...

"வாழ்க வளமுடன்"

08 ஜூன், 2011

குழந்தை வளர்ப்புக் குறித்த சில கருத்துக்கள் வீடியோ




















***
thanks youtube
***






"வாழ்க வளமுடன்"




குழந்தைகளுக்கு நகம் வெட்ட சரியான நேரம் எது?



குழந்தைகள் மென்மையானவர்கள். அவர்களின் பராமரிப்பிலும் தாய்மார்கள் மென்மையை கடைபிடிக்க வேண்டும். குழந்தைகளின் நகங்களை வெட்டுவதும், காதை சுத்தம் செய்வதும் எவ்வளவு சிரமமான விஷயம் என்று தாய்மார்களுக்குத்தான் தெரியும். அந்த விஷயங்களில் உங்களுக்கு உதவும் எளிய டிப்ஸ் இதோ...


* குழந்தைகள் விளையாடும் வேளைகளில் அதிகமாக நகங்களைப் பயன்படுத்துவதால் அதில் ஏராளமாக அழுக்குப் படியும். இதனால் நோய் தொற்ற வாய்ப்பு உண்டு. எனவே அதிகமாக வளரும் நகங்களை அவ்வப்போது வெட்டிவிடுவது சிறந்தது.


* குழந்தைகளின் நகங்களை வெட்ட சரியான நேரம் அவர்கள் தூங்கும் வேளைதான். இல்லாவிட்டால் அவர்கள் வளைந்து, நெளிந்து ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள். பிறகு அழுகையையும் நிறுத்த முடியாது.


* குளிப்பாட்டியவுடன் குழந்தைகளின் நகம் மேலும் மென்மையாக மாறிவிடும் என்பதால் அப்போதும் நகங்களை வெட்டலாம்.


* குழந்தைகளுக்கு வேகமாக நகம் வளர்ந்து விடும் என்று சொல்வார்கள். அது உண்மையல்ல. மெதுவாகவே வளரும். 2 வாரங்களுக்கு ஒரு முறை நகங்களை வெட்டிவிடலாம்.


* குழந்தைகளின் கால் நகங்கள், கை நகங்களைவிட மெதுவாகத்தான் வளரும். அதுவும் மிருதுவாகத்தான் இருக்கும். கால்நகங்களை அதிகமாக பயன்படுத்துவதில்லை என்பதால் அடிக்கடி வெட்டிவிட வேண்டிய அவசியமில்லை. நன்றாக வளர்ந்தபிறகு வெட்டலாம்.


* நகங்களை வெட்டுவதற்கு குழந்தைகளுக்கான 'நெயில்கட்டர்' கருவியை பயன்படுத்தலாம். கத்தரிக்கோல், பிளேடு கொண்டு வெட்டுவது, சாணைக்கல்லில் நகங்களை உரசுவது போன்றவை கூடாது.


* காதுகளை சுத்தம் செய்ய சுத்தமான துணியை லேசாக தண்­ணீரில் நனைத்து காதை துடைத்தால் போதும். காதுக்குள் குடைந்து எடுக்க வேண்டாம்.


* காதுகளில் மயிர்க்கால்கள் வளர்வதை உணர்ந்தால் அதை நீங்களே அகற்ற முயற்சிக்க வேண்டாம். குழந்தைகள் நல மருத்துவரை அணுகவும்.


* காதுக்குள் சொட்டு மருந்துகள் எதையும் டாக்டர்களின் ஆலோசனையின்றி விடவேண்டாம்.


* கண்களை சுத்தப்படுத்தும்போது சுத்தமான துணியை வெது வெதுப்பான நீரில் முக்கி பிழிந்துவிட்டு கண்ணின் சுற்றுப்புறத்தை துடைத்தால் போதும். சோப்பு கொண்டு கண்களை கழுவக்கூடாது.



***
thanks koodal
***




"வாழ்க வளமுடன்"

குழந்தைக்கு மொட்டை போடுவது என்பது யாருக்காவது உண்மையான விளக்கம் தெரியுமா?


குழந்தை பிறந்து 30 அல்லது 45 நாட்களில் மொட்டை போடுவது வழக்கம். இது யாவரும் கண்ட உண்மை.

ஆனால் ஏன் அப்படி மொட்டை போடுவது என்பது யாருக்காவது உண்மையான விளக்கம் தெரியுமா?

அது சும்மா நேர்த்திக்கடனுக்காக என்று நினைத்துக்கொண்டிருப்பவர்கள் தங்களது எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.

அதையும் தாண்டி ஒரு அறிவியல் ரீதியான விளக்கம் இருக்கிறது இதற்கு. அதாவது நாம் அனைவரும் 10 மாதங்கள் தாயின் வயிற்றில் கருவறையில் இருக்கிறோம். அந்த பத்து மாதமும் வயிற்றுக்குள் எம்மை சுற்றி என்ன தேனும் பாலுமா இருக்க போகிறது?

இல்லை இரத்தம் சதை மலம் சிறுநீர் என அனைத்தும் இருக்கும்.அதற்குள்ளேதான் நாம் பத்து மாதங்கள் இருக்கிறோம். இவையெல்லாம் எமது உடம்பில் எவளவு ஊறியிருக்கும்.

வெறும் ஐந்து நிமிடம் கடல்நீரில் விரலை வைத்து துடைத்து விட்டு சுவைத்து பாருங்கள் எமது விரல் அப்போதும் உப்பாகத்தான் இருக்கும். 5நிமிடம் உப்பு நீரில் வைத்த விரலே இப்படியென்றால் பத்து மாதம் மலம் சிறுநீர் இரத்தம் சதை இவற்றுக்குள் கிடந்த எமது உடலில் அவை எவ்வளவு ஊறியிருக்கும்.

இதெல்லாம் எப்படி வெளியேறும்??

எமது உடலில் உள்ள கழிவுகள் எல்லாம் மயிர்கால்கள் வழியாக வெளியேறும். தலையில் உள்ள கழிவுகள் வெளியேற வழிகள் குறைவு. இதனால் சிரசில் அந்தக் கழிவுகள் தேங்கி நிற்கும் சந்தர்பங்கள் ஏற்படுகிறது. இதனால் பிற்காலத்தில் பாரிய நோய்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு.

எனவேதான் சிரசில் மொட்டை போடுவது நேர்த்திக்கடன் என்ற பெயரில் முன்னோர்களால் பரப்பப்பட்டது. இதைப்போல் மீண்டும் ஒரு தடவை குழந்தைகளுக்கு மொட்டை போடுவார்கள்.

அது ஏற்கனவே மொட்டை போடும் போது ஏதாவது கிருமிகள் தவறியிருப்பின் இரண்டாவது மொட்டையில் இல்லாமல் போய்விடும் என்பதற்காகவே.

தற்போது புரிகிறதா பிறந்த குழந்தைக்கு கோயிலில் மொட்டை போடுவது ஏன் என்பது. இது தொடர்பாக அறிவியல் ரீதியாக கூறினால் மக்கள் பின்பற்றமாட்டார்கள் என்பதற்காகத்தான் ஆன்மீகரீதியாக கூறி மக்களை பின்பற்ற வைத்துள்ளனர் முன்னோர்கள்.

ஆனால் அதற்கு ஆன்மிக ரீதியிலான வேறு ஒரு விளக்கத்தினையும் குறிப்பிட்டுள்ளனர். எது எப்படியே ஆன்மிகத்தில் கூறப்பட்ட பல்வேறு காரியங்களுக்கு அறிவியல் ரீதியிலான விளக்கங்கள் இருக்கின்றது என்பதே உண்மை.


***


இறைவனுக்காக - தலைமுடி காணிக்கை செலுத்துவது ஏன்?

உலகை காக்கும் பரம்பொருளுக்கு - நம்மை தெரியாதா? அவனன்றி ஒரு அணுவும் அசைவதில்லையே. அப்படிப் பட்ட இறைவனுக்கு - சாதாரண மனிதனாகிய நாம் என் செய்ய முடியும்?

மிக பிரபலமான ஜோதிடர் - திரு வித்யாதரன் அவர்கள் , விளக்கம் கூறிய ஒரு சில சுவாரஸ்யமான கருத்துக்கள் , நம் வாசகர்களிடம் இனி வரும் கட்டுரைகளில் பகிர்ந்து கொள்ள விருக்கிறோம்.

அவற்றில் ஒன்று , இறைவனுக்கு முடி காணிக்கை கொடுப்பது பற்றி.. சமயக் குரவர்கள் - நால்வரில் ஒருவரான சுந்தரர் காலத்து சம்பவம். ...திருத் தொண்ட புராணத்தில் கூறிய - கலிக்காமர் பற்றிய சம்பவம் : இதோ............

இறைவனுக்கு முடி காணிக்கை கொடுக்கும் வழக்கம் இன்று, நேற்றல்ல… புராண காலத்திலேயே இருந்துள்ளது. அதிலும், முதன் முதலாக தன் கூந்தலை இறைவனுக்கு அர்ப்பணித்தவள், அன்று திருமணம் செய்ய இருந்த மணப்பெண் என்றால், ஆச்சரியமாக உள்ளதல்லவா!

சோழநாட்டிலுள்ள பெருமங்கலம் எனும் ஊரில், ஏயர்கோன் கலிக்காமர் என்ற வீரர் வாழ்ந்து வந்தார். இவரை, சிவபக்தர் என்பதை விட, சிவபித்தர் என்றே சொல்லலாம். சோழநாட்டின் தளபதியாக பணி செய்தார். சிவபக்தியில் சிறந்த மானக்கஞ்சாறர் அப்பகுதியில் வசித்தார். அவரது மகள் தனக்கு மனைவியானால், தன் வாழ்க்கை இனிமையாக அமையுமென எண்ணினார்.

பெண் பார்க்கும் படலம் முடிந்து, முகூர்த்த நாளும் குறிக்கப்பட்டு விட்டது. மணநாள் அன்று, மணமகள் வீடுநோக்கி மணமகன் பவனி வந்து கொண்டிருந்தார். மணமகனை, எதிர்நோக்கிக் காத்திருந்தாள் மணப்பெண். அப்போது, ஒரு சிவனடியார் அங்கு வந்தார். மானக்கஞ்சாறரின் மகளுக்கு திருமணம் நடக்க இருப்பதைத் தெரிந்து கொண்டார். அந்தப்பெண் அடியவரின் கால்களில் விழுந்து ஆசி பெற்றாள். அவளது நீண்ட கூந்தலை நோட்டமிட்ட அந்தப் பெரியவர், “இது எனக்கு வேண்டும்… பஞ்சவடி (முடியால் செய்யப்படும் அகலமான பூணூல்) செய்ய பயன்படும்!’ என்றார்.

சிவனடியார்கள் கேட்பதை மறுக்காமல் கொடுத்துவிடும் குணமுள்ள மானக்கஞ்சாறர், மகளின் கூந்தலை மணநாள் என்றும் பாராமல், அரிந்து கொடுத்து விட்டார். அந்நேரம் வந்து சேர்ந்தார் மணமகன். கூந்தலற்று குனிந்து நிற்கும் பெண்ணைக் கண்டார். அவர் கொஞ்சமும் தயங்கவில்லை. சிவனடியாருக்காக தன் கூந்தலையே தியாகம் செய்தவள் இவள். மேலும், பெற்றவருக்கும் இவள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இப்படிப்பட்ட பக்தியுடையவள் தன் மனைவியாவதில் மிகுந்த மகிழ்ச்சியே என்று எண்ணினார்; திருமணம் சிறப்பாக முடிந்தது.



ஒருசமயம், சிவனின் நண்பரான சுந்தரர், சங்கிலிநாச்சியார் எனும் பெண்ணை இரண்டாம் திருமணம் செய்தார். முதல் மனைவி பரவை நாச்சியாருக்கு இது தெரிந்தால் சிக்கல் வருமே என அவளைச் சமாதானம் செய்வதற்காக, தன் நண்பரான சிவனை பரவையாரின் வீட்டுக்கு தூது போகச் சொன்னார். இதைக் கேள்விப்பட்ட கலிக்காமர், தன் சுயலாபத்துக்காக இறைவனை தூது போகச் சொன்ன சுந்தரர் மீது வெறுப்பில் இருந்தார்.

இதையறிந்த சிவபெருமான், கலிக்காமரையும், சுந்தரரையும் நண்பர்களாக்கும் பொருட்டு ஒரு நாடகமாடினார்.

கலிக்காமருக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. அதை சுந்தரரால் மட்டுமே தீர்க்க முடியுமென கலிக்காமர் மனைவியின் கனவில் வந்து சொன்னார் சிவபெருமான். இதையறிந்த சுந்தரரும் கலிக்காமரை காண வந்தார். தன் எதிரியால், தான் பிழைக்கக்கூடாது எனக்கருதிய கலிக்காமர், தற்கொலை செய்து கொண்டார்.

இதையறிந்த சுந்தரர் மிகவும் வருந்தி, தானும் தற்கொலைக்கு முயன்றார். சிவபெருமான் அவரைத் தடுத்து, கலிக்காமருக்கும் உயிர் கொடுத்தார். அதன்பின் இருவரும் நண்பர்களாயினர். இப்படி பக்திக்காக தன் உயிரையே கொடுக்க முன்வந்தவர் கலிக்காமர்; அவரது மனைவியோ பெண்ணுக்கே அழகு தரும் கூந்தலையே இறைவனுக்கு காணிக்கையாக அளித்தவள். இதன் அடிப்படையிலேயே, முடிகாணிக்கை கொடுக்கும் வழக்கம் பிரபலமானது.

*

இவை உண்மையா என்று எனக்கு தெரிய வில்லை படித்ததை இங்கே பதித்து இருக்கேன்.... அவ்வளவே !!!!!


*

இறைவனுக்காக - தலைமுடி காணிக்கை செலுத்துவது ஏன்?
http://www.livingextra.com/2011/03/blog-post_21.html


*


குழந்தை பிறந்தபின்னர் மொட்டை போடுவது ஏன்?
http://www.yarl.com/forum3/index.php?showtopic=86444

**
நண்பர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் இந்த தளத்திற்கு சென்று உங்கள் சந்தேகத்தை தீர்த்து கொள்ளவும்.....

*

இது ஏன் தாழ்மையான கருத்து..... அடுத்த தளத்தில் இருந்து படித்ததை போட்டேன் :(


***
thanks யாழ் & livingextra
***




"வாழ்க வளமுடன்"

ஆண்கள் பெண்கள் எப்படி நடக்க வேண்டும்!



தலைப்பை பார்த்ததும் “நாங்க நடந்துக்கிறத பற்றி நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்” என்று டென்ஷன் ஆகிடாதீங்க.. இது அந்த நடக்கிறதில்லை “Walking” நடை

ஹலோ! நடக்கிறதுல என்னங்க பெருசா சொல்லப்போறீங்க! நாங்கெல்லாம் சிங்கம் மாதிரின்னு வசனம் பேசாம தொடர்ந்து படிங்க.

நம்ம ஊர்ல பெரும்பாலனவர்கள் ஒழுங்காக நடப்பதில்லை அது உங்களுக்கு தெரியுமா! நானெல்லாம் அதை பற்றியெல்லாம் யோசித்ததே இல்லைன்னு சொல்றீங்களா!


சரியா போச்சு போங்க… அழகா துணி உடுத்துவதும் நம்ம உடலை உடற்பயிற்சி மூலம் சிறப்பா வைத்துக்கொள்வதும் ஒப்பனை மூலம் நம் முகத்திற்கு அழகு சேர்ப்பதும் மட்டுமே ஒருவரின் அழகை கூட்டி விடாது! அதோட நமது நடையும் நம் அழகை மதிப்பை கூட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அழகு என்றாலே அங்கே சந்தேகத்திற்கு இடமில்லாமல் பெண்கள் வந்து விடுவார்கள்.. ஹி ஹி இந்த விசயத்துல ஆண்களுக்கு இரண்டாம் இடம் தான்.. மனசை தேத்திப்போம். அதுவுமில்லாமல் நடையில் ஆண்களை விட பெண்களுக்கே அதிக முக்கியத்துவம் இருக்கிறது. கவிஞர்கள் கூட பெண்களின் நடையை பற்றித்தான் அதிக பாடல்கள் எழுதி இருக்கிறார்கள். எனவே முதலில் பெண்களுக்கு..

பெண்கள் தங்கள் நடையில் மிக மிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். அழகாக இருந்தால் மட்டும் போதாது நடையில் அதிக கவனம் கொள்ள வேண்டும். ஒரு சில… சரி பல பெண்கள் ரொம்ப அழகாக இருப்பாங்க ஆனால் நடையை பார்த்தால் பப்பரப்பேன்னு இருக்கும். காலை பரப்பிட்டு நடப்பாங்க பார்க்கவே கேவலமா இருக்கும். என்னது! இப்ப தான் யோசித்து பார்க்கறீங்களா! அது சரி!

பெண்கள் தங்கள் கால்களை எப்போதும் அகலமாக வைத்து நடக்கவே கூடாது ரொம்ப ரொம்ப தவறான செயல். அது உங்கள் தோற்றத்தையே முற்றிலும் மாற்றி விடும் நீங்கள் எவ்வளவு தான் அழகாக இருந்தாலும். கால்களை எப்போதும் நேராகத்தான் வைக்க வேண்டும் 11 போல, மறந்து கூட “V” போல வைக்க கூடாது (பெரும்பாலனவர்கள் இப்படித்தான் வைத்து நிற்பார்கள் மற்றும் நடப்பார்கள்).

அழகான உடலமைப்பு உள்ளவர்கள் “F” டிவியில் வருவது போல காலை மாற்றி வைத்து நடக்கலாம் இதற்கு புடவை சுடிதார் மிடி என்று எந்த உடையும் பொருத்தமாக இருக்கும் ஆனால் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது இது கண்டிப்பாக மெல்லிய தேகம் கொண்டவர்களுக்கும் அளவான உடலமைப்பை கொண்டவர்களுக்கும் மட்டுமே பொருந்தும் (அதுவும் நம்ம ஊருக்கு கொஞ்சம் பீட்டராக தெரியும்) மற்றவர்கள் தயவு செய்து முயற்சிக்க வேண்டாம். அப்புறம் பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல

ஆண்களுக்கும் பெண்களுக்கு கூறியதில் பெரும்பகுதி பொருந்தும் அதாவது காலை “V’ போல வைக்க கூடாது. பெரும்பாலானவர்கள் இதைப்போலவே நிற்கிறார்கள் நடக்கிறார்கள். ஒரு சில ஆண்களை கவனித்தால் ஸ்டைல் ஆக நடக்கிறேன் பேர்வழி என்று கூன் விழுந்தது போல நடப்பார்கள். இது அவர்களுக்கு வேண்டும் என்றால் பந்தாவாக இருக்கக்கூடிய விசயமாக இருக்கலாம் ஆனால் மற்றவர்கள் பார்வைக்கு இது கேவலமாகவே இருக்கும்.



ஆண்கள் எப்போதும் நிமிர்ந்த நடையாக இருக்க வேண்டும் அதற்காக ரொம்ப முறுக்கிட்டு நெஞ்சை நிமித்திட்டு யாரையாவது அடிக்க போகிற மாதிரி போகாதீங்க… ரொம்ப செயற்கையாக இருக்கும். கால்களை எப்போதும் நேராகவே வைத்து நிற்க நடக்க வேண்டும் “11″ போல. நம்ம இந்திய ஆண்கள் (பெண்கள் கூட) நிற்கும் போது பலர் சொங்கி மாதிரி நிற்பாங்க.. அதோட இடுப்புக்கு கைய கொடுத்து ஒரு விளங்காத போஸ் ல நிற்பாங்க…பார்த்தாலே எரிச்சலை கிளப்பும். இது வரை நான் பல நாட்டு மக்களிடையே கவனித்ததில் நம்ம இந்திய ஆண்கள் மற்றும் பெண்களே இப்படி இடுப்புக்கு கையை கொடுத்து நிற்கிறார்கள். நிற்கிற போஸை வைத்தே சொல்லிவிடலாம் கண்டிப்பாக இது நம்ம மக்கள் என்று

எனவே நடையில் என்ன இருக்கிறது? என்று சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். நம்முடைய தன்னம்பிக்கை முதல் கொண்டு நம் நடையை வைத்து கணிக்கலாம். எனவே உங்கள் நடையை இதைப்போல தவறுகளை நீங்கள் சரி செய்து மாற்றியமைத்து புதிய பொலிவை மற்றவர்களுக்கு கொடுங்கள். நான் கூறியவற்றை நீங்கள் நடக்கும் போதும் நிற்கும் போதும் மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள் [இடுப்புல கைய வைக்காமதாங்க ]



***
thanks கிரி
***



"வாழ்க வளமுடன்"

ஆண்களுக்கான உடை மற்றும் அழகு டிப்ஸ்!



உடை என்றாலே அதிகம் பெண்கள் தான் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் அதில் எந்தவித ஆச்சர்யமுமில்லை. இதில் நான் கூறப்போவது ஆண்களுக்கு என்றாலும் பெண்கள் தங்களுடைய தம்பி, அண்ணன், ஆண் நண்பர் மற்றும் கணவருக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் தவறில்லை ஆண்களுக்கு இந்த வீணாப்போன பேன்ட்டும் சட்டையும் விட்டா என்னத்தைத்தான் போடுவது! என்று நினைத்த காலம் எல்லாம் மலையேறி விட்டது.


உடை விசயத்தில் பெண்கள் அளவிற்கு ஆண்களுக்கு அதிக வாய்ப்புகள் இல்லை என்றாலும் தற்போது பல்வேறு வகையான மாடல்களை வெளியிட்டு கலக்கி வருகிறார்கள். நான் இதில் ரொம்ப மாடர்ன் அளவிற்கு எல்லாம் செல்லாமல் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் உடைகளையே இன்னும் எப்படி சிறப்பாக பயன்படுத்தலாம் என்று கூறுகிறேன் காரணம் இன்னும் பலர் இதற்கே முக்கிட்டு இருக்காங்க அப்புறம் எங்க மாடர்ன் எல்லாம்.

உடை விசயத்தில் எப்போதுமே எனக்கு மிக ஆர்வம் மற்றும் ரசனை உண்டு. என்னுடைய அம்மா, அக்கா, மனைவி என் பையன் என்று அனைவருக்கும் அவர்களுக்கேற்ப உடை சரியாக தேர்வு செய்வேன். நான் தேர்வு செய்த உடைகளை என் அம்மா, அக்கா, மனைவி அணிந்து செல்லும் போது அங்கே உள்ள உறவினர்கள் புடவை சூப்பரா இருக்கே! யார் தேர்வு செய்தது? என்று அவர்களிடம் என் முன்னாடி கேட்கும் போது ரொம்ப பெருமையாக உணர்வேன். கிரி கலக்கிட்டேடா! என்று சில நேரங்களில் என் அக்கா என்னிடம்… தம்பி! இன்னைக்கு எல்லோரும் இந்தப் புடவை பற்றி கேட்டாங்க என்று என்னிடம் சந்தோசமாக கூறும் போது எப்பூடி! என்று காலரை தூக்கி விட்டுக்கொள்வேன். என் நண்பர்களுக்குகூட உடை தேர்வு விசயத்தில் நான் தான் அவர்களுடைய சாய்ஸ். சரி இப்ப எதுக்கு இந்த பில்டப்புன்னு கேட்கறீங்களா! நான் சொல்ற டிப்சை நீங்க பயப்படாம செயல்படுத்தலாம் என்பதற்குத்தான்

*

Casual Dress



சில நேரங்களில் நம்ம பசங்க போட்டுட்டு வர உடையை பார்த்தால் செம்ம டென்ஷன் ஆகிடுவேன்.. என்னய்யா உங்க ரசனை? இப்படி மஞ்ச மாக்கான் மாதிரி ஒரு உடையைப் போட்டுட்டு திரியறீங்க என்று கோபமாக வரும். நம்ம இனத்தையே டேமேஜ் பண்ணுறீங்களே என்று ஆத்திரமாக வரும் பின்ன என்னங்க பசங்கனா ஒரு ஸ்மார்ட்டா இருக்க வேண்டாமா!

ஒரு ரிசப்சன் போறோம் அல்லது சிறு விழாவிற்குப் போகிறோம் என்றால் உடனே கஞ்சி போட்டு அயர்ன் பண்ணுன ஒரு மொட மொட னு ஒரு சட்டையை எடுத்து மாட்டிட்டு முழுக்கைச் சட்டையாக இருந்தால் கையைக்கூட மடித்து விடாமல் அலுவலகத்துக்கு போகிற மாதிரி ஒரு கெட்டப்புல வந்து ஹி ஹி னு நின்னுட்டு இருப்பானுக. ஏன்டா!

ரிசப்னுக்கு தானே வந்து இருக்கீங்க என்னமோ ஐ நா சபைல இந்தியா சார்பா பேசப்போகிறவன் மாதிரி (விஷயம் ஒன்றுமில்லை என்றாலும்) முறுக்கிக்கிட்டு வந்து நிற்கறீங்க! என்று கடுப்பாக இருக்கும்.


இதே குடும்பஸ்தன் என்றாலும் கல்யாணத்தில் இதே மாதிரி வந்து நிற்பார்கள்.. (கிராமம் என்றால் வேறு வழி இல்லை) விட்டா டையும் சேர்த்துக் கட்டிக்கிட்டு வருவாங்க போல இருக்கு. என்னய்யா மேட்டருன்னு கேட்டா டீசன்ட்டாம்! அது சரி.

*

அப்புறம் எப்படித் தாங்க இது மாதிரி நேரத்துல உடை அணிவது?

முதல்ல எல்லோரும் ஒண்ணு.. சரி இரண்டு மூன்று தெரிந்துக்குங்க அலுவலக நேரம் தவிர மற்ற எந்த நேரத்திலையும் (அதாவது ப்ரொஃபசனலா நடந்துக்க வேண்டிய இடம் தவிர்த்து) இந்த மாதிரி உடைகளை அணியவே கூடாது. professional dresses only for professional places not for casual places.

*

ஜீன்ஸ்



இந்த உடை இருக்கு பாருங்க.. இதை அடித்துக்க உலகத்துலையே எதுவும் கிடையாது. அது பெண்களுக்காக இருந்தாலும் சரி ஆண்களுக்காக இருந்தாலும் சரி இதற்கு என்று உள்ள மதிப்பே தனி. அடிக்கடி துவைக்க வேண்டிய அவசியமில்லை அணிந்து கொள்ள எளிது பெரும்பாலான சட்டைகளுக்கு பொருத்தமாக இருக்கும். அதை விட உங்கள் வயதைக் குறைத்துக்காட்டும் அதைவிட முக்கியமாக உங்கள் அருகில் உள்ளவர்கள் கொஞ்சம் ரிலேக்சாக இருக்க முடியும். ப்ரொஃபசனலா உடை அணிந்து இருந்தீர்கள் என்றால் டேய்!


மச்சி இவரு கணக்கு மாஸ்டர் மாதிரி இருக்காருடா! நம்மை வாய்ப்பாடு சொல்லச் சொல்லி கேட்பாரு போல இருக்கு கொஞ்சம் தள்ளியே உட்கார்ந்துக்க என்று பயப்படும் படி ஆகி விடும் நாம் என்னதான் ஜாலி டைப்பாக இருந்தாலும் நம்முடைய தோற்றம் தான் முதலில் அருகில் இருப்பவர்களுக்கு எந்த வித எண்ணத்தையும் தோற்றுவிக்கும்.

*

டி ஷர்ட் & காட்டன் ஷர்ட்


ஜீன்ஸ் க்கு 100% பொருத்தமானது என்றால் யோசிக்காமல் டி ஷர்ட் என்று கூறலாம் அல்லது காட்டன் ஷர்ட்டை கூறலாம். நான் கூறிய அலுவலகம் தவிர மற்ற இடங்களுக்கு செல்லும் போது எடுத்துக்காட்டாக ரிசப்சன், திருமணம், நண்பர்கள் பார்ட்டி, சுற்றுலா, பிறந்தநாள் விழா, திரையரங்கு, கடற்கரை இதைப்போல இடங்களுக்கு சரியான தேர்வு ஜீன்ஸ் + டி ஷர்ட் அல்லது காட்டன் ஷர்ட் மட்டுமே. டி ஷர்ட்டில் காலர் வைத்தது காலர் வைக்காதது அவரவர் தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்தது. எடுத்துக்காட்டாக திருமணங்களுக்கு செல்லும் போது காலர் வைத்த டி ஷர்ட் அணிந்து செல்வது நாகரீகமா இருக்கும். காலர் வைக்காத டி ஷர்ட்டையும் அணிந்து செல்லலாம் இருப்பினும் அது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.


டி ஷர்ட் அணிவது என்றால் நம்மில் பெரும்பாலனவர்களுக்கு உள்ள மிகப்பெரிய பிரச்சனை தொப்பை. அவங்களுக்கு முன்னாடி அவங்க தொப்பை போயிட்டு இருக்கும் இவங்க காட்டன் டி ஷர்ட்டை உபயோகப்படுத்தி இதில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். தயவு செய்து தொப்பை இருந்தால் உடற்பயிற்சி செய்தாவது குறையுங்க இப்படி நம்ம இனத்தின் மானத்தை வாங்காதீங்க நானும் பல நாட்டு மக்களை பார்த்துட்டேன் நம்ம பசங்க தான் தொப்பையோட குறிப்பா தென் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் இப்படி சுற்றிக்கொண்டு டென்ஷன் பண்ணுறாங்க. சரி!


சட்டையை இன் (In) செய்வதாவது ஒழுங்கா செய்கிறார்களா என்றால் அதுவுமில்லை. ஒரு ஒழுங்கே இருக்காது சட்டையை பேன்டுக்குள்ள போட்டு திணித்து வைத்ததைப்போல பெப்பரப்பேன்னு நின்னுட்டு இருப்பாங்க சீராக இல்லாமல் அங்கங்கே ஏற்ற இறக்கமாக இருக்கும்.

*

அலுவலக உடை

நீங்க எத்தனை பேன்ட் வைத்து இருந்தாலும் நீங்கள் தவறாமல் வைத்து இருக்க வேண்டிய பேன்ட் கருப்பு வண்ணமாகும். எந்த சட்டைக்கும் பொருந்தக்கூடிய ஒரே வண்ணம் இது தான் (வெள்ளை சட்டை தவிர்த்து). அலுவலகத்திற்கு செல்பவர்கள் ப்ரைட்டான சட்டைகளை அதிகம் பயன்படுத்துங்கள் டார்க்கான சட்டை நம்மை டல்லாக காட்டும். ஒவ்வொருவரின் உடல் வாகிற்கு ஏற்றவாறு உடையை கூறலாம் என்று நினைத்தேன் ஆனால் இதுவே பெரிதாகி விட்டது அதனால் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அது பற்றி விரிவாகக் கூறுகிறேன்.

*

Flat Front




நீங்கள் Flat Front பேன்ட் அணிபவராக இருந்தால் கண்டிப்பாக துணியை அயர்ன் செய்யும் போது ஜீன்ஸ் பேன்ட்டை அயர்ன் செய்வது போல (இன்னும் பலர் ஜீன்ஸ் பேன்ட்டையே எப்படி அயர்ன் செய்வது என்று தெரியாமல் உள்ளனர்) பக்கவாட்டில் அயர்ன் செய்ய வேண்டும் வழக்கமாக மற்ற பேன்ட்களை அயர்ன் செய்வது போல செய்யக்கூடாது.


பலர் இந்தத் தவறை செய்து கொண்டுள்ளார்கள். Flat Front என்பதன் அர்த்தமே முன் பகுதி எந்த பிளீட்டும் இல்லாமல் இருப்பது தான் அதில் நீங்கள் அயர்ன் செய்த கோட்டை வைத்தீர்கள் என்றால் அந்த பேன்ட் டிசைன் அர்த்தமே மாறி விடும். தற்போது ப்ளீட் வைத்து தைப்பது எல்லாம் Out of fashion ஆகி விட்டது எனவே உங்களுக்கு நான் Flat Front மாடலை பரிந்துரைக்கிறேன். இது வந்து ரொம்ப வருடங்களாகி விட்டாலும் இன்றும் அதே கவர்ச்சியுடன் உள்ளது.


தொப்பை உள்ளவர்கள் Flat Front மாடல் பேன்ட்டை அணிய முடியாது நன்றாக இருக்காது அவர்களுக்கு ஒரே வழி ப்ளீட் தான் அதுனால மனதை தேத்திக்குங்க

உடைகளை தேர்வு செய்வதில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். தற்போதெல்லாம் நிறைய வகை மாடல்கள் வந்துள்ளன அவைப் பற்றி பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் கூறுகிறேன். ஏனோ தானோவென்று உடையணியாமல் சரியாக தேர்வு செய்யுங்கள். நம்முடைய உடை கூட நமக்கு அதிக தன்னம்பிக்கையைக் கொடுக்கக்கூடிய காரணிகளுள் ஒன்றாகும் எனவே இதை அலட்சியப்படுத்த வேண்டாம்.


*


மேலும் சில குறிப்புகள் :


என்னால ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒரு விஷயம் குழந்தைகளுக்கும் பெரியவங்க போடுற மாதிரி ஷர்ட் மற்றும் பெரிய பசங்க போடுற மாதிரி ட்ராயர் பெற்றோர் போடுவது தான். செம்ம கடுப்பாகிடுவேன். குழந்தைகளுக்கு அழகு அழகா எத்தனை உடைகள் உள்ளது அதெல்லாம் எப்படித்தான் அவங்க கண்ணுல பட மாட்டீங்குதுன்னே தெரியல..


தேடிப்போய் ஒரு மொக்கையா ஒரு உடையை வாங்கிட்டு வந்து குழந்தைக்கு மாட்டி விட்டு அது சோளக்கொல்லை பொம்மை மாதிரி சுத்திட்டு திரிவதை பார்த்துட்டு இருப்பாங்க. பெண் குழந்தைகளுக்கு இந்தப் பிரச்சனை இல்லை ஆண் குழந்தைகளுக்குத்தான் இந்தப் பிரச்சனைகள்.

நான்கு அல்லது ஐந்து வயது வரை குழந்தையை வைத்து இருப்பவர்கள் தயவு செய்து பெரியவர்கள் போடும் பட்டன் வைத்த சட்டையையும் பெரிய பசங்க போடுற டிராயரையும் பேன்ட்டையும் போடுவதை நிறுத்துங்க. இதைப்போல குழந்தைகளுக்கு காலர் வைத்த, வைக்காத டி ஷர்ட் தான் அழகாக இருக்கும் குறிப்பாக மிக்கி மவுஸ், கார்ட்டூன் படங்கள் மற்றும் சுவாரசியமான வாசகங்கள் அடங்கிய டி ஷர்ட்டை அணிவியுங்கள்.


டிராயர் மொட மொட என்று இல்லாமல் ஜட்டி டைப்பில் மென்மையாக உள்ளதை தேர்ந்தெடுக்க வேண்டும் காரணம் குழந்தைகளுக்கு இதைப்போல அணிந்து இருப்பது உடலை உறுத்தாமல் சவுகரியமாக இருக்கும். சிறு வயதில் (இரண்டரை வயதிற்கு மேல்) இருந்தே குழந்தைகளுக்கு உள் ஜட்டி போட்டு பழக்கப்படுத்துவது நல்லது.




***
thanks kiri
***





"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "