...

"வாழ்க வளமுடன்"

03 பிப்ரவரி, 2010

வடை கறி

எங்கள் வீட்டில் நாங்கள் செய்யும் " வடை கறி " இது என் அம்மாவின் கை மணம்.

தேவையான பொருட்கள்:
கடலைப் பருப்பு - 2 கப்
வெங்காயம் - 2 ( மீடியம் சைஸ் )
தக்காளி - 1
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 6 பல்
பச்சை மிளகாய் - 2
கிராம்பு, பட்டை - 3,2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தாளிக்க மட்டும்

செய்முறை:

1. முதலில் பருப்பை 1/2 மணி நேரம் ஊறவிட்டு ஒன்றிரண்டாக அரைத்து கொள்ளவும்.

2. அதை சிறு சிறு உருண்டைகலாக உருட்டி ஆவியில் வேக விடவும். பிறகு அதை உதுத்து விடவும்.

3. அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு போட்டு பொரித்ததும் இடித்த இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.


4. பிறகு மஞ்சத்தூள், உப்பு, காரம் தேவை எனில் மிளகு தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

5. கொதித்ததும் உதித்து வைத்துள்ள பருப்பை ( ஆவியில் வேக வைத்தது ) போட்டு கொதிக்க விடவும்.

6. கொத்த ம‌ல்லி போட்டு இற‌க்க‌வும்.

மன அழுத்தத்திலிருந்து விடுபட‌

இந்த அவசர யுகத்தில் பலருக்கும் பலவிதமான டென்ஷன். வீட்டிலிருக்கும் பெண்களுக்கு, குடும்ப பிரச்னை மட்டும் உள்ளதென்றால், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, அலுவலகப் பிரச்னைகளும் சேர்ந்து, இரட்டை சுமையாகிறது. இதனால், மனஅழுத்தம் உண்டாகி, அது பலவித வியாதிகளுக்கு வழிவகுக்கிறது.

இதிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி?

இதோ சில டிப்ஸ்...

* யோகா செய்யுங்கள்:

தியானம் செய்யுங்கள். குறைந்தது 20 நிமிடமாவது தியானம் செய்யப் பழகுங்கள். இது மனதிற்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் தரும்; மனம் பக்குவப்படும். தியானம் செய்ய, முறையான பயிற்சி தேவை. முறையான ஆசிரியரிடம் பயின்று யோகா செய்யுங்கள்.

* நல்ல இசையை கேளுங்கள்:

உங்களுக்கு பிடித்தமான மெல்லிய இசையை கேளுங்கள். இது டென்ஷனிலிருந்து, உங்களை விடுவிக்க உதவும். சோர்ந்த மனதை சுறுசுறுப் பாக்க, இசை உதவுகிறது. நல்ல மென்மையான இசை டென்ஷனை குறைக்கிறது. நம் நரம்புகள் விரைத்துப் போய் உடல் கல்லாக ஆகிவிடும் போது, இசை அதை கனிய வைக்கிறது.

* வாரம் ஒரு முறை வெளி இடங்களுக்கு செல்லுங்கள்:

அலுவலகம் செல்லும் பெண்கள், ஒரு நாளும் ஓய்வில்லாமல், வீட்டு வேலை, அலுவலக வேலை என மாற்றி மாற்றி பார்த்து அலுத்து விடுவீர்கள். விடுமுறை தினத்தை ரிலாக்சாக, மனதுக்கு பிடித்த வகையில் செலவிடுங் கள். அன்றைக்கும் வீட்டு வேலையே கதி என்று இருந்துவிட்டால், மனம் அமைதி இல்லாமல் தவிக்கும். ஓய்வு தினத்தில் சிறிது நேரமாவது வெளியிடங்களுக்கு சென்று மனதை "ரிலாக்ஸ்' செய்யுங்கள். மனது புத்துணர்வுடன் இருந்தாலே நாம் சுறுசுறுப்பாக எவ்வித நோயும் இன்றி ஆரோக்கியமாக வாழலாம்.



* உணவில் கவனம் தேவை:

உணவில் கவனம் செலுத்துங்கள். நேரம் தவறாமல் உண்பது மிகவும் அவசியம். அது, சத்தான உணவாக இருக்க வேண்டும். ஆரோக்கியமான உணவு வகைகளே, நாம் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும்.

* பாசிடிவ் திங்கிங்:

எதிலும், "பாசிடிவ் திங்கிங்' வேண்டும். அப்போது தான், உங்களால் எடுத்த காரியத்தில் வெற்றி பெற முடியும். எதிர்மறையான எண் ணங்கள் உங்களை கோழையாக்கிவிடும்.

* பதற்றம் வேண்டாம்:

ஒவ் வொரு விஷயத்திற்கும் பெண்கள் மிகுந்த பதற்றம் அடைவர். பதற்றம் அடையும் போது மன அழுத்தம் அதிகரிப்பதோடு செய்ய நினைத்த வேலையையும் ஒழுங்காக செய்ய முடியாது. இதனால், வீட்டிலும், அலுவலகத்திலும் கெட்ட பெயர் வாங்க வேண்டிய சூழ்நிலை உரு வாகும். அதைத் தவிர்க்க, எதிலும் பதற்றம் அடையாமல் நிதானமாக செயல்படுவது நல்லது.

* திட்டமிடுதல் அவசியம்:

எந்த வேலையையும் செய்யத் துவங் கும் முன், திட்டமிடுதல் அவசியம். திட்டமிட்டால் மட்டும் போதாது; திட்டமிட்டபடி வேலைகளை செய்து முடிக்க வேண்டும். திட்டமிட்டபடி வேலை செய்து முடித்தால், கிடைக்கும் சந்தோஷமே அலாதி தான்.

by சிவா .


நன்றி சிவா அண்ணா.
http://eegarai.darkbb.com/-f14/---t400.htm

கம்பு







கம்பு தானிய வகையைச் சேர்ந்தது. இனிப்புச் சுவை உடையது. உடலுக்கு உரமாக்கும் செய்கையை கொண்டது.
உடலை இரும்பாக்கும்!


கம்பு உடல் சூட்டுக்கு மிகவும் நல்லது. அதிகம் குளிச்சி வாய்ந்தது.


கம்பு அதிகம் சத்து வாய்ந்தாது. உடல் இளைக்க விரும்கிற‌வர்கள் இதனை சாப்பிடலாம்....


நார்ச்சத்து உ‌ள்ள உணவுகள் பெருங்குடலில் புற்று நோய் வராமல் தடுக்கும். கோதுமை, சோளம், கேழ்வரகு, கம்பு முதலியன நா‌ர்‌ச்ச‌த்து‌ள்ள உணவு‌ப் பொரு‌ட்க‌ளி‌ல் அடங்கும்.


கம்புமாவுக்கூழ் உடலைத் தூய்மையாக்கும். க‌ம்பை பாயாச‌ம், தோசை, அடை, கூழ் என்று செய்து சாப்பிட‌லாம்.

கிரகணத்தின் போது கர்ப்பிணிகள்


கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் அசைய‌க்கூடாது, வெளியே வ‌ர‌க்கூடாது என்று எல்லோரும் சொல்லுவ‌து எதுக்கு என்று ஒரு சிலருக்கு தெரியவில்லை.

அதற்க்கு பதில்

திரு. ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன் கூறிய‌து.

கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனக் கூறுவது ஏன்?

இயல்பு நிலையில் ஏற்படும் மாற்றத்தையே ஜோதிட ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் கிரகணம் எனக் கூறுகிறோம்.

கிரகணம் நிகழும் நேரத்தில் சூரியன் அல்லது சந்திரனில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் தடுக்கப்படுவதால் செயற்கையான இருட்டு ஏற்படுகிறது.

இதன் காரணமாக பூமியில் வாழும் உயிரினங்கள், தாவரங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே கர்ப்பிணிப் பெண்கள், இதயம் பலவீனமாக இருப்பவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கிரகணத்தின் போது வீட்டை விட்டு வெளியில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது என முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கிரகண நேரத்தில் வீட்டிற்குள் இருக்கும் போது சூரியன் அல்லது சந்திரனின் நேர்மறைக் கதிர்களின் தாக்குதலில் இருந்து தப்ப முடியும்.

நன்றி ஜயா.

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்

http://tamil.webdunia.com/religion/astrology/traditionalknowledge/0907/02/1090702052_1.htm

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "