...

"வாழ்க வளமுடன்"

18 மார்ச், 2010

உணவு பொருட்கள் பற்றி பொது அறிவு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
உணவு பொருட்கள் பற்றி தெரிந்து கொள்ளுவோம்.


*
1. உணவுப்பொருட்களில் செயற்கை வண்ணங்கள் சேர்க்கப்பட்டால் , அது பற்றிய விபரத்தை அந்த உணவுப்பொருள் பொட்டலங்களின் லேபிளில் குறிப்பிடவேண்டும்.

*

2. கேசரி பருப்பை தனியாகவோ, வேறு உணவுப் பொருட்களுடன் சேர்த்தோ விற்கக்கூடாது.

*

3. பழங்களைப் பழுக்க வைக்க கார்பைடு (அசிட்டிலின்) வாயுவைப் பயன்படுத்தக்கூடாது.

*

4. நெய்யை வெண்ணெயுடன் சேர்த்து விற்கக்கூடாது.

*

5. உணவுப்பொருட்களில் செயற்கையாக இனிப்புச்சுவை தரும் பொருட்கள் சேர்க்கப்பட்டால், அது பற்றிய விபரத்தை அந்த உணவுப்பொருள் பொட்டலங்களின் லேபிளில் குறிப்பிடவேண்டும்.

*

6. உணவுப்பொருட்களில் பயன்படுத்த விற்பனை செய்யப்படும் செயற்கை வண்ணங்கள் ஐ.எஸ்.ஐ தர முத்திரை பெற்றிருக்க வேண்டும்.

*

7. உணவுக்கலப்படத்தடை சட்டத்தின் கீழ் உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே, உணவுப்பொருட்களில் பயன்படுத்தும் செயற்கை வண்ணங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும்.

*

8. உணவுப்பொருள் விற்பனை செய்யும் நிறுவனங்களில், பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்யக்கூடாது.

*

9. பால் பவுடர் குழந்தை உணவு போன்றவை ஐ.எஸ்.ஐ தர முத்திரையின்றி விற்பனை செய்யக்கூடாது.

*

10. ஒரு உணவுப்பொருளில், இரு வேறு வகையான கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் பிரிசர்வேட்டிவ் பயன்படுத்தக்கூடாது.

*

11. உணவுப்பொருட்கள் மீது பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கக்கூடாது.

***

ஏன் பொட்டலங்கள் மீது அச்சிட்டுள்ள விபரங்களை பார்க்கவேண்டும்?

*

1. ஒவ்வொரு பொட்டல பொருள் மீதும் அந்த உணவு பொருள் தயாரித்த தேதி அச்சிடப்பட்டிருக்கும். அந்த உணவு பொருளை தயாரித்த தேதி தெரிந்தால் தான், அந்த உணவு பொருளை எந்த தேதி வரை பயன்படுத்தலாம் என்ற விபரம் தெரியவரும்.

*

2. பாட்ச் எண் என்பது, ஒரு குறிப்பிட்ட அளவில் தயாரிக்கப்படும் உணவு பொருளுக்கு கொடுக்கப்படும் குறியீட்டு எண் ஆகும். கடைகளில் விற்கப்படும் உணவு பொருளில் ஏதேனும் குறை காணப்பட்டாலோ, புகார் எழுந்தாலோ, கெட்டு போனாலோ அந்த பாட்ச் எண் உள்ள அனைத்து உணவு பொட்டலங்களை கடைகளில் இருந்து முழுமையாக அப்புறபடுத்த பாட்ச் எண் உதவும்.

*

3. சைவ அசைவ வகை உணவு குறியீடுகள், நாம் வாங்கும் உணவு பொருள் சுத்தமான சைவமா அல்லது அசைவ உணவா என தெரிந்து கொள்ள உதவும்.

*

4. எந்த தேதி வரை பயன்படுத்தலாம் (பெஸ்ட் பிபோர் டேட்) என்பது அந்த உணவு பொருளின் காலவதியாகும் நாளை குறிக்கும்.

*

5. தயாரிப்பாளரின் முழு விலாசம் இருந்தால்தான், அந்த உணவு பொருளில் ஏதேனும் குறையோ கலப்படமோ இருந்தால் அது பற்றி புகார் தெரிவிக்கவும், குறைகள் களையப்படாவிட்டால், தயாரிப்பளார் மீது உணவு கலப்படத் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் உதவும் .


***


உணவு பொட்டலங்களில் என்ன பார்க்கவேண்டும்?

*

இன்று ஏதேனும் பொருள் வாங்க கடைக்கு சென்றால், பொட்டலங்களில் விற்கப்படும் பொருட்களே அதிகம். சரி, நாம் வாங்கும் பொட்டல பொருட்கள் தரமானதுதானா? என்ன பார்க்கவேண்டும் அவற்றில்?

*

1. அந்த உணவு பொருளை தயாரித்த தேதி.

*

2. அந்த உணவு பொருளின் பாட்ச் எண்.

*

3. எந்த தேதி வரை அந்த உணவு பொருளை பயன்படுத்தலாம்.

*

4. அந்த உணவு பொருளின் எடை.

*

5. உணவு பொருள் தயாரிப்பவரின் முழு விலாசம்.

*

6. அந்த உணவு பொருளில் உள்ள மூல பொருட்களின் பட்டியல்.

*

7. உணவு பொருளின் பெயர்.

*

8. உணவு பொருள் சைவ வகையா அசைவ வகையா என்பதை குறிக்கும் முத்திரை.


***

மேற்கண்ட விபரங்கள் அனைத்தையும் சரிபார்த்து பொட்டல பொருட்களை வாங்கவேண்டும். அப்போதுதான் நாம் வாங்கும் பொருள் நல்ல பொருள் என்பதை உறுதி செய்ய முடியும்.

***

இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் திரு. ஏ.ஆர். சங்கரலிங்கம் இவரை அனுகவும். அவருடைய தளம் தான் உணவு உலகம்.

*

by FOOD .

***

நன்றி உணவு உலகம்.

http://unavuulagam.blogspot.com/

***

8 comments:

Asiya Omar சொன்னது…

ப்ரபா,நீங்கள் தேடி எடுத்து போடும் பயனுள்ள செய்திகள் படிக்க வசதியாக இருக்கிறது.நன்றி.

சசிகுமார் சொன்னது…

நல்ல பதிவு நண்பா, உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

நண்பா என்ன உன்னுடைய தளத்தில் template மாறவில்லை, மாற்றுவதில் ஏதாவது பிரச்சினையா
இருந்தால் தெரிவிக்கவும்

prabhadamu சொன்னது…

நன்றி ஆசியா அக்கா. உங்கள் வருகைக்கும், பதிவுக்கும் மிக்க நன்றி. உங்கள் ஊக்கமும் ஆதரவும் இருந்தால் காட்டாயம் நிறைய போடுகிறேன்.


நன்றி நண்பா. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

உங்கள் ஊக்கமும் ஆதரவும் இருந்தால் காட்டாயம் நிறைய பதிவுகள் இடுவேன். நன்றி நண்பா.


நண்பா என் தளத்தில் template இப்போது தான் மாற்ற முயற்ச்சித்தேன் ஆனால் அதில் ஒரு குழப்பம். உங்கள் பிளக்கில் என் குழப்பதை தெரிவித்து உள்ளேன். உதவிக்கும் உங்கள் ஆதரவுக்கும் மிக்க மகிழ்ச்சி நண்பா.

Mrs.Mano Saminathan சொன்னது…

அன்புள்ள பிரபா!

யதேச்சையாக உங்களுடைய தளத்தில் நுழைந்தேன். அப்புறம் நீங்கள்தான் என அறிந்ததும் சில பதிவுகளைப் படித்தேன். சுவாரசியமாக இருந்தது. பல முக்கியமான விஷயங்களை இதில் பதிவு செய்வது நிச்சயம் நிறைய பேருக்கு உபயோகரமாக இருக்கும். தலைப்பும் முகப்பும் கவிநயத்துடன் இருக்கின்றன! மேன்மேலும் வளர என் வாழ்த்துக்கள்!!

vanathy சொன்னது…

பிரபா, நல்ல தகவல்.
// கேசரி பருப்பை தனியாகவோ//
கொஞ்சம் விளக்கம் சொல்ல முடியுமா?.கேசரி பருப்பு என்றால் என்ன?
vaany

மனோ சாமிநாதன் சொன்னது…

அன்புள்ள பிரபா!

அறுசுவையில் சந்தித்த அதே மனோ சாமிநாதன் தான் நான். தமிழிலும் தளம் ஆரம்பித்து பதிவுகள் போட ஆரம்பித்திருக்கிறேன். கீழே லிங்க் உள்ளது. வந்து பாருங்கள்!

www.muthukuviiyal.blogspot.com

prabhadamu சொன்னது…

நன்றி வாணி. உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி. உங்கள் ஆதரவுக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி வாணி.

////// கேசரி பருப்பை தனியாகவோ//
கொஞ்சம் விளக்கம் சொல்ல முடியுமா?.கேசரி பருப்பு என்றால் என்ன?/////கேசரி பருப்பின் ஒருபுறம் சதுரமாகவும் மறுபுறம் சரிவாகவும் இருக்கும்.

இதன் மூலம்தான் கேசரி பருப்பை மற்ற பருப்பு வகைகளில் இருந்து வேறுபடுத்த இயலும்.
கேசரி பருப்பில் உள்ள நச்சு தன்மை வாய்ந்த க்ளுடாமெட், நரம்புகளை பாதித்து, நடக்கவே முடியாமல் செய்துவிடுகிறது.

கேசரி பருப்பின் நச்சு தன்மையை நீக்கி, உண்ணுவதற்கு உகந்ததாய் மாற்ற, தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. நாளைய பொழுது நல்லதாய் விடியட்டும்.


இதுவும் உணவு உலகத்தில் இருந்து எடுத்தது தான் வாணி.

prabhadamu சொன்னது…

நன்றி மனோ அம்மா. நலமா? உங்கலிடம் போசி நால் ஆயிடுச்சு. என் தளத்துக்கு வந்து படித்து என்னை வாழ்த்தியது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் அம்மா.உங்கள் வருகைக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி அம்மா. எனக்கு ரொம்ப சந்தோஷத்தில் என்ன போடுரது தெரியலை. அவ்வளவு சந்தோஷம் அம்மா.இவை நம் மனோ அம்மாவின் தளம்.
http://muthukuviyal.blogspot.com/

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "