...

"வாழ்க வளமுடன்"

15 ஜூன், 2011

பாஸ்போர்ட் இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதன் பயன்கள் = part - 2

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
*

இணையதளம் மூலம் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பதற்கான செயல்முறைகள்

எனும் பாஸ்போர்ட் இணையத்தளத்தின் மூலமாக வட்டார பாஸ்போர்ட் அலுவலகத்தில் உங்களுடைய விண்ணப்பத்தை பதிவு செய்துக்கொள்ளலாம். -passport.gov.in ,

•பதிவு செய்தப்பிறகு, உங்கள் விண்ணப்ப படிவத்தை திறக்க / சேமிக்க கணினி உங்களை கேட்கும்.

•திறந்த/சேமித்த பிறகு, தயவு செய்து விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் எடுக்கவும்.

•ஏதாவது காரணமாக உங்களுடைய விண்ணப்ப படிவம் பிரிண்ட் செய்ய இயலாமல் போனால், விண்ணப்பப்படிவத்தின் எண்ணை நீங்கள் கண்டிப்பாக குறித்துக் கொள்ளுங்கள். இந்த விண்ணப்ப படிவ எண் மற்றும் பிறந்த தேதியின் உதவியைக் கொண்டு பின்னால் நீங்கள் விண்ணப்பப்படிவத்தை மறுமுறை பிரிண்ட் எடுக்க முடியும்.

•நீங்கள் விண்ணப்ப படிவத்தை சேமித்து வைத்திருந்தால், மேலும் நீங்கள் பிரிண்ட் எடுக்க முடியும்.

•விண்ணப்பப்படிவத்தில் உங்கள் கையால் மட்டுமே நிரப்ப வேண்டியிருக்கும் நிரல்களும் இருக்கும்.

•பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் அதற்கு ஆதரவான ஆவணங்களான பிறப்பு சான்றிதழ் மற்றும் கட்டணத்தோடு பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு திட்டமிட்ட சந்திப்பிற்கான தேதி மற்றும் நேரத்திற்கு நீங்கள் சென்று சமர்ப்பிக்க வேண்டும்.

•பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஆன்லைன் கணினி திட்டமிட்ட தேதி மற்றும் சந்திப்பிற்கான நேரத்தை உங்களுக்கு தெரிவிக்கும், இதுவும் விண்ணப்ப படிவத்தில் பிரிண்ட் ஆகியிருக்கும்.

•தயவு செய்து பாஸ்போர்ட் அலுவலகத்தை திட்டமிட்ட தேதி மற்றும் நேரத்திற்கு அடையுங்கள். வட்டார பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு கிட்டத்தட்ட 15 நிமிடங்களுக்கு முன்பாகவே கண்டிப்பாக வரவேண்டும் மற்றும் அதற்கென இருக்கும் வாடிக்கையாளர் சேவை முகப்பிடத்தை அணுக வேண்டும்.

•ஆன்லைன் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க டோக்கன் எண் வாங்கவேண்டிய அவசியமில்லை. நீண்ட வரிசையில் நீங்கள் நின்று காத்திருக்க வேண்டியதில்லை.


***


பாஸ்போர்ட் பெறுவதற்க்கான கட்டணம்

விண்ணப்பப்படிவத்தோடு விண்ணப்ப கட்டணத்தை ரொக்கமாகவோ அல்லது காசோலையாகவோ அதற்குரிய பாஸ்போர்ட் அதிகாரி பெயரில் செலுத்தவேண்டும்.

காசோலையாக இருந்தால், விண்ணப்பதாரரின் முழுப்பெயர் மற்றும் விண்ணப்ப எண்ணை காசோலையின் பின்புறம் எழுத வேண்டும். காசோலை கொடுக்கும் வங்கியின் குறியீடு எண், காசோலை எண் மற்றும் காசோலை வங்கியிலிருந்து பெறப்பட்ட தேதி ஆகியவைகள் குறிப்பிட வேண்டும். விண்ணப்ப படிவத்தில் இருக்கும் அதற்குண்டான பெட்டிகளில் செலுத்தும் கட்டணம் குறிப்பிடவேண்டும்.

1. 10 வருட கால அவகாசம் கொண்ட ( 36 பக்கங்கள் ) புதிய பாஸ்போர்ட்( 10 வருட முழுவதும் செல்லத்தக்க பாஸ்போர்ட்-ஐ வாங்க விரும்புபவர்கள், 15 வருடங்கள் முதல் 18 வருடங்களுக்கு இடைப்பட்ட வயதைக்கொண்ட சட்டப்படி வயது முதிராதவர்கள் )

கட்டணங்கள் -Rs 1,000/-



2. 10 வருட செல்லத்தக்க புதிய பாஸ்போர்ட் ( 60 பக்கங்கள்)

கட்டணங்கள் - Rs. 1,500/-



3. சட்டப்படி வயதுக்கு முதிராதவர்களுக்கான 5 வருடங்கள் செல்லத்தக்க புதிய பாஸ்போர்ட் அல்லது சட்டப்படி வயது முதிராதவர்கள் 18 வயது அடையும் வரை, இதில் எது முந்துகிறது அது வரை

கட்டணங்கள் - Rs 600/-



4. பாஸ்போர்ட் தொலைந்துவிடுதல், சேதமடைதல் அல்லது திருடப்பட்ட நிலையில் ( 36 பக்கங்களைக் கொண்டுள்ள ) பாஸ்போர்ட் நகல்

கட்டணங்கள் Rs. 2500/-




5. பாஸ்போர்ட் தொலைத்துவிடுதல், சேதமடைதல் அல்லது திருடப்பட்ட நிலையில் ( 60 பக்கங்களைக் கொண்டுள்ள ) பாஸ்போர்ட் நகல்

கட்டணங்கள் - Rs. 3000/-


6. காவல் அனுமதிக்கான சான்று / ஈசிஎன்ஆர் / கூடுதலான மேற்குறிப்புகள்

கட்டணங்கள் - Rs.300/-



7. முகவரி மாற்றம், பெயர்,பிறந்த தேதி,பிறந்த இடம்,தோற்றம்,கணவன் அல்லது மனைவியின் பெயர், பெற்றோர்களின் பெயர்/சட்டப்படியான பாதுகாவலர் ஆகியவைகளில் மாற்றம் ஏற்படும்பொழுது

கட்டணங்கள் - Rs.1000/- [Fresh passport booklet will be



***


தட்கால் பங்கீட்டளவின் கீழ் பாஸ்போர்ட் பெறுவதற்கான கட்டணம்

பயன்படத்தக்க பாஸ்போர்ட் கட்டணத்திற்கு கூடுதலாக தட்கால் கட்டணம் இருக்கிறது, இதை ரொக்கமாகவோ அல்லது வட்டாரத்தை சார்ந்த பாஸ்போர்ட் அதிகாரி என்ற பெயரில் காசோலையாகவோ செலுத்தக்கூடியதாகும். தட்கால் பாஸ்போர்ட்-க்கான கூடுதலான கட்டணம் சுழற்சிக்கு அப்பால் பின்வருமாறு இருக்கும்.


புதிய பாஸ்போர்ட்-க்காக


1. விண்ணப்பித்த தேதியிலிருந்து 1-7 நாட்களுக்குள் - ரூபாய் 1500/- பாஸ்போர்ட் கட்டணத்திற்கு கூடுதலாக ரூபாய் 1000/-



2. விண்ணப்பித்த தேதியிலிருந்து 8-14 நாட்களுக்குள் - ரூபாய் 1000/- பாஸ்போர்ட் கட்டணத்திற்கு கூடுதலாக ரூபாய் 1000/-


***


வேறொரு பாஸ்போர்ட் பெற ( பாஸ்போர்ட் தொலைத்துவிடுதல்/சேதமடைதலுக்கு பதிலாக )


1. விண்ணப்பித்த தேதியிலிருந்து 1-7 நாட்களுக்குள் - ரூபாய் 2500/- நகல் பாஸ்போர்ட் கட்டணத்திற்கு, கூடுதலாக ரூபாய் 2500/-



2. விண்ணப்பித்த தேதியிலிருந்து 8-14 நாட்களுக்குள் - ரூபாய் 1500/- நகல் பாஸ்போர்ட் கட்டணத்திற்கு, கூடுதலாக ரூபாய் 1500/-


***


10 வருடங்கள் செல்லத்தக்கத்தான கால அவகாசம் முடிந்தப் பின்னர் மறுமுறை பெறுவதற்கு


1. விண்ணப்பித்த தேதியிலிருந்து 3 வேலைநாட்களுக்குள் - ரூபாய் 1000/- பாஸ்போர்ட் கட்டணத்திற்கு, கூடுதலாக ரூபாய் 1500/-



பாஸ்போர்ட்-க்காக ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்

http://www.indg.in/e-governance/%20https://passport.gov.in/pms/Information.jsp


***

"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "