...

"வாழ்க வளமுடன்"

15 ஜூன், 2011

பாஸ்போர்ட் இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதன் பயன்கள் = part - 1

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


இணையதளம் மூலம் விண்ணப்பிபதால் என்ன பயன்கள்

விண்ணப்பதாரர்கள் வட்டார பாஸ்போர்ட் அலுவலகத்திலுள்ள அதற்குரிய அலுவலரிடம் சமர்ப்பிக்கவேண்டியதற்கான திட்டமிட்ட தேதி, நேரம், தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டணம் ஆகியவைகளை பெறமுடியும்

•நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய தேவையில்லை


*


பாஸ்போர்ட் பெற ஆன்லைன் விண்ணப்பம் மூலமாக யார் விண்ணப்பிக்க முடியும்

எவரொருவர் பாஸ்போர்ட் பெறுவதற்கு தகுதியானவராக இருக்கிறாரோ அவர் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தகுதியானவர் ஆவார்.

•பாஸ்போர்ட் அலுவலகங்கள் அமைந்திருக்கும் அதிகார எல்லையின் கீழ் குடியிருப்பவர்கள் மட்டுமே இந்த இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்கள்.

•தற்பொழுது, இணையதளம் மூலம் பாஸ்போர்ட் பெறுவதற்கான வசதி விண்ணப்பங்கள் இந்த நகரங்களில் மட்டும் உள்ளது

அஹ்மதாபாத்
அம்ரிட்சர்
பெங்களுரு

பரேய்ல்லி
போபால்
புவனேஸ்வர்

சண்டிகார்
சென்னை
கொச்சின்

கோயமுத்தூர்
டெஹ்ராடூன்
டெல்லி

காஜியாபாத்
கோவா
குவஹாத்தி

ஹைதராபாத்
ஜெய்ப்பூர்
ஜலந்தர்

ஜம்மு
கொல்கத்தா
கோழிகோடு

லக்னோ
மதுரை
மலப்புரம்

மும்பை
நாக்பூர்
பாட்னா

பூனே
ராய்பூர்
ராஞ்சி

சிம்லா
ஸ்ரீநகர்
சூரத்

தானே
திருச்சி
திருவனந்தபுரம்

விசாகபட்டினம்

*


இணையதளம் மூலம் பாஸ்போர்ட் பெற எப்பொழுது விண்ணப்பிக்க வேண்டும்

புதிய பாஸ்போர்ட் வழங்குவதற்கு (இதற்கு முன் உங்களுக்கு பாஸ்போர்ட் இல்லாதபட்சத்தில்)

•மறுமுறை பாஸ்போர்ட் வழங்குவதற்கு (10 வருட கால அவகாசம் உள்ள பாஸ்போர்ட் முடிந்தபின்பு அல்லது பாஸ்போர்ட் முடிவதற்கு 12 மாத கால அவசாகம் இருக்கும்பொழுது),

•பாஸ்போர்ட்-ன் நகல் வழங்குவதற்கு (தற்பொழுது இருக்கும் உங்களுடைய பாஸ்போர்ட் தொலைந்து விட்டால் அல்லது சேதமடைந்து விட்டால் )


*


பாஸ்போர்ட்-க்கான தேவைகள் என்ன

இருப்பிடச் சான்று

•பிறந்த தேதிக்கான சான்று

•தேவையான கட்டணம் ( ரொக்கமாக அல்லது காசோலையாக)

•பாஸ்போர்ட் அளவு கொண்ட வண்ணப் புகைப்படம்


***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "