...

"வாழ்க வளமுடன்"

25 ஜூன், 2011

மாரடைப்பு வந்த பின் பாதுகாத்து கொள்வது எப்படி?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


ஒருவருக்கு மாரடைப்பின் அறிகுறிகள் தென்பட துவங்கியதும் எவ்வளவு விரைவாக மருத்துவ சிகிச்சை பெறுகிறோமோ, அந்தள விற்கு, இருதய தசையின் செய லிழப்பை தவிர்க்கவோ அல்லது பாதிக்கப்பட்ட இருதய தசையின் அளவை குறைக்கவோ முடியும்.


இதனால் பின்னாளில் வரும் இருதய பலவீனம், இருதயத்தை சுற்றியுள்ள மின்வலைகளின் செயல் பாடுகளில் ஏற்படும் திடீர் குறை பாடுகள் (அதிவேகமாக அல்லது குறைவாக இருதயம் துடிப்பது) போன்றவற்றால் நேரும் வேண் டாத, விபரீத விளைவுகளை தவிர்க் கலாம்.


குறிப்பாக மாரடைப்பின் அறிகுறிகள் தென்பட துவங்கிய பின், ஒரு மணி நேரம் மிக முக்கியமானது. ஏனெனில், அந்த ஒரு மணி நேரத்தில் தான் 80 சதவீத மரணங் கள் நிகழ்கின்றன. மாரடைப்பு என சந்தேகம் வந்தவுடன், காலம் தாழ்த் தாமல் விரைவாக பெறப் படும் முதலுதவி சிகிச்சை முறையால் பல பக்க விளைவுகளை தவிர்க்கலாம்.துரதிர்ஷ்டவசமாக நம்மில் பலர் மாரடைப்பின் பலவித அறிகுறி களை அறிந்திராததாலோ, அஜீரண கோளாறு என்று நினைத்தோ, நமக்கெல்லாம் மாரடைப்பு வராது என்று நம்பியோ, முக்கியமான முதல் ஓரிரு மணி நேரத்தை வீணாக்கி விடுகிறோம். வணிக உலகில், “நேரம் தான் பணம்’ என்பர். அதைப் போல மாரடைப்பை பொறுத்தவரையில், “நேரம் தான் உயிர்!’ எனவே, மாரடைப்பின் அறிகுறி என சந்தேகித்ததும், காலத்தை சிறிதும் வீணாக்காமல், அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று, பரிசோதனை செய்து சிகிச்சை பெறுவது மிகவும் அவசியமானது.மாரடைப்புக்கான சிகிச்சை முறை:மாரடைப்பு என சந்தேகித்ததும் மருத்துவரால் செய்யப்படும் முதலுதவி, நோயாளிக்கு ஆக்சிஜன் கொடுப்பது, ஆஸ்பிரின் மாத்திரை தருவது, நாக்கின் அடியில் வைக்கப்படும் மாத்திரை தருவது. நெஞ்சு வலியும், மனப்பதட்டமும் குறைய மருந்துகள். இருதய துடிப்பு அதிவேக மாகவோ அல்லது மிகவும் குறை வாகவோ இருக்கும் போது செய்யப் படும் உயிர்காக்கும் சிகிச்சை முறை. இத்தகைய முதலுதவி மூலம் மட்டுமே மாரடைப்பால் ஏற்படும் வலியை குறைக்கலாம்.


மாரடைப்பின் தாக்கத்தையும், தீவிரத்தையும் கட்டுப் படுத்தலாம். உரிய நேரத்தில் முதலுதவி பெறுவதால், மாரடைப் பால் நேரும் திடீர் மரணங்களை தவிர்க்கலாம்.மாரடைப்பு உறுதியான பின், செய்யப்படும் சிகிச்சை முறைகள்:1) மருந்துகள் மூலம் சிகிச்சை2) செயல்முறை மூலம் சிகிச்சை அளித்தல்.மருந்து மூலம் சிகிச்சை:

இதில் பலவகை மருந்துகள் சிகிச்சை முறையில் பயன்படுத்தப்படுகிறது. அவற்றில் முக்கியமானவை ரத்தக் கட்டியை கரைக்கும் மருந்து.* அடைபட்ட இருதய ரத்தக் குழாயில் உள்ள ரத்தக்கட்டியை கரைத்து, மீண்டும் பாதித்த பகுதிக்கு ரத்த ஓட்டத்தைக் கூடிய விரைவில் சரி செய்யும் பொருட்டு, உடலின் ரத்தநாளத்தின் வழியே இம்மருந்து செலுத்தப்படுகிறது.* இத்தகைய மருந்து, மாரடைப்பு துவங்கிய இரண்டு முதல் ஆறு மணி நேரத்திற்குள் செலுத்தப்பட்டால் மிகுந்த பலனளிக்கக் கூடியதாக இருக்கும்.* ஆனால், சூழலுக்கு ஏற்ப இருதய வலி துவங்கி 12 முதல் 24 மணி நேரம் வரை கூட சிலருக்கு இம்மருந்து செலுத்தப்படலாம். * அத்துடன் இருதயத் தசை களை, மாரடைப்பு ஏற்படுகிற அந்த சமயத்திலும், பிற்காலத்திலும் பாது காப்பதற்காக ஒரு சில முக்கியமான மாத்திரைகளும் தரப்படும்.* அவற்றுள் சிலவற்றை நீண்ட வருடங்கள்… ஏன், வாழ்நாள் வரை கூட உட்கொள்ள வேண்டி யிருக்கும். செயல்முறை (Procedure) சிகிச்சை குறித்து அடுத்த கட்டுரையில் காணலாம்.- டாக்டர் எஸ்.கே.பி.கருப்பையா,இருதய மருத்துவ நிபுணர், மதுரை


***
thanks டாக்டர்
***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "