...

"வாழ்க வளமுடன்"

06 ஜூன், 2011

பொடுகு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம் !!!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


1. தலையில் புண் அல்லது வெட்டுகாயம் இல்லாமல் இருந்தால் செலெனியம் சல்ஃபைடு அல்லது ஜிங்க் பைரிதியோன் என்ற மருந்துள்ள சாம்பை பய்னபடுத்தி தலையை சுத்தம் செய்யலாம். இது பொடுகு பெருகுவதை தடுக்கும். புண் இருந்தால் இதை பயன்படுத்தக்கூடாது.


2. சாலிசிலிக் அமிலம் சல்பர் கலந்த சாம்புகளை பயன்படுத்தலாம்.

-பிடிரோஸ்போரம் ஓவல்- என்ற நுண்னுயிர் கிருமியால் ஏற்படும் பொடுகு தொல்லைக்கு டாக்டரை பார்கவும்.


3. சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்கனும். அப்புறம் 15நிமிஷம் கழித்து குளிக்கனும்

4. பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிஷம் கழித்து குளிக்கவும்.

5. தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம்

6. வாரம் ஒரு முறையாவது நல்லண்ணை தேய்த்து குளிக்கனும்.

7. பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிச்சால்
பொடுகுக்கு ரெம்ப நல்லது

8. வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.

9. அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து நல்லா காய்ச்சி அப்புறம் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்

10. வேப்பிலைசாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்கலாம்
11. வசம்பு பவுடரை தேங்காய் எண்யெயில் ஊறவைத்து தேய்கலாம்

12. தலைக்கு குளித்தபின்பு தலையை துவட்டாமல் கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு குளித்து அதன்பின்பு துவட்டி கொள்ளலாம்.

13. மருதாணி இலையை அரைக்கனும். அதனுடன் கொஞ்சம் தயிர், எழுமிச்சை சாறு கொஞ்சம் சேர்கனும். இந்த கலவையை தலையில் தேய்கனும்.

14. வேப்பிலை கொஞ்சமும் அதனுடன் கொஞ்சம் மிளகையும் சேர்த்து நல்லா அரைத்து தலையில் தேய்த்து 1மணி நேரம் ஊரவைத்து பின்பு குளிக்கனும்.

15. தேங்காய் எண்ணையுடன் வேப்பை என்ணையும் சேர்த்து காய்ச்சி தேய்த்து வந்தால் பொடுகு நீங்கும்.

16. நெல்லிமுள்ளி, வெந்தயம், சிறிது மிளகு இவற்றை ஊறவைத்து மைபோல அரைத்து தலையில் தடவி ஒரு மணிநேரம் ஊறிய பிறகு, நன்கு அலசினால் பொடுகு தொல்லை மறையும்.

17. நீலகிரி தைலத்தை சூடாக்கி தலையில் தடவி, வெந்நீரில் ஒரு பெரிய துவாலையை நனைத்து தலையில் கட்டி விடுங்கள். பிறகு நன்கு அலசி விடவும்.

18. தேங்காய் எண்ணெயுடன் சிறிது கற்பூரத்தை போட்டு வைத்து, அந்த எண்ணெயை தொடர்ந்து தேய்த்து வந்தால் பொடுகு மறைந்துவிடும்.

19. பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.

20. அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்


**

மேலும் சில குறிப்புகள் :

*மிளகு தூளுடன் பால் சேர்த்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் ஊறிய பின் குளித்தால், பொடுகு தொல்லை நீங்கும்.

*வெந்தயத்தை தலைக்கு தேய்த்து குளித்தால், உடல் உஷ்ணம் குறைவதுடன் பொடுகு தொல்லை நீங்கும்.

*தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு அல் லது சீயக்காய் தேய்த்து குளித்தால், பொடுகு நீங்கும்.

*வேப்பிலை கொழுந்து, துளசி ஆகியவற்றை நைசாக அரைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

*வசம்பை நன்கு பவுடராக்கி, தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து, அந்த எண்ணெயை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு மறைந்து போகும்.

* எலுமிச்சம் பழச்சாற்றுடன், தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து வந்தாலோ அல்லது எலுமிச்சம் பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சை பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு குளித்தாலும் பொடுகு நீங்கும்.

*தலைக்கு குளிக்கும் போது, கடைசியாக குளிக்கும் தண்ணீரில், வினிகர் கலந்து குளித்தால், பொடுகு நீங்கும்.

*நெல்லிக்காய் தூள், வெந்தயப் பொடி, தயிர் மற்றும் கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர பொடுகு நீங்கும்.

*வாரம் ஒரு முறை, மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்தால், பொடுகு தொல்லை நீங்கும்.

*தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகு பிரச்னை நீங்கும்.

*தேங்காய் பால் எடுத்த பின் கையை தலையில் நன்றாகத் தேய்த்து, சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசினால் பொடுகு, மறைந்து விடும்.

*முதல்நாள் சாதம் வடித்த தண்ணீரை எடுத்து வைத்து, மறுநாள் அதை தலையில் தேய்த்து குளித்தால், பொடுகு நீங்கும்.

*தயிர், முட்டை மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளிக்க பொடுகு மறையும்.

*துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம்பழச்சாற்றுடன் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு பிரச்னை நீங்கும்.


* 4ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, 4 ஸ்பூன் நல்ல தரமான சியக்காய் பவுடர், 2 கப் மருதாணி பவுடர், 1 எலுமிச்சை பழ தோல், 1 ஆரஞ்ப்பழத்தோல், 2ஸ்பூன் வேப்பிலை பொடி அனைத்தையும் ஒன்றாக கலந்து 1கப் தயிருடன் கலந்து தலைக்கு வாரம் ஒரு முறை தேய்த்துக் குளித்தால் பொடுகு போய்விடும்.

***


கூந்தல் மிருதுவாக இருக்க-

*வாரம் ஒரு முறை மருதாணி இலையை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

*நெல்லிக்காயை பாலில் வேகவைத்து, கொட்டை நீக்கிவிட்டு மசித்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து குளித்தால், கூந்தல் மிருதுவாக இருக்கும்.

*டீ டிகாஷனில் சிறிதளவு எலுமிச்சம்பழச்சாறு கலந்து தலையில் தேய்த்து குளித்தால், கூந்தல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.



***
thanks Mohamed ali
***




"வாழ்க வளமுடன்"

2 comments:

பெயரில்லா சொன்னது…

இதில பலது செய்து பார்த்திருகிறேன். இலை ரொம்பவே எரிச்சலைத் தரும். மிளகும் அப்படிதான். பசலைக் கீரை சைனஸ் வீசிங் / ஆஸ்த்மா உள்ளவர்களுக்கு ஆகாது. அதனால் தலையை ஊறவைக்காது உடனேயே அலசினால் நல்லது. பசலை கீரையை ஒரு முறை தேய்த்தாலே ஆறு மாதத்திற்கு பொடுகு தொல்லை வராது.

prabhadamu சொன்னது…

//// அனாமிகா துவாரகன் கூறியது...
இதில பலது செய்து பார்த்திருகிறேன். இலை ரொம்பவே எரிச்சலைத் தரும். மிளகும் அப்படிதான். பசலைக் கீரை சைனஸ் வீசிங் / ஆஸ்த்மா உள்ளவர்களுக்கு ஆகாது. அதனால் தலையை ஊறவைக்காது உடனேயே அலசினால் நல்லது. பசலை கீரையை ஒரு முறை தேய்த்தாலே ஆறு மாதத்திற்கு பொடுகு தொல்லை வராது.////



நன்றி அனாமிக்கா..... நான் படித்ததை இதில் பதித்தேன்....

அதனை சரியாக சொல்லி உங்கள் அனுபவத்தையும் இதில் பகிர்ந்துக் கொண்டத்துக்கும்,


மேலும் டிப்ஸ் சொன்னதுக்கும் மிக்க நன்றி.....


:)

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "