இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
நீரிழிவு, கொழுப்பு அதிகமா? கவலையே படாதீங்க!
லவங்க பட்டை பற்றி கேள்விப்பட்டிருப் பீர்கள். சிறந்த மருத்துவ குணம் கொண்டது. ஒரு ஸ்பூனில் கால் பங்கு, அதாவது, ஒரு கிராம் அளவிற்கு உட்கொண்டால் போதும், நீரிழிவு நோய் இருந்த இடம் தெரியாமல் போய் விடும். ரத்தத்தில் கொழுப்பு அளவு குறைந்து விடும்.
இவ்வாறு சொல்லியிருப்பவர்கள் யார் தெரியுமா?அமெரிக்க விவசாய துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தான். லவங்க பட்டையின் மருத்துவ குணம் பற்றி நீண்ட ஆராய்ச்சி செய்து இவ்வாறு கண்டுபிடித்து இருக்கின்றனர்.
நீரிழிவு முற்றிய நிலையில் உள்ள 60 நோயாளி களுக்கு, தினமும் ஒரு கிராம் முதல் ஆறு கிராம் வரை லவங்க பட்டையை கொடுத்து வந்தனர். 40 நாட்களுக்குப் பின்னர் அவர்கள் ரத்தம் சோதித்து பார்க்கப்பட்டது.
* 18 முதல் 29 சதவீதம் சர்க்கரை அளவு குறைந்து இருந்தது.
* 23 முதல் 30 சதவீதம் கொழுப்பு அளவு குறைந்து இருந்தது.
* இதய நோய் மற்றும் வாதம் ஏற்படுத்தும் கொழுப்பின் அளவு ஏழு முதல் 23 சதவீதம் குறைந்து இருந்தது.
அமெரிக்காவில் மேரிலேண்டில் உள்ள விவசாயத்துறையின் மனித ஆராய்ச்சி மற்றும் சத்து மையத்தைச் சேர்ந்த டாக்டர் ரிச்சர்ட் ஆன்டர்சன் என்பவர் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டார்.இந்த ஆய்வின் அடிப்படையில் தினமும் கால் அல்லது அரை டீஸ்பூன் அளவு லவங்க பட்டை பொடியை சேர்த்துக் கொள்ளுமாறு நீரிழிவு நோயாளிகளுக்கு பரிந்துரைக்கிறார் ரிச்சர்ட் .
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிர் ரசாயன பேராசிரியர் டான் கிரேவ்ஸ் என்பவரும் லவங்க பட்டையின் மருத்துவ குணத்தை ஆதரித்துள்ளார். இன்சுலினுக்கு சமமானது லவங்க பட்டை என்கிறார் அவர்.
நம் நாட்டில் மாமிச உணவை சமைப்பவர்கள் அதில் லவங்க பட்டையை தவறாமல் சேர்ப்பர். கொழுப்பு சத்து சேராமல் தடுக்கத்தான் அவ்வாறு சேர்க்கின்றனர் என்பது இந்த ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது.
***
thanks Mohamed Ali Blog
***
"வாழ்க வளமுடன்"
0 comments:
கருத்துரையிடுக