...

"வாழ்க வளமுடன்"

07 செப்டம்பர், 2010

அத்திக்காயும் அதன் மருத்துவ குணங்களும்!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அத்தி மரம் அனைத்து மதத்தினருக்கும் தெய்வீக மரமாக அமைந்து இருக்கின்றது.

திருக்குரானில் அல்லா அத்தி மரத்தின் மீது சத்தியம் செய்து சொல்கிறான். அல்லாவின் இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அத்தி பழத்தை சொர்க்கத்தின் பழம் என்றும், இது மூலம், மூட்டு வலிக்கு நல்ல மருந்து என்றும் அறிவித்திருக்கிறார்.பைபிளிலும், இஸ்லாமிய நூல்களிலும் ஆதி மனிதர் ஹசரத் ஹவ்வா (ஏவாள்) ஆகியோர் சொர்க்கத்தில் அத்திப் பழத்தைப் பறித்து பழத்தைச் சாப்பிட்டதாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலோகத்தில் இருந்து பூமிக்கு வந்தவர்கள், தங்களின் உடலை மறைக்க, அத்திமர இலைகளை ஆடையாகப் பயன்படுத்தினார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன.


இந்து மதத்தில் அத்தி மரத்தைக் கடவுளுடன் சேர்த்து பூஜை செய்யப்படுவதை இன்றும் காண முடிகிறது. வெள்ளிக் கிரகத்தை வணங்க அத்தி மரத்தையும் பயன்படுத்துகின்றனார்கள்.உணவாகக் கொள்ளப்படும் அத்திக்காயின் பிஞ்சு, முட்டை வடிவானது. இதற்குள்ளே அத்திப்பூக்கள் நிறைந்திருக்கும். இப்பூக்களைத் தன்னகத்தே கொண்டிருந்தலின் அத்திப்பிஞ்சு - கோளி எனப்படும் தாவரவியல் இதனை ‘ரிசப்டகிள்’ என்று கூறுவர்.அத்திக்காயின் உள்ள 4 வகையான பூக்கள் உள்ளன. ஆண் பூ, பெண் பூ, மலட்டுப் பூ என்பன. மலட்டுப்பூக்களில் ஆண் மலட்டுப்பூவும், பெண் மலட்டுப் பூவும் ‘ஃபைகஸ் காரிக்கா’ எனும் சிற்றினத்தில் காணப்படுகிறது.


***


மருத்துவ குணங்கள்:


அத்திக்காய் உடம்பு சூட்டுக்கு மிகவும் நல்லது. இதனையும், பருப்பையும் சேர்த்து சமைத்து சாப்பிடுவது நலம். முற்றின காயாக இருந்தால் மலத்தைப் போக்கும். ஆனால் பிஞ்சுக் காயாக இருந்தால் மலத்தை கட்டி விடும்.


இதனால் மேகம், வாதம், உடல் வெப்பம், புண் ஆகியவை போகும். இதனுடன் சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. சில நேரங்களில் புதினாக் கீரையை இதனுடன் சேர்த்து சமைக்கும் வழக்கமும் இருக்கிறது.


இந்தக் காயின் சுபாவம் குளிர்ச்சி. அத்திப் பிஞ்சினால் மூல வாயு, மூலக் கிராணி, ரத்தமூலம், வயிற்றுக் கடுப்பு, ஆகிய அனைத்து விதமான பிரச்சினைகளும் குணமாகும். மேலும் இது பத்தியத்திற்கு ஏற்றது ஆகும்.


அத்திக்காயில் இரும்புச்சத்து, வைட்டமின் சி, சுண்ணாம்புச் சத்து ஆகியவைகள் உள்ளன.


மாதம் ஒருநாளாவது அத்திக்காய் அவியல் சாப்பிடுவதால் மலக்குடல் சுத்தமாகும். மூலநோய் வராமல் தடுக்கும்.அத்திப்பழம், அத்திப்பிஞ்சு, அத்திக்காய் மூன்றையும் சமைத்துச் சாப்பிடலாம். இது மூலம், இரத்த மூலம், வயிற்றுக்கடுப்பு, சீதபேதி, வெள்ளைப் பாடு, வாதநோய்கள், மூட்டுவலி, சர்க்கரை நோய் தொண்டைப் புண், வாய்ப்புண்ணுக்கு நல்ல மருந்தாகும். இது தசைகளை இறுக்கும் குணம் படைத்தவை. பழங்களை இடித்து, அதன் சாற்றைச் சாப்பிடுவதால் சிறுநீரக நோய்களைக் குணப்படுத்த உதவுகின்றன.


தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.


* மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.


* நாள்பட்ட மலச்சிக்கலைக் குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.


* போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க, அத்திப்பழங்களைக் காடியில் (வினிகர்) ஒரு வாரம் வரை ஊறவைத்து, அதனைத் தினமும் இரண்டு பழங்கள் வீதம் ஒரு வேளை சாப்பிடலாம்.


***

நன்றி தமிழ்வாணன்.காம்.
நன்றி கூடல்
.

***


"வாழ்க வளமுடன்"


***

5 comments:

DREAMER சொன்னது…

ரொம்ப நாளாச்சுங்க... உங்க வலைப்பக்கம் வந்து... பொலிவு மாறாத, அருமையான தகவல்கள்..! பகிர்வுக்கு நன்றி!

-
DREAMER

prabhadamu சொன்னது…

நன்றி நண்பா டீமர். உங்கள் கருத்துக்கும், உங்கள் வாழ்த்துக்கும், உங்கள் தொடர்ச்சியான ஊக்கத்தும், உங்கள் பொன்னான நேரத்தை ஆழ்கடலுக்கு அளித்ததுக்கும் மிக்க நன்றி நண்பா.


///பொலிவு மாறாத, அருமையான தகவல்கள்..! ///

மிக்க நன்றி நண்பா :)


ஆமாம் நண்பா உங்களிடம் பேசியும் அதிக நாள் ஆகிவட்டது. நலமா நண்பா.

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] சொன்னது…

“Liebster Blog” விருதினை நினைத்துப் பார்க்கின்றேன்........

http://kklogan.blogspot.com/2012/02/liebster-blog.html

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] சொன்னது…

“Liebster Blog” விருதினை நினைத்துப் பார்க்கின்றேன்........
http://kklogan.blogspot.com/2012/02/liebster-blog.html

prabhadamu சொன்னது…

/////கே.கே.லோகநாதன் [B.Com]கூறியது...
“Liebster Blog” விருதினை நினைத்துப் பார்க்கின்றேன்........
http://kklogan.blogspot.com/2012/02/liebster-blog.html
////


thanks :)

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "