...

"வாழ்க வளமுடன்"

09 செப்டம்பர், 2010

இனிய ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்

அனைத்து சகோதர சகோதரிக்களுக்கும், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இந்த ஆழ்கடல் களஞ்சித்தின் மனம் கனிந்த இனிய ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்!




30 நாள் நோம்பு இருந்து உங்களின் மனதையும், உடலையும் கட்டுப்பாட்டாக வைத்து இறைவனை நாடி தொழுத அனைவருக்கும், ஈகை பொருநாள் வாழ்த்துக்கள்.



உங்கள் வாழ்க்கையில் செழிப்பு சேர்க்க எல்லா வல்ல இறை தூதார் ஆசிர்வதிப்பார். ( இவை என் மனதில் பட்டது. தவறாக சொல்லி இருந்தாள் மன்னிக்கவும்)





மேலும் உங்கள் எல்லோர் வாழ்விலும் எல்லா நலமும், வலமும் பொற்று வாழ வாழ்த்துக்கள்...

ஜலீலா அக்கா
ஆசியா அக்கா
சுமஜ்லா
நட்புடன் ஜமால்
ஹுஸைனம்மா


இன்னும் இஸ்லாத் நண்பர்கள் அனைவருக்கும் எங்களுடைய வாழ்த்துக்கள்...

***

"வாழ்க வளமுடன்"

எந்த உணவில் எவ்வளவு சர்க்கரை? ( 300வது பதிவு )

இவை இந்த ஆழ்கடல் களஞ்சியத்தின் 300வது பதிவு :) என்று சொல்லிக் கொள்ளுவதில் பொரு மகிழ்ச்சி அடைகிறோம்!



எந்த உணவில் எவ்வளவு சர்க்கரை?


சாப்பிடும் உணவுப் பொருளுக்கு ஏற்ப ரத்தத்தில் சர்க்கரை அளவு உயரும் என்பதால், அன்றாடம் சாப்பிடும் உணவில் சர்க்கரை நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு உதவுவதற்காகவே கிளைசிமிக் இண்டெக்ஸ் (Glycemic Index) என்ற உணவு ஒப்பீட்டு அட்டவணை உள்ளது. அதாவது ஏற்கெனவே ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவோடு நாம் சாப்பிடும் உணவுப் பொருள்களால் கூடுதலாகும் சர்க்கரை அளவை 100 கிராம் குளுக்கோஸýடன் ஒப்பிடுவதே கிளைசிமிக் இண்டெக்ஸ் ஆகும்.

உதாரணமாக ஒருவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு 100 மி.கி. இருப்பதாகக் கொள்வோம். அவர் 100 கிராம் குளுக்கோஸ் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மேலும் 100 மி.கி. கூடுதலாகி மொத்தம் 200 மி.கிராமாக அதிகரிக்கும்.




அவர் ஒரு குளோப் ஜாமூன் சாப்பிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம், சர்க்கரையின் அளவு ரத்தத்தில் 300 மி.கிராமாக உயரும். ஆனால் அவரே குளோப் ஜாமூனுக்குப் பதில் 100 கிராம் கொண்டைக் கடலை சுண்டல் சாப்பிட்டால் 40 மி.கி. தான் ரத்தத்தில் சர்க்கரை அளவு உயரும்.

சாப்பிடும் உணவுக்கு ஏற்ப ரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவு கீழே தரப்பட்டுள்ளது.

பானங்கள் (200 மி.லி அளவு):

* தண்ணீர் குடித்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவில் எந்த மாற்றமும் இருக்காது.

* நீர்த்த மோர் குடித்தால் 10 மி.கி. அதிகமாகும்.ஏ சர்க்கரை இல்லாத பால் அல்லது காபி சாப்பிட்டால் 40 மி.கி. .ஏ சர்க்கரை போட்ட காபி குடித்தால் 140 மி.கி..

* உப்புப் போட்ட எலுமிச்சை பழச்சாறு அல்லது தக்காளி பழச்சாறு குடித்தால் 30 மி.கி..ஏ இளநீர் குடித்தால் 40 மி.கி..

* கஞ்சி குடித்தால் (சத்துமாவு கஞ்சி) 100 மி.கி.

* இனிப்பான குளிர்பானங்கள் குடித்தால் 150 மி.கி.

* பழச்சாறு குடித்தால் 150 மி.கி. உடன் சர்க்கரை சேர்த்தால் 250 மி.கி.

* மில்க் ஷேக் குடித்தால் 300 மி.கி.

எனவே 50 மி.கி.-க்கும் குறைவாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் பானங்களைக் குடிக்கலாம்.


***


உணவு வகைகள்:

உணவு வகைகள் (100 கிராம் சாப்பிட்டால் அதிகரிக்கும் சர்க்கரை அளவு):




* கீரைத் தண்டு, வாழைத் தண்டு சாப்பிட்டால் 10 மி.கி.

* வாழைக்காய் தவிர பிற காய்கறிகள் 20 முதல் 30 மி.கி. அதிகமாகும்.

* பயறு மற்றும் பருப்பு சாப்பிட்டால் 30 முதல் 40 மி.கி.

* கேழ்வரகு அல்லது கோதுமை சாப்பிட்டால் 50 முதல் 55 மி.கி.

* அரிசி சாப்பிட்டால் 55 முதல் 60 மி.கி..

* கம்பு சாப்பிட்டால் 60 முதல் 70 மி.கி.

* உருளைக் கிழங்கு, வள்ளிக்கிழங்கு சாப்பிட்டால் 100 முதல் 150 மி.கி.

* இனிப்பு வகைகள் சாப்பிட்டால் 150 முதல் 300 மி.கி.

* எனவே ரத்தத்தில் சர்க்கரையின் அளவை 10 முதல் 30 மி.கி. வரை அதிகரிக்கும் உணவுகளை அதிகம் சாப்பிடலாம்.

* 30 முதல் 60 மி.கி. வரை சர்க்கரையை அதிகரிக்கும் உணவு வகைகளைத் திட்டமாகச் சாப்பிடலாம்.

* 60 மி.கி.க்கு மேல் சர்க்கரையை அதிகரிக்கும் உணவுகளை முடிந்த அளவு தவிர்க்கவேண்டும். 150 மி.கி. மேல் அதிகமாக்கும் உணவுகளைக் கண்டிப்பாகச் சாப்பிடக் கூடாது. இவ் வகை உணவுகளைச் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வராது. மேலும் சர்க்கரை நோய் நாளுக்கு நாள் மோசமடையும். எவ்வித சிகிச்சையும் பலன் தராது. இந் நோயின் பின் விளைவுகள் விரைவில் வரும்.

***


பழங்கள் (100 கிராம்):




தக்காளி, எலுமிச்சை 20 முதல் 30 மி.கி..

* வெள்ளெரி, கிர்ணி, பப்பாளி - 30 முதல் 40 மி.கி.

* கொய்யா, ஆப்பிள், சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு - 40 முதல் 60 மி.கி..

* மா, பலா, வாழை - 100 முதல் 150 மி.கி.

* பேரீச்சை, திராட்சை, சப்போட்டா - 150 முதல் 250 மி.கி.

* ரத்தத்தில் சர்க்கரை அளவை 60 மி.கி. வரை அதிகரிக்கும் பழங்களை மட்டும் சாப்பிடலாம். மற்றவற்றைச் சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது.


***

நன்றி தமிழ்குறிச்சி.

****

"வாழ்க வளமுடன்"

குழந்தைப் பிறந்தவுடன் என்ன செய்ய வேண்டும்?



குழந்தை பிறந்த 1/2 மணிக்குள் தாய்ப்பாலை தரவும்.

தாயுடன் குழந்தையை மிக நெருக்கமாக வைத்திருக்கவும்.

குழந்தைக்கு தேவையான உஷ்ணத்தை பாதுகாத்தல்.

அறையின் உஷ்ணத்தை குழந்தைக்கு தகுந்தபடி வைத்திருத்தல்.

குழந்தை பிறந்தவுடன் தடுப்பூசி போட ஆரம்பித்தல்.

குழந்தையை வியாதியஸ்தரும், மற்றவர்களும் அடிக்கடி தூக்காமல் பார்த்துக் கொள்ளவும்.

குழந்தைக்கு பசி எடுக்கும் போதெல்லாம் தாய்ப்பால் தரவும்.

தாய்ப்பாலை ஒரு பக்கம் முழுவதையும் கொடுக்க வேண்டும்.

பாலூட்டும் தாய்க்கு சத்துள்ள திட, திரவ உணவு அதிகம் தரவும்.

குழந்தை தாயின் மார்பை நன்றாக கவ்வி பால் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

குழந்தை பால்குடிக்கும் போது தாய் தூங்கக்கூடாது.

தாய்ப்பால் அதிகம் சுரக்க, தாய் பிரசவத்திற்கு முன்பே தாய்ப்பாலைத் தர முடிவு செய்ய வேண்டும்.

ஜீனித் தண்ணீர், குளுக்கோஸ், தேன் முதலியன தரக்கூடாது.

குழந்தைக்குப் புட்டிப்பாலை தவிர்க்கவும்.

அடிக்கடியும், பூரணமாயும் தாய்ப்பால் தருவதால் அதிகம் சுரக்கும்.


***



பச்சிளங்குழந்தை சில அபாய அறிகுறிகள்

குறைமாதத்தில் (37 வாரத்திற்கும் குறைவாக) குழந்தை பிறத்தல்.

குறைவான எடையுடன் குழந்தை பிறத்தல்.

பிறந்தவுடன் அழாமல், மூச்சுவிடாமல் இருத்தல்.

மிக வேகமாக மூச்சு விடுதல், மூச்சுத்திணறல்

மிக அதிகமாக தொடர்ந்து கத்திக் கொண்டு இருத்தல்.

சரியாக பால் குடிக்க முடியாமை, சுறுசுறுப்பில்லாமை.

பால் குடித்தபின் மூச்சுத்திணறல் _ எதுக்களித்தல்

குழந்தையின் உடல் உஷ்ணம் மிகக் குறைதல்.

வலிப்பு (ஜன்னி) வருதல்.

ஆபத்தான பிறவிக் குறைபாடுகள்.

பிறந்த 24 மணி நேரத்திற்குள் மஞ்சள்காமாலை ஏற்படுதல்.

பிறந்த 24 மணிக்குள் மலம், 48 மணிக்குள் நீர் போகாமை.

வாந்தி & வயிற்றுப்போக்கு.

குழந்தையின் எப்பகுதியிலாவது ரத்தம் கசிதல்.

வயிறு வீக்கமாக இருத்தல்.


***


குறைமாத குழந்தைக்கு அதிக கவனம் தேவை

குழந்தையின் உஷ்ணம் குறைய வாய்ப்புகள் உண்டு கவனம் தேவை.

தேவைப்படின் வார்மர் (Warmer) இங்குபேட்டர் (Incubater) வைத்து பாதுகாக்க வேண்டும்.

பால் குடிக்க முடியாத நிலையில் _ ஊசி மூலம் குளுக்கோஸ் செலுத்தவும்.

பால் குடிக்காத குழந்தைக்கு _ தாய்ப்பாலை சங்கில் எடுத்து ஊட்ட வேண்டும்.

இக்குழந்தைகளை நோய்கிருமிகள் எளிதாக தாக்கும்.

இக்குழந்தைகளை குளிப்பாட்டுவதை தவிர்க்கவும்.



***

நன்றி ஈகரை.


***


"வாழ்க வளமுடன்"

கருவிலே குறையிருந்தால் திருத்திக் கொள்ளலாம்


ஸ்கேன் செய்து கொள்வது பற்றி, அல்ட்ரா ஸ்கேன் சாதனம் பற்றி நம் மக்கள் மிகவும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

‘‘மருத்துவத்துறை வியக்கத்தக்க முன்னேற்றம் கண்டிருக்கும் காலம் இது. முன்பெல்லாம் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஏதாவது குறைபாடு இருந்தால், குழந்தை பிறந்த பிறகுதான் அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும். இப்போது குழந்தை தாயின் வயிற்றில் இருக்கிறபோதே என்ன குறைபாடு என்பதைக் கண்டுபிடித்து, அதற்குரிய சிகிச்சைகளை செய்துவிட முடியும்.


அதற்கு அடிப்படையாக இருப்பது அல்ட்ரா ஸ்கேன் என்கிற கருவி. இந்த நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்ட மிக முக்கியமான சாதனம் எது என்று கேட்டால் அல்ட்ரா ஸ்கேன் என்றுதான் சொல்வேன். அதனால் ஏற்படும் நன்மைகளை நினைத்து நினைத்து தினமும் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறேன்’’ என்கிறார், மகப்பேறு மருத்துவரான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்.

காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனின் மகளான தமிழிசை சௌந்தரராஜன் மகப்பேறு மருத்துவர் மட்டுமல்ல. அல்ட்ரா ஸ்கேன் சாதனங்களைப் பயன்படுத்துவதிலும் நிபுணர். அல்ட்ரா ஸ்கேன் சாதனத்தினால் ஏற்படும் பலன்கள் பற்றி அவர் விளக்கமாகச் சொல்கிறார்.

‘‘ஸ்கேன் செய்து கொள்வது பற்றி, அல்ட்ரா ஸ்கேன் சாதனம் பற்றி நம் மக்கள் மிகவும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். பிறக்கப் போகிற குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறியத்தான் ஸ்கேன் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது தவறான கருத்து.


குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிந்துகொள்வது ஸ்கேன் இயந்திரத்தின் ஒரேயரு செயல்பாடுதான். ஸ்கேனின் மற்ற செயல்பாடுகளுடன் ஒப்பிடும்போது ஆணா, பெண்ணா என்று அறிவது மிக மிகச் சாதாரண விஷயம்தான்.

கருத்தரித்த பெண்கள் கட்டாயமாக ஸ்கேன் செய்து பார்க்கவேண்டும் என்று நினைப்பதேயில்லை. இதற்குப் பல காரணங்கள் உண்டு. அந்தக் காரணங்கள் என்னவென்று பார்ப்போம்.

முதலில், ஸ்கேன் செய்து பார்ப்பதையே தேவையில்லாத ஒரு விஷயமாக நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். முக்கியமாக, பெண்களிடம் ஸ்கேன் சாதனம் பற்றி எந்த விழிப்புணர்வும் இல்லை.

வயிற்றில் வளரும் குழந்தையை ஸ்கேன் செய்து பார்ப்பதன் மூலம் அந்தக் குழந்தைக்கு ஏதாவது குறைபாடு இருக்கிறதா என்பதைத் துல்லியமாகக் கண்டறிய முடியும். சில நாட்களுக்கு முன்பு பிரசவ காலத்தை நெருங்கிவிட்ட ஒரு பெண் என்னிடம் ஸ்கேன் செய்துகொள்ள வந்தார். அந்தப் பெண்ணின் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையை ஸ்கேன் செய்து பார்த்தபோது எனக்கு அதிர்ச்சி!

கிட்டத்தட்ட ஒன்பது மாதத்தைத் தாண்டிவிட்ட அந்தக் குழந்தை கபாலம் இல்லாமலே வளர்ந்திருந்தது. ‘அனன்கேபாலி’ என்று அதற்குப் பெயர். மண்டையோடு இல்லாமலே வளர்ந்துவிட்ட அந்தக் குழந்தையைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. தலையில்லாத குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டு, தனக்கும் ஒரு அழகான குழந்தை பிறக்கப்போகிறது என்று அந்தத் தாய் எவ்வளவு கனவு கண்டிருப்பாள்?


கருத்தரித்த ஒன்பது வாரங்களுக்குள் ஸ்கேன் செய்து பார்த்திருந்தாலே குழந்தையின் நிலை என்ன என்பது நன்றாகத் தெரிந்திருக்கும். இந்த அளவுக்கு குறைபாடுகளோடு ஒரு குழந்தை வயிற்றில் வளர்வதை விட, கருக்கலைப்புச் செய்திருக்கலாம். ஆனால் ஸ்கேன் செய்து பார்க்காமல் விட்டதன் தவறு, மண்டையோடு இல்லாமல் குழந்தை ஒன்பது மாதங்களுக்கு வளர்ந்துவிட்டது. இந்தக் குழந்தை வெகு நாட்களுக்கு வாழ முடியாது என்பதால் வயிற்றிலேயே இறந்துவிட்டது.


எனவே, கஷ்டப்பட்டு சிசேரியன் செய்துதான் அந்தக் குழந்தையை தாயின் வயிற்றிலிருந்து வெளியே எடுத்தோம். இத்தனை சிரமம் நமக்குத் தேவைதானா என்பதை நாம் ஒவ்வொருவரும் யோசித்துப் பார்க்க வேண்டும்.

இரண்டாவது காரணம், பெரியவர்களின் ஆதரவின்மை. ‘ஸ்கேனெல்லாம் எதற்கு? எங்கள் காலத்தில் நாங்கள் ஸ்கேனெல்லாம் செய்துகொண்டோமா என்ன? அஞ்சாறு குழந்தையை நாங்க பெத்துக்கலையா?’ என்று வீட்டிலுள்ள பெரியவர்கள் கேட்கிறார்கள்.

அறிவியல் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள மறுக்கிற வாதம் இது. முன்பு நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கும், இப்போது நாம் வாழும் வாழ்க்கைக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கிறது. முக்கியமாக, நம்முடைய உணவுமுறை மாறியிருக்கிறது. முன்பு இயற்கையாக விளைந்த உணவு வகைகளை நாம் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம்.


இப்போது பல்வேறு இரசாயனப் பொடிகளைத் தூவி வளர்க்கப்பட்ட காய்கறிகளைத்தான் நாம் சாப்பிடுகிறோம். எனவே, அதன் பாதிப்பு வயிற்றில் வளரும் குழந்தைக்கும் நிச்சயம் ஏற்படும். இதை நம்முடைய பெரியவர்கள் அவசியம் புரிந்து கொள்ள வேண்டும்.

அந்தக் காலத்தில் குறைபாடுகளுடன் பிறந்த குழந்தைகள் இறந்து போயிருக்கலாம். அதற்கான மருத்துவ ஆதாரங்கள் இப்போது நம்மிடம் இல்லை என்பதால் அந்தக் காலத்தில் இது போன்ற பிரச்சினை இல்லை என்று சொல்லமுடியாது.

ஸ்கேன் செய்தால் வயிற்றில் உள்ள குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் சிலர் சொல்கிறார்கள். இதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் கிடையாது. ஸ்கேன் செய்வதற்காக ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு அளவில் பணத்தை வசூல் செய்கிறார்கள். இதில் உள்ள வேறுபாடுகளை கவனிக்கும் மக்கள் ஸ்கேன் சாதனத்தின் மீதே சந்தேகப்பட ஆரம்பித்திருக்கிறார்கள்.


125 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை ஸ்கேனுக்காக வசூல் செய்கிறார்கள். சிலர் அளவுக்கதிகமாக லாபம் சம்பாதிக்க நினைப்பதால் ஸ்கேன் செய்வதற்கான கட்டணம் அதிகமாகியிருக்கிறது. இதற்காக ஸ்கேன் செய்வதையே வெறுத்தால் அது சரியாக இருக்குமா? எனவே, கருத்தரித்த ஒவ்வொரு பெண்ணும் அவசியம் ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஏதாவது குறை இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தால் அதை அப்போதே சரிசெய்துவிடக்கூடிய அளவுக்கு மருத்துவமுறை முன்னேறிவிட்டது. வயிற்றில் வளரும் குழந்தைக்கு அப்போதே மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அப்போதே செய்துவிடலாம். அல்லது குழந்தை பிறந்த பிறகு செய்யலாம் என்கிற நிலையில் இருந்தால், பிறகு செய்துகொள்ளலாம் என்று விட்டுவிடுவோம்.

உதாரணமாக, குழந்தைகளுக்கு அன்னப்பிளவு ஏற்பட்டிருக்கும். இன்னும் சில குழந்தைகளுக்கு ஆறாவது விரல் வளரும். சில குழந்தைகளுக்கு வயிற்றுப் பகுதியில் லேசாக வீங்கியிருக்கும். இது மாதிரியான குழந்தைகளுக்கு உடனே சிகிச்சை செய்யவேண்டும் என்று அவசியமில்லை. எனவே, குழந்தை பிறந்தபிறகு பார்த்துக் கொள்ளலாம்.

ஆனால் வயிற்றுக்குள் இருக்கிறபோதே சில குழந்தைகளுக்கு கடுமையான உடல் ஊனத்தால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அல்லது முக்கியமான உறுப்புகள் வளராமலே போயிருக்கும். அந்தக் குறைகளை வயிற்றுக்குள்ளேயே சரிசெய்தால்தான் குழந்தை பிழைக்கும். இல்லாவிட்டால் குழந்தை வயிற்றுக்குள்ளேயே இறந்துவிடும்.

உதாரணமாக, சில குழந்தைகளுக்கு இருதயத்தில் ஓட்டை விழுந்திருக்கும். இந்த ஓட்டைகளைச் சரி செய்யக் கூடிய அளவுக்கு இருந்தால் உடனே ஆபரேஷன் மூலம் சரி செய்துவிடலாம். அல்ட்ரா ஸ்கேன் கருவின் உதவியோடு தாயின் வயிற்றின் மேலிருந்து கருவிகளைச் செலுத்தி குழந்தையின் இருதயத்தில் நுழைத்து ஆபரேஷன் செய்து விடலாம்.

இன்னும் சில குழந்தைகளுக்கு சிறுநீரில் அடைப்பு ஏற்பட்டிருக்கும். இந்தக் குறையை அந்த நிலையிலேயே கவனிக்காமல் விட்டுவிட்டால், சிறுநீரைச் சுற்றியுள்ள திசுக்கள் அழுகி, மொத்த சிறுநீரகமும் பாதிக்கப்பட்டு, குழந்தை இறக்கும் சூழ்நிலை உருவாகிவிடும். எனவே, ஸ்கேன் மூலம் குழந்தையின் சிறுநீரகத்தில் ஏற்பட்டுள்ள அடைப்பைப் போக்கிவிடுவோம்.

மேற்சொன்ன இந்த இரண்டு சிகிச்சை முறைகளும் நம் ஊரிலேயே அடிக்கடி நடக்கும் விஷயங்களாகி விட்டன. ஆனால் வெளிநாட்டில் நடக்கும் விஷயங்களைக் கேட்டால் நமக்கு இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது. சில குழந்தைகளுக்கு தாயின் ரத்தம் ஒரு பிரிவாகவும், குழந்தையின் ரத்தம் வேறு ஒரு பிரிவாகவும் இருக்கும். இந்தக் குளறுபடியினால் குழந்தையின் உயிர் பிரிவதற்கு வாய்ப்புண்டு. எனவே, குழந்தையின் ரத்தத்தை எடுத்து முதலில் பரிசோதனை செய்கிறார்கள். அதில் குறைபாடு இருக்கிறது என்று தெரிந்தால் குழந்தைகளுக்கே புதிய ரத்தத்தை ஏற்றியிருக்கிறார்கள். வயிற்றுக்குள் இருக்கும் குழந்தைக்கு ரத்தம் ஏற்றுவது என்பது வியக்கத்தக்க நிகழ்ச்சிதானே!

மனிதர்களுக்கு குளுக்கோஸ் ஏற்றுவது போல குழந்தைகளுக்குக்கூட குளுக்கோஸ் ஏற்றலாம். இதுபோன்று நினைத்துப் பார்க்கவே முடியாத விஷயங்களெல்லாம் இப்போது நடந்து வருகிறது.

சில குழந்தைகளுக்கு வயிற்றுப் பகுதியில் இருதயத்தையும், வயிற்றுப் பகுதியையும் பிரிக்கும் முக்கியமான ஜவ்வு இருக்காது. இதனால் குடல் பகுதி இருதயத்துக்கு அருகே சென்று அதை செயலிழக்கச் செய்யும். அல்லது இருதயம், மூளைப் பகுதியை நெருங்கி வந்து அதன் செயல்பாட்டைச் செய்ய மறந்துவிடும். இதனால் குழந்தை உயிருக்கு உடனே ஆபத்து ஏற்படும். இந்த ஆபத்தைத் தடுக்க குழந்தை பிறந்தவுடன் குடல் பகுதியையும், இருதயப் பகுதியையும் பிரிக்கிற மாதிரி செயற்கையாக ஒரு தடுப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.


இதனால் குழந்தையின் உயிர் காப்பாற்றப்படுகிறது. குழந்தை வயிற்றுக்குள் இருக்கிறபோது இப்படிப்பட்ட பிரச்சினையோடு இருக்கிறது என்பது தெரிந்தால்தானே பிறந்தவுடன் ஆபிரேஷன் செய்யமுடியும்?

முன்பை விட இப்போது உடல் ஊனத்தோடு நிறைய குழந்தைகள் பிறப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. உதாரணமாக, காலம் கடந்து திருமணம் செய்து கொள்கிறவர்களுக்கு உடல் ஊனமுற்ற குழந்தை பிறக்க வாய்ப்புண்டு. முன்பு அதிகபட்சமாக இருபத்துநான்கு வயதிற்குள் எல்லோரும் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் இப்போது பெண்கள் படித்து, வேலைக்குப் போய் செட்டிலான பிறகுதான் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று நினைக்கிறார்கள்.


இந்த உண்மையை உணர்ந்து கொண்ட மேலை நாட்டவர்கள் இப்போதெல்லாம் காலக்கிரமத்தில் திருமணம் செய்வதையே விரும்புகிறார்கள். தப்பித் தவறி காலம் கடந்து திருமணமாகி, பிள்ளைப்பேறு ஏற்பட்டிருந்தாலும், குழந்தை வயிற்றில் இருக்கிறபோதே ஏதாவது குறைபாடு இருக்கிறதா என்பதைப் பார்த்திருக்கிறார்கள். தொப்புள் கொடி மூலமாக ரத்தத்தை எடுத்து, அந்த ரத்தத்தில் ஏதும் குறைபாடு இருக்கிறதா என்பதைப் பார்த்து அப்போதோ அல்லது குழந்தை பிறந்த உடனேயோ சரி செய்துவிடுகிறார்கள்.

நெருங்கிய உறவில் திருமணம் புரிந்து கொள்வதாலும் உடல் ஊனமுற்ற குழந்தைகள் பிறக்க வாய்ப்புண்டு. உதாரணமாக, குரலில் குறைபாடுடையவர்கள் நெருங்கிய உறவில் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் அதே குறைபாடு இருக்க வாய்ப்புண்டு.

சர்க்கரை நோய் கண்ட பெண்கள் கருத்தரித்தாலும் வயிற்றில் உள்ள குழந்தைக்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, சர்க்கரை நோய் கண்ட பெண்கள், குறைந்தபட்சம் ஓராண்டு காலத்துக்கு அதற்கான மாத்திரைகளை சாப்பிட்ட பிறகு கருத்தரிக்க வேண்டும் என்பது கட்டாயத்திலும் கட்டாயம். அதேபோல கருத்தரித்த பிறகு அவர்கள் அவசியம் ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும்.



***

சந்திப்பு : ஏ.ஆர். குமார்

நன்றி குமுதம்.


***


"வாழ்க வளமுடன்"


மூளை வளம்பெற ‘SuperBrain Yoga’

நம்ம பிள்ளையாருக்கு முன்னால் போடும் தோப்புக்கரணம் தான் இந்த ‘SuperBrain Yoga’.



உடற்பயிற்சி என்பது வெறும் உடலுக்கு மட்டும் இல்லாது மூளைக்கும் பயன் தரக்கூடியது என சமீப காலத்தில் கண்டு பிடித்திருக்கின்றனர் விஞ்ஞானிகள். மறதியைக் குறைத்து நினைவாற்றலைப் பெருக்குமாம்.

முன்பெல்லாம் மூளையில் உள்ள உயிரணுக்கள் இறந்தால் அவைகளுக்கு மாற்றாக புதிய அணுக்கள் வருவதில்லை என நினைத்திருந்தார்கள். ஆனால் உடற்பயிற்சியினால் மூளையில் நினைவாற்றல் மற்றும் படிப்புக்கு ஏதுவாக இருக்கும் ஹிப்போகேம்பஸ் என்ற பகுதியில் புதிய உயிரணுக்கள் தோன்றுகின்றன எனக் கண்டுபிடித்து இருக்கின்றனர்.

அட, சாதாரணமாணவர்களுக்கும் இந்த தோப்புக்கரணம் மிக நல்ல பலனைக்கொடுக்கும்.

பிறகு என்ன, நேரம் கிடைக்கும் போது அப்பப்ப தோப்புக்கரணம் போடவேண்டியதுதானே? கல்யாணம் கட்டியவர்கள் உங்கள் மனைவிக்கு முன்னால் மட்டும் போட்டுவிடாதீர்கள்!??

மிக எளிமையான இந்த யோகாசனத்தைச் செய்வது எப்படி என்று பார்க்கலாமா?



1) இடது கையால் வலது காது மடலின் முனையைப் பிடிக்கவும். நம் கட்டைவிரல் காது மடலில் முன்பக்கமும், சுட்டு விரல் பின்பக்கமும் இருக்குமாறு பிடித்துக் கொள்ள வேண்டும்.மேலும் இதுபற்றி கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்

2) வலது கையால் இடது காது மடலின் முனையைப் பிடிக்கவும். நம் கட்டைவிரல் காது மடலில் முன்பக்கமும், சுட்டு விரல் பின்பக்கமும் இருக்குமாறு பிடித்துக் கொள்ள வேண்டும்.

3) இப்படிப் பிடிக்கும் பொழுது நம் இடது கை உட்புறமாக உடலின் அருகேயும், வலது கை வெளியிலும் இருத்தல் அவசியம். அப்பொழுதுதான் சக்தி மேல் நோக்கிப் பாய்ந்து நம் மூளைக்குப் பயன் தரும்.

4) அப்படி இரு கைகளாலும் காது மடல்களைப் பிடித்துக் கொண்டே, முதுகை நேராக வைத்துக் கொண்டு, முட்டியை மடக்கி குந்த வைத்து எழுந்திருக்கவும். இப்படி உட்காருகையில் மூக்கின் வழியாக சுவாசத்தினை உள்ளே இழுக்கவும். எழுந்திருக்கையில் வாய் வழியாக மூச்சுக் காற்றை வெளியே விட வேண்டும். இப்படி 10 -12 முறையாவது செய்ய வேண்டும்.


இந்த தோப்புக்கரணம் மூளையை நன்கு வளர்ச்சியடையச் செய்யுமாம். இயற்கையிலேயே மன அழுத்தம் உள்ள பிள்ளைகள்( ஆட்டிஸம்), மூளை வளர்ச்சி குன்றிய பிள்ளைகளுக்கும் இது மிகவும் பயனுள்ள யோகாசனமாம்.


***

by barthee.
நன்றி பாரதி தளம்.


***

"வாழ்க வளமுடன்"

சுனாமி (Tsunami - ஆழிப்பேரலை )

சுனாமி அல்லது கடற்கோள்அல்லது ஆழிப்பேரலை (யப்பானிய மொழி: 津 波 ட்சு னமி "துறைமுக அலை") என்பது கடல் அல்லது குளம் போன்ற பாரிய நீர்ப்பரப்புகளில் சடுதியாக பெருமளவு நீர் இடம்பெயர்க்கப்படும் போது ஏற்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அலைக் தொடர்களைக் குறிக்கும். பூமி அதிர்ச்சி, மண்சரிவுகள், எரிமலை வெடிப்பு, விண்பொருட்களின் மோதுகை போன்றவை சுனாமி அலைகளை ஏற்படுத்தக் கூடிய மூலக் காரணிகளாகும்.





சுனாமி என்பது ஜப்பானிய மொழியில் உள்ள வார்த்தை. சு+னாமி தான் சுனாமி. சு என்றால் துறைமுகம், னாமி என்றால் பேரலை என்று பெயர். சுனாமி என்பது துறைமுக பேரலை. சில நிமிடங்கள் முதல் சில நாட்கள் வரை கூட, அதுவும் பல்லாயிரக்கணக்கான ராட்சத அலைகளை உருவாக்கக்கூடியது தான் சுனாமி.


***

சுனாமி எப்படி உருவாகிறது?

பூகம்பத்தால் ஏற்படுகிறது. அதாவது, பூகம்பம் என்பது நிலப்பகுதியில், கடல் பகுதியில், மலைப்பகுதியில் ஏற்படும். நிலைப்பகுதியில் வந்தால் நிலத்தில் உள்ளவை அதிர்ந்து சேதமாகிறது. கடலில் வந்தால் கடலின் ஆழ்பகுதி பாதிக்கப்படுகிறது. மலையில் வந்தால் மலையில் எரிமலையாக உருவெடுகிறது.

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே பிளேட் தான் இருந்தது. அதன் மீது தான் பூமி இருந்தது. ஆனால் கண்டங்களாக பிரிய, பிரிய, அதன் தட்ப, வெப்ப, இயற்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பல்வேறு பிளேட்கள் உருவாயின.

இந்த பிளேட்கள் மீது தான் ஒவ்வொர கண்டமும் இருக்கின்றன. நிலம், கடல் எல்லாவற்றையும் தாங்கி நிற்பது இந்த பிளேட்கள் தான். இதைத் தான் ‘டெக்டானிக் பிளேட்கள்’ என்று புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

யுரேஷியன் பிளேட், ஆஸ்திரேலியன் பிளேட் இரண்டும், இந்தோனேசியாவின் வடக்கே சுமத்ரா தீவில் மோதியது. அதனால் பூகம்பம் ஏற்பட்டது. அதன் அலைகள் தான் இந்துமாக்கடலில் சுனாமியை ஏற்படுத்தியது.



எப்படியெல்லாம் வரும் சுனாமி?

1. கடலாழத்தில் ஏற்படும் எந்த பாதிப்பின் போதும் வரும்.
2. கடலாழ பூகம்பத்தினால் வரும்
3. கடலை ஒட்டிய நிலப்பகுதியில் ஏற்படும் பூகம்பத்தால் வரும்.
4. மலையில் எரிமலை உண்டாகி, அதனால் வரும்.
5. வானில் கிரகங்களின் செயல்பாடுகள் மாறும் போதும் ஏற்பட வாய்ப்புண்டு (இது இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை)
6. கடலில் பவுதிக மாற்றங்கள் ஏற்பட்டாலும் வரும்.


*


சுனாமி முதன் முதலில் ஏற்பட்டது எப்போது?

ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, கி.மு., 365ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி கிழக்கு மத்திய தரைக்கடலில் தோன்றி, எகிப்தில் அலெக்சாண்டிரியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

1. சமீப நூற்றாண்டுகளை கணக்கில் கொண்டால், முதன்முதலில் கடந்த 1755ம் ஆண்டு, நவம்பர் 1ம் தேதி போர்ச்சுக்கல் நகரான லிஸ்பனில் ஏற்பட்ட பயங்கர பூகம்பம், போர்ச்சுக்கல், ஸ்பெயின், மொராக்கோ நாடுகளில் சுனாமி பேரழிவை ஏற்படுத்தியது.

2. 1883ம் ஆண்டு வாக்கில் ஜாவா சுமத்ரா இடையே கிரகோடா என்ற பகுதி எரிமலைப் பகுதியாக திகழ்ந்தது. அங்கு ஏற்பட்ட பூகம்பத்தில் அணுகுண்டை விட 10 ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்த வெடிசம்பவம் நடந்தது. பல்லாயிரம் கிலோமீட்டர் தூரத் துக்கு அப்போது சத்தம் கேட்டதாக தகவல் கூறுகிறது. 35 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

3. அதன் பின்னர் தொடர்ந்து 1999ம் ஆண்டு வரை கூட சுனாமி தாக்குதல் நடந்துள்ளது. ஆனால், கடந்த 1964ம் ஆண்டு தான் கடைசியாக அலாஸ்கா வளைகுடாவில் மிகப் பயங்கர சுனாமி ஏற்பட்டது. அதன் விளைவாக, அலாஸ்கா, வான்கூவர் தீவு (பிரிட்டீஷ் கொலம்பியா), அமெரிக்காவில் கலிபோர்னியா, ஹவாய் பகுதிகளை தாக்கியது. ஆனால், உயிர்சேதம் 120 பேர்தான். காரணம், பாதுகாப்பு ஏற்பாடுகள் தான்.




சுனாமி எச்சரிக்கை அமைப்பு:

அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில்தான் முதன் முதலாக பசிபிக் பெருங்கடல் பிராந்திய சுனாமி எச்சரிக்கை அமைப்பு நிறுவப்பட்டது. அதற்கு காரணம் கடந்த நூற்றாண்டில் சுனாமியால் தாக்கப்பட்ட முதல் இடம் ஹவாய். 1946 ஏப்ரல் 1ல் ஹவாய் தீவை தாக்கிய ராட்சத சுனாமி அலை 159 பேரின் உயிரை விழுங்கி விட்டது. கோடிக்கணக்கான சொத்துகளும் நாசமாயின.

அமெரிக்கா 1949ல் அங்கு பசிபிக் கடல் சுனாமி எச்சரிக்கை அமைப்பை நிறுவியது. அப்போது விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளில் 75 சதவீதம் தவறாக அமைந்தது. இதனால் பொது மக்கள் மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு இடம் பெயர்வதும் மீண்டும் பழைய இடத்துக்கே திரும்புவதும் சலிப்பை ஏற்படுத்தின.

செலவும் ஆனது. அதனால் சுனாமி அலை உருவானால் மட்டும் கடலில் இருந்து தகவல் கொடுக்க கருவி வேண்டும் என்பதை உணர்ந்து கண்டுபிடிக்கப்பட்டதுதான் 'சுனாமி மிதவை கருவி'.

1960ல் சிலியில் ஏற்பட்ட பூகம்பத்தால் ராட்சத அலைகள் ஹவாயை தாக்கின. இதனால் 12 ஆண்டுக்குப்பின் அங்கு மீண்டும் சுனாமி ஏற்பட்டது. முன்னரே உஷார் தகவல்கள் அனுப்பப் பட்டதால் அங்கு 61 பேர் மட்டுமே பலியானார்கள். அப்போது ஜப்பான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பசுபிக் கடல் நாடுகளுக்கும் எச்சரிக்கை அமைப்பு வேண்டும் என்று உணரப்பட்டது.

1963ல் சர்வதேச சுனாமி எச்சரிக்கை மையம் அமைக்கப்பட்டது. இதில் உறுப்பினராக 26 நாடுகள் உள்ளன. உறுப்பினராக சேர்ந்துள்ள நாடுகளுக்கு மட்டுமே எச்சரிக்கைத் தகவல்களை அனுப்ப வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஆஸ்திரேலியா, கனடா, சிலி, கொலம்பியா, குக் ஐலண்ட்ஸ், கோஸ்டரிகா, தென் கொரியா, வடகொரியா, ஈக்வேடார், எல்சல்வடார், பிஜி, பிரான்ஸ், குவாதமாலா, இந்தோனேஷியா, ஜப்பான், மெக்சிகோ, நியூசிலாந்து, நிகரகுவா, பெரு, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சமோவா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே சுனாமி பேரலைகள் பற்றிய தகவல் வழங்கப்பட்டு வருகிறது.

*

சுனாமி மிதவை கருவி செயல்படும் விதம்:

கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன், சுனாமி அலைகள் கடலில் ஏற்படுகின்றனவா என்பதை அறிய சுனாமி எச்சரிக்கைக் கருவிகளால் மட்டுமே முடியும். அவற்றில் உள்ள பிரத்யேக கருவிகள், கடலில் நீர் இயக்கத்தில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும்.


நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் கடல் அலைகள் தோன்றினால், அந்த அலைகள் உருவாக்கும் அழுத்த மாறுபாட்டை ஒலி அலைகளாக மாற்றி, அவற்றை சிக்னல்களாக வானில் உள்ள செயற்கைக் கோள்களுக்கு அனுப்பிவைக்கும். அங்கிருந்து தரையில் உள்ள மையங்கள் சிக்னலைப் பெற்றுக் கொள்ளும். அலையின் தன்மையை விஞ்ஞானிகள் அறிந்து அது பாதிப்பை ஏற்படுத்துமானால் எச்சரிக்கைத் தகவல்களை அனுப்புவார்கள்.

இத்தகவலை சுனாமி உருவான 3 நிமிடத்தில் வெவ்வேறு நாடுகளில் உள்ள அலுவலகங்களுக்கு சென்றுவிடும். ஆனால், சுனாமி அலைகள் உருவான இடத்துக்கும் கரைப் பகுதிக்கும் உள்ள தூரத்தைப் பொறுத்துத்தான் அலைகளின் தாக்குதல் வேகம் மற்றும் நேரம் அமையும்.

நிலநடுக்கம் ஏற்படும் போதெல்லாம், சுனாமி குறித்த பயம் இனி ஆசிய நாடுகளின் கடலோர பகுதி மக்களுக்கு ஏற்படும். இதைத் தடுக்க தெற்காசியாவுக்கான சார்க், தென்கிழக்கு ஆசிய நாடுகளான பிம்ஸ்டெக், ஆப்ரிக்க-ஆசிய கூட்டமைப்புகள் இந்தியாவுடன் இணைந்து கடலில் சுனாமி எச்சரிக்கை அமைப்புகளை நிறுவ வேண்டும்.


அதை சர்வதேச சுனாமி எச்சரிக்கை அமைப்புக்கு கீழ் கொண்டு வரவேண்டும். எதிர்காலத்தில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நாடுகளை பட்டியலிட்டு அந்நாடுகள் அனைத்தையும் இந்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரவேண்டும்.


***

நன்றி களஞ்சியம்.

***

"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "