...

"வாழ்க வளமுடன்"

17 பிப்ரவரி, 2010

தினை & தினை மாவு



தினையை ஆங்கிலத்தில் Millet-ன்னு சொல்லுவாங்க! இப்பல்லாம் கேழ்வரகு, கம்பைத் தான் பொதுவாத் தினை-ன்னு சொல்லிடறாங்க! ஆனா தினை என்பது கம்பிலேயே தனியாக ஒரு வகை! குறிப்பாச் சொல்லணும்னா Foxtail Millet! பார்க்க நரியின் வால் போலவே பச்சைக் கதிர் தொங்கும்!
இந்தியில் ஜோவர்-ன்னு சொல்லுவாங்க! இப்பல்லாம் வட நாட்டுல இந்தத் தினை பிரபலம் ஆயிருச்சி! நாம தான் தினையை விட்டுட்டோம்! வடக்கு வாழ்கிறது!
பண்டைத் தமிழ் மக்களின் உணவு அரிசி இல்லை! தினை! அதுவும் குறிஞ்சி மற்றும் முல்லை நில மக்களின் உணவு. மருதத்துல தான் பிற்பாடு அரிசி பிரபலம் அடைஞ்சிருக்கும் போல! தினைப் புனத்துக்கு ரொம்ப தண்ணி எல்லாம் தேவைப்படாது. ஆனா மகசூல் ஜாஸ்தி! மேலும், தினை உணவு மிகவும் சத்தானது. அத்தனையும் ப்ரோட்டீன்.
இப்போதெல்லாம், காலையில் சீரியல்-ன்னு பாலை ஊத்தி, லபக் லபக்-ன்னு கோழி கணக்கா லபக்கறோமே! ஆனா அப்பவே தினை ஆகாரம் நம் வழக்கத்தில் இருந்து வந்தது!
பொட்டாசியம் உப்பிற்காக தினை மாவு, பீன்ஸ், வாழைப்பழங்கள் முதலியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து உண்டு வந்தாலும் ஸ்டிரோக் அபாயத்தை தவிர்க்க முடியும். போனஸாக சிறுநீரகங்களும் ஆரோக்கியமாக இயங்கும்.
இத்துடன் உடலுக்கு வலிமை சேர்க்க கால்சியமும், பாஸ்பரஸ் உப்பும் அதிக அளவில் உள்ள சோயா பீன்ஸ், காரட், பாசிப்பருப்பு, பாதாம் பருப்பு, ஆட்டு ஈரல், தேங்காய், தினை மாவு முதலியவையும் நன்கு உணவில் சேர்க்க வேண்டும்.
தினை மாவுருண்டை செய்வது எப்படி?
தினை மாவை எண்ணெய் ஊத்தாம சிறு தீயில் வறுத்துக்கனும்! வாசனை அப்பவே கமகம-ன்னு தூக்கும்! கூடத் தேன் சொட்டு சொட்டா விட்டுப் பிசைஞ்சிக்கிடனும். ஏலக்காய்த் தூளும், வெல்லமும் கூட சேர்த்துக்கலாம்! அப்படியே மாவு போல உருட்டி, அம்புட்டுச் சுவை! அம்புட்டுச் சத்து!
நன்றி கந்தர் அலங்காரம்.
murugaperuman.blogspot.com/feeds/posts/default?alt=rss - 328k

ஓமேகா - 3

அக்ரூட் கொட்டை

அக்ரூட் Juglandaceae வகை தாவரங்கள். இதில் இருந்து பெறப்படும் அக்ரூட் கொட்டை பலரால் விரும்பி உண்ணப்படுகிறது. இவை 10-40 மீ உயரம் வளரக்கூடியவை. இவை ஐரோப்பா, கிழக்கு சீனா, தென்னிந்தியா, அமெரிக்க, கனடா, மெக்சிக்கோ ஆகிய இடங்களில் பெரிதும் பயிரிடப்படுகிறது.








மீன்












ஒமேகா 3 அதிகம் உணவின் மூலம் நமக்கு கிடைக்கிறது. மாத்திரையாகவும் கிடைக்கிறது. ஆனால் இயற்க்கையில் கிடைப்பது இன்னும் சிறப்பு வாய்ந்தது.






எனக்கு தெரிந்த சில...






மீனில் காணப்படும் `ஓமேகா 3' என்ற பொருள், நம் சரும செல்களை புதுப்பிப்பதோடு, சருமத்தை பளபளக்கவும் செய்கிறது. அதனால், வாரத்துக்கு 3 நாள் மீன் சாப்பிடுவது நல்லது. மீன் சாப்பிடாதவர்கள் மீன் மாத்திரை சாப்பிடலாம்.





சோயாபீன்சை வாரத்துக்கு 3 நாள் உணவில் சேர்த்துக்கொண்டால் சருமம் புதுப்பொலிவுடனும், ஈரப்பசையுடனும் இருக்கும். முகப்பருக்களும் வராது.





கேரடில் உள்ள பீட்டா கரோட்டின் சருமத்தை பொலிவுடன் வைக்கும். ஆரஞ்சு, பப்பாளி, பூசணி, மாம்பழம் சாப்பிட்டாலும் சருமம் பொலிவுடன் இருக்கும்.





சிலர் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், அவர்களது முகத்தில் ஏதோ ஒரு சோகம் இழையோடிக் காணப்படுவதுபோல் இருக்கும். இப்படிப்பட்டவர்கள் தினமும் அதிக அளவில் தண்ணீர் குடிப்பது நல்லது. அவ்வாறு தண்ணீர் குடித்து வந்தால் சருமம் புத்துணர்ச்சி பெற்று ஈரப்பசையுடன் இருக்கும். குறைந்தது ஒரு நாளுக்கு 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அதற்கு மேல் குடித்தாலும் தப்பில்லைதான்.




மீனிலுள்ள ஓமேகா-3 என்ற பொருள் சரும சொல்களை புதுபிக்கும். சருமத்தை பளபளக்க செய்யும். வாரத்துக்கு 3 நாள் மீன் சாப்பிடுவது நல்லது. மீன் சாப்பிடாதவர்கள் மீன் மாத்திரை சாப்பிடலாம்.










அ‌திகமான கொழு‌ப்பு ச‌த்து ‌நிறை‌ந்த உணவுகளை‌ உ‌ண்பதை பெரு‌ம்பாலு‌‌ம் த‌வி‌ர்‌க்க வே‌ண்டு‌ம். நாம‌் எ‌ப்போது‌ம் ஒரே சோ‌ப்பை‌ப் பய‌ன்படு‌த்த வே‌ண்டு‌ம். ஆனா‌ல் உணவு எ‌ண்ணெயை அ‌வ்வ‌ப்போது மா‌ற்‌றி‌க் கொ‌ண்டே இரு‌க்க வே‌ண்டு‌ம்.








ஓமேகா 3 பற்றி இன்னும் விளக்கம் வேண்டும் எனில் இங்கே கிளிக் செய்யவும்.

நன்றி டாக்டர்.
jeyachchandran.blogspot.com/2007/04/blog-post.html - 55k‏





நன்றி விக்கிபீடியா.
நன்றி மாலை மலர்.

சக்கரவர்த்திக் கீரை











கீரையாகப் பயன்படுத்தப்படும் செடிகளுள் சக்கரவர்த்திக் கீரையும் ஒன்று. இந்த கீரைக்குக் கண்ணாடிக் கீரை, சக்கோலி, சில்லி என்ற வேறு பெயர்களும் உண்டு.














மலேசியாவில் இதனை kangkong என்று அழைப்பார்கள்.இது விளை நிலங்களையொட்டி தானாக வளரக்கூடியது. தமிழகத்தில் சில பகுதிகளில் இதைப் பயிரிடவும் செய்கின்றனர். சக்கரவர்த்திக் கீரை செங்குத்தாக சுமார் மூன்றடி உயரம் வரை வளரும்.












இது பசுமை கலந்த செந்நிறத் தண்டுகளையும், கருஞ்சிவப்பு நிறத் தழைகளையும் உடையது.சக்கரவர்த்திக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புக்களும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன.














இக்கீரையை நெய் விட்டு வதக்கிப் பருப்புடன் சேர்த்து உண்ணலாம். பொறுப்பும் தேங்காய்த் துருவலும் சேர்த்துப் பொரியலும் செய்யலாம். இதனைக் குழம்பாக வைத்தும் உண்ணலாம்.
















இந்தக் கீரையுடன் புளி, மிளகாய் சேர்த்துக் கடைந்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். சூப் தயாரித்தும் பருகலாம்.சக்கரவர்த்திக் கீரை நாவிற்குச் சுவையூட்டி பசியைத் தூண்ட வல்லது. கிராணி எனப்படும் வயிற்றுப் பே¡க்கு நோய்க்கு இந்தக் கீரை சிறந்த மருந்தாகும்.
















சிறுநீர் கழிக்க முடியாமல் வயிறு உப்பி அவதிப்படுவோர் இந்தக் கீரையைப் பயன்படுத்தி குணம் பெறலாம். இது மலத்தை இளக்கும்.சக்கரவர்த்திக் கீரையை வாரத்திற்கு நான்கு நாட்கள் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடலுறவில் விருப்பம் அதிகரித்து இல்லற வாழ்வு இன்பமயமாகும்.


















இக்கீரை விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயானது, குடலில் தோன்றும் கொக்கிப் புழு, நாக்குப் பூச்சி போன்ற குடல் ஒட்டுண்ணிகளை ஒழிக்க வல்லது.
















நன்றி தினகரன்.


















இதற்க்கு இன்னோரு பெயர் உள்ளது.










அவை தண்ணீரிலே கங்கூன் கீரை












கீரையை பற்றி அறிந்து கொள்ள விரும்பின் கூகிளில் "Kangkung" என தட்டச்சு செய்து தேடி பாருங்கள். இதை Water Spinach என்றும் அழைப்பார்கள். நீரில்/அல்லது சதுப்பு நிலத்தில் தான் இந்த கீரை வளருமாம்.












இந்த கீரை சமையல் இந்த தளத்தில் பார்க்கவும்.














நன்றி தூயா.


இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "