...

"வாழ்க வளமுடன்"

20 மார்ச், 2010

குங்குமப் பூவைப் பற்றி பொது அறிவு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்



இன்று குங்குமப்பூவைப் பற்றி சில வரலாற்று தகவல்கள் தரலாம் என்று எண்ணி இதில் இடுகிறேன்.

*

குங்குமப்பூவைப் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால் நம் இந்தியாவிற்க்கு எப்படி வந்தது என்று தெரியுமா?

*

தெரிந்து கொள்வது என்றால் இக்கடலில் குதித்து முத்து எடுக்க வாங்க!
*
என்னடா எப்ப பாரு இப்படி கடலில் குதிக்க சொல்லுராங்க பாக்கரிங்கலா? ஒன்னும் ஆகாது. தாரலமா குதிக்கலாம்!

***

1. 16ம் நூற்றாண்டில் இலக்கியத்தில் இடம் பெற்ற மலர் உணவு வகை குங்குமப்பூ ஆகும்.

*

2. அபுல் ஃபாஸ்ல் கும்குமப்பூவைப் பற்றி எழுதிய வரலாற்று அறிஞர் ஆவார்.

*

3. அயினி அக்பரி நூலில் அபுல் ஃபாஸ்ல் குங்குமப்பூவை பற்றி காஷ்மீரில் உள்ள இந்த பூ வயல்கள் சிடு மூஞ்சிகளைச் கூட சிரிக்க வைக்கும் அழகு கொண்டவை என கூறி இருக்கிறார்.

*

4. அக்பரின் மகனான ஜஹாங்கீர் குங்குமப்பூ வயல்களில் இருந்து வீசும் மணம் பற்றி எழுதி உள்ளர். ( இப்படி தான் வரலாற்றில் குறிப்பிட்டு உள்ளது என்று எண்ணுகிறேன். )

*

5. ஜஹாங்கீர் தனது சுயசரிதை நூலான துஜ்க் ஏ ஜஹாங்கிரியில் கும்ங்குமப்பூவைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.

*

6. கஷ்மீரில் குங்குமப்பூவை காங்போஷ் என்று குறிப்பிடுகிறார்கள்.

*

7. காஷ்மீரில் தன் குங்குமப்பூ அதிக உற்பத்தி ஆகிறது.

*

8. ஆசியா மைனர் மற்றும் கிரீஸ் தான் இதன் தாயகம் ஆகும்.

*

9. கே.டி. ஆச்சய்யா என்பவர் தான் இப்பூவின் தாயகம் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.

*

10. இப்பூ காஷ்மீருக்கு பாரசீகர்கள் காஷ்மீரை வெற்றி கொண்டபின் தங்கள் நாட்டில்ருந்து காஷ்மீருக்கு கொண்டு வந்தார்கள்.


*

11. முதன் முதலாகக் இப்பூ கி.மு 500 ஆம் ஆண்டுக்கு முன்பே அறுவடை செய்யப்பட்டது.

*

12. இப்பூ உலகிற்க்கு விற்பனைக்கு வெளி வந்தது கி.மு. 6ம் நூற்றாண்டில் தான்.


*


13. பொனீசியர்கள் தான் இப்பூவை வெளி உலகிற்கு அறிமுகம் படுத்திய வணிகர்கள்.

*

14. 16ம் நூற்றாண்டில்தான் இப்பூ காஷ்மீருக்கு வந்தது என்று வரலாற்று ஆதாரங்கள் சொல்லுகிறது.

*

15. க்வாஜா மசூத் வாலி, ஹஜ்ரத் ஷேக் ஷரிஃபுதீன் என்ற 2 ஸூபிக்கள் தான் இப்பூவை கஷ்மீருக்கு அறிமுகப் படுத்தினர்.

*

16. இந்த 2 துறவிகள் கஷ்மீரில் இருக்கும் போது உடல் நலம் இல்லாமல் போனது. அவர்களை உள்ளூர் தலைவர் மருந்து கொடுத்து குணமாக்கினர். அதனால் அவர்களுக்கு பரிசாக கொடுத்து சென்றனர்.

*

17. இப்பூவை அறுவடையின் போது இந்த 2 துறவிக்கு நன்றி தொரிவிக்கும் விழாவாக காஷ்மீரில் கொண்டாடுகின்றனர்.

*

18. பாம்போர் என்ற இடத்தில் தான் காஷ்மீரில் அதிகம் இப்பூ விளைவிக்கிக்கப்ப படுகிறது.

*

19. இங்குதான் இப்பூவை அறிமுகம் செய்த ஞாநிகளின் நினைவாக அவர்களுக்கு பொற்கோபுரம் அமைத்து இருக்கிறார்கள்.

*

20. ஆயுர்வேதத்தில் இப்பூவின் மருத்துவ குணம் இருப்பதால் இத்துறையில் அதிகம் பயன்ப் படுத்துகிறார்கள்.


*

21. இப்பூ முகப்பரு, மூட்டுவாதம், மூச்சிரைப்பு, குடற்ப்பூச்சி, இருமல், ஈரல் கோளாறுகள், தொண்டைக் கரகரப்பு ஆகிய கோளாறுக்கு மருந்தாக பயன் படுகிறது.

*

22. இப்பூவை கொண்டு தயாரிக்கும் தின்பண்டங்கள் உடலுக்குக் கதகதப்பையும், ஊக்கத்தையும் தரவல்லது.

*

23. இப்பூ சுவையான மணம் இருப்பதால் இனிப்பு பண்டங்கள் செய்யப் படுகிறது.

*

24. இப்பூ சுவையான மணம் இருப்பதால் இனிப்பு பண்டங்கள் விரும்பி காஷ்மீரில் அதிகம் செய்யப் படுகிறது.


***

குறிப்பு:

*

இவை உங்கள் உணவு உலகம் புத்தகத்தில் கிடைத்த தகவல்.
இதன் ஆசிரியர் : இராம. மெய்யப்பன்.

***

நன்றி திரு. இராம. மெய்யப்பன்.

***

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "