...

"வாழ்க வளமுடன்"

04 செப்டம்பர், 2015

பச்சை ஆப்பிள்

Mohandass Samuel's photo.

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
இயற்கை தாய் நமக்கு வழங்கிய மிகவும் அற்புதமான பழங்களில் ஒன்று தான் ஆப்பிள்.


ஆப்ப...ிள்களில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைய இருப்பதால், ஒவ்வொருவரும் அன்றாட உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


சிவப்பு வகை ஆப்பிள்கள் மிகவும் பொதுவாக காணப்படுகின்றன மற்றும் பச்சை நிற ஆப்பிள்கள் புளிப்பாக இருந்தாலும், சுவைப்பதற்கு இனிமையாக இருக்கும்.


பச்சை ஆப்பிள் தான் நீண்ட காலமாக ஆரோக்கியமான பழங்களில் ஒன்றாக அங்கீகாரம் பெற்றுள்ளது.


இந்த பழத்தில் தான் இயல்பாகவே பல்வேறு வகையான புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.


உயர் நார்ச்சத்துக்களை கொண்டுள்ளது
பச்சை ஆப்பிளில் நிறைய நார்ச்சத்துக்கள் இருப்பதால், குடலை சுத்தம் செய்வதிலும் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தினை அதிகரிக்கவும் செய்கிறது.
எனவே இது தடையற்ற குடல் இயக்கத்திற்கு உதவுகிறது.



கனிம உள்ளடக்கம்
பச்சை ஆப்பிள்கள் ஏராளமான தாதுக்களை கொண்டுள்ளது. தாதுப்பொருட்களான இரும்புச்சத்து, துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு, பொட்டாசியம் முதலிய சத்துக்கள் மனித சுகாதாரத்திற்கு வேண்டுவன ஆகும்.
அதிலும் ஆப்பிள்களில் இருக்கும் நுண்ணூட்டச் சத்தான இரும்புச்சத்து இரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவை உயர்த்த உதவுகிறது.



இதயத்திற்கு ஆரோக்கியமானது
எடையை குறைக்க முயலுபவர்களுக்கு பச்சை ஆப்பிள் ஒரு சிறந்த உணவாக இருக்கிறது.
அதிலும் அத்தகையவர்கள் ஒவ்வொரு நாளும் உணவில் ஒரு ஆப்பிளை சேர்க்க வேண்டும்.
மேலும் இது இரத்த நாளங்களில் கொழுப்பு சேகரிப்பதை தடுத்து, இதயத்திற்கு சரியான இரத்த ஓட்டத்தைப் பராமரிக்க உதவுகிறது.



சரும புற்றுநோயை தடுக்கிறது
பச்சை ஆப்பிளில் வைட்டமின் சி நிறைந்து காணப்படுவதால், இது கட்டற்ற தீவிர மூலக்கூறுகளால் சரும செல்களுக்கு எதிராக ஏற்படும் சேதத்தை தடுக்க உதவுகிறது. இதனால் சரும புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகளை குறைகிறது.



எதிர் ஆக்ஸிகரணிகள் நிறைந்தவை
பச்சை ஆப்பிள்களில் எதிர் ஆக்ஸிகரணிகள் நிறைந்து இருப்பதால், இது செல்கள் மீண்டும் உற்பத்தியாவதற்கும் மற்றும் செல்களுக்கு புத்துயிர் கொடுப்பதற்கும் முடிகிறது.


மேலும் இது ஆரோக்கியமான மற்றும் ஒளிரும் சரும பராமரிப்புக்கும் உதவுகிறது. மேலும் இதிலிருக்கும் எதிர் ஆக்ஸிகரணிகளால் கல்லீரல் பாதுகாக்கப்பட்டு, அதன் சரியான செயல்பாட்டுக்கும் உறுதி செய்கிறது.



ஆரோக்கியமான வலுவான எலும்புகள்
பச்சை ஆப்பிள்கள் தைராய்டு சுரப்பியை சரியான செயல்பாட்டில் இருக்க உதவி செய்வதால், அது வாத நோய் ஏற்படுவதைத் தடுக்கிறது.



அல்சைமர் நோய்(நினைவாற்றலிழப்பு)
ஒவ்வொரு நாளும் ஒரு ஆப்பிள் உட்கொண்டால், அல்சைமர் என்னும் நினைவாற்றலிழப்பு நோய் ஏற்படும் வாய்ப்புகளை தடுக்கலாம்.



ஆஸ்துமாவைத் தடுக்கிறது
வழக்கமாக ஆப்பிள் பழச்சாற்றை குடிப்பதால், மிக நுண்ணிய உணர்வு நிலை ஒவ்வாமை நோயான ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்பைத் தடுக்க முடியும்.


நீரிழிவு நோயைத் தடுக்கிறது
ஆப்பிள்கள் நீரிழிவு நோயை தடுக்கிறது. அதனால் நீரிழிவு நோயாளிகள் தினமும் ஆப்பிள் உண்பதென்பது அவசியமாகிறது.


வைட்டமின் ஏ, பி மற்றும் சி நிறைந்தவையாகும்
பச்சை ஆப்பிள்களில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி நிறைந்துக் காணப்படுவதால், இது கட்டற்ற தீவிர மூலகூறுகளால் சரும செல்களுக்கு எதிராக ஏற்படும் சேதத்தை தடுக்க உதவுவதோடு, இது சருமத்தை பிரகாசிக்கவும் உதவுகிறது.



முதுமையைத் தடுக்கும்
பச்சை ஆப்பிள்கள் மூப்படைதலுக்கு எதிரான ஒரு சிறந்த மூலப்பொருளாக உள்ளது. இந்த ஆப்பிளில் எதிர் ஆக்ஸிகரணிகள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துக் காணப்படுவதால், தோலின் நெகிழ்வு திறன் மற்றும் நீண்ட நாட்கள் இளமையாக இருக்க செய்கிறது.



முகப்பரு
பச்சை ஆப்பிள்கள் முகப்பருவிற்கு எதிரான சிகிச்சையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதிலும் பச்சை ஆப்பிள்களை வழக்கமாக உண்பதால், பருக்கள் வெடிப்பதை கட்டுப்படுத்துவதோடு, பருக்கள் வருவதைத் தடுக்க உதவுகிறது.



கருவளையம்
குறிப்பாக பச்சை ஆப்பிள் கண்ணைச் சுற்றி ஏற்படும் கருவளையங்களை நீக்கி, கண்களுக்கு புத்துணர்ச்சி அளிக்க உதவுகிறது.


முடி உதிர்தல்
பச்சை ஆப்பிள்கள் முடிகளை வலுப்படுத்தி, முடியின் வளர்ச்சியை அதிகரித்து மற்றும் முடி உதிர்தலைத் தடுக்க உதவுவதால், இதனை தினமும் தவறாமல் உட்கொள்ளுங்கள்.


***
ts fb
***





"வாழ்க வளமுடன்"
      

மண்டைச் சளி – மார்புச் சளி நீங்க....




நமது உடலின் அதிக சூட்டை சமாளிக்கவும் தேவையற்ற – நச்சுப் பொருட்களைத் தடுக்கவும...் உடல் தனது தேவைக்காக உருவாக்கிக் கொள்வதே சளி எனும் நீர் மூலகத் திரட்சி.


இது இயல்பாக முறையாக வெளியேறும் போது நன்மையானதே. நமது அறியாமையால் பழக்கவழக்கங்களும், வாழ்க்கை முறையும் உடல் இயற்கைக்கு எதிராகும் போது; இந்த சளி அளவு அதிகமாவதாலும், இயல்பாக வெளியேற்றும் வழிகள் தடுக்கப்படுவதால் சளி கட்டிபட்டு - உடல் அதை வெளியேற்ற கடும் முயற்சிகள் எடுக்க வேண்டியதாகிறது.


கட்டிபட்டுப்போன சளியை - வெளியேற்றும் முயற்சியின் விளைவே, இருமல், தும்மல், ஈளை, இளைப்பு என பலவாறான துன்பத்துக்கு ஆளாக வேண்டியுள்ளது.


நீங்கள் பார்க்கலாம் வீட்டுச் சுவற்றில் ஒட்டிய சளித் திவலையை அடுத்த நாள் பார்த்தால், அந்த இடத்தில் பளபளப்பாகத் தெரியும். கையை வைத்து தடவிப் பார்த்தாலும் ஒன்றும் தெரியாது ஆனால் சிறிது நீர் பட்டால் அது உப்பிப் பெரிதாகி இருப்பதைக் காணலாம். இது போன்ற நிலைதான் சளியால் பாதிக்கப்பட்ட உடல் கருவிகளுக்கும். உடல் சூடு அதிகரிக்கும் போது உடலுடன் ஒட்டி பின் உடல் தன்னிலை அடைந்து வெளியேற்றும் ஆற்றல் சீராக்கப் பெறும் போது சளி சுகமாக வெளியேறுகிறது. ஆனால் நாள்பட்ட கட்டிபட்ட சளியை வெளியேற்ற உடல் மிகவும் துன்பமடைகின்றது.


எதிர்முறைய மருந்து வணிகர்கள் இதை தனது வியாபாரத்திற்கு அடித்தளமாக பயன்படுத்துகின்றனர். அவர்களை நம்பும் மனிதர்களை நிரந்தர நோயாளிகளாக்கத் தேவையான எல்லா பத்திய முறைகளையும் அவர்கள் மீது திணிக்கின்றனர். எதிர்முறையர்களின் மருந்துகளும், வாழ்க்கை முறைகளும் உடலின் வெளியேற்றும் ஆற்றலை தடுத்து அழித்து விடுகிறது மேலும் உடலைச் சூடாக்கி சளி உற்பத்தியை அதிகப்படுத்துகிறது. இதனால்,
வெளியேற்றும் போது ஏற்பட்ட துன்பம் தெரியாத நிலையில் – சிறிது காலம் தொல்லை இல்லாது இருக்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள் ஆனால், இதற்காக பயன்படுத்தப் பட்ட மருந்துகளினால் ஏற்பட்ட விளைவுகளாகிய புதிய நோய்களாலும்-மருந்துகள் உருவாக்கிய சூட்டால் அதிகரிக்கும் சளியாலும் நோயின் தன்மை மேலும் மோசமடைகிறது.


குழந்தைகளை சளித் தொல்லைக்காக எதிர்முறைய மருத்துவரிடம் அழைத்துச் செல்லும் போது அவர் என்ன கூறுகிறார்.


குளிர்ச்சியான உணவுகளைத் தவிருங்கள், தலைக்கு தண்ணீர் ஊற்ற வேண்டாம், சூடான தண்ணீர் மட்டும் கொடுங்கள், வாரம் அல்லது பத்து நாட்களுக்கோர் முறை சுடுநீரில் குளித்தால் போதும், பழங்களைத் தவிர்த்து விடுங்கள், காதுகளை நன்கு மூடிவையுங்கள் (சென்னையில் இந்த வெயிலிலும் காது மூடிகள் பயன்படுத்தும் ஆட்களை பார்க்க முடிகிறது) என பல பத்தியங்களோடு போதையூட்டும் டானிக்குகளையும், சளி வெளியேற்றாது தடுக்கும் மருந்து, மாத்திரைகளையும் கொடுத்து விடுகிறார்கள். உடலுடைய ஆற்றலை தடுக்க முடியாததால் பிரைமரி காம்ப்ளக்ஸ் என பெயரிட்டு பல ஆண்டுகள் வைத்தியம் பார்க்கிறார்கள். பின் உடலின் ஆற்றல் மிக பலவீனமாகி அதன் காரணமாக வெளியேற்றும் முயற்சி நின்ற பின் அந்த டாக்டர் தான் கஸ்டப்பட்டு குணப்படுத்தினார் எனப் பேச ஆரம்பிக்கிறார்கள்.


ஆனால், விரைவில் இளைப்பு, ஈளை (வீசிங் டிரபுள், ஆஸ்துமா, டி.பி) என்ற புதிய பெயரில் சில ஆண்டுகளுக்குள் அதே அல்லது புதிய டாக்டரையோ தேடிப்போய் வாழ்நாள் முழுவதும் வைத்தியம் பார்க்கிறார்கள். நினைத்துப் பாருங்கள் நமது கண்களுக்கு தெரிந்த இந்த காட்சிகள் மிக மலிந்துள்ளன நம் நாட்டில். டி.பி இது - இந்தியன் காமன் டிசிஸ் என முத்திரையும் கொடுத்திருக்கிறார்கள்.



சளி - இதிலிருந்து விடுபட முடியாதா?


முடியும். மிக எளிதாக, சுகமாக விடுபட முடியும்.
எப்படி?
நமது உடல் இயற்கையை புரிந்துகொண்டு நமது முன்னோர் வகுத்த பாதையில் மிக எளிதாக, சுகமாக அனைத்து நோய்களிலிருந்தும் விடுபட்டு நலமாய் வாழலாம். உங்கள் ஞாபகத்துக்காக


1.
இரவு சூரியன் மறைவதற்கு முன் உணவை முடித்துக் கொள்ளுதல். (தற்காலத்தில் உடன் அந்த பழக்கங்கள் முடியாவிடில் இரவு 8.30குள் உணவை முடிப்பது சிறப்பு)


2. இரவு கண்களுக்கு அதிகம் வேலை கொடுக்காதிருத்தல். (இரவு 8 மணிக்கு மேல் தொலைக்காட்சி, படிப்பு, கம்யூட்டர் பயபடுத்தல் கூடாது. தேவைஎனில் அதிகாலை 3 மணிக்கு மேல் படித்தல் நன்று.)


3.
இரவு உணவை மிதமாக கொள்ளுதல் நன்று. ( சில நேரம் தவிர்க்கமுடியாத காரணத்தால் தாமதமாக சாப்பிட்டால் பழ உணவுகள் மட்டும் சாப்பிடலாம்.)


4.
இரவு விரைவாக படுக்கைக்கு செல்லுதல் - தூங்குதல். (மனம் சமாதானம் அடைந்தால்தான் தூக்கம் வரும். எனவே இறைவனிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டால்- மன அமைதியுடன் நன்கு தூங்கலாம்)


5.
அதிகாலை விரைவாக துயில் எழுதல் நல்லது.(அதிகாலை 3 மணிக்கு எழுதல் மிகச் சிறப்பான நன்மை தரும். காலையில் படித்தல் ஞாபகசத்தியை அதிகரிக்கும்)


6.
காலைக் கடன்களை 6 மணிக்குள் முடித்துக்கொள்க. (இரவு பணியில் ஈடுபட்டு இரவு நீண்ட நேரம் தூங்காமலிருக்க நேர்ந்தாலும் கூட இது அவசியம் தேவைப்பட்டால் காலை உணவுக்குப் பின் சிறிது தூங்கிச் சமாளிக்கலாம்.)


7.
பல் துலக்குதல், ஐயத்தூய்மை பழகுக. (வெறும் விரலால் - நன்கு ஈறுகளை மென்மையாக அழுத்தி விடுதல் நல்லது. பின், கைப் பெருவிரலால் உள்நாக்கிருக்கும் இடத்தில் மெல்ல சுழற்ற நன்கு சளி வெளியேறும். பின் மா,வேம்பு, ஆல் இவற்றின் குச்சிகள் அல்லது வெறும் பிரஸ் கொண்டு லேசாக பல் இடுக்குகளில் உள்ள அழுக்குகளை நீக்கிக் கொள்க.)


8.
நல்ல குளிர்ந்த நீரில் தலை முழுகுதல்-குளித்தல் வேண்டும்.(குளிர்நாடுகளில் உள்ளவர்கள் அறை வெப்பநிலையில் உள்ள நீரைப் பயன்படுத்துக.)


9.
இயற்கையான நறுமணப்பொருள்களை பயன்படுத்தல் வேண்டும். (சோப்பு, சாம்பு, சிகைக்காய் இவை உடலைச் சூடாக்கும். மேலும் உடலில் உள்ள வியர்வைத் துளைகளை அடைத்து உடல் சுவாசிப்பதைத் தடுக்கும்- கழிவு வெளியேற்றத்தை தடுக்கும்.எனவே இவற்றைத் தவிருங்கள்.)


10.
வாரம் இரு முறை எண்ணெய் குளியல் வேண்டும். (எண்ணெய் குளியல் சித்தர்களின் அரிய அறிவியல் உடல் தன்மைக்கேறப பல தைலங்களை பயன்படுத்தலாம் அல்லது நல்லெண்ணெய் சிறப்பு. பயன்படுத்திப் பாருங்கள் - சுகத்தை)


11. காலை 7 முதல் 8.30 மணிக்குள் உணவு கொள்ள வேண்டும். (நமது உடற் கடிகாரத்தின் படி காலை 7 முதல் 9 வரை இரைப்பைக்கு சத்தி சிறப்பாக கிடைக்கும் நேரம். 9முதல் 11 வரை தண்ணீர் கூட கூடாது. அது மண்ணீரல் தன்னை முறைப்படுத்திக்கொள்ளும் நேரம்.)


12.
உணவுக்கு முன் இனிப்பான பழங்கள் சாப்பிடுதல் நல்லது. (மூன்று வேளையுமே உணவுக்கு முன் பழங்கள் சாப்பிடுவது நல்லது.)



13.
மதிய உணவு பசி வரும் பொழுது எடுத்துக் கொள்க. (இரண்டு வேளை உண்பவன் போகி என்பர் சான்றோர். பசித்துப் புசிப்பதே சிறப்பு. மக்களின் பழக்கத்தை ஒட்டி எழுதுகிறேன்.)


14.
பசியறிந்து உண்ணுவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம்
-தாகம் உணர்ந்து தேவையான அளவு குளிந்த நீர் குடித்தல் வேண்டும். (எதிர்முறையர்களின் அளவுகள் மிகத் தவறானது நமது உடலுக்கு மதிப்பளிப்போம் படைப்பாற்றல் நமக்கு அளித்திருக்கும் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம். உதாரணம் பசி, தாகம் போன்றன.)


15.
கழிவுகளை கட்டுப்படுத்தல் கூடாது. காலை, மாலை கழிவு வெளியேற்றப் பழக்க வேண்டும். (உடலது தேவைகளுக்கு உதவ்வேண்டியது அறிவின் கடமை அந்த அளவே நலவாழ்வுக்கு போதுமான அடிப்படை அறிவாகும்.)


16.
மாதம் ஓர் முறை மென்மையான பேதி மருந்துகள் எடுத்தல் நல்லது. ( இப்போதுள்ள உணவு மற்றும் சூழல் எதிர்முறையர்களின் வணிக அறிவால் மாசுபட்டுள்ளது. அதனால் மாதம் ஓர்முறை மென்மையான பேதிமருந்துகளால் உடல்தூய்மை செய்வது சிறப்பு. குடலைக்கழுவி உடலைத் தேற்றென்பர் பெரியோர்.)


17.
மாலையும் ஓர்முறை நன்கு தலைக்கு குளித்தல் மிகவும் நல்லது. (இப்போதய சூழல் மாசிலிருந்து தப்ப - மாலை அல்லது இரவும் மீண்டும் ஓர்முறை குளிப்பது நல்லது.)



முன் கூறியபடி பழக்கவழக்கங்களைச் சீர்செய்து கொள்ள, உடலின் கழிவு வெளியேற்றம் சீராகி உடல் நலம் பெருகும்.


உடல்நலம் என்பது மிக எளிதான ஒன்று தான் நாம் நமது உடலியற்கையை அறிந்து உடலுக்கு உதவினால் எல்லாம் சுகமே. மேலும் நம்மைப்படைத்த படைப்பாற்றல் – இறைவன் எப்பொழுதும் நம்மை காக்க துணை வரும்.
நம்முள் இருக்கும் படைப்பாற்றலின் தன்மை அறிந்து - தன்னை உயர்த்திக் கொள்வது மனிதப் பிறப்பின் தேவை.



***
தமிழ்வேல் நளபதி தமிழ் மரபுவழி மருத்துவத்தில்
***



"வாழ்க வளமுடன்"

      

உடல் சூட்டை குறைப்பது எப்படி ?

சித்த மருத்துவமும் ஆரோக்கிய வாழ்க்கையும்'s photo.


சித்த மருத்துவத்தில் நிலம், பொழுது இரண்டும் முதற்பொருள் எனப்படுகிறது. வாழும் நிலத்திற்கு ஏற்ப மக்களின் உடல் நிலையும், குணமும் மாற...ுபடுவது போல், காலத்திற்கு ஏற்றவாறு உடல்நிலை, மனம் மாறுபடும்.



கோடை காலத்தில் வெப்பம் அதிகரித்து, வறட்சி ஏற்படுவதால், பூமியின் இயற்கை குணம் மாறுபட்டு உயிரினங்கள் உடல்நலத்தை இழக்கின்றன. மனிதனின் உடல் கோடையின் போது வறட்சி, அக்கினி, குரூரம், சலரூபம், புளிப்பு, காரம் என 6 குணங்களை அடைகிறது. நம் உடல் அமைப்பின் உறுப்புகள் 70-80 சதவீதம் நீரால் ஆனது. வெப்பத்தால் ஏற்படும் வியர்வை மூலமாக உடலில் உள்ள நீரின் அளவு வெகுவாக குறைந்து 20-30 சதவீத நீர் இழப்பு ஏற்படுகிறது. பெரும்பாலும் கோடைகாலத்தில், உடல் வெப்பம் அடைவதாலும், உடலில் நீர்ச்சத்து குறைவதாலும் காய்ச்சல், மஞ்சள் காமாலை, பல வகை அம்மைகள் ஏற்படுகிறது. 'அக்கி' மிக முக்கியமானதாகும். நீர்ப்பை, நீர்ப்பாதையில் வெப்பம் அதிகரித்து நீர்கடுப்பு, நீர்கட்டு, கல்லடைப்பு, வெள்ளைபடுதல், நீர்வேட்கை போன்ற நோய்கள் வருவதுண்டு, வறட்டு இருமல், ரத்த அழுத்தம், தலைவலி, உடல் கொப்பளங்கள், பரு, ஆசன வாய் எரிச்சல், மூலம் போன்றவை கோடையில் அதிகம் தாக்கும் நோய்கள்.


தடுப்பு முறைகள்:

கொப்பளம், பரு அம்மை இவைகளுக்கு வேப்பிலை, மஞ்சள் கலந்து அரைத்து பூசலாம். தோலில் வறட்சியை ஏற்படுத்தும் வாசனை சோப்புகளை தவிர்த்து, பாசிப் பயறு, கடலைமாவு கலந்து பயன்படுத்துதல் நல்லது. வெப்பத்தால் சிலருக்கு உள்ளங்கால் எரிச்சல் ஏற்படும். அதற்கு இரவு படுக்கும் முன் உள்ளங்காலில் விளக்கெண்ணெய் பூசி வெதுவெதுப்பான நீரில் 5 முதல் 10 நிமிடம் உள்ளங்காலை மூழ்க வைத்திருந்தால் உடல் சூடு தணியும். அடி வயிற்றில் தொப்புளை சுற்றி ஆமணக்கு எண்ணெய் தடவலாம். தலைக்கு சந்தனாதி தைலம் தடவி வர உடல் வெப்பம் தணியும். நீர் வேட்கை, உடல் எரிதல் இவற்றிற்கு சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசி குளிக்கலாம்.


உணவு முறைகள்:

கோடையில் நாம் முதலில் கவனிக்க வேண்டியது நம் உடல் உஷ்ணத்தை தவிர்ப்பது எப்படி என்பதைத்தான். மிக எளிமையான முறை, தினம் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதுதான். தயிர், மோர், பால், கம்மங்கூழ், கேழ்வரகு கூழ், மாதுளை, எலுமிச்சை, வெள்ளரி, திராட்சை, இளநீர் சாப்பிடுவதுடன், தர்பூசணி, நார்த்தை, நெல்லி, பேயன் வாழை தினம் சேர்த்துக் கொள்வது கட்டாயம். தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதால், வெயிலின் தாக்கத்தை குறைக்க முடியும். வெட்டி வேர், விளாமிச்சை வேர் கலந்த நீர் குடிக்கலாம். வெந்தயத்தை சுத்தமான தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து தலையில் தடவலாம். மேலும் தண்ணீரில் வெந்தயத்தை இரவில் ஊறவைத்து காலையில் அந்நீரை அருந்தலாம். மூலம், வயிறு எரிச்சலுக்கு பசு நெய் நன்று. கீரைகளை சூப் வைத்து குடிக்கலாம். அவற்றை துவையல், மசியல் செய்து உணவுடன் சேர்த்துக் கொள்ளலாம்.



கீரைகளின் பயன்கள்:

பசலை கீரை ;  வெள்ளைபடுதல், நீர்கடுப்பை போக்கும்.

சீறுகீரை: காய்ச்சல் பாதம் எரிச்சல், கண் புகைச்சலை போக்கும்.

பொன்னாங்கன்னி கீரை: உடல்சூடு, மூலம், உஷ்ணம் போக்கும்.

 முருங்கைக்கீரை: உடல்சூடு, வெயிலினால் உண்டாகும் தலைவலி நீக்கி உடலில் பொன் நிறத்தை உண்டாக்கும்.

புளியாரை கீரை: ரத்தமூலம் போக்கும்.

வாழைப் பூ: ரத்த மூலம், கால் எரிச்சல் போக்கும்.

கீரைத்தண்டு: வெப்பம், பித்த எரிச்சல், வெளிமூலம் போக்கும்.

பிரண்டை தண்டு: மூலம், அல்சர் குணமாக்கும்.

சோற்றுக் கற்றாழை: உடல் வெப்பம், வெள்ளை படுதல் போக்கும்.

நெற்பொரி: அதிக தாகத்தை குறைக்கும்.

சம்பா கோதுமை: ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும்.

கேழ்வரகு, கம்பு போன்றவற்றை முதல் நாள் மாலை சமைத்து நீரிலிட்டு அடுத்த நாள் மோர் சேர்த்து கூழாக சாப்பிட்டால் உடல் வெப்பம் குறையும்.


மருதாணி, பாதத்தில் தடவ எரிச்சலை போக்கும். மருதாணி பூவை இரவில் தலையணை அடியில் வைத்து படுக்க நிம்மதியான தூக்கம் கிடைப்பதுடன், உடல் வெப்பம் சீராகும்.


 இவற்றுடன் வாழைப்பூ, கீரைத்தண்டு, பிரண்டை, சிறு தானியங்கள் சேர்த்துக் கொள்வதால் உடல் சூட்டை தவிர்ப்பதுடன், கோடை நோய்களில் இருந்து தப்பிக்கலாம். மருதாணி, சோற்றுக் கற்றாழை உடல் வெப்பத்தை போக்கும் மூலிகைகளாகும்.


எண்ணெய் குளியல்:

தினமும் 2 முறை குளிப்பது, எண்ணெய் குளியல், உடல் சூட்டை முற்றிலும் தவிர்க்கும். எண்ணெய்யை உச்சி முதல் உடலில் அனைத்து பாகங்களிலும் சூடு எழுப்பாமல் குளிர தேய்க்க வேண்டும். உடலை பிடித்தும், மெதுவாக தட்டியும் வருவதால், ரத்த ஓட்டம் அதிகமாகும். எண்ணெய்யை தேய்த்து சிறிது நேரம் ஊறவிடுவதால், எண்ணெய் சத்துக்கள் உடலினுள் செல்லும். தவிர கஸ்தூரி மஞ்சள், மிளகு, வேப்ப விதைகள், கடுக்காய் தோல், நெல்லிப்பருப்பு இவைகளை அரைத்து காராம் பசுவின் பாலுடன் கலந்து கொதிக்க வைத்து தலையில் தேய்த்து குளித்தால் எந்நாளும் பிணிகள் வராது, என சித்தர்களின் பதார்த்த குண சிந்தாமணி என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. பொதுவாக இலவம் பஞ்சு படுக்கையில் படுத்தல் நன்று.


காரம், புளிப்பு, உப்பு குறைத்துக் கொள்ள வேண்டும். மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். வீட்டை சுற்றி மரம் வளர்க்க வேண்டும். மாடி வீடுகளில் வசிப்பவர்கள் வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும் வகையில் மொட்டை மாடியில் தோட்டம் அமைக்கலாம். தினம் வீட்டிற்குள் தரையை தண்ணீரால் துடைக்கவோ அல்லது சிறிதளவு தண்ணீரை மதியம் தெளித்து விட்டாலோ தரை சூடு குறையும். வீட்டினுள் காற்றோட்டம் அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுதல் நல்லது.



- டாக்டர் ஜி.கலா, சித்த மருத்துவர், திருநகர். 96772 54206.


***
ts dr
***

"வாழ்க வளமுடன்"

உணவில் புளி சேர்ப்பதன் முக்கிய நோக்கமென்ன?



1. நாக்கில் உள்ள சுவை கோளங்களின் அயர்வை நீக்கி சுறுசுறுப்பூட்டி உணவிற்கு சுவை கூட்டுத...ல் - வாயில் குழகுழப்பும் நாக்கில் தடிப்புமாகப் போர்வையிடுதலும் இருக்கும்போது சற்று புளி தூக்கலான உணவு இதமாயிருக்கும். நாக்கில் உமிழ்நீர் ஊறுவது கபத்தாலோ அஜீரணத்தாலோ அடைபட்டு நாவறட்சி ஏற்படும்போது வாயில் உமிழ்நீர்க் கசிவை அதிகப்படுத்தி வறட்சியைப் போக்கும்.

வயிற்றில் பித்தப் புளிப்பு மிகுந்தோ, புண் ஏற்பட்டோ, வாயில் பொது வேக்காளம் அல்லது நாக்கு எகிறு உதடு கன்னம் கடைவாய் இவைகளில் குழிப்புண் ஏற்பட்டுள்ளபோதும், நாக்கில் எப்போதும் உமிழ்நீர்க் கசிவு மிகுந்துள்ள நிலையிலும் புளி மிகவும் குறைந்துள்ள அல்லது புளி நீக்கிய உணவே ஏற்றது. துவர்ப்பும் கசப்பும் மிக்க உணவு இந்நிலையில் உதவலாம்.



2. இரைப்பையிலுள்ள ஜீரணத் திரவங்களுக்கு சக்தி ஊட்டல் வாயில் இனிப்பு மிக்க உமிழ்நீரும், இரைப்பையில் புளிப்பு மிக்க ஜீரணத் திரவமும் சிறுகுடலில் கசப்பு மிக்க ஜீரணத் திரவமும் ஜீரணத்தின் பல்வேறு நிலைகளில் உதவுகின்றன. இவற்றில் ஏதேனும் ஒன்று அளவில் தற்காலிகமாகக் குறைந்தாலோ கூடினாலோ பாதகம் ஏற்படுவதில்லை. ஆனால் தொடர்ந்து குறைந்தோ கூடியோ இருந்தால் ஜீரணம் பாதிக்கப்படுகின்றது.


புளிப்புத் திரவங்களில் சக்தி குறைந்த நிலையில் அதற்குச் சக்தி கூட்ட புளிப்பு தூக்கலாக உள்ள புளிவற்றல் குழம்பு, புளி இஞ்சிப்பச்சடி, புளிமிளகாய்ப் பச்சடி போன்றவை அதிகம் உதவுகின்றன. புளிவற்றல் குழம்பும் புளிமிளகு குழம்பும் உணவு எளிதில் ஜீரணமாக உதவுகின்றது. ஆனால் இதில் ஒருவகையான புளியஞ்சாதம் தயாரிக்க உதவும் புளிக்காய் வற்றல் குழம்பு அதில் சேரும் நல்லெண்ணெய்யின் அளவு அதிகம் காரணமாக சில சமயம் சீக்கிரம் ஜீரணமாவதற்கு இடையூறு விளைவிக்கிறது. இந்த புளித்திரவத்தில் நன்கு ஊறிய சாதம் விதை விதையாக திமிர்த்து விடுவதும் மற்றோர் காரணம்.


 வயிற்றில் புளிப்பு மிகுதி அதிகமிருந்தாலோ எண்ணெய்யை ஜீரணிக்கும் சக்தி குறைந்திருந்தாலோ புளியஞ்சாதம் வெகுநேரம் வயிற்றில் சங்கடம் விளைவிக்கிறது. உடனுக்குடன் சூடான சாதத்தில் கலந்து உடன் சாப்பிடுவதாலும் நல்லெண்ணெய்யையும் புளிக்குழம்பையும் அளவில் குறைத்துச் சேர்ப்பதாலும் இந்த சங்கடத்தை ஓரளவு குறைக்கலாம். வயிற்றில் புளிப்பு அதிகமுள்ளபோது இவை தவிர்க்கத் தக்கவையே.



3. பெருங்குடலில் மலமும் வாய்வும் தங்காமல் வெளியேறச் செய்தல் சிறுகுடலிலும், பெருங்குடலிலும் நடைபெற வேண்டிய ஜீரணப் பணியின் இறுதிநிலைகள், சுறுசுறுப்புடன் நிறைவேற புளி உதவுகின்றது. இந்நிலையில் வாயு வயிற்றில் பொருமி தங்காமலும் பழைய மலம் தங்காமலும் வெளியேற லேசான மலமிளக்கியாகவும் வாயு அகற்றியாகவும் புளி உதவுகின்றது.
பழைய புளி 10 கிராம், சூரத்து நிலாவரை 3 கிராம், கொத்துமல்லி விதை 3 கிராம், 240 மில்லி லிட்டர் கொதிக்கும் வெந்நீரில் இரண்டு மணிநேரம் ஊற வைத்து காய்ச்சி வடிகட்டி அதில் சர்க்கரை மூன்று ஸ்பூன் சேர்த்துச் சாப்பிட வேதனையில்லாமல் மலமிளகிப் போகும். புளியை கொதிக்கும் வெந்நீரிலிட்டு கரைத்து வடிகட்டி அதில் பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட சீதபேதி, இரத்தக்கடுப்பு நிற்கும்.


புளியையும் உப்பையும் சம அளவில் கலந்து பிசைந்து சிறிது தேன் சேர்த்து இளக்கி பஞ்சில் தோய்த்து உள் நாக்கில் தடவிக் கொள்ள அதன் வளர்ச்சி குறையும். புளியை நீரில் கரைத்து அதில் மிளகு, கிராம்பு, ஏலம் இம்மூன்றையும் சிறிது தூளாக்கி கலந்து சர்க்கரை, பச்சைக் கற்பூரம் சேர்த்துச் சாப்பிட சூட்டினால் ஏற்படும் தலைவலி, கண் எரிச்சல் நீங்கும், பசி உண்டாகும், ருசியின்மையை மாற்றும். புளியையும் கரிசலாங்கண்ணியையும் சமஅளவு சேர்த்து அரைத்து 1 2 கொட்டைப்பாக்கு அளவு சாப்பிட குத உறுப்பு வெளித்தள்ளல்
(Rectal Prolapse) நின்றுவிடும். புளியைத் தண்ணீரில் கரைத்து உப்பும், சுக்குத் தூளும் சேர்த்து கொதிக்க வைத்து சூடாக பற்றுபோட ஊமைக்காயமாக ஏற்பட்ட இரத்தக்கட்டு வலி நீங்கும்.


புளியிலையையும், வேப்பிலையையும் சேர்த்துக் கொதிக்கவைத்த வெந்நீர் விட்டு கழுவி வர ஆறாதபுண்ணும் ஆறும். புளியிலையை இடித்து கொதிக்கவைத்த தண்ணீரைக் கொண்டு ஒத்தடம் கொடுப்பதும், புளியிலையை அரைத்துப் பற்றிடுவதும் கீல்வாயு (குதிகால்) வீக்கத்தைக் குறைக்கும். புளியம் பூவை நெய் விட்டு வதக்கி துவையல் செய்து உண்ண நல்ல பித்த சமனமாகும். பூவை நசுக்கித் தண்ணீர் விட்டு அரைத்து கண்ணைச் சுற்றி பூசி வர கண் சிகப்பு மாறும்.


பழத்தின்மேல் ஓட்டை சுட்டு சாம்பலாக்கி தண்ணீரில் கெட்டியாக கரைத்து வயிற்றின் மேல்புறத்தில் தடவ கல்லீரல் வீக்கம் தணியும். பட்டை சாம்பலை நிறைய தண்ணீர்விட்டு கலக்கி வடிகட்டி அதைக்கொண்டு வாய்க்கொப்பளிக்க தொண்டை வேக்காளம் நீங்கும். பழத்தின் மேல்ஓட்டை பொடித்துத் தூளாக்கி பல்துலக்கி வர பற்களின் ஈறுகள் வலுப்பட்டு பல் இறுகும். மேல் ஓடு ஒருபங்கு, ஜீரகம் மூன்றுபங்கு பனங்கற்கண்டு நான்கு பங்கு சேர்த்து தூளாக்கி வைத்துக் கொண்டு அதில் அரை ஒரு ஸ்பூன் அளவு காலை மாலை சாப்பிட்டு வர நாட்பட்ட சீதபேதியும், கிராணியும் நீங்கும்.


எஸ். சுவாமிநாதன், டீன்
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)


***
ts கே.கீதா, ஒண்டிப்புதூர் - கோவை.
***


"வாழ்க வளமுடன்"
      

பொது அறிவு

Mohandass Samuel's photo.


Mohandass Samuel's photo.
Mohandass Samuel's photo.
Mohandass Samuel's photo.




Mohandass Samuel's photo.

 



















***
ts dmdsadv
***

"வாழ்க வளமுடன்"
      

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "