...

"வாழ்க வளமுடன்"

25 ஜூன், 2011

உடம்பு மெலியணுமா? வெறும் ‘டயட்’ மட்டும் போதாது

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

குண்டான நீங்கள், ‘ஸ்லிம்ரன்’னாக மாற வேண்டுமா? அதற்கு, ‘டயட்’ மட்டும் போதாது; உடற்பயிற்சியும் வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

அமெரிக்காவின் ஒரேகான் நலவாழ்வு மற்றும் அறிவியல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், சமீபத்தில் ஓர் ஆய்வு மேற்கொண்டனர். உடம்பு மெலிவதற்கு, உணவுக் கட்டுப்பாடு எந்த அளவுக்கு உதவுகிறது என்பது தான், ஆய்வின் நோக்கம்.



இதற்காக அவர்கள், பெண் குரங்குகளுக்கு, தொடர்ந்து சில ஆண்டுகளாக நல்ல கொழுப்புச் சத்துள்ள உணவாக அளித்து வந்தனர். இதனால் அவை நன்றாகக் கொழுத்து விட்டன. பின் அந்த உணவைக் குறைத்து அளவாகக் கொடுத்து வந்தனர்.



கொழுத்திருந்த போது இருந்த அவற்றின் உடல் எடைக்கும், உணவுக் கட்டுப் பாட்டின் போது இருந்த உடல் எடைக்கும், பெரிய வித்தியாசம் இல்லை என்பதைக் கண் டறிந்தனர்.விஞ்ஞானிகள் குழுவின் தலைவர் ஜூடி கேமரூன், ‘குரங்குகளுக்கு மேலும் உணவைச் சுருக்கினோம்.



அப்போதும் உடல் எடையில் பெரிய மாற்றம் இல்லை. ஆனால் அவை கொழுத்திருந்த போது இருந்த அவற்றின் உடல் ரீதியான செயல்கள், உணவைக் குறைக்க ஆரம் பித்ததும் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தன’ என்கிறார்.

இதையடுத்து, மற்றொரு குரங்குக் குழுவுக்கு இதேபோல் நல்ல கொழுப்புச் சத்துள்ள உணவைக் கொடுத்து பின், உணவுக் கட்டுப் பாட்டுக்குக் கொண்டு வந்தனர். அதோடு, உடற்பயிற்சியும் அவற்றுக்குக் கொடுத்தனர்.



அப்போது அவற்றின் உடல் எடையில் குறிப் பிடத் தகுந்த மாற்றம் ஏற்பட்டது. உடல் எடை குறைந்தது.’உணவு மட்டுமே மனிதன் மற்றும் விலங்குகளின் உடல் எடையைக் குறைப்பதற்குப் போது மானதல்ல; அதோடு, உடற்பயிற்சியும் சேர்த்து செய்தால்தான், உடல் எடையில் மாற்றம் ஏற்படும் என்பதை இவ்வாய்வு நிரூபித்துள்ளது. குறிப்பாக குண்டான குழந்தைகளுக்கு இம் முறையைப் பயன்படுத்தலாம்’ என்கிறார் ஜூடி கேமரூன்.


***
thanks ஜூடி கேமரூன்
***





"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "