
மருத்துவர்களுக்கு நம்மிடையே எப்போதும் தனி மதிப்பு உண்டு.உயிர் காக்கும் கடவுள் அவர்கள்.பேராசையும் சுயநலமும் பெருகி விட்ட இன்றைய சூழலில் அவர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? பணம் சம்பாதிக்க என்னென்ன வித்தைகளை கையாளுகிறார்கள்? பத்ம பூஷண் விருது பெற்ற பேராசிரிய புகழ்பெற்றர் பி.எம்.ஹெக்டேவின் பகிர்வை நண்பர் ஒருவர் இ-மெயிலில் அனுப்பியுள்ளார்.
மருத்துவர்கள்,மருத்துவமனைகளுடன் சாட் செய்து தான் அறிந்து கொண்ட்தை தருகிறார்.
1. பரிசோதனைகளில் 40-60 சதவீத கமிஷன்.
உடல்நிலை சரியில்லாமல் சென்றவுடன் ரத்தம்,சிறுநீர் பரிசோதனை,ஸ்கேன் செய்ய வைப்பதில் மட்டும் மேற்கண்ட தொகை.500 ரூபாய் பரிசோதனைக்கு கொடுத்தால் பாதி மருத்துவருக்கு சென்றுவிடும்.இதில் அவசியமானதும் உண்டு,சில நேரங்களில் கமிஷனுக்காக தேவையில்லாத டெஸ்டுகளும் இருக்கும்.
2. பரிந்துரை செய்வதில் 30-40 சதவீதம்.
சில நேரங்களில் சிறப்பு மருத்துவர்களுக்கு பரிந்துரை செய்வார்கள்.உதாரணமாக தைராய்டு தொடர்பான நோயென்றால் அதற்கான மருத்துவருக்கு பரிந்துரைத்தால் ஸ்பெஷலிஸ்ட்டிடம் நீங்கள் செலவு செய்யும் பணத்தில் அனுப்பி வைக்கும் மருத்துவருக்கு 30-40 சதவீதம் வந்து சேர்ந்துவிடும்.
3. மருத்துவமனை கட்டணத்தில் 30-40 சதவீதம்.
மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும்போது உங்களிடம் வசூல் செய்யும் கட்டணங்களில் மேற்கண்ட தொகை குறிப்பிட்ட மருத்துவருக்கு கிடைக்கும்.
4. நெஞ்சுவலி என்று போனால்,
சாதாரண வலியாக இருக்கும்.அனைத்து பரிசோதனை,சிறப்பு மருத்துவர்கள் அழைப்பது என்று பணம் பிடுங்குவது.நான்கு நாட்களுக்கு அட்மிட் செய்து கறந்து விடுவார்கள்.
மேலும் அவசர சிகிச்சை பிரிவில் அட்மிட் செய்து விடுவார்கள்.ஆனால் சுத்தமில்லாத ,விஷயம் தெரியாத பத்தாம் வகுப்பு படித்தவன் நர்சிங் வேலை செய்வார்கள்.குறைந்த சம்பள்த்திற்கு பணியாட்கள் வைத்துக்கொள்வதில் லாபம்.தேவையில்லாமல் சிசேரியன் ஆபரேஷன் செய்வது, சினிமாவில் வருவது போல பிணத்திற்கு மருத்துவம் பார்ப்பது ,விளம்பரம் கொடுத்து காஸ்மெடிக் சர்ஜரி செய்வது,பணத்திற்காக பெரிய மருத்துவமனைகளுக்கு பரிந்துரைப்பது போன்றவை மற்ற வழிகள்.
மருந்துகடை கமிஷனை விட்டுவிட்டார் போல தோன்றுகிறது. சேவை மனப்பான்மையுள்ள நல்ல மருத்துவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.இப்போது படித்து முடித்து வந்தவுடன் நிறைய கடன்வாங்கி நர்சிங்ஹோம் கட்டி விடுகிறார்கள்.கடனை அடைக்க அப்பாவிகள் கிடைத்து விடுகிறார்கள்.ஊழலில் எத்தனையோ வகை இருக்கிறது .அதில் இது ஒரு வகை.
இருபது ரூபாய்க்கு,முப்பது ரூபாய்க்கு கிராமங்களில் சென்று மருத்துவம் செய்யும் எளிய மருத்துவர்களும் இருக்கிறார்கள்.நல்ல டாக்டர்கள் கிடைத்துவிட்டால் நீங்கள் அதிர்ஷ்டசாலி!
***
thanks cfa
***
"வாழ்க வளமுடன்"
