...

"வாழ்க வளமுடன்"

06 ஜூன், 2011

விருத்தசேதனம் / சுன்னத்து ( ஆண்குழந்தைகளுக்கு )

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
*
(ஆண்குறியின் நுனித்தோலை நீக்குதல்)





பிறந்த ஆண்பிள்ளைகளின் ஆண்குறியின் முனையில், உறை அல்லது தொப்பி போன்ற நுனித்தோல் காணப்படும். விருத்த சேதனத்தின் போது, ஆண்குறியின் முனைப்பகுதி வெளியில் தெரியும் வண்ணமாக, நுனித்தோல் அறுவைசிகிச்சையின் மூலம் நீக்கப்படும்.



•குழந்தை பிறந்த இரண்டிலிருந்து மூன்று வாரங்களுக்குள் விருத்தசேதனம்/சுன்னத்து செய்வது மிக நல்லது. ஆனால் பொதுவாக இந்த முறையானது பிள்ளை பிறந்த முதல் 10 நாட்களுக்குள் செய்யப்படும். (அநேக வேலைகளில் பிறந்த 48 மணி நேரத்திற்குள்ளும் செய்யப்படும்)




•குறைப்பிரசவத்தில் பிறந்தக் குழந்தைகள் மற்றும் உடல் நலக் குறைவு உள்ள குழந்தைளுக்கு மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டப் பிறகே சுன்னத்து செய்யப்படும்




•ஆண்குறியில் பிரச்சனை உள்ள குழந்தைகட்கு, அப்பிரச்சனை அறுவைசிகிச்சை முறையில் சரிசெய்தப் பிறகே விருத்த சேதனம் செய்யப்படுகிறது. ஏனெனில், விருத்தசேதனத்தின் போது நீக்கப்படும் நுனித்தோலானது சில சமயங்களில், குறைபாடுடன் உள்ள ஆண்குறியினைச் சரிசெய்ய பயன்படும்.





**




விருத்தசேதனம் பண்ணப்பட்ட ஆண்குறியினை பராமரித்தல்

•ஒவ்வொரு முறை குளிப்பாட்டும் போதும் பதமான சுடுதண்ணீர் மற்றும் சோப்பு கொண்டு கழுவவேண்டும்.




•குழந்தைகளுக்கு அசெளகரியங்கள் ஏற்படுத்தாவண்ணம் அவர்களை கவனமாக பராமரிக்க வேண்டும்




•நுனித்தோல் எடுக்கப்பட்ட இடத்தில் கட்டுப்போடப்பட்டிருப்பின் தேவையின் அடிப்படையில புதியக் கட்டினை போட்டுக்கொள்ளலாம்




•விருத்தசேதனத்தின் போது ஏற்படும் காயம் ஆற 7 முதல் 10 நாட்கள் வரை ஆகும். அதுவரை அப்பகுதி ரணமாக அல்லது மஞ்சள் நிறத்தில் காணப்படும்.





*



கீழ்க்காணும் அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகவும்



1. தொடர்ந்து இரத்தக்கசிவு இருத்தல்


2. ஆண்குறியின் முனை சிவப்பாக மாறி 3 நாட்களில் இது மிகவும் மோசமாகும் போது.


3. காய்ச்சல் இருந்தால


4. நோய் தொற்று வந்ததற்கான அறிகுறிகள் காணப்பட்டால் அதாவது சீழுடன் கூடிய சிவப்பு நிற சிறு பிளவைகள் போன்றவை இருந்தால்.


5. விருத்தசேதனம் செய்த 6 முதல் 8 மணி நேரத்திற்குள் சிறுநீர் கழிக்கவில்லை என்றால்.


***
thanks indg
***



"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "