...

"வாழ்க வளமுடன்"

07 செப்டம்பர், 2015

அத்திப்பழம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

Mohandass Samuel's photo.
 
அத்திப்பழம் சீக்கிரம் அழுகிப்போகும் தன்மை உடையதால், பெரும்பாலும் காய்ந்த வடிவத்திலேயே கிடைக்கிறது. இந்த பழத்தில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பைட்டோ நியூட்ரியன்ட்ட...ுகளும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும், வைட்டமின்களும், தாதுக்களும் அதிகமாக உள்ளன.

 குறிப்பாக உலர் அத்திப்பழத்தில் இன்னும் நிறைய நன்மைகள் நிறைந்திருப்பதோடு, இன்னும் சுவையானதாக இருக்கும். எனவே இந்த பழத்தை அதிகம் உணவில் சேர்த்தால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். காய்ந்த அத்திப்பழங்கள் இயற்கையான மலமிளக்கியாக செயல்படுகிறது. நார்ச்சத்து அதிகமாக இருக்கும் இதை உண்ணுவதால், வயிற்றுப் பிரச்சனைகள் சீராகிறது. ஒவ்வொரு முன்று கிராம் பழத்திலும் 5 கிராம் நார்சத்து இருப்பது இதன் சிறப்பம்சம்.


 நார்ச்சத்து அதிகமிருக்கும் பழங்களையும், உணவுகளையும் உண்ணுதல் எடை குறைப்புக்கு மிகவும் உதவும். ஆகவே நார்ச்சத்து அதிகமாக உள்ள அத்திப் பழம் எடை குறைப்புக்கு மிகவும் உதவுகிறது. நார்ச்சத்து அதிகமுள்ள அத்திப்பழத்தில் பெக்டின் என்ற கரைந்த நார்ச்சத்து உள்ளது. இது ஜீரணத்தின் போது உடலின் உள்ளே உள்ள கொழுப்பை வெளியேற்றுகிறது. தினமும் அத்திப்பழம் சாப்பிடுவது கொழுப்பைக் குறைக்க உதவும். அத்திப்பழத்தில் ஃபீனால் மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன.


 இவை இயற்கையாகவே இதயத்திற்கு வலுசேர்த்து, இதய நோய்களை தவிர்க்க உதவும் சத்துக்களாகும். அத்திப்பழத்தில் உள்ள நார்ச்சத்து குடலைச் சுத்தப்படுத்தி, கேடு விளைவிக்கும் நச்சுப் பொருட்களை வெளியேற்றி புற்றுநோயை, குறிப்பாக குடல் புற்றுநோயை தடுக்கிறது. அத்திப்பழத்தில் உள்ள நார்ச்சத்து மார்பக புற்றுநோயை தடுக்கிறது.


 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் கண்டிப்பாக அதிக நார்ச்சத்து உணவுகளை உட்கொள்ள வேண்டும். அத்திப்பழ மரத்தின் இலைகளில் கூட நார்ச்சத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீரிழிவு நோய் எதிர்ப்பு சத்துக்கள் நிறைந்த அத்திப்பழ இலைகளை உட்கொள்வதால், இன்சுலின் சுரப்பதை சீராக வைத்துக் கொள்ளலாம்.


அத்திப் பழங்களில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளது. எனவே அத்திப் பழங்கள் உட்கொள்வது உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்கும். ஜீரணத்திற்கு அத்திப்பழங்கள் பெரிதும் உதவுகின்றன. தினமும் அவற்றை உட்கொள்வது சிறப்பான ஜீரணத்திற்கு உதவி செய்து மூலநோயில் இருந்து காக்கிறது. சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களோ, சிறுநீரகக் கற்கள் பிரச்சனையோ கொண்டவர்கள் அத்திப்பழத்தை தவிர்ப்பது நல்லது


***
fb
***


"வாழ்க வளமுடன்"
      

இந்த நாள் இனிய நாளாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "