...

"வாழ்க வளமுடன்"

10 ஆகஸ்ட், 2011

சிறுநீரில் சீழ் வெள்ளை ( மூலிகை மருத்துவம் )

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


மது இனப்பெருக்க பாதையும், சிறுநீர்ப்பாதையும் ஒன்றாகவோ அல்லது ஒன்றோடு ஒன்று இணைந்தோ காணப்படுகின்றன. சிறுநீர் கழிப்பதற்கு மட்டுமின்றி, இனப்பெருக்கத்திற்கும் உதவும் இந்த பாதையில் மாதந்தோறும் பெண்களுக்கு மாதவிலக்கு திரவம் வெளியேறுவதும், ஆண்களுக்கு ஆணுறுப்பில் முன் தோலில் தோன்றும் ஒருவகையான கசிவு வெளியேறுவதும், அவ்வப்போது இயல்பாக நடைபெறுவது தான்.

ஆனால் இனப்பெருக்க பாதையை சுத்தமாக, சுகாதாரமாக வைக்கவில்லையெனில் இந்த பாதையில் எளிதாக கிருமித் தொற்று தோன்றிவிடும். இதனால் இனப்பெருக்க பாதையில் கசிவு அதிகம் ஏற்படுவதும், அந்த இடங்களில் ஒருவித கசகசப்பு மற்றும் துர்நாற்றமும் உண்டாகும். சிறுநீர் எந்தவிதமான கலப்புமின்றி வெளியேற வேண்டும்.

ஆனால் சிறுநீரில் கிருமித்தொற்று ஏற்பட்டாலோ, சிறுநீரில் புரதங்கள் அதிகமாக வெளியேறினாலோ இனப்பெருக்க பாதையில் வெள்ளை நிற கசிவும், நுரைத்துப் போன சிறுநீரும், தயிரைப் போன்ற கசடும் சிறுநீர் மற்றும் இனப்பெருக்க பாதையிலோ அல்லது உள்ளாடைகளிலோ ஒட்டி காணப் படும்.

இந்த கசடானது தோன்றி உடனே மறைந்துவிடும் இயல்புடையது. போதுமான அளவு நீர் அருந்தி, உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொண்டால் இது போன்ற தொல்லைகள் அதிகரிக்காது. ஆனால் சிறுநீர் பாதையில் தோன்றும் கிருமித்தொற்றை சரியாக கவனிக்காவிட்டாலோ அல்லது இனப்பெருக்க உறுப்பு மற்றும் சிறுநீர் பாதையை சுகாதாரமாக பராமரிக்காமல் விட்டாலோ கசிவானது அதிகரித்து, இனப்பெருக்க உறுப்பு, தொடை போன்ற பகுதிகளில் கடும் புண்ணையும், அரிப்பையும் உண்டாக்கி விடும். அத்துடன் சிறுநீரில் சீழும் வெளியேறி, சுரம் உண்டாகும்.


சிறுநீர்ப்பாதை மற்றும் இனப்பெருக்க பாதையில் தொற்று ஏற்பட்டு, அதனால் சிறுநீர் செல்லும் பொழுது வெள்ளை நிறமாக பால் போன்றோ, தயிர் போன்றோ, நூல் போன்றோ திரவம் வெளியேறுதலை சிறுநீரீல் சீழ் வெள்ளை என்றும், வெள்ளை என்றும் சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. ஆண் மற்றும் பெண்ணுக்கு தோன்றும் பால்வினை நோய்கள், சாதாரண கிருமித்தொற்றுகள், கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய், வீரியமிக்க வலி நிவாரணிகள், கடுமையான எதிர்உயிரி மருந்துகள் ஆகியவற்றை பயன்படுத்துதலால் மென்மையான இனப்பெருக்க மற்றும் சிறுநீர் பாதை திசுக்கள் பாதிக்கப்பட்டு, வெள்ளைப் படுதல் உண்டாகிறது.ஆண், பெண் என இருபாலருக்கும் வெள்ளை படுதல் உண்டாகிறது. இயல்பான வெள்ளைப்படுதல் சில நாட்களிலேயே மறைந்து விடுவதுடன், அரிப்போ, நாற்றமோ ஏற்படுவதில்லை. ஆனால் தொற்றினால் ஏற்பட்ட வெள்ளையினால் துர்நாற்றம், நிறமாற்றம் உண்டாவதுடன் தேவையற்ற பன்கிருமித்தொற்றும் ஏற்படுகிறது. இதற்கு முறையான ரத்தப்பரிசோதனையும், திசு பரிசோதனையும் அவசியமாகும். இனப்பெருக்க உறுப்புகளை கடுக்காய்ப் பொடி அல்லது படிகாரத் தண்ணீரால் அவ்வப்போது கழுவி, சுத்தம் செய்வது நல்லது.


கிருமித் தொற்று, சுகாதார குறைவு மற்றும் அதிக உடல் சூட்டினால் தோன்றும் வெள்ளைப்படுதலை நீக்கும் அற்புத மூலிகை ஓரிலை தாமரை. நெர்விலியா அரோகோயானா என்ற தாவரவியல் பெயர் கொண்ட ஆர்கிடேசியே குடும்பத்தை சார்ந்த தரைப்படர் கொடிகளின் இலைகள் உடல் சூட்டை தணிப்பதற்கு பெரிதும் உதவுகின்றன. இதன் இலைகளிலுள்ள பச்சையங்கள் மற்றும் ஈரப்பதம் குளிர்ச்சியை உண்டாக்கி, உணவுப்பாதை மற்றும் சிறுநீர்பாதை புண்களை ஆற்றுகின்றன. பிரŒவத்திற்கு பின் பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர் பாதை மற்றும் கருப்பை வாய்ப்பகுதியில் ஏற்படும் கிருமித் தொற்றுகளை நீக்குகின்றன.

5 இலைகளை சிறு, சிறு துண்டுகளாக வெட்டி, 1 லிட்டர் நீரில் போட்டு கொதிக்க வைத்து, 250 மிலியாக சுண்டியபின்பு வடிகட்டி, காலை மற்றும் மாலை உணவுக்கு முன்பு குடித்து வர பிரŒவத்திற்கு பின் தோன்றும் பல்வேறு வகையான கிருமித் தொற்றுகள் நீங்கி, உடல் சூடு தணியும். அதிக உடல் சூடு, கை, கால் எரிச்சல், அதனால் சிறுநீர்ப் பாதையில் தோன்றும் புண்கள், சிறுநீர் அடைப்பு, சொட்டு நீர் மற்றும் மூத்திர கிரிச்சரம் ஆகியன நீங்க ஓரிலை தாமரை, நெருஞ்சிமுள், நீர்முள்ளித் தண்டு, வெள்ளரி விதை, மாவிலங்கப்பட்டை, சோம்பு ஆகியவற்றை சம அளவு எடுத்து உலர்த்தி, பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

5 கிராமளவு தினமும் 2 வேளை இளநீர் அல்லது மோருடன் கலந்து சாப்பிட உடல் உஷ்ணம் குறையும். சிறுநீர் தொல்லை நீங்கும். ஓரிலைத் தாமரை இலைச்சாறு, பாதாம்பிசின் பொடி இரண்டையும் கலந்து மூன்று மணி நேரம் ஊற வைத்து குடித்து வர உடல் உஷ்ணம் குறைந்து, பல வகைப்பட்ட சிறுநீர் எரிச்சல் நீங்கும்.அயோடின் சத்து குறைபாடு உள்ளதாக மருத்துவர் கூறுகிறார். சைவ உணவுகளில் அயோடின் உள்ளதா?

வயலட் நிறமுள்ள பிஞ்சு கத்தரிக்காய், பச்சை, மஞ்சள் நிறமுடைய இலச்சகட்டை கீரை, கருஞ்சிவப்பு நிறமுடைய பசலை கீரை, சிவப்பு பொன்னாங்கண்ணி மற்றும் லெட்டூஸ் கீரையில் அயோடின் உள்ளது.

வைட்டமின்கள் நமக்கு பலவித நன்மைகளை பயக்கின்றன. ஆனால் வைட்டமின்களைப் போன்றே சில வேதிப்பொருட்கள் நம் உடலில் இருக்கின்றன. இவை வைட்டமின்கள் என்ற பெயரில் அழைக்கப்படா விட்டாலும், தங்கள் செயல்களிலும், தேவையிலும் வைட்டமின்களைப் போன்றே செயல் படுகின்றன.


நீரில் கரையக்கூடிய கோலின் பெரும்பாலான உணவுகளில் காணப்படுகிறது. டாரின் என்னும் அமினோ அமிலம் மாமிசம் மற்றும் கடல் உணவுகளில் காணப்படுகிறது. தசை வீக்கம், இதய வீக்கம் போன்றவற்றை கட்டுப்படுத்தும் கார்னிட்டின் என்னும் பொருளும் மாமிசம் மற்றும் பசும்பால், தாய்ப்பாலில் அதிகம் காணப்படுகிறது.


செல் பிரிதலை ஊக்குவிக்கும் மயோஜனோசிட்டால் என்னும் பொருள் சாராய வகையை சார்ந்த பொருள் தானியங்களில் மற்றும் குளுக்கோஸ் செல்களில் அதிகம் காணப்படுகிறது. ரத்த ஓட்டத்தை சீர் செய்யும் பயோபிளேவனாய்டுகள் புளிப்பான பழங்கள் மற்றும் தேநீரில் காணப்படுகிறது. வைட்டமின் ஈ போன்றே செயல்படும் கோஎன்சைம் கியு இனப்பெருக்கத்தை ஊக்குவிக்க உதவுகிறது.


இவைகள் நமக்கு பெருமளவு தேவைப் படாவிட்டாலும், குறைந்தளவிலாவது உடலுக்கு அத்தியாவசியமாக தேவைப்
படுகின்றது. இது போன்ற சத்துகள் சமைக்காத கீரை, காய்கறி மற்றும் உணவுகளில் ஏராளமான இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்


***
thanks டாக்டர்
***"வாழ்க வளமுடன்"

2 comments:

எனது கவிதைகள்... சொன்னது…

நல்ல தகவல்!

தங்களது
மினஞ்சல் முகவரியை தெரிவிக்கவும்

உண்மைவிரும்பி
மும்பை.

prabhadamu சொன்னது…

//// எனது கவிதைகள்... கூறியது...
நல்ல தகவல்!

தங்களது
மினஞ்சல் முகவரியை தெரிவிக்கவும்

உண்மைவிரும்பி
மும்பை.
/////


thanks :)

இந்த நாள் இனிய நாளாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "