இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
இயற்க்கை நமக்கு அதிகமான இடங்களை வாரி வழங்குகிறது. அதில் அளவு பெரியது அல்லது சிறியது என்று அளவுகளுடன் இருக்கிறது. பெரியதை ( இயறக்கையின் இடங்கள் ) பார்ப்போம்! படித்து அறிந்ததுதான்!1. உலகிலேயே மிகப்பெரிய மலை நமது இமயமலையாகும்.
*
2. மிகப்பெரிய சிகரம் எவரெஸ்ட் சிகரமாகும்.
*
3. உலகிலேயே மிகப்பெரிய நீர்வீழ்ச்சி நயாகராவாகும்.
*
4. உலகின் மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் இந்தியாவின் கரக்பூர் ரயில் நிலையமாகும். இதன் நீளம் 2,732 அடி.
*
5. உலகிலேயே மிகப்பெரிய மசூதி சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ளது.
*
6. உலகிலேயே மிகப்பெரிய ஏசுகிறிஸ்துவின் சிலை பிரேசில் நாட்டில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் அமைந்துள்ளது. இந்த சிலை 38 மீட்டர் உயரமும், 700 டன் எடையும் கொண்டது.
*
7. உலகிலேயே பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் நாடு நியூசிலாந்து. 1893ஆம் ஆண்டு தான் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.
*
8. உலகிலேயே அதிக ஆண்டுகள் பிரதமராக இருந்தவர் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ. இவர் 1959 முதல் 1990 வரை பிரதமராக இருந்தார்.
*
9. உலகின் மிகப்பெரிய தேவாலயம் ஆப்ரிக்காவில் உள்ள ஐவரி கோஸ்ட்டில் உள்ளது.
*
10. உலகிலேயே மிகவும் நீளமான நெடுஞ்சாலை பான் - அமெரிக்கன் நெடுஞ்சாலை. இதன் நீளம் 24,140 கி.மீ.
*
11. உலகின் முதல் குடியரசு நாடு ஆஸ்திரியா.
*
12. உலகின் மிகப்பெரிய தீவுக்கூட்டம் இந்தோனேஷியாவில் உள்ளது.
*
13. உலகின் மிகப்பெரிய தீவு கிரீன்லாந்து.
*
14. உலகின் மிகப்பெரிய பாலைவனம் சகாரா பாலைவனமாகும்.
*
15. உலகின் மிகப்பெரிய கண்டம் ஆசியா கண்டமாகும்.
*
16. உலகின் மிகப்பெரிய சமுத்திரம் பசிபிக் மகா சமுத்திரம்.
*
17. உலகின் மிகப்பெரிய நதி நைல் நதியாகும்.
*
18. உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம் தென் அரேபியாவின் ரியாத் பன்னாட்டு விமான நிலையமாகும்.
***
2 comments:
;) @ point no-7
நன்றி இமா அம்மா. உங்கள் வருகைக்கும், பதிவுக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி அம்மா.நான் இதை வேறு தளத்தில் இருந்து எடுத்தது தான் அம்மா.
கருத்துரையிடுக