...

"வாழ்க வளமுடன்"

19 நவம்பர், 2010

பாதுகாப்பான கடவுச்சொல் எவ்வாறு அமைக்கலாம்?

இப்போதெல்லாம் பார்த்தால் அதிகமானோர் சட்டைப் பையில் பணம் இருக்குதோ இல்லையோ பல பல கிரடிட் அட்டைகள் வைத்துருப்பார்கள் அல்லது கடைசி ஒரு வங்கியின் ATM அட்டையாவது இருக்கும். ஆனால் இவற்றையெல்லாம் பாதுகாப்பாக பயன்படுத்துவதே இன்று பெரும் சவாலாக உள்ளது.



இணைய மூலம் பொருட்கள் வாங்குவது (online shopping) மற்றும் இணைய வங்கிச்சேவை (net banking) என புதிய தொழிநுட்ப்ப வசதிகளோடு நாம் வாழ வேண்டிய கட்டாயச் சூழல் இது.

*

ஆனால் இவற்றையெல்லாம் கையாழ்வதட்க்கு மின்னஞ்சல் ஒன்று அவசியம் மின்னஞ்சல் என்று வந்துவிட்டால் அதன் கடவுச் சொல் பாதுகாப்பானதா? என்பது மிக முக்கியம் இதற்க்கு முன்னர் நமது கணனி பாதுகாப்பானதா? என்பது மிக மிக முக்கியம்,


இல்லையென்றால் எல்லாம் அதோ கெதிதான் உழைப்பவன் யாரோ சும்மா உட்கார்ந்து சாப்பிடுபவன் யாரோ என்று நம் கதை வராமல் பார்ப்பது நம் கையில்த்தான் உள்ளது.


***

பாதுகாப்பான கடவுச்சொல் எப்படி அமைக்கலாம் என்று பார்ப்போம்!

1. நமது கடவுச்சொல் திருட்டு போவது நமது கையில் தான் இருக்கிறது எனது கடவுச் சொல்லைக் கண்டுபிடியுங்கள்’ பார்க்கலாம் என்று உங்களிடம் சொன்னால் முதலில் என்ன செய்வீர்கள்? எனது பெயர், என் அப்பா பெயர், என் ஊர், என் வயது அல்லது 123456 , abcdef இந்த மாதிரிதானே முயற்சி செய்வீர்கள்? இதுபோன்ற பெயர்களை கொண்டு கடவுச்சொல் உருவாக்குவதை நாம் முற்று முழுதாக தவிர்த்துக்கொள்ளவேண்டும் .

*

2. இதுமாதிரி அர்த்தம் தரும் வேறு எந்த பெயரையும் பயன்படுத்துவது பாதுகாப்பானதல்ல இதற்கென சில திருட்டு மென்பொருட்கள் உள்ளன அதில் இதுபோன்ற கடவுச்சொல் சேமித்து வைக்கும் கோப்பைக் கொடுத்தால் போதும் உடனே உங்கள் கடவுச்சொல்லை கண்டுபிடித்துவிடும்.

*

3. அடுத்து நீங்கள் கடவுச்சொல்லை தட்டச்சு செய்யும் போது யாரும் பின்னால் இருந்து பார்க்கின்றனரா? என உறுதி செய்துகொள்ளுங்கள் பக்கத்தில் யாரும் இருந்தால் கடவுச்சொல் இடுவதை நிறுத்துங்கள் பல இடங்களில் 6 இலக்கமே போதும் எனச் சொல்வார்கள் ஆனால் நீங்கள் நீளமான கடவுச்சொல்லை அமைத்துக் கொள்ளுங்கள் கடவுச்சொல் இடும் கட்டம் தாண்டியும் நீளமாக கடவுச்சொல்லை அமைத்துக் கொள்ளலாம்.

*

4. ஸ்பைவேர், மால்வேர் போன்ற வைரஸ்கள் நமது கணினியில் இருந்து தகவல்களை சிலருக்கு அனுப்பிக் கொண்டிருக்கலாம். இச் சந்தர்ப்பத்தில் நமது கடவுச்சொல்லும் போக வாய்ப்புண்டு. எனவே நீங்கள் கணினித்திரையின் கீழ்ப் பக்கம் வலது சொடுக்கி Task Manager திறந்து பாருங்கள் உங்களுக்குத் தெரியாத ஏதேனும் பின்புலத்தில் ஓடிக் கொண்டிருக்கிறதா? என்று இம்மாதிரி மென்பொருட்கள் நீங்கள் தட்டச்சு செய்பவனவற்றை உடனுக்குடன் தனது முதலாளிக்கு அனுப்பும் வல்லமை வாய்ந்தவை.

*

5. மற்றவர்களின் கணினியில் புகுந்து திருடுவது சேதம் விளைவிப்பது என்பது ஒரு சிலரால் மட்டும்தான் முடியும் எதோ நானும் செய்தேன் என்று சும்மாவேனும் சிலர் பொய் சொல்லக் கூடும் அதற்கு Hack மற்றும் Crack போன்ற துறைகளில் நல்ல தேர்ச்சி வேண்டும் எனவே மற்றவர் உங்கள் கணினியில் நுழையாமல் தடுக்க நல்ல வைரஸ் பாதுகாப்பு மென்பொருளை நிறுவிக்கொள்ள வேண்டும்.

*

6. முடிந்தவரை ஜிமெயில், யாஹூ மற்றும் கொட்மெயில் போன்ற தளங்களில் தானாக உள்ளே நுழைவதை (auto login) தவிருங்கள். அதேபோல ஒவ்வொரு முறையும் மின்னஞ்சல் அல்லது கடவுச்சொல் இட்ட தளங்களில் இருந்து வெளியேறும் போது லாக்கவுட் செய்து வெளியேறுங்கள்.

*

7. அடுத்து முக்கியமாக நாம் கடவுச்சொல் தேர்வு செய்யும்போது எண்கள் மற்றும் எழுத்துகளுக்கு இடையிடையே சிம்போல் (symbol) :- ! . , * - + `~ @ # $ % ^ & ( ) _ = : ; / போன்றவைகளையும் உள்ளடக்கி கடினமான கடவுச் சொல்லாக தேர்வு செய்வது மிக மிக பாதுகாப்பானது.




***
thanks z9world
***



"வாழ்க வளமுடன்"

கருவை , உயிர் அணுக்களின் எண்ணிக்கைக் குறைவும் பா‌தி‌க்கு‌ம் ப‌ணி‌யிட‌ங்க‌ள் !

சில தொ‌ழி‌ற்சாலைக‌ள் அ‌ல்லது தொ‌ழி‌ற் கூட‌ங்க‌ள், கருவை பா‌தி‌க்க‌க் கூடிய அபாய‌‌த்தை ஏ‌ற்படு‌த்தலா‌ம். அதாவது பணியிடங்களிலுள்ள சில சூழல்களும் வளரும் கருவைப் பாதிக்கின்றன.




குறிப்பாக அணு உலைக் கூடங்கள், ரசாயனத் தொழிற்சாலைகள், இரைச்சலும் அதிர்வும் கூடிய கனரக இயந்திரங்கள், அறுவைச் சிகிச்சையறை சூழல்கள், கதிர்வீச்சு சார்ந்த தொழில்கள் மற்றும் கதிரியக்கச் சிகிச்சைத் துறைகள் ஆகிய இடங்களில் பணிபுரியும் பெண்கள் கருத்தரிக்கும் சூழலில் அவை கருவைப் பாதிக்கின்றன;

*

இதுபோ‌ன்ற ப‌ணி‌யிட‌ங்க‌ளி‌ல் வேலை செ‌ய்யு‌ம் ஆண்களுக்கு உயிர் அணுக்களின் எண்ணிக்கைக் குறைவு, குறைபாடான அணுக்கள், ஆண்மையிழப்பு போன்ற பிரச்சனைகளு‌ம் ஏ‌ற்படு‌கி‌ன்றன.

*

குறிப்பாக, கதிர்வீச்சுக்கள், பாதசரம், பென்சீன், காரீயம் போன்ற சில ரசாயனங்கள் உள்ள இடங்களில் வேலை செய்வோருக்கும், மிகுந்த சிரமும், களைப்பும் ஏற்படுத்தும் வேலைகளைச் செய்வோருக்கும் இந்தப் பாதிப்புக்கள் அதிகம்.

*

எனவே, இதுபோ‌ன்ற ப‌ணி‌யிட‌ங்க‌ளி‌ல் வேலை செ‌ய்யு‌ம் பெ‌‌ண்க‌ள், கரு‌த்த‌ரி‌த்தது‌ம் உடனடியாக த‌ங்களது ப‌ணி‌ச் சூழலை மா‌ற்‌றி‌க் கொ‌ள்வது அவ‌சியமா‌கிறது.

*

கரு பாதிக்கப்படக்கூடும் என சந்தேகித்ததால் உரிய முறையில் பரிசோதனைகள் மேற்கொள்வதோடு, தங்கள் மேலதிகாரிகளிடம் இதைப்பற்றி எடுத்துக்கூறி, பாதுகாப்பான வேறு பிரிவுகளுக்கு மாற்றல் வாங்கிக்கொள்ளலாம்.

*

ப‌ணி‌யை மா‌ற்‌றி‌க் கொ‌ள்ள இயலாது எ‌ன்றா‌ல், ‌பிரசவ கால‌ம் வரை விடுப்பு எடுத்துக் கொள்ளலா‌ம். எ‌ந்த வகை‌யிலு‌ம், ஆப‌த்தான ப‌ணி‌ச் சூழ‌லி‌ல் கரு‌த்த‌ரி‌த்த‌ ‌பிறகு வேலை செ‌ய்வதை தொடர வே‌ண்டா‌ம். அது உ‌ங்களு‌க்கு‌ம், உ‌ங்களது கரு‌வி‌ற்கு‌ம் ‌பிர‌ச்‌சினையை ஏ‌ற்படு‌த்து‌ம்.

*

மேலு‌ம், எ‌க்‌ஸ்-ரே எடு‌க்கு‌ம் வேலையையு‌ம், எ‌க்‌ஸ்ரே அறை‌க்கு‌ள் அடி‌க்கடி செ‌ன்று வருவதையு‌ம் கருவு‌ற்ற‌ப் பெ‌ண்க‌ள் த‌வி‌ர்‌க்க வே‌ண்டு‌ம். கருவு‌ற்ற சமய‌த்‌தி‌ல் ஏதேனு‌ம் உட‌ல் உபாதை‌க்காக எ‌க்‌ஸ்ரே எடு‌க்க வே‌ண்டி வ‌ந்தா‌ல், வ‌யி‌ற்று‌ப் பகு‌தியை ‌மிகவு‌ம் பாதுகா‌ப்பான முறை‌யி‌ல் மறை‌த்து‌வி‌ட்டு ‌பிறகுதா‌ன் எ‌க்‌ஸ்ரே எடு‌க்க வே‌ண்டு‌ம்.

*

கருவு‌ற்ற பெ‌ண்க‌ள் பலவ‌ற்றையு‌ம் கரு‌த்‌தி‌ல் கொ‌ண்டு ப‌ணியா‌ற்ற வே‌ண்டு‌ம்.



***
thanks z9world
***


"வாழ்க வளமுடன்"

ஓபன் ஹார்ட் சர்ஜரி – பைபாஸ் சர்ஜரி: வித்தியாசம்!

ஐந்து நிமிடங்களுக்கு மேல் ரத்த ஓட்டம். இல்லையென்றால், உடனே இதயம் நின்று போகும். இதயம் வேலை செய்யாது நின்று போனால், மூளை உட்பட அத்தனை உறுப்புகளும் செயலிழந்து, உயிர் நம் உடம்பிலிருந்து பிரிந்து மனிதன் இறந்து போக நேரிடும்.


1928வது வருடம் வரை இதய அறுவைச் சிகிச்சை என்பது ஒரு முடியாத காரியமாகவே இருந்தது. 1928ம் வருடம் கட்லர் என்ற சர்ஜன் எந்தவிதக் கருவியுமில்லாமல் மார்பின் இடதுபுறத்தைத் திறந்து கைவிரலால் இதயம் துடிக்கும்போதே இதய ஈரிதழ் வால்வு சுருக்கத்தை மூடிய முறை (இஃOகுஉஈ ஏஉஅகீகூ) இதய அறுவைச் சிகிச்சை மூலம் விரிவடையச் செய்தார். அதன் பிறகு 1956 வரை சாதாரண இதய அறுவைச் சிகிச்சைகளை மேற்கூறிய மூடிய முறை அறுவைச் சிகிச்சைகளே உலகம் முழுவதும் நடந்து கொண்டிருந்தன.

*

1956ம் வருடம் அமெரிக்க பேராசிரியர் கிப்பன் என்ற இதய அறுவைச் சிகிச்சை நிபுணர். நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு, இதய துடிப்பை (இயக்கத்தை) நிறுத்தி 5 மணி நேரம்கூட இதயத் துடிப்பில்லாமல் ஓபன் ஹார்ட் அறுவைச் சிகிச்சை முறையை முதலில் செய்து காண்பித்தார். இந்தியாவில், 1970ல் சென்னை பொது மருத்துவமனையில் இந்தியாவின் முதல் ஓபன் ஹார்ட் ஆபரேஷன் செய்யப்பட்டது.

***

ஓபன் ஹார்ட் ஆபரேஷன்

இதயத் துடிப்பை நிறுத்தி இதய ஆபரேஷன் செய்வதால் மட்டும் ஓபன் ஹார்ட் ஆபரேஷன் என்று கூறிவிட முடியாது. சாதாரணமாக 5 நிமிடங்களுக்கு மேல் இதயத்துடிப்பு நின்றாலே நாம் இறந்து விடுவோம்.

*

ஆனால், ஓபன் ஹார்ட் ஆபரேஷனில் 5 மணி நேரத்திற்கும் மேல் இதயத்துடிப்பை நிறுத்தி, மறுபடியும் இதய இயக்கத்தை உண்டாக்கி நோயாளியைப் பிழைக்க வைக்க முடியும். இந்த,”ஓபன் ஹார்ட்’ (திறந்த முறை) இதய அறுவைச் சிகிச்சை முறையில் செயற்கை இதய, நுரையீரல் இயக்கி வைக்க முடிகிறது.

*

இந்த சிறந்த முறை அறுவைச் சிகிச்சை முறையில் உடம்பிலுள்ள பிராண வாயு குறைந்த (அசுத்த) ரத்தம் முழுவதும் இரண்டு பெரிய பிளாஸ்டிக் குழாய்கள் மூலம் இணைக்கப்பட்டு உடம்பிலிருந்து உறியப்பட்டு, அந்த அசுத்த ரத்தம் செயற்கை நுரையீரல் மிஷினில் செலுத்தப்படுகிறது.

*

செயற்கை நுரையீரல் மிஷின் உடம்பின் வெளியே கொண்டு வரப்பட்ட அசுத்த ரத்தத்தை முழுவதும் சுத்தம் செய்து 100 சதவீதம் பிராணவாயு கலந்து சுத்த ரத்தமாக மாற்றுகிறது.

*

இதயத்தை திறந்து ஆபரேஷன் முழுவதும் முடிந்தவுடன் 30 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்குக் குறைவான ரத்த வெப்பத்தை, ஹைபோதெர்மியா மிஷின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்தி, 37 டிகிரி செல்சியஸ் அளவு வந்தவுடன், இதயம் துடிக்க ஆரம்பிக்கிறது.

*

அதே சமயம், மகாதமனியை கிளாம்ப் செய்த உபகரணத்தை எடுத்து விட வேண்டும். அந்த சமயத்தில் ஆபரேஷன் பண்ணப்பட்ட நோயாளியின் ரத்தத்தின் அமிலம், காரத்தன்மை (அஇஐஈ ஆஅகுஉ ஆஅஃஅNஇஉ), மற்றும் ரத்த பொட்டாசியம், சோடியம் போன்ற உப்புச்சத்துக்களைச் சரி செய்து, உடம்பின் ரத்தம் கசியும் தன்மையையும் சரி செய்தவுடன், இதயத்துடன் இணைக்கப்பட்ட பிளாஸ்டிக் குழாய்கள் ஒவ்வொன்றாக எடுத்து, கசியும் ரத்தத்தை உடம்பிலிருந்து வெளியேற்ற இதயத்தின் மேலும், வலது மார்புகூட்டிலும், பிளாஸ்டிக் குழாய்களை இணைத்து, உடம்பில் வீணாகும் ரத்தத்தை உடம்பின் வெளியே ஒரு பெரிய கண்ணாடி பாட்டிலில் இணைத்துவிடலாம்.

*

ஆபரேஷன் செய்த பிறகு இதயம் சரிவர துடிப்பதற்கும், மூளை, நுரையீரல் போன்ற மற்ற உறுப்புகள் சரியாக வேலை செய்வதற்கும் ஆபரேஷன் செய்த புண் ஆறுவதற்கும் சரியான மருந்துகளைக் கொடுத்து இதய ஆபரேஷன் செய்த நோயாளியை முற்றிலும் குணப்படுத்தி விடலாம்.

***

பைபாஸ் சர்ஜரி

பைபாஸ் சர்ஜரி என்பது இதய ரத்தக்குழாய் முழுவதும் அடைபடுவதால் உண்டாகக்கூடிய மாரடைப்பு நோய்க்கு செய்யக்கூடிய இதய ஆபரேஷன். இந்த ஆபரேஷனை திறந்த முறை இதய ஆபரேஷன் மூலம், செயற்கை இதயம் மற்றும் நுரையீரல் மிஷின்களை உபயோகப்படுத்தி இதய துடிப்பை நிறுத்தியும் ஆபரேஷன் செய்யலாம். இதயத்துடிப்பை நிறுத்தாமலும், செயற்கை இதயம் மற்றும் நுரையீரல் மிஷின்களை உபயோகிக்காமலும் ஆபரேஷன் செய்யலாம்.

*

பைபாஸ் சர்ஜரி செய்வதற்கு காலில் உள்ள அசுத்த ரத்தத்தை இதயத்திற்கு கொண்டு செல்லும் செபனஸ் ரத்தக்குழாய் மற்றும் மார்புக்கூட்டின் உட்புறமுள்ள இடது மற்றும் வலது உள்மார்பு ரத்தக்குழாய்கள் மற்றும் முன் கையில் உள்ள ரேடியல் ரத்தக்குழாய்கள் போன்றவற்றை உபயோகித்து மேற்கூறிய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ரத்தக்குழாய்களின் அடைப்பின் தன்மையைப் பொறுத்து மகாதமனியின் ஆரம்பத்திலும், இதய ரத்தக் குழாய் அடைப்பின் கீழும் இணைத்து பைபாஸ் சர்ஜரி செய்யப்படுகிறது.

*

பைபாஸ் சர்ஜரி என்பது ஓபன் ஹார்ட் சர்ஜரியின் மூலமும் செய்யக்கூடிய ஒரு தனிப்பட்ட இதய அறுவைச் சிகிச்சை முறை. பொதுவாக பொதுமக்களுக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரியும், பைபாஸ் சர்ஜரியும் ஒன்று என்ற குழப்பத்திற்கு மேற்கூறிய விளக்கம் பொருத்தமானதாக இருக்கும்.


***
thanks லண்கஸ்ரிடேச்நோலோகி
***



"வாழ்க வளமுடன்"

பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் - தடுக்க வழி!

வேகமாக பரவி வரும் பன்றிக் காய்ச்சலால் பீதி ஏற்பட்டுள்ள நிலையில் பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் அவசர கால நடவடிக்கையாக பின்வரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.



1. காய்ச்சல், இருமல், தொண்டை வலி, ஜலதோஷம், மூக்கொழுகல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் குடும்ப மருத்துவரை அணுக வேண்டும். அவர் பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் என்று தெரிவித்தால் இதற்கென அருகாமையில் உள்ள அரசு சோதனை மையம் அல்லது மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

*

2. பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் முகமூடி அணிந்துதான் வெளியே செல்ல வேண்டும்.


*

3. பன்றிக்காய்ச்சலுக்கான சோதனைக்கு மாதிரிகள் சேகரிக்கப்படும். அப்பொழுது 7 நாட்களுக்கு வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும்.


*

4. மாதிரிகள் ஆய்வுக்கு ஒரு நாளில் இருந்து இரு நாட்கள் வரை ஆகும். அதில் பாசிட்டிவ் என தெரியவந்தால் அதன் பிறகு பன்றிக்காய்ச்சல் வைரசுக்கான (ஏ1 ச1) சோதனை நடத்தப்படும். அதே சமயத்தில் உடனடியாக மருத்துவமும் தொடங்கப்படும்.


*

5. நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெறலாம் அல்லது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறலாம்.


*

6. 7 நாட்களுக்குப் பிறகு அறிகுறிகள் மேலும் எதுவும் தென்படாத பட்சத்தில் வீடு அல்லது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள்.


***

பன்றிக்காய்ச்சலை தடுக்க இந்திய உணவை வெங்காயம், பூண்டு சாப்பிடலாம் - ரஷ்ய டாக்டர்கள்

மாஸ்கோ:


இந்தியாவின் மசாலாப் பொருட்களான பூண்டு, மஞ்சள், இஞ்சி, சீரகம், வெங்காயம் போன்றவை பன்றிக் காய்ச்சல், ஜலதோஷம் வராமல் தடுக்கக் கூடிய மருத்துவக் குணம் கொண்டவை என்று ரஷ்ய டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

*

மஞ்சள், இஞ்சி, சீரகம் உள்ளிட்டவற்றை உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மூலம் உடலில் நோய் தடுப்பு சக்தியை நன்கு பலப்படுத்தலாம் என்று மாஸ்கோ சுகாதாரத் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் அறிவுரை வழங்குகின்றனர். இது மட்டுமல்லாது, வெங்காயம் மற்றும் பூண்டையும் வேகவைக்காமல் அப்படியே சாப்பிடுமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

*

ரஷ்யாவின் கிழக்கு பகுதிகளில் தற்போது பன்றிக் காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களை ரஷ்யர்களுக்கு டாக்டர்கள் பரிந்துரைத்துள்ளனர்.



***
thanks நக்கீரன்
thanks thatstamil
***


"வாழ்க வளமுடன்"

தலைக்கு ஷாம்பு போடுகிறீர்களா? ( ஆலோசனைகள் )

கூந்தலின் மணம் இயற்கையானதா இல்லையா என்று மன்னனுக்கே சந்தேகம் வந்ததாகச் சொல்கிறது புராணம். அத்தனை பெருமை வாய்ந்த கூந்தலைப் பராமரிக்க வேண்டாமா?



‘ஓ! பராமரிக்கிறேனே..’ என்று சிலர் தினம் தினம் ஷாம்பூ போட்டு தலைக்குக் குளிப்பார்கள். ‘‘கூந்தலுக்குத் துன்பம் விளைவிக்கக்கூடிய செயல் இதுபோல வேறெதுவுமில்லை..’’ என்று அதிர்ச்சித் தகவல் தருகிறார், சென்னையில் ரம்யாஸ் பியூட்டி பார்லர் நடத்துகிற சந்தியா செல்வி.

*

‘‘பல வருடங்களுக்கு முன்பு பிரபல கூந்தல் பராமரிப்பு நிறுவனம் ஒன்று அழகுக் கலைஞர்களுக்காக சென்னையில் ஒரு ‘வொர்க்ஷாப்’ நடத்தியது. நானும் கலந்து கொண்டேன். அங்கே வைக்கப்பட்டிருந்த நுண்ணோக்கியில் என் தலையைப் பார்த்து அதிர்ந்துவிட்டேன். அன்றுதான் ஷாம்பூ போட்டுக் குளித்திருந்த என் மண்டையில் (முடியில் அல்ல) நன்றாக ஒட்டிக் கொண்டு, கூந்தலின் வேர்க்கால்களை அடைத்தபடி இருந்தது ஷாம்பூ.

*

இத்தனைக்கும், ஷாம்பூவை அலச குறைந்தது இரண்டு பக்கெட் தண்ணீராவது தலைக்கு மட்டும் ஊற்றுகிறவள் நான். அன்றும் அப்படித்தான் ஊற்றியிருந்தேன். ஆனாலும், ஷாம்பூ அதற்கெல்லாம் பெப்பே காட்டிவிட்டு மண்டையிலேயே சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துவிட்டது.

*

வொர்க்ஷாப்புக்கு வந்திருந்த கூந்தல் பராமரிப்பு நிபுணரிடம் இதுபற்றி நான் கவலையோடு விசாரித்தபோது,


1. ‘ஷாம்பூவை அப்படியே தலையில் தேய்த்துக் கொள்ளக் கூடாது. அப்படி செய்தால் மண்டையில் அது அப்பிக் கொள்ளத்தான் செய்யும்.

*

2. தினமும் இப்படி ஷாம்பூ போட்டு குளித்தீர்கள் என்றால், நாற்பது நாற்பத்தைந்து வயதிலேயே வழுக்கை விழுந்துவிடும்’ என்றார்.

*

3. சரி, ஷாம்பூவை எப்படித்தான் உபயோகிப்பது என்று நான் கேட்டதற்கு, ‘ஷாம்பூவில் தண்ணீரைக் கலந்து நன்றாக நுரை வரும்படி கலக்கிக்கொள்ள வேண்டும், பிறகே, தலையில் வைத்துத் தேய்க்கவேண்டும். இப்படிச் செய்தால்தான் நீங்கள் எதிர்பார்க்கும் நல்லவிளைவை அது தரும். இல்லையேல் கூந்தலுக்கு ஆபத்துதான்..’ என்றார் அந்த நிபுணர்.

*

அன்றைய தினத்திலிருந்து ஷாம்பூவை அவர் சொன்ன முறையில் தான் பயன்படுத்துகிறேன். முடி அதிகம் உதிரவில்லை என்பதையும் கண்கூடாகப் பார்க்கிறேன்..’’ என்கிற சந்தியா செல்வி,


***

கூந்தல் பராமரிப்புக்காக மேலும் சொன்ன சில டிப்ஸ்:


1. எப்போதும், என்ன அவசரமாக இருந்தாலும் ஈரத்துடன் தலையை வாரக் கூடாது. டவலால் நன்றாகத் துடைத்து, ஈரம் போய் உலர்ந்தவுடன், நல்ல தரமான பெரிய பற்களுடைய சீப்பினால் வாரி சிக்கெடுக்க வேண்டும். மரச்சீப்பு அல்லது நைலான் பிரஷ்ஷால் வாருவது மிகவும் நல்லது.

*

2. கண்டிப்பாக, வாரம் இருமுறையாவது தலையை அலச வேண்டும்.


*

3. மாதம் ஒருமுறை கூந்தலின் அடிப்பகுதியை ‘ட்ரிம்’ செய்துகொண்டால் வெடிப்பு விழாமல் தடுக்கலாம்.

*

4. இரவு படுக்கும்முன், கூந்தலை மென்மையான ப்ரஷ்ஷினால் வாரி, பின்னாமல் அப்படியே விட்டு விட்டுப் படுக்க வேண்டும். இது தலைமுடி நன்கு வளர உதவும்.

*

5. அடிக்கடி ட்ரையர் உபயோகிப்பது நல்லதல்ல. வேண்டுமானால், டவலால் நன்கு துடைத்து ஈரம் போன பிறகே, உபயோகிக்கலாம்.

*

6. கூந்தலை ப்ளீச் செய்வது, கலர் பண்ணுவது, சுருளாக்குவது, நீளமாக்குவது போன்றவற்றை ஏதாவது விழா, விசேஷத்துக்கென்று செய்யலாமே தவிர, அடிக்கடி செய்யக் கூடாது. ஹேேர் ஸ்ப்ரே உபயோகித்திருந்தால் இரவு படுக்கும் முன் தலையை அலசுவது நல்லது. அசதியாக இருந்தால் மறுநாளாவது அலசிவிட வேண்டும்.

***


நரைத்துப் போகிறது தவிர்க்க எளிய சிகிச்சை முறை:


இப்போதெல்லாம் பத்து, பதினோரு வயது குழந்தைகளுக்குக்கூட நரைத்துப் போகிறது. இதைத் தவிர்க்கவும் எளிய சிகிச்சை முறை ஒன்றைச் சொல்கிறார் சந்தியா செல்வி..


1. ‘‘மருதாணி இலை, கறிவேப்பிலை, வெந்தயக் கீரை, வெள்ளை கரிசலாங்கண்ணி இவை எல்லாமும் தலா 4 கைப்பிடி, பெரிய நெல்லிக்காய் அரை கிலோ.. இவற்றை நன்றாக அரைத்துச் சாறெடுங்கள். இதனுடன் தண்ணீர் கலக்காத திக்கான தேங்காய்ப் பால் 4 லிட்டர் அல்லது தேங்காய் எண்ணெய் 1 கிலோ கலந்து நன்கு காய்ச்சினால் கரும்பச்சை நிறத்தில் எண்ணெய் கிடைக்கும்.

*

2. இந்த எண்ணெயைத் தொடர்ந்து தடவி வந்தால் சில வாரங்களிலேயே நரை கூந்தல் அத்தனையும் கருங்கூந்தலாக மாறிவிடும். சிறு வயது முதலே குழந்தைகளுக்குத் தடவி வந்தால் கூந்தல் அத்தனை சீக்கிரத்தில் நரைக்காது..’’

*

3. உங்கள் செல்ல மகளின் பெரிய பெரிய ஆசைகளில் பரு இல்லாத முகமும் ஒன்றுதானே.. நீங்களும்தான் மார்க்கெட்டில் அறிமுகமாகிற எல்லா க்ரீம்களையும் போட்டுப் பார்த்துவிட்டீர்கள். அப்படியும் பரு இன்னும் அதிகரித்திருப்பது மாதிரிதான் தோன்றுகிறதே தவிர, ஒருபலனும் இல்லை என்றா கவலைப்படுகிறீர்கள்?

*

4. ‘‘கவலைவேண்டாம்.. அதற்கும் எளிய சிகிச்சை ஒன்று இருக்கிறது. நான் சொல்கிற சிகிச்சையை அவளுக்குச் செய்துவிடுங்கள். பிறகு பாருங்கள்.. ‘என் வெல்லக் கட்டி அம்மாவே’ என்று உங்களைக் கொண்டாடப் போகிறாள்..’’ என்கிறார் சந்தியா செல்வி.

*

5. ‘‘துளசி, புதினா, வேப்பிலை மூன்றும் ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து ஜூஸ் ஆக்குங்கள். பச்சை பயறு மாவுடன் கொஞ்சம் வேப்பிலையை அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். முதலில் காய்ச்சாத பாலில் பஞ்சை நனைத்து முகத்தைத் துடையுங்கள். பிறகு, துளசி + புதினா + வேப்பிலை சாற்றினை எடுத்து முகத்தில் தடவி மிகமிக மென்மையாக பத்து நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். கவனம்.. அழுத்தித் தேய்த்துவிடக்கூடாது.

*

6. பிறகு, பச்சைப் பயறுடன் கலந்த வேப்பிலையை முகத்தில் போட்டு, காய்ந்ததும் முகம் கழுவுங்கள். இதை வாரம் ஒருமுறை செய்தால் முகப்பருவுக்கு வைக்கலாம் ஒரு பெரிய முற்றுப்புள்ளி.

*

7. ‘என்னால் இவ்வளவு நேரமெல்லாம் ஒதுக்க முடியாது’ என்கிறவர்களுக்கு.. தண்ணீரை நன்றாகக் கொதிக்க வையுங்கள். அதில் வேப்பிலை இலைகளைப் போட்டு ஆறியவுடன் அந்தத் தண்ணீரில் தினமும் முகம் கழுவுங்கள். அதோடு, மாதம் இருமுறை துளசி இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு, அந்த ஆவியில் முகத்தைக் காட்டுங்கள். இந்த இரண்டையும் தொடர்ந்து செய்தாலே நல்ல வித்தியாசம் தெரியும்.

*

8. ஜாதிக்காய், சந்தனம் சிறிது எடுத்து நன்கு அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் போட்டு சிறிது நேரம் வைத்திருந்து முகம் அலம்பினாலும் பரு ஓடிப் போகும். ஜாதிக்காய், முகப்பருவை குறைப்பதுடன் கருமையையும் நீக்கும். முகப்பரு உள்ள இடத்தில் மட்டும் கிராம்பு அரைத்துப் போடுங்கள். பரு இல்லாத பகுதியில் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

*

9. சிலருக்கு மூக்கின் மேல் கரும்புள்ளிகள் இருக்கும். அதற்கு கரகரவென்று அரைத்த பச்சரிசி மாவுடன் பன்னீர் கலந்து மூக்கு மற்றும் தாடை ஓரம் மென்மையாகத் தேய்த்தால் கரும்புள்ளிகள் காணாமல் போகும்..’’



***
நன்றி:-சந்தியா செல்வி
***



"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "