இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
பெண்களில் பெரும்பாலோனோருக்கு உள்ள பிரச்னை பேன் தொல்லை. பேன்கள் தலையில் வசித்து நம்மை துன்புறுத்துவதோடு, பொது இடங்களில் தலையை சொறியும் போது நமக்கு அவமானத்தையும் தேடித்தருகிறது. இந்த பேனை பற்றிய சில விஷயங்களை தெரிந்து கொள்ளலாமா…?
மனிதனிடம் மட்டுமே வசிக்கும் தன்மை கொண்ட பேன் ஆறு கால்கள் கொண்டது. நாய், பூனை, பறவைகள் போன்றவற்றிடம் இது இருக்காது. மனித ரத்தத்தை உணவாக கொள்ளும் இந்த பேன்களின் வாழ்நாள் 30 நாட்கள். மனித உடலில் இருந்து பிரிந்து தலையணை, போர்வைகள், உடைகள், ஹெல்மெட்டின் இடுக்குகள் போன்றவற்றில் இருக்க நேரிட்டால், இரண்டு நாட்கள் வரை உயிர் வாழும்.
ஒரு ஜோடி பேன்கள் இணைந்து 100 முட்டைகள் வரை இடும். சிறிய தொடுகையின் மூலமே இனப்பெருக்கம் செய்யும் தனிச்சிறப்பு கொண்ட இனம். இந்த பேன்கள் இனம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இதற்கு ஆதாரமாக, எகிப்திய மம்மிகளில் பேன்கள் இருந்துள்ளதை தொல்லியல்துறை வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளனர். பேன்களில் மூன்று வகை உண்டு.
முதல்வகை தலையில் வசிப்பவை.
இரண்டாம் வகை மனித உடலில் வசிப்பவை.
மூன்றாம் வகை அந்தரங்கப் பகுதிகளில் வசிப்பவை.
இரண்டாம் மற்றும் மூன்றாம் வகைப் பேன்கள் அரிதாக காணப்படும். தலையில் வசிக்கும் பேன்கள்தான் மனிதனுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு. பள்ளிக்குச் செல்லும் 5 முதல் 11 வயது வரையிலான 60 சதவீத பெண் குழந்தைகளுக்கு பேன் தொற்று ஏற்படுகிறது. அவர்கள் மூலமாக பெரியவர்களுக்கும் பரவுகிறது.
மனிதர்கள் நெருக்கமாக இருக்கும் போது, பேன்கள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு ஊர்ந்து வந்துவிடுகிறது. பேன்கள் கடிக்கும்போது, எச்சில் மூலம் சில ரசாயனங்களை வெளியிடுகிறது. இதனால்தான் அந்த இடத்தில் அரிப்பு ஏற்படுகிறது. சொறியும் போது, அந்த இடம் ரணமாகிறது. அந்த புண்கள் வழியாக, நோய்களை பரப்பும் கிருமிகளும், பாக்டீரியாக்களும் மனித உடலுக்குள் எளிதாக நுழைந்து விடுகின்றன.
இதனால், பல்வேறு தோல் நோய்கள் ஏற்படுகின்றன. பேனை ஒழிப்பதற்கு, சில வகை எண்ணெய்கள், பிரத்யேக ஷாம்புகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. இவை பெரும்பாலும் தற்காலிக நிவாரணத்தை மட்டுமே வழங்குகின்றன. முழுமையாக பேனை ஒழிப்பதில்லை. சில ரசாயனங்கள் பேன்களை முற்றிலுமாக அழித்துவிடக்கூடியவை.
உதாரணமாக, மண்ணெண்ணெய் பேன்களை முற்றிலும் அழித்துவிடும் தன்மை கொண்டது. மண்ணெண்ணையை தலைமுழுவதும் தேய்த்துக்கொண்டு, துணியால் மூடி கட்டிவிட வேண்டும். இரண்டு அல்லது மூன்று மணிநேரம் கழித்து துணியை எடுத்துப்பார்த்தால், தலையில் இருந்த அனைத்து பேன்களும் இறந்து கொட்டியிருக்கும்.
மண்ணெண்ணெய் எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருள் என்பதால், இது ஆபத்தான முறையாகும். மருத்துவ முறையில், பேன்களை ஒழிப்பதற்கென்று பிரத்யேகமான ஷாம்புகள், லோஷன்கள் உள்ளிட்டவை இருக்கின்றன. இவற்றை தலையில் தேய்த்து, பயன்படுத்தும்போது, அதில் உள்ள ரசாயனங்கள் சில மணிநேரங்களுக்கு பேன்களை செயலிழக்கச் செய்கின்றன. குளித்து முடித்து, நாம் “பிரஷ்’ ஆகும் போது, அவையும் “பிரஷ்’ ஆகி தங்களுடைய வழக்கமான பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபடுகின்றன.
காரணம், இந்த ஷாம்புகள் மற்றும் லோஷன்களில், மனித உடலுக்கு தீங்கிழைக்காத வகையில், 20 சதவீத அளவு ரசாயனங்களே பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகையான பொருட்களை கர்ப்பிணிப் பெண்களும், ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளும் பயன்படுத்துவது நல்லது அல்ல. இந்த வகையான ஷாம்புகளும், லோஷன்களும் உடலில் வசிக்கும் பேன்களுக்கும், அந்தரங்க பகுதிகளில் வசிக்கும் பேன்களை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை.
வேம்பு மற்றும் துளசி கலந்து தயாரிக்கப்படும் சில மருந்துகளிலும் ரசாயனங்கள் கலக்கப்படுவதால், அவையும் மேற்கண்ட பலனையே தருகின்றன. எனவே, பேனை ஒழிப்பதற்கு எளிமையான, பாரம்பரிய மற்றும் பயனுள்ள முறை, “பேன் சீப்பு’ பயன்படுத்துவது தான்.
***
thanks news
***
"வாழ்க வளமுடன்"
0 comments:
கருத்துரையிடுக