...

"வாழ்க வளமுடன்"

29 ஜூலை, 2010

தேனின் மருத்துவ குணங்கள்:

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தேன் இயற்கை அளித்த, இல்லந்தோறும் இருக்க வேண்டிய உணவு. எழுபது வகையான உடலுக்கு ஏற்ற சத்துகளும், வைட்டமின்களும் தேனில் உண்டு. தேனில் உள்ள சத்துக்கள் சீரான பாதையில் சுலபமாக கிரகிக்கப்பட்டு விடுகிறது.


கண் பார்வைக்கு:

*

தேனை கேரட் சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பருகினால் கண் பார்வை விருத்தியடையும்.

***

இருமலுக்கு:

*

சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம்
கிடைக்கும்.

***


ஆஸ்துமா:


*

அரை கிராம் கருப்பு மிளகை பொடி செய்து சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து அருந்த ஆஸ்துமா குணமாகும்
இரத்த கொதிப்பு:
*
ஒரு தேக்கரண்டி அளவு பூண்டு சாறுடன் இரண்டு டீ கரண்டி தேன் சேர்த்து தினமும் இரு வேளை (காலை & மாலை) சாப்பிடுவது இரத்த கொதிப்புக்கு சிறந்த மருந்தாகும்.
***

இரத்த சுத்திகரிப்பு/கொழுப்பு குறைப்பு:
*
ஒரு குவளை மிதமான சூடுள்ள நீரில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேனும், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறும் கலந்து தினமும் காலைக்கடன்களுக்கு முன் பருகவும். இது இரத்த சுத்திகரிப்பிற்கும், உடல் கொழுப்பை குறைப்பதற்கும், மற்றும் வயிற்றை சுத்தமாக்கவும் உதவும்.
***

இதயத்திற்கு டானிக்:
*
அனைஸ் பொடியுடன் (Anise Powder/Yansoun Powder) ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து அருந்தினால் இதயம் பலப்பட்டு இயங்குசக்தி அதிகரிக்கும்.

***
by seidhigal under .
***

"வாழ்க வளமுடன்"

3 comments:

prabhadamu சொன்னது…

நன்றி சகோதரே! உங்கள் வருகைக்கும், ஊக்கத்துக்க்ம் மிக்க நன்றி. தொடர்ந்து உங்கள் ஆதரவை நேக்கி.

GEETHA ACHAL சொன்னது…

பகிர்வுக்கு மிகவும் நன்றி ப்ரபா...அருமையான பயனுள்ள தகவல்...

prabhadamu சொன்னது…

நன்றி கீதாஆச்சல் அக்கா. எனக்கு எப்போதும் ஊக்கதை அளிக்கும் உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிக்கா.

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "