...

"வாழ்க வளமுடன்"

07 செப்டம்பர், 2015

ஆரோக்கியமான அறுசுவை உணவு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
Mohandass Samuel's photo.


அறுசுவை உணவை ருசிக்க மட்டும் சமைத்தவர்கள் அல்ல நமது முன்னோர்கள். அதை மருந்தாக உட்கொண்டவர்கள். 1 ‪#‎சப்பாத்தி‬ / ‪#‎ரொட்டி‬

 வட இந்திய மக்களின் தினசரி உணவு சப்பாத...்தி, ரொட்டி. எண்ணெய் இல்லாமல் சமைத்து சாப்பிடப்படும் இந்த உணவு உடல் வலிமைக்கு மிகவும் சிறந்த உணவு. சக்தியை அதிகரிக்க சப்பாத்தி உதவுகிறது. உடல் எடை குறைக்க ஓர் சிறந்த உணவு சப்பாத்தி / ரொட்டி ஆகும்.


 

 2 ‪#‎வெள்ளை‬ ‪#‎சாதம்‬

 சப்பாத்தி எப்படி வட இந்தியர்களுக்கோ, அப்படி தான் சாதம் தென்னிந்தியர்களுக்கு. இது ஒரு பிரதான உணவு. சுட சுட சாப்பிட்டாலும் சரி, நீரூற்றி மறுநாள் நீராகாரமாக சாப்பிட்டாலும் சரி, நிறைய உடல் சக்தியை தரவல்லது சாதம். இதை விட கைக்குத்தல் அரிசி மேலும் ஆரோக்கியமானது.3 ‪#‎கூட்டு‬ ‪#‎உணவுகள்

பல காய்கறிகளை சேர்த்து சமைக்கும் இந்திய கூட்டு உணவுகள் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இவை, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை ஒரே உணவின் மூலமாக தரக்கூடியவை.4 ‪#‎தயிர்‬

 தயிரில் இருக்கும் கால்சியம் மற்றும் நல்ல பாக்டீரியாக்கள் செரிமானத்தை சீராக்க உதவுகிறது. அதனால் தான் உணவின் கடைசியில் கட்டாயம் தயிர் சேர்க்கும்படி நமது முன்னோர்கள் வலியுறுத்தி வந்துள்ளனர்.5 ‪#‎பயிறு‬ ‪#‎வகை

உணவுகள் பயிறு வகை உணவுகள் பெண்களுக்கு மிகவும் முக்கியமான உணவு. தினசரி பயிறு வகை உணவுகளை உட்கொள்வதால் பெண்களுக்கான பிரச்சனைகளுக்கு தீர்வுக் காணலாம். பயிறு உணவுகளில் போலேட், வைட்டமின் பி1 மற்றும் மினரல்ஸ் நிறைய இருக்கின்றன.


 6 ‪#‎வரமிளகாய்‬

 சிவப்பு மிளகாய் அல்லது வரமிளகாய். இதில் வைட்டமின் ஏ, பி, சி போன்றவை அதிகம் இருக்கின்றன. வரமிளகாயை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடையை விரைவில் குறைக்க முடியுமாம். அதாவது கொழுப்பு அதிகமாக சேராமலும், உடலில் இருக்கும் கொழுப்பையும் கரைக்க முடியும். 7 ‪#‎பன்னீர்‬

 பன்னீரில் கொழுப்பு இருக்கிறது என பலரும் சாப்பிட மறுப்பதுண்டு. இது உண்மை எனிலும் கூட, இந்திய உணவுகளில் ருசியும், ஆரோக்கியமும் அதிகம் இருக்கும் உணவும் பன்னீர் தான். இதில், கால்சியம் சத்து அதிகமாக இருக்கிறது. இது உடல் நலனையும் அதிகரிக்கவும், எலும்பு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படாமலும் இருக்கவும் உதவுகிறது.


 8 ‪#‎இட்லி‬

 உலகின் சிறந்த ஆரோக்கியமான உணவென்று பெயர்பெற்றது இட்லி. கொழுப்புச்சத்து இல்லாத உணவு. இதில் புரதம் இருக்கிறது. செரிமான கோளாறு ஏற்படாமல் இருக்க உதவும் உணவு இட்லி.


 9 ‪#‎கறிவேப்பிலை‬

 சாம்பார் முதல் ரசம் வரை அனைத்து உணவிலும் நாம் சேர்க்கும் உணவுப் பொருள் கறிவேப்பிலை. இதிலுள்ள இரும்புச்சத்து உடல்நலனை அதிகரிக்க, நோய் எதிர்ப்பை வலுவாக்க உதவுகிறது.

***
tu fd
***


"வாழ்க வளமுடன்"
      

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "