...

"வாழ்க வளமுடன்"

15 ஜூன், 2011

பாஸ்போர்ட் இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதன் பயன்கள் = part - 3

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
*

தேவையான ஆவணங்கள்

(1) கீழ் வரும் ஆவணங்களின் இரண்டு நகல்களை, புதிய பாஸ்போர்ட் பெறுவதற்காக விண்ணப்பிக்கும் பொழுது இணைக்க வேண்டும்.

•முகவரிக்கான சான்று (பின்வருவனவற்றில் ஏதாவது ஒன்றை இணைக்க வேண்டும்)

◦விண்ணப்பதாரரின் குடும்ப அட்டை
◦நன்று அறியப்பட்ட நிறுவனங்களின் வேலை அளிப்பவரிடமிருந்து பெறப்பட்ட கடிதம்
◦குடிநீர்/தொலைபேசி/மின்சார கட்டணம்
◦செயலில் உள்ள வங்கி கணக்கின் அறிக்கை
◦வருமான வரி மதிப்பீடுக்கான ஆணை
◦தேர்தல் ஆணைய அடையாள அட்டை
◦எரிவாயு இணைப்பிற்கான ரசீது
◦கணவர்/மனைவியின் பாஸ்போர்ட் நகல்
◦சட்டப்படி வயதுக்கு முதிராதவராக இருக்கும் பொழுது பெற்றோரின் பாஸ்போர்ட் நகல்.

குறிப்பு: விண்ணப்பதாரர் எவராவது குடும்ப அட்டையை மட்டும் முகவரிச் சான்றாக சமர்பிக்கும் பொழுது, மேற்கூறிய வகையிலிருந்து ஒரு சான்றை முகவரிச் சான்றாக இணைக்க வேண்டும்.

◦பிறந்த தேதிக்கான சான்று ( பின் வருவனவற்றியிலிருந்து ஒன்று இணைக்க வேண்டும்)

■பிறப்பு & இறப்பு பதிவிற்கான மாவட்ட அலுவலகத்தின் பதிவாளர் அல்லது நகராட்சி ஆணையாளரால் வழங்கப்படும் பிறப்பு சான்றிதல்.

■விண்ணப்பதாரர் கடைசியாக படித்த பள்ளியிலிருந்து பெறப்படும் பிறந்த தேதிக்கான சான்று அல்லது ஏதாவாது மற்ற அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட சான்று அல்லது விண்ணப்பதாரர்கள் மாஜிஸ்டிரேட்/நோட்டரி முன் பிரமாணம் செய்து, அவர்களால் கூறப்படும் பிறந்த தேதி/இடம் இணைப்பு ’அ’ வின் முன்மாதிரியின் படி இருத்தல் வேண்டும்.
குறிப்பு: விண்ணப்பதாரர் 26.01.89 அன்றைக்கு பிறந்த அல்லது அதற்குப் பிறகு பிறந்தவராக இருந்தால் மட்டும் நகராட்சி ஆணையாளரால் அல்லது பிறப்பு & இறப்பு பதிவாளர் அலுவலகத்தில் கொடுக்கும் பிறப்பு/இறப்பு சான்றிதல் ஏற்கதக்கதாகும்.

சட்டப்படி வயதுக்கு முதிராதவர் பாஸ்போர்ட்-க்காக விண்ணப்பிக்கும்பொழுது தேவைப்படும் ஆவணங்கள்

◦இணைப்பு-எச்-ன் படி சட்டப்படி வயதுக்கு முதிராதவரைப் பற்றி விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருப்பதை ஒப்புதல் உறுதியளிக்கும் (பெற்றோர்கள் இருவரால் கையெழுத்து இடப்பட்டு), இணைப்பு-“சி” (திருமணத்தின் மூலமாக பிறந்த குழந்தையின் பெற்றோரில் ஒருவர்/முறையாக விவாகரத்து பெறாமல் பிரிந்திருக்கும் பெற்றோரில் ஒருவர்), இணைப்பு-“ஜி” (பெற்றோர் ஒருவரால் அல்லது சட்டப்படி பாதுகாவலரால் பாஸ்போர்ட்-க்காக விண்ணப்பத்திருக்கும் பொழுது), இணைப்பு-“ஐ” (சட்டப்படி வயதுக்கு வராத 15 – 18 வயதிற்கு இடைப்பட்டவர் 10 வருடங்கள் முழுவதுமாக செல்லதக்கத்தான பாஸ்போர்ட்-டிற்காக விண்ணப்பிக்கும் பொழுது அல்லது (சட்டப்படி வயதுக்கு வராத தங்களுடைய குழந்தையின் பாஸ்போர்ட்-டிற்காக விண்ணப்பிக்கும் பொழுது பெற்றோரில் யாரேனும் ஒருவர் செல்லத்தக்கதான இந்திய பாஸ்போர்ட்-ஐ கொண்டிருக்கவில்லை என்றால்), இவ்வாறாக எதுவாக இருந்தாலும்
◦பெற்றோர் இருவரின் பாஸ்போர்ட்-டின் நகலை மெய்மையாக்கப்பட்டு, ஏதாவது இருப்பின்,
◦பெற்றோரின் உண்மையான பாஸ்போர்ட்டை சரி பார்க்கும்பொழுது கண்டிப்பாக காட்டவேண்டும்.
◦பெற்றோரில் ஒருவர் வெளிநாட்டு வாழ்பவராக இருந்தால், இந்திய தூதரகத்தால் உண்மையென உறுதியளிக்கும் பிரமான எழுத்து வடிவ வாக்குமூலத்தோடு இந்தியாவில் வசிக்கும் பெற்றோரின் வாக்குமூலத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.


***


தட்கால் திட்டத்தின் கீழ் பாஸ்போர்ட்-ஐ பெற எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்துடன், தட்கால் கட்டணம் மற்றும் உண்மையென சான்றளிக்கும் விதமான முன்மாதிரியான இணைப்பு “எப்” பொதுவான வாக்குமூலமாக இணைப்பு “ஐ” சமர்ப்பிக்கவேண்டும்.

•உண்மையென சான்று அளித்த அலுவலரிடமிருந்து பெறப்பட்டவை உறுதியளிக்கும் சான்று தானா என்பதை உறுதியளிக்கும் விதமாக எழுத்து மூலம் சரிபார்க்கும் உரிமையை பாஸ்போர்ட் வழங்கும் அதிகாரி அதற்கான உரிமையை தக்கவைத்துள்ளார்.

•வரிசைகிரமம் இல்லா பாஸ்போர்ட் வழங்குவதற்கு அவசர தேவைக்கான சான்று தேவையில்லை.

•தட்கால் திட்டத்தின் கீழ் வழங்கும் அனைத்து பாஸ்போர்ட்களைச் சார்ந்த காவல்துறையின் சரிப்பார்க்கும் பணி பாஸ்போர்ட் வழங்கிய பின் இருக்கும் கீழே சொல்லப்பட்ட பட்டியலிலிருந்து மூன்று ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் தட்கால் திட்டத்தின் கீழ் பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பதார்ர் பெறமுடியும். மூன்று ஆவணங்களில் ஒன்று புகைப்படைத்துடன் கூடிய அடையாள அட்டையாக இருக்க வேண்டும் அதோடு ( இணைப்பு “ஐ”) நிலையான எழுத்து வடிவ வாக்குமூலத்தை பத்திர பதிவு முத்திரைத் தாள்களில் நோட்டரியால் மெய்யானது என உறுதியளிக்க வேண்டும்.

கீழ் வரும் ஆவணங்களின் பட்டியலிலிருந்து, பாஸ்போர்ட்-க்காக மூன்றை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்

a.வாக்காளர் அடையாள அட்டை(எபிக்)

b.மத்திய/மாநில அரசுகளால் வழங்கப்பட்ட பணிக்கான புகைப்பட அடையாள அட்டை, பொது நிறுவனங்கள், உள்ளூர் அமைப்புகள் அல்லது பொது வரையறை நிறுவனங்கள்

c.தாழ்த்தப்பட்ட(எஸ்சி)/பழங்குடியினர் (எஸ்டி)/மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) சான்றிதழ்கள்

d.சுதந்திர போராட்ட வீரருக்கான அடையாள அட்டைகள்

e.ஆயுதத்திற்கான உரிமங்கள்

f.சொத்து ஆவணங்களான பட்டா, பதிவுசெய்யப்பட்ட ஒப்பந்தபத்திரங்கள் இன்னும் பிற.

g.குடும்ப அட்டைகள்

h.ஓய்வூதிய ஆவணங்களான முன்னாள் இராணுவ வீரரின் ஓய்வூதிய புத்தகம்/ ஓய்வூதியம் செலுத்துவதற்கான ஆணை, முன்னாள் இராணுவ வீரரின் விதவை/சார்ந்தவர்கள் சான்றிதழ்கள், முதியோர் ஓய்வூதிய ஆணை, விதவை ஓய்வூதிய ஆணை

i.இரயில்வே அடையாள அட்டைகள்

j.வருமான வரி அடையாள (பான்) அட்டைகள்

k.வங்கி/கிசான்/அஞ்சல் அலுவலக புத்தகம்

l.அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களால் வழங்கப்பட்ட மாணவர்களுக்கான புகைப்பட அடையாள அட்டைகள்

m.ஓட்டுனர் உரிமம்

n.ஆர்பீடி சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பிறப்பு சான்றிதழ்கள்

o.எரிவாயு இணைப்பிற்கான ரசீது


***


பாஸ்போர்ட்-க்காக ஆப் லைனில் எவ்வாறு விண்ணப்பிப்பது

தேவைப்படும் விண்ணப்பப்படிவம் மற்றும் படிவ அமைப்பினை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யவேண்டும்,

•பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், கட்டணம் மற்றும் தேவைப்படும் ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கு

◦பாஸ்போர்ட் அலுவலகத்தின் வாடிக்கையாளர் சேவை மேடை
◦விரைவு அஞ்சல் மையங்கள்
◦மாவட்ட பாஸ்போர்ட் தனியறைகள்
◦பாஸ்போர்ட் பெறும் மையங்கள்

http://passport.gov.in/cpv/column_guidelines.htm

***

விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வதற்கான வரிசையான செயல்முறைகள்



பாஸ்போர்ட்-க்காக பயன்படுத்தப்பட்ட விண்ணப்ப படிவத்தின் பட்டியல்விண்ணப்ப படிவம் எண்-1


http://passport.gov.in/cpv/ppapp1.pdf


புதிய/மறுமுறை வழங்கல்/தொலைத்துவிடுதல்/சேதமடையும் பாஸ்போர்ட்-க்கான வேறொன்று/பெயர்/தோற்றம் மாற்றம் / பக்கங்கள் முடிவடைதல் போன்றவைக்காக இது பயன்படுத்தப்படுகிறது. சட்டப்படி வயதுக்கு முதிராதவர்களுக்கான பாஸ்போர்ட்-க்காக இதே விண்ணப்ப படிவம் பயன்படுத்தப்படுகிறது

*

விண்ணப்ப படிவம் எண்-2


http://passport.gov.in/cpv/miscell.pdf

காவல் அனுமதி சான்றிதழுக்காக விண்ணப்பித்தல், ஈசிஆர் முத்திரை நீக்குவதற்கு, கணவன் அல்லது மனைவியின் பெயர் சேர்ப்பதற்கு மற்றும் முகவரி மாற்றத்திற்கு இதையே விண்ணப்பமாக பயன்படுத்தலாம். குறைவான காலத்திற்கு செல்லத்தக்க பாஸ்போர்ட்டை, முழு காலத்திற்கும் செல்லத்தக்கதாக புதுப்பிப்பதற்க்கும் இந்த படிவமே பயன்படுத்தப்படுகிறது.

*

தனிப்பட்டவரின் விவரங்களுக்கான படிவம் (பிபி பாரம்)

காவல்துறை சரிப்பார்த்து தகவல் அளிப்பதற்காக இது பயன்படுத்தப்படுகிறது. இது விண்ணப்ப படிவம் எண்-1 – ன் ஒரு பகுதியாகும். கடந்த ஒரு வருடத்தில் விண்ணப்பதாரர் ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் குடியிருந்தவராக இருந்திருக்கும் பட்சத்தில், பிபி படிவத்தின் கூடுதலான ஒன்றை ஓவ்வொரு முகவரி/இடத்திற்காக பூர்த்தி செய்யப்பட வேண்டும்.



***


எழுத்துவடிவ வாக்குமூல வடிவமைப்பு


எழுத்தறிவில்லாத விண்ணப்பதாரர்களால் சமர்ப்பிக்கப்படவேண்டிய பிறந்த தேதிக்கான எழுத்துவடிவ வாக்குமூலம் (இணைப்பு “எ”)

அடையாள சான்றிதல் ( இணைப்பு “பி” )

பெற்றோரில் எவராவது ஒருவர் ( தனியாக பிரிந்திருந்து ஆனால் முறையான விவாகரத்து பெறாமல் அவர்கள் இருப்பது ) சட்டப்படி வயது முதிராத சிறியவர்களின் பாஸ்போர்ட்-க்காக எழுத்துவடிவ வாக்குமூலம் தருவதற்கு (இணைப்பு “சி”)

திருமணத்திற்குப் பிறகு பெயர் மாற்றத்திற்காக பெண் வின்னப்பதாரரின் எழுத்துவடிவ வாக்குமூலம் (இணைப்பு “டீ”)

பெயர்/உரிமைப் பத்திரம்/எழுத்து வடிவ வாக்குறுதி வாக்குமூலத்தில் மாற்றம் செய்வதற்கான (இணைப்பு “ஈ”)

தட்கால் பாஸ்போர்ட்-க்கான சரிப்பார்க்கும் சான்றிதழ் (இணைப்பு “எப்”)

சட்டப்படி வயதுக்கு வராதவரின் பாஸ்போர்ட்-க்காக பெற்றோர் / பாதுகாவலரின் உறுதிமொழி ( பெற்றோரில் எவராவது ஒருவர் ஒப்புதல் அளிக்காமல் இருக்கும் பட்சத்தில் ) (இணைப்பு “ஜி” )

சட்டப்படி வயதுக்கு வராதவரின் பாஸ்போர்ட்-க்காக பெற்றோர் / பாதுகாவலரின் உறுதிமொழி (இணைப்பு “எச்”)

பொதுவான எழுத்து வடிவ வாக்குமூலம் (இணைப்பு “ஐ”)

சான்றிதழ் சரிப்பார்த்தலுக்கான முன்மாதிரி இணைப்பு “ஜெ”

அனுமதிக் கடிதம்

பாஸ்போர்ட் விண்ணப்பத்தைப் பற்றி மேலும் அறிந்துக் கொள்ள தயவுச் செய்து passport.nic.in என்ற இணைய தளத்திற்கு செல்லுங்கள்


***
thanks indg.in
***



"வாழ்க வளமுடன்"

2 comments:

Sivakumar சொன்னது…

தகவலுக்கு நன்றி!

ஒரு கேள்வி - என்னுடைய பாஸ்போர்ட் சென்னையில் பெறப்பட்டது. தற்போது validity முடிந்து விட்டது. என்னால் பெங்களூரில் புதுபிக்க முடியுமா?

prabhadamu சொன்னது…

////1 comments:
Sivakumar சொன்னது…
தகவலுக்கு நன்றி!

ஒரு கேள்வி - என்னுடைய பாஸ்போர்ட் சென்னையில் பெறப்பட்டது. தற்போது validity முடிந்து விட்டது. என்னால் பெங்களூரில் புதுபிக்க முடியுமா?
/////


முடியாது நண்பா சென்னையில் தான் புதுப்பிக்க முடியும்....

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :)

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "