுகாப்பு என்று சொல்கின்றனரோ அந்த அளவுக்கு கெடுதலும் உள்ளது என்பது பலருக்கு தெரியாது.பற்களில் பாதிப்பு மட்டுமல்ல, அலர்ஜி, மூட்டு பாதிப்பு போன்றவையும் ஏற்படும் என்று நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.குறிப்பாக, குழந்தைகள், ப்ளோரைடு பற்பசையை பயன்படுத்தும் போது, அதை விழுங்கி விடுவர். அதனால், அது உடலுக்குள் போய் பாதிப்பை ஏற்படுத்தும்.அதனால், குழந்தைகள் விஷயத்தில் உஷார் தேவை. இந்த ப்ளோரைடு அதிக அளவில் உடலுக்குள் போனால், அது மூளைக்குள் போய் படிந்து, குழந்தையின் அறிவுக்கூர்மையை பாதிக்கிறது என்றும் கண்டுபிடித்துள்ளனர்.

அது மட்டுமல்ல, பற்பசையை போட்டு தேய்ப்பதால் அழுக்கு, காரை போன்ற பாதிப்புகள் போவதாக கூறுவதும் உண்மையல்ல என்கின்றனர்.

பிரஷ்ஷை எடுத்தவுடன், அதில் பேஸ்ட் போட வேண்டாம்; உலர்ந்த பிரஷ்ஷால் பற்களை முழுமையாக தேய்க்க வேண்டும்; பல்லின் இடுக்கில் சேர்ந்த எல்லாவற்றையும் நீக்கி விடும். அதன் பின், பற்பசையை போட்டு தேய்க்கலாம். இது தான் நல்லது என்பதும் நிபுணர்கள் கண்டுபிடிப்பு.


***


“டை’யை இறுக்காதீங்க!

நீங்கள் “டை’ கட்டும் பழக்கம் உண்டா? கழுத்தில் இறுக்கி கட்டுவீர்களா? சற்று தளர்த்தி கட்டுவீர்களா? இறுக்கினால் தான் சரியாக இருக்கிறது என்று நீங்கள் நினைத்து அப்படியே செய்து வருகிறீர்கள் என்றால், முதலில் அந்த பழக்கத்தை மாற்றுங்கள்.

“டை’யை கழுத்தில் அதிகமாக இறுக்கி கட்டினால், பார்வை நரம்புகளை பாதிக்கும்; அதனால் கண் பார்வைக்கு பாதிப்பு ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.“டை’ கட்டுவோருக்கு பார்வை நரம்பு பாதிப்பதுடன், கண்களில் பிரஷர் அதிகமாகி விடும். அதனால், கண் பார்வை பாதிக்கிறது என்பதை “ஆன் லைன்’ சர்வேயில் கண்டுபிடித்துள்ளனர்


“டை’ கட்டும் பழக்கம் இருந்து, கண் பார்வை பாதிப்பு இருப்பதாக எண்ணினால், உடனே டாக்டரிடம் ஆலோசியுங்கள். இல்லாவிட்டால், கண்களில் அழுத்தம் அதிகமாகவதுடன், சில டாக்டர்கள், அதை தவறாக “க்ளூகோமா’ என்று கண்டுபிடிக்க வழியுண்டு.

அப்படி முடிவு செய்தால், அதனால், வேறு பாதிப்பு வரும். கண்களில் பிரஷர் இருக்கவே கூடாது; அதை அனுமதிப்பது தான் ஆபத்தே.

அதனால், “டை’ காரணமாக கண்களில் அழுத்தம் இருந்தால் அலட்சியமாக இருக்க வேண்டாம்…சரியா?தினமும் ஆபீஸ் கிளம்பும் போது, அவசர அவசரமாக “டை’ கட்டாமல், நிதானமாக, கழுத்தை இறுக்காமல் கட்டிக்கொண்டு செல்லுங்கள்


***

நன்றி உங்களுக்காக

***

"வாழ்க வளமுடன்"

2 comments:

CS. Mohan Kumar சொன்னது…

உங்களின் பதிவு பற்றி வலைச்சரத்தில் எழுதி உள்ளேன். இயலும் போது வாசியுங்கள்.

http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_15.html

prabhadamu சொன்னது…

வாங்க மோகன் குமார். உங்கள் வரவு நல்வரவு ஆகுக.

உங்கள் கருத்துக்கும், என் தளத்தை உங்கள் தளத்தில் அறிமுகம் செய்த உங்க நல் உள்ளத்துக்கும் மிக்க நன்றி நண்பா. உங்கள் பொன்னான நேரத்தை ஆழ்கடலுக்கு அளித்ததுக்கும் மிக்க நன்றி நண்பா.


:)

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "