...

"வாழ்க வளமுடன்"

13 ஆகஸ்ட், 2011

பிள்ளைகளின் சிறுநீரகம் பலவீனமாவதற்கு நீங்கள் காரணமாக வேண்டாம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


ஒரு குழந்தையை மலசல-இருக்கையில் இருக்கப் பழக்குவதற்கு நேரமும் பொறுமையும் தேவைப்படுகின்றது. ஆனால் பல பெற்றோர்கள் இதனைத் தாமதமாகவே பிள்ளைகளைப் பயன்படுத்த விடுகின்றனர்.


வைத்தியர்களைப் பொறுத்தவரை குழந்தைகள் 18 மாதங்களுக்குள் இதற்குப் பழக்கப்படுத்தப்பட்டுவிட வேண்டும் என்றும் 2 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுகளில் இப்பழக்கம் தொடங்கப்படுவது நிறுத்தப்பட வேண்டுமெனவும் எச்சரிக்கின்றனர்.


இவ்வாறு தாமதமாகப் பழகிய குழந்தைகள் பாடசாலைக்குச் செல்லும்போது வலிதரக்கூடிய சிறுநீரக் கிருமித்தொற்றுக்களால் பாதிக்கப்படுவர்.


2 வயதில் அல்லது அதற்குமேல் இதைப் பழகும் குழந்தைகளுக்குத் தமது சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாதநிலை ஏற்படலாம் என கனேடிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


அத்துடன் பாதுகாப்புத் துண்டுகளைப் பயன்படுத்தும் (napkins) பல பிள்ளைகளுக்கு எப்படித் தங்களது சிறுநீரைக் கழிப்பது என்றுகூடத் தெரியாமலுள்ளது. இதனால் இவர்களும் கிருமித்தொற்றுக்கு உள்ளாகின்றார்கள்.


பிரித்தானியாவில் குழந்தைகளுக்கு இப்பழக்கத்தை 2 வயதிலேயே ஆரம்பிக்கும்படி வைத்தியர்கள் புத்திமதி கூறுகின்றார்கள்.


ஆனால் அதற்கும் பின்னர் பெற்றோர்களால் பாதுகாப்புத் துண்டுகளுடன் பழக்கப்பட்டுப் பாடசாலைக்கு வரும் குழந்தைகளால் தமக்குச் சிரமமாயுள்ளதாக ஆசிரியர்களால் கூறப்படும் முறைப்பாடுகள் அண்மையில் அதிகரித்துக் காணப்படுகின்றது.


அல்பேட்டா பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்களின் முடிவின்படி பாதுகாப்புத் துண்டுகளுடன் வரும் பிள்ளைகள் சிறுநீரகத் தொற்றுக்களால் பாதிக்கப்படுவது அதிகமாயுள்ளதெனத் தெரியவருகின்றது.


பிரிஸ்ரல் பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட இன்னொரு ஆய்வில் 2 வயதிற்குப் பின்னர் இருக்கையில் பழக்கப்படும், துண்டைப் பயன்படுத்தும் பிள்ளைகள் பாடசாலைகளில் சிறுநீரைக் கட்டுப்படுத்தத் தெரியாமல் கூடுதலாகக் கிருமித்தொற்றுக்கு உள்ளாகின்றார்கள் என்கின்றது.


மலசலகூடப் பயிற்சியென்பது பொதுவானதொரு இயற்கைச் செயற்பாடாகும். இருந்தும் இதுபற்றிப் பெரிதாக எவரும் அக்கறை கொள்வதில்லை.


இவ்வாறா பிரச்சினைகளெல்லாம் தாமதமாக மலசல-இருக்கையில் பழகுவதனாலேயே ஏற்படுகின்றதென ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


பெண்குழந்தைகளைவிட ஆண் குழந்தைகள் இப்பயிற்சிக்கு அதிக நேரம் எடுக்கின்றனவென்றும் தெரியவருகின்றது.***
thanks vanakkamnet
***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "