...

"வாழ்க வளமுடன்"

22 செப்டம்பர், 2010

தாய் சாப்பிட வேண்டிய உணவு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1. அதிக புரத சத்துள்ள மிதமான மாவு சத்துள்ள உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டும்.


2. தானியங்கள், முளைகட்டிய தானியங்கள், உலர்ந்த பழங்கள், கொட்டைகள், பால், பால் வகைப் பொருட்கள், மீன் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


3. வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் அதிகமாகவுள்ள கேரட், பீட்ரூட், கோஸ், பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள், இவற்றில் தினமும் ஒன்றினையாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


4. கீரை வகைகளில் பொன்னாங்கண்ணி கீரையில் அதிக புரதமும் மாவுச் சத்தும் வைட்டமின்களும் இருப்பதோடு பிரோகஸ்ட்ரான், ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்கள் உற்பத்தியை இது பெருக்குகிறது.


5. இது பால் நிறைய சுரக்க வைக்கிறது. இக்கீரையை சேர்த்துக் கொள்வதன் மூலம் குழந்தையின் வயிறு நிறையும்.


6. தினமும் 5 அல்லது 6 கப் பால் தாய் குடித்தால் குழந்தைக்கு அதிக அளவு தாய்ப்பால் கிடைக்கும்.


7. இரும்புச் சத்தும், வைட்டமின் பி12ம் அதிகமுள்ள உணவுப் பொருட்களான பேரீச்சம் பழம், திராட்சை பழம், வெல்லம், கேழ்வரகு, அவல், கோதுமை, சோயா பீன்ஸ், சுண்டைக் காய், கொத்தமல்லி, சீரகம், போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ளும் போது குழந்தைக்கு போதுமான அளவிற்கு பால் கிடைக்கும்.


8. அசைவ உணவில் கல்லீரல், மண்ணீரல், சிறந்தது. மீனும் பால் சுரக்க வழி வகுக்கும்.


9. குழந்தை ஆரோக்கியமாய் வளர தாய்ப்பால் அவசியம். அதனை நல்ல முறையில் தருவது தாயின் கடமை.


10. எனவே சத்துள்ள உணவினை தாய் சாப்பிடுவதன் எதிர்கால சந்ததியினை நோய்கள் தாக்கா வண்ணம் வளர்க்கலாம்.

***
நன்றி மாலைமலர்.
***

"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "