...

"வாழ்க வளமுடன்"

06 ஜூன், 2011

விலங்குகளின் 2 வகைகள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

பூமியில் வாழும் உயிரினங்களை அடிப்படை யாகக் கொண்டு தாவர உலகம், விலங்கு உலகம் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இவற்றில், தாவர உலகத்தைவிட விலங்கு களின் உலகம் மிகப்பெரியது. தாவரங்களையோ அல்லது பிற விலங் குகளையோ உணவாக உட்கொண்டுதான் விலங்கு கள் தங்களுக்கான சக்தியைப் பெறுகின்றன.

விலங்குகளை இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

1. முதுகெலும்பு உள்ளவை,

2. முதுகெலும்பு அற்றவை.

*

முதுகெலும்பு இல்லாதவை

பெரும்பாலான விலங்கினங்கள், முதுகெலும்பு அற்ற வையே. நீருக்கு அடியில், நிலத்துக்கு அடியில், நிலத்துக்கு மேல், பிற விலங்கு களின் உடலில் ஒட்டுண்ணிகளாக பல்வேறு விதமான இடங்களில் இவை வாழ்கின்றன. இவற்றை, கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.

கடல்பஞ்சு போன்றவை

இவை, கடலில் வாழ்பவை. இவற்றுக்கு உடல் உறுப்புகள், தசை, நரம்புகள் எதுவும் கிடையாது. கடல் நீருடன் சேர்த்து உயிரினங்களை உட் கொண்டு, நீரை மட்டும் வெளியேற்றிவிடும். `போரிபெரா' என்பது இதன் விலங்கியல் பெயராகும். இவை, இரண்டு முறைகளில் இனப்பெருக்கம் செய் கின்றன. ஒன்று, பஞ்சுகள் அப்படியே இரண்டாகப் பிரிந்து, தள்ளிச் சென்று, இரண்டு வெவ்வேறு உயிர் களாக வாழத் தொடங்கிவிடும். மற்றொன்று, விந்து களையும், முட்டைகளையும் இவை தண்ணீரில் போட்டு விடுகின்றன. அவை ஒன்று சேர்ந்து கருவுற்று, மற்றொரு பஞ்சாக மாறும்.

பவளம், ஜெல்லி மீன்கள் போன்றவை

இவையும் பெரும்பாலும் கடலில் வாழ்பவையே. இவற்றுக்கு வயிறு உண்டு. உடலின் சில நீட்சிகள் மூலம் தம்மை ஏதோ தொடுகிறது என்பதை இவற் றால் உணர முடியும். இப்படி தம்மைத் தொடுகின்ற உயிரினங்களைப் பிடித்து, உடலுக்கு வெளியிலேயே அவற்றை ஜீரணிக்கத் தொடங்குகின்றன. பின்னர், அதை விழுங்கி, மீதியை வயிற்றுக்குள்ளே ஜீரணம் செய்கின்றன. இவற்றை, `ஸ்னிடேரியா' மற்றும் `டெனோபோரா' என்று இரண்டாகப் பிரிக்கின்றனர்.

ஒட்டுண்ணிப் புழுக்கள்

இவை விலங்குகளின் உடல்களில், அவற்றின் ஜீரண மண்ட லத்தில், குடல்களுக்கு அருகில் வாழ்பவை. விலங்கு களின் உடலுக்கு உள்ளே கிடைக்கும் உணவை உண்கின்றன. இவற்றுக்கு குழாய் போன்ற உடல் அமைப்பும், அதில், தலை மற்றும் வாய்ப்பகுதியும் உள்ளன. கழிவுகளை வெளியேற்று வதற்காக பின்புறம் ஒரு துவாரமும் உள்ளது. ஆண், பெண் என இரண்டு பாலுறுப்புகளுமே இவற்றுக்கு உண்டு. வெவ் வேறு சமயங்களில் இவை ஆணாகவும், பெண்ணாகவும் நடந்து கொள்கின்றன. `ஹெல்மிந்தெஸ்' என்பது இவற்றின் விலங்கியல் பெயராகும்.

புழுக்கள்

மண்புழு, அட்டை போன்றவை இதில் அடங்கும். இவை ஒட்டுண்ணிப் புழுக்கள் போல இல்லாமல், புற உலகில் வசிக்கின்றன. தலை, வாய், கழிவுகளைத் தள்ளும் ஓட்டை போன்ற அமைப்புகள் இவற்றுக்கு உண்டு. மேலும், அடிப்படை ரத்த ஓட்ட மண்டலமும் உள்ளது. இவற்றின் உடலின் மேற்புறத்தில் நிறைய துவாரங்கள் உள்ளன. அவற்றின் மூலம் காற்றில் உள்ள ஆக்சிஜனை உறிஞ்சிக் கொள்கின்றன.

பூச்சிகள்

முதுகெலும்பு இல்லாத விலங்குகளில் பூச்சிகள் தான் அதிக எண்ணிக்கையில் உள்ளன. எறும்பு, ஈ, வெட்டுக்கிளி, நண்டு என இது மிகப்பெரிய கூட்டம். விலங்கியலில் இவற்றுக்கு `ஆர்த்ரோபோடா' என்று பெயர். இந்த வகை விலங்கு களுக்கு கால்களும், உடம்பைச் சுற்றி கடினமான ஒரு கூடும் உண்டு.

நத்தை, ஆக்டோபஸ் போன்றவை

இவை பெரும்பாலும் கடலில் வாழ்பவை. ஜீரண மண்டலம், ரத்த ஓட்ட மண்டலம், சுவாச மண்டலம் ஆகியவற்றுடன் மைய நரம்பு மண்டலமும் இவற்றுக்கு உண்டு. இவற்றின் விலங்கியல் பெயர், `மொலஸ்கா' என்பதாகும்.

நட்சத்திர மீன் போன்றவை

இவற்றின் விலங்கியல் பெயர், `எக்கினோடெர்மேடா' என்பதாகும். இவையும் கடல்வாழ் பிராணியே.

**

முதுகெலும்பிகள்

நன்றாக உருவான எலும்பு மண்டலம், முதுகெலும்பு கொண்ட உயிரினங்கள் இந்த பிரிவைச் சேர்ந்தவை. ஜீரண மண்டலம், ரத்த ஓட்ட மண்டலம், மைய நரம்பு மண்டலம், சுவாச மண்டலம் போன்றவையும் இவற்றுக்கு உண்டு. கீழ்க்கண்ட 5 வகைகளில் இவற்றை வகைப் படுத்தலாம்.

1. ஊர்வன - பாம்பு, பல்லி போன்றவை

2. நீர் மற்றும் நிலத்தில் வாழ்பவை - தவளை, முதலை

3. மீன்கள்

4. பறவைகள்

5. பாலூட்டிகள் - அனைத்து நான்கு கால் விலங்குகள், மனிதன்

திமிங்கலமும், டால்பினும் நீரில் வசித்தாலும், இவை பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவை. பிற பாலூட்டிகள் நிலத்தில் மட்டுமே வசிப்பவை. பறவைகள் அனைத்துக்கும் இறக்கைகள் உண்டு. நெருப்புக்கோழி, ஈமு, கிவி போன்ற சில பறவைகளைத் தவிர அனைத்துமே பறக்கக் கூடியவை.

அனைத்து முதுகெலும்பிகளுமே பால் இனப்பெருக்கம் செய்பவை. இவற்றில் ஆண், பெண் என்ற தெளிவான வரையறை உண்டு. பாலூட்டிகள் தவிர்த்து அனைத்து முதுகெலும்பிகளுமே முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பவை. பாலூட்டிகளின் குழந்தைகள், தாயின் வயிற்றுக்குள்ளேயே வளர்ந்து, குறிப்பிட்ட காலகட்டத்தில் வெளியே தள்ளப்படுகின்றன.***
நன்றி தினதந்தி
***
"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "