...

"வாழ்க வளமுடன்"

10 ஆகஸ்ட், 2011

முள்ளம்பன்றியின் ஆங்கில பெயர் மற்றும் சில தகவல்கள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


முள்ளம்பன்றிகள் (Porcupine) தாவர உண்ணி வகையைச் சார்ந்த உடலில் நீண்ட முட்களையுடைய விலங்குகளாகும். முள்ளம்பன்றிகளுள் பல வகைகள் உள்ளன. இவற்றுள் இரண்டு பிரிவுகள் உள்ளன.

ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் காணப்படும் இனங்கள் ஹிஸ்ட்ரிசைடே (Hystricidae) என்ற விலங்கு குடும்பத்தைச் சேர்ந்தவை. அமெரிக்க கண்டத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் முள்ளம்பன்றி இனங்கள் எரிதிசோன்றிடே (Erethizontidae) என்ற விலங்கு குடும்பத்தைச் சார்ந்தவை.

இந்திய முள்ளம்பன்றி (Indian Porcupine) எனப் பொதுவாக அழைக்கப்படும் இனம் ஹிஸ்றரிக்ஸ் இன்டிகா (Hysterix indica) என்ற இனத்தை சார்ந்தவை.

இவை பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், வங்காளதேசம், இஸ்ரேல், சவுதி அரேபியா போன்ற நாடுகளிலும் பரவலாகக் காணப்படுகின்றன. இவை சிலவகை தாவரங்கள், கிழங்குகள், தானியங்கள் போன்றவற்றை உண்ணுகின்றன. அத்தோடு, தமது முட்களின் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகளைப் பெறுவதற்காக இவை எலும்புகளையும், நத்தை ஓடுகளையும் உண்ணுகின்றன.

இந்திய முள்ளம்பன்றிகளின் கர்ப்பக்காலம் 240 நாட்கள் ஆகும். பொதுவாக வருடத்திற்கு ஒரு தடவை 2 முதல் 4 குட்டிகள் போடுகின்றன.

இவை 70 செ.மீ. வரை நீளமும், 11 முதல் 18 கிலோகிராம் வரை வளரக்கூடியது. முள்ளம்பன்றியின் தோலில் நீண்ட கொத்து கொத்தாக கூர்முனையுடைய முட்கள் உள்ளன. நீண்ட மெல்லிய முட்களுக்குக் கீழாக குட்டையான, தடித்த முட்கள் அமைந்துள்ளன.


இவற்றுக்கிடையில் ஒலி ஏற்படுத்தக்கூடிய நீண்ட, உட்குடைவான முட்கள் காணப்படும். இந்த ஒலி எதிரிகளை எச்சரிப்பதற்கு உதவுகிறது.

முள்ளம்பன்றிகள் இரவிலேயே நடமாடித் திரிகின்றன. பகல்நேரங்களில் பாறைகளுக்கிடையிலுள்ள குகைகளில் அல்லது நிலத்தில் தாமே தோண்டிக் கொண்ட வளைகளில் காலத்தைக் கழிக்கின்றன.

இவற்றின் வளைகள் நீண்ட சுரங்கப் பாதையன்றையும் பெரிய உள்ளறை ஒன்றையும் கொண்டிருக்கும். இவ்வறையில் இருந்து வெளியேறுவதற்குப் பல சுரங்க வழிகள் காணப்படும். இவை விவசாயிகளின் தோட்டங்களையும், வீட்டுத் தோட்டங்களையும் தோண்டி நாசம் செய்கின்றன.

முள்ளம்பன்றிகள் தொந்தரவு செய்யப்பட்டால் அல்லது அச்சமுற்றால் விரைவாக பின்னோக்கி சென்று எதிரியை தன் பின்புற முட்களால் தாக்கும்.

அப்போது அதன் முட்கள் எதிரி விலங்கின் உடலினுள் ஆழமாக அமிழ்ந்து கடும் காயத்தை அல்லது மரணத்தை விளைவிக்கலாம். இவை மனிதர்களாலும், புலி, சிறுத்தை, காட்டுப்பூனை போன்ற பெரிய விலங்குகளாலும் வேட்டையாடப்படுகின்றன.

அமெரிக்க நாடுகளில் காணப்படும் முள்ளம்பன்றிகள் மரம் ஏறுவதிலும், நீந்துவதிலும் திறன்மிக்கவை. பெரும்பான்மையான நேரத்தை மரங்களில் செலவிடுகின்றன.


இவற்றின் உடலில் கறுப்பு கலந்த ப்ரௌன் மற்றும் மஞ்சள் நிறத்திலான முட்கள் காணப்படுகின்றன. இவை, பச்சை இலைகளையும், தாவரங்களையும் உண்கின்றன. அமெரிக்க முள்ளம்பன்றிகள் ஒரு தடவைக்கு ஒரு குட்டியையே ஈணுகின்றன. இதன் கர்ப்பகாலம் 7 மாதங்கள் ஆகும்.***
thanks அமுதம் தமிழ்
***
"வாழ்க வளமுடன்"

4 comments:

Samy சொன்னது…

My grandson understand the article better than me. Thanks a lot Prabha.Samy

DrPKandaswamyPhD சொன்னது…

நல்ல தகவல்கள்.

prabhadamu சொன்னது…

///// Samy கூறியது...
My grandson understand the article better than me. Thanks a lot Prabha.Samy
////

thanks :)

prabhadamu சொன்னது…

///// DrPKandaswamyPhD கூறியது...
நல்ல தகவல்கள்
//////


thanks :)

இந்த நாள் இனிய நாளாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "