இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
வெளிநாட்டுப் பிரஜைகள் நம் நாட்டிற்கு எந்த விசாவில் வந்தாலும் ஆறு மாதங்களுக்கு மேல் தங்க வேண்டும் என்றால் வசிக்கும் நகரத்திலுள்ள Foreigner Registration Officer (FRO) விடம் 180 நாட்களுக்குள் ரிஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும்.
16 வயதிற்குற்பட்ட குழந்தைகள் ரிஜிஸ்டர் செய்ய வேண்டாம் என்று இமிகிரேஷன் ஃபாமில் இருந்ததால் நாங்கள் தீஷுவை ரிஜிஸ்டர் செய்ய வேண்டாம் என்று நினைந்திருந்தோம்.
இந்தியா வந்து 180 முடியயிருந்த நிலையில் சென்ற வாரம் ஒரு நாள் எனக்குத் தீடீரென்று உறுதிபடுத்திக் கொள்ளலாம் என்று தோன்றியது. பெங்களூரில் இன்ஃபான்ட்டிரி
ரோட்டிலுள்ள கமிஷினர் ஆபிஸில் FRO உள்ளார்.
ரிஜிஸ்டர் செய்ய வேண்டுமா மற்றும் சனிக்கிழமை வேலை செய்கிறார்களா என்று கேட்க போன் செய்தேன். போன் எடுக்க மாட்டார்கள் என்று நினைத்தற்கு மாறாக போனை எடுத்ததும் அதிர்ச்சி எனக்கு. சனி வேலை செய்கிறாகள் என்றும் குழந்தைகளையும் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும் என்றவுடன் சனி அன்று தீஷுவை அழைத்துக் கொண்டு சென்றோம்.
சிவாஜி நகரில் அனைத்து ரோடுகளும் ஒன்வேயாக இருந்ததால் அங்கேயே அரை மணி நேரம் சுற்றிச்சுற்றி வந்தோம். கடைசியில் கண்டுபிடித்து உள்ளே நுழையும் பொழுது உள்ளே பார்க்கிங் செய்ய முடியாது வெளியில் செய்து விட்டு வாருங்கள் என்றவுடன் எங்கு செல்வது என்று அயர்ச்சி. இன்ஃபான்ட்டிரி ரோடில் பார்க்கிங்கா என்று நினைத்துக் கொண்டே சென்று ஒரு ஆஸ்பத்திரி அருகில் பார்க் செய்து (செய்யலாமா என்று தெரியாது)விட்டு வந்தார். ஆனால் ஆபிஸில் அனைவரும் நன்றாகப் பேசவும், உதவும் செய்தனர்.
எல்லா டாகுமென்ட்டுகளையும் சரி பார்த்து, கையெழுத்து வாங்கி, இன்னொரு கவுன்டரில் கொடுக்க அரை மணி நேரமே ஆனது. அதிலும் கவர்மென்ட் ஆபிஸில் லஞ்சம் இல்லாமல். பெங்களூரில் எந்த ஆபிஸிலும் நாங்கள் லஞ்சம் கொடுத்ததில்லை.
ரேஷன் கார்டு, டிரைவிங் லைசன்ஸ் போன்றவை மதுரையில் லஞ்சம் இல்லாமல் முடியுமா என்று தெரியாது.ஆனால் இங்கு ஐம்பது ரூபாய் (அரசாங்கம் நிர்ணயம் செய்தது) செலவில் ரேஷன் கார்டு வாங்கினோம். வெளிநாட்டினரிடம் லஞ்சம் வாங்கி நம் நாட்டு மானத்தை வாங்காததில் எங்களுக்குச் சந்தோஷம்.
***
ரிஜிஸ்டர் செய்ய தேவையானவை :
1. குழந்தையின் பாஸ்போர்ட் ஜெராக்ஸ் - 2
2. விசா ஜெராக்ஸ் - 2
3. இமிகிரேஷன் ஸீலுள்ள பக்கம் ஜெராக்ஸ் - 2
4. தந்தை பாஸ்போர்ட் ஜெராக்ஸ் - 2
5. தாய் பாஸ்போர்ட் ஜெராக்ஸ் - 2
6. நாம் குழந்தையின் தேவையைப் பூர்த்தி செய்யும் தகுதியுடையவர்கள் (கொடுமை) என்பதற்குச் சான்றாக நோட்டரியிடம் கையெழுத்து வாங்கிய 20 ரூபாய் பத்திரம் மற்றும் அதன் ஜெராக்ஸ்
7. விலாசம் சான்று
*
கர்நாடக வலைதளம் :
http://www.ksp.gov.in/pages/foreigner/foreigners-registration-office-fro/
http://www.ksp.gov.in/pages/foreigner/registration-procedure
***
thanks dheekshu
***
"வாழ்க வளமுடன்"
1 comments:
Posting this in your blog might not make a difference to you. But, it does make a different to those who lost their beloved ones in the genocide. So please spread the news. We want the world to know what happened.
http://reap-and-quip.blogspot.com/2011/06/act-now-this-is-last-chance-to-show.html
Thank you.
Anamika
கருத்துரையிடுக