...

"வாழ்க வளமுடன்"

11 ஏப்ரல், 2010

மாசிக்காய்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
‘மேஜிக் நட்’ என்று இதற்கு மறுபெயர். ஜாதிக்காய் பருமன் மாசிக்காய் இருக்கும். ஒரு சிறு துவாரம் இதில் இருப்பதுண்டு. துவாரம் விழுந்தக் காய் மருத்துவ குணம் அதிகம் பெற்றது என்று கூறுவர் வைத்தியர்.

நீல நிறத்தில் சாம்பல் நிறம் (கிரே கலர்) கலந்து கொட்டை காட்சியளிக்கும். உடைத்து உட்பகுதியைப் பார்த்தால் வெண்மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதை நுண் தூளாக்குவது எளிது. எல்லா மளிகைக் கடைகளிலும் கிடைக்கும்.


*

கிராமப்பகுதி மக்கள் வாய்ப்புண்ணிற்கு இதை வாயில் அடக்கி வைத்துக் கொள்வர். மேல்நாட்டு மருத்துவத்திலும் இதை மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.

*

நல்ல துவர்ப்புச் சுவையுடையது. இதனால் வாய், தொண்டை, உதடு, பல்லீறு, பெண், ஆண்களின் மெல்லிய சதைகளில் ஏற்படும் புண், மூலிகை விஷங்களால் ஏற்படும் நச்சுத்தன்மையைக் கண்டிக்கும்.


*

சிறுநீரை எளிதாக வெளியேறும் படி செய்யும். மாசிக்காய் தூளை நீர் அல்லது பாலில் குழைத்து தலை மயிரில் தடவி ஊற வைத்துக் குளிக்க மயிர் கருமை நிறமடையும்.

*

மாசிக்காய்த் தூளை வினீகருடன் கலந்து தேமல், படைகளுக்குப் பூசி ஊறவைத்துக் குளிக்க நிவாரணம் கிட்டும். மாசிக்காயை எரித்து எடுத்த சாம்பலை இரத்தக் கசிவுள்ள புண்களில் தூவக் கசிவு குறையும்.

*

உடலில் தூவி குளிக்க வியர்வை நாற்றம் மட்டுப்படும். பிறப்புறுப்பைக் கழுவும் கஷாயமாக வெள்ளைப்படுதல் சிரமத்தைப் பெண்களுக்குக் குறைக்கும். பல்வலி மருந்துகளில் மாசிக்காயும் ஒன்று.


***

மருத்துவ குணங்கள்:

மாசிக்காயானது சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஓர் அற்புத மான மருந்தாகும். இக்காய் மற்ற மரங்களின் காயைப் போல் பூவிலிருந்து காயாகாது. இந்த மரத்தின் கிளைகளில் ஒருவித பூச்சிகள் துளையிடும் போது கிளையிலிருந்து பால் வடிந்து அது உறைந்து திரண்டு கெட்டிப்படும்.
*
இதுவே மாசிக்காயாகும். பொதுவாக மாசிக் காய்களைச் சேகரிக்கும்போது அதிலுள்ள பூச்சிகள் வெளியே வருவதற்கு முன்பே சேகரிப்பதுதான் சிறந்த மருத்துவப்பயன் உடையதாக இருக்கும்.
*
மாசிக்காயைப் பொடி செய்து வெந்நீரில் போட்டு பத்து நிமிடம் சென்ற பின்னர் அந்நீரை வடிகட்டி வாய் கொப்பளித்து வர வாய்ப்புண் குணமாகும்.மாசிக்காயை பொடி செய்து அதனை சிறிதளவு தினம் மூன்று வேளை உட்கொண்டுவர, பெண்களுக்கு மாத விடாயின்போது ஏற்படும். அதிக ரத்தப் போக்கினை கட்டுப்படுத்தும்.
*
மாசிக் காயைப் பொடித்து 50 கிராம் எடுத்து 800 மி.லி. நீருடன் கலந்து பத்து நிமிடம் நன்கு காய்ச்சி பின்னர் வடிகட்டி அதனை 30 மி.லி. முதல் 60 மி.லி. வீதம் அருந்தி வர, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலும், நாட்பட்ட இருமல், பெருங்கழிச்சல் முதலி யவைகளும் குணமாகும். பொதுவாக குழந்தைகளுக்கு உரைத்துக் கொடுக்கப்படும் உரை மருந்து வகைகளில் மாசிக்காயும் ஒன்றாகும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு பச்சை பச்சையாக பேதியாகும்.
*
இதற்கு புது மண்சட்டியை வாங்கி வந்து கவிழ்த்துப் போட்டு அச்சட்டியின் மேல் மாசிக்காயை தாய்ப் பால் விட்டு இழைத்து குழந்தையின் நாவில் தடவி வர பேதி நிற்கும். மயில் துத்தம், பூநீறு உப்பு, சுண்ணாம்பு நீர், அபினி, நாபி, எட்டி முதலியவற்றை அளவுக்கு மீறி உட்கொண்டதால் உண்டான நஞ்சுக்கு சிறந்த முறிவாக மாசிக்காய் பயன்படுகிறது.
*
மாசிக்காயிலிருந்து ஒருவகை மஞ்சளும், வெண்மையும் கலந்த நிறம் உடைய தாய், துவர்ப்புச்சுவை கொண்டதுமான உப்பை எடுக்கிறார்கள். இது சிறந்த துவர்ப்பியாகவும், ரத்தப்போக்கை நிறுத்துவதற்கும் பயன்படுகிறது. நாள்பட்ட மேக நோய்களுக்கு மாசிக்காயை குடிநீரிட்டு 30 மி.லி. முதல் 60 மி.லி. வீதம் அருந்திவர பலன் கிடைக்கும்.
*
தொண்டைவலி, டான்ஸிலை ட்டிஸ் எனப்படும் தொண்டை அழற்சி நோய் உடையவர்கள் இதன் குடிநீருடன் 3 மில்லி கிராம் படிகாரமும், தேவையான அளவு தேனும் கலந்து வாய் கொப்பளித்து வர குணம் தெரியும். மாசிக்காயையோ, மாசிக்காய் மரப்பட்டையையோ நீரில் ஊற வைத்தால் ஊறல் குடிநீராகவும் அல்லது கஷாய மிட்டும் வாய் கொப்பளித்து வர வாய்ப்புண் குணமாகும்.
*
30 முதல் 60 மி.லி. வரை அதையே உள்ளுக்கும் அருந்தி வரலாம். இதன் மரப்பட்டையை சாதாரண கழிச்சல், ரத்த வாந்தி, சிறுநீரில் ரத்தம் போகுதல், மாதவிலக்கின்போது அதிக ரத்தம் வெளியாதல், மேக நோய், ஈறு களிலிருந்து ரத்தம் வடிதல், சீதக்கழிச்சல் முதலியவைக ளுக்கும் கொடுக்கலாம்.
*
குழந்தை மருத்துவத்தில் மாசிக்காய் பல காலமாக மருந்தாக பயன்படுத்தப் பட்டு வருவதை நமது பாட்டிமார்களை கேட்டுப் பார்த்தால் கதை கதையாக சொல்வார்கள். சித்த மருத்துவத்திலும் மிக முக்கியமான பங்கினை பெறுவ தை அனுபவமிக்க சித்த மருத்துவர்களின் குறிப்புகளை படிக்கும் போது நன்கு உணரலாம்.
*
சித்த மருத்துவத்தில் மாசிக்காய் குடிநீர் ஒரு சிறந்த மருந்தாகும். மகளிர் மருத்துவத்தில் இந்த மாசிக்காய் மருந்து பெரும் நன் மையினை தரக்கூடியதை நமது முன்னோர்கள் தெரிந்து வைத்திருந்தனர். விஞ்ஞானம் முன்னேறாத அந்த காலக் கட்டத்தில் மாசிக்காய்தான் பெண்களுக்கு வரும் வெளியே சொல்லக்கூடாத நோய்களுக்கு மருந்தாக இருந்து வந்தது.

*
வேக்காளத்தைக் குறைக்கும். வாய்ப்புண், இரைப்பைப் புண், குடல் புண் இவற்றைக் குறைக்கும். பற்களைக் கெட்டியாக அழகாக வளரச் செய்யும். உடலில் விஷசக்தி பரவாமல் தடுக்கும். சிறுநீர் தாராளமாக வெளியாகும். தொண்டைச் சதை வளர்ச்சி, உள்நாக்கு வளர்ச்சி, சீத ரத்தத்துடன் மலப்போக்கு, வாயில் உமிழ்நீர் அதிகம் பெருகுதல் இவற்றைக் கட்டுப்படுத்தும்.
***
நன்றி தமிழ்வாணன்.காம்.
நன்றி சிவாஸ்டார்.
*
புகைப்படத்துக்கும் நன்றி.
***
"வாழ்க வளமுடன் "

2 comments:

ஸ்ரீநிவாஸ் சொன்னது…

டியர் பிரபா அவர்களே! மிக நல்ல, மிக பயனுள்ள, எளிதில் புரியும்படி சிறந்த தகவல்கள் தந்தமைக்கு நன்றி!! அருண் அர்விந்த், சென்னை, இந்தியா

prabhadamu சொன்னது…

//// muthamiah கூறியது...
டியர் பிரபா அவர்களே! மிக நல்ல, மிக பயனுள்ள, எளிதில் புரியும்படி சிறந்த தகவல்கள் தந்தமைக்கு நன்றி!! அருண் அர்விந்த், சென்னை, இந்தியா
////

thanks :)

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "